சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

After the Sri Lankan elections: Tamil nationalists support US-backed parties

இலங்கை தேர்தர்களுக்கு பின்னர்: தமிழ் தேசியவாதிகள் அமெரிக்க-ஆதரவிலான கட்சிகளை ஆதரிக்கின்றனர்

By K. Nesan
26 August 2015

use this version to printSend feedback

ஆகஸ்ட் 17 இலங்கை பாராளுமன்ற தேர்தல்களையடுத்து, தமிழ் தேசியவாத கட்சிகள் கொழும்பில் ஒரு புதிய அமெரிக்க ஆதரவு ஆட்சியை நிறுவுவதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினது முயற்சிக்கு முக்கிய முண்டுகோல்களாக சேவையளிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பி., 107 ஆசனங்கள்) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு (ஸ்ரீ..சு.., 96 ஆசனங்கள்) அடுத்தபடியாக, பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு (.தே.கூ.) மூன்றாவது பெரிய அணியாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தமிழர் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மற்றும் கிழக்கின் 29 ஆசனங்களிலிருந்து ஆககுறைந்தது 20 தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்குமாறு வாக்காளர்களுக்கு அழைப்பிவிடுத்திருந்தார். அந்நிகழ்வில், அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 ஆசனங்கள் மட்டுமே வெல்ல முடிந்தது. பதினான்கு பேர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஏனைய இரண்டு ஆசனங்கள் அக்கட்சியினது தேசிய வாக்கு விகிதாசார அடிப்படையில் வழங்கப்பட்டன.

ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தல்களில் அமெரிக்க-ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையில் நியமிக்கப்பட்ட சிறிசேன, யூ.என்.பி. உடன் ஒரு "தேசிய அரசாங்கம்" அமைக்க ஸ்ரீ..சு.கட்சியின் ஒரு பிரிவை வென்றெடுக்க முயற்சிக்கின்ற வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இவரை தீவிரமாக ஆதரிக்கிறது. ஒரு கூட்டத்தில், சம்பந்தன் கூறினார்: நாட்டில் ஒரு ஆக்கபூர்வமான மாற்றத்திற்கான மக்கள் தீர்ப்பை, ஜனவரி 8 அமைதிப் புரட்சியை அங்கீகரிக்கும் தேசிய அரசாங்கத்தை நாங்கள் ஆதரிப்போம்.

சம்பந்தன், கிழக்கு மாகாணத்தில் உள்ள சம்பூரில் ஆகஸ்ட் 23 அன்று சிறிசேனவுடன் ஒரு மேடையினை கூட பகிர்ந்து கொண்டார். சிறிசேனவை "உண்மை, ஒற்றுமை, நீதி"க்காக போராடுமொரு போராளியாக புகழ்ந்ததுடன், தாமதமின்றி தமிழர் பிரச்சினையில் கவனம் செலுத்துமாறு அவரிடம் கோருவது என்னுடைய கடமையென நினைக்கிறேன் என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த புதிய அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தின் அரசியல் அச்சாணியாக உருவாகக்கூடும். இப்போதே தெரிவதைப் போல, குறிப்பாக ஸ்ரீ..சு. கட்சியுடன் ஒரு கூட்டணி உருவாக்குவதில் சிறிசேன சிரமப்படுகையில் மற்றும் யூ.என்.பி. ஒரு சிறிய பாராளுமன்ற பெரும்பான்மையுடன் ஆள நிர்பந்திக்கப்படுகையில் அதுவொரு முக்கிய பாத்திரம் வகிக்கும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தொழிற்படத் துடிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர்வம், தமிழ் தேசியவாதத்தின் திவால்நிலைமையை நிரூபிக்கிறது. பல்வேறு சிறிய தமிழ் தேசியவாத கட்சிகளால் ஆதரிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, கொழும்பில் ஒரு வன்முறையான பிற்போக்குத்தன அரசாங்கமாக இருக்கப்போகின்ற ஒன்றை ஆதரித்துவருகிறது. அதன் பிரதான பாத்திரம் இலங்கையை முழுமையாக, சீனாவை கட்டுப்படுத்த அல்லது அதனுடன் போர்தொடுக்க நோக்கம் கொண்ட அமெரிக்காவினது "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்புக்குப்" பின்னால் நிறுத்துவதாக இருக்கும். மேலும் சர்வதேச நாணய நிதியத்தால் கோரப்படும் சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்கும் அது பணியமர்த்தப்படும்.

சிறிசேன அரசாங்கம் தமிழர் பிரச்சினையை தீர்க்குமென தமிழ் தேசிய கூட்டமைப்பு வாதிட்டாலும், உண்மையில் அது 2009 உள்நாட்டு போர் முடிவில் தமிழர்களுக்கு எதிராக இரத்தந்தோய்ந்த தாக்குதலில் முன்னணிப் பாத்திரம் வகித்த அதிகாரிகளையே நிர்வாகத்திற்குள் அமர்த்தியுள்ளது. அத்தாக்குதல், தமிழ்-தேசியவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.டி.டி..) பல அங்கத்தவர்கள் உட்பட பல பத்தாயிரக் கணக்கானவர்களின் படுகொலையில் போய் முடிந்தது.

குறிப்பாக தொழிலாள வர்க்கத்திற்குள், வெடிக்கவிருக்கும் தீவிர சமூக பதட்டங்களை குறித்து முதலாளித்துவ வர்க்கம் நன்கறிந்துள்ளது. அத்தகைய நிலைமைகளின் கீழ், தமிழ் தேசியவாதிகளின் பாத்திரம், சிறிசேனவிற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பை தடுப்பதாகவே இருக்கும்.

ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம், இலங்கையில் ஜனநாயகத்தை உருவாக்கும் ஒரு "புரட்சிகர" சம்பவமாக நப்பாசைகளை ஊக்குவிப்பதில் மையப்பட்டிருந்தது. தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் குழு ஒன்றுடன் கலந்துரையாடுகையில், ..சு. கூட்டணியிலுள்ள மைத்திரிபால சிறிசேன அணி, யூ.என்.பி. உடன் இணைந்து 18ஆம் திகதி ஆட்சி அமைப்பாளர்கள். அந்த ஆட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெற தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு நல்க காத்திருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கப்படுமாயின் புதிய அரசியல் யாப்பொன்று உருவாக்கப்படும். அந்த அரசியல் யாப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முன்னெடுக்கப்படும். வரையப்படவுள்ள அரசியல் யாப்பில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 65 வருடக்கால தமிழ் மக்களின் போராட்டத்துக்கு இதன் மூலம் உடனடி தீர்வு காணப்படுமென்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்றார்.

யூ.என்.பி. தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பு போன்ற தமிழ் மக்கள் அதிகம் உள்ள சில பகுதிகளில் அதன் சொந்த வேட்பாளர்களை நிறுத்துவதை தவிர்த்துக் கொண்டது. தேர்தலில் யூ.என்.பி. வெல்லும் என்பதில் சம்பந்தன் நம்பிக்கையோடிருந்தார். அவர்கள் அதை அடைந்தால், அது தமிழர்களுக்கான ஓர் அரசியல் தீர்வுக்கு "அருமையான சந்தர்ப்பமாக" இருக்குமென அவர் தெரிவித்தார்.

இதுவொரு கொடூரமான அரசியல் மோசடியாகும். பல தசாப்தகால இரத்தக்களரியில் அந்நாட்டை சூழ்ந்துள்ள இனப்பிளவுகளை தீர்க்க இலாயக்கற்றிருப்பதை இலங்கை முதலாளித்துவ வர்க்கமே நிரூபித்துள்ளது. உண்மையில், கொழும்பின் ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த, தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையே தேசியவாத உணர்வுகளை தூண்டிவிடுவதில் தான் தங்கியிருக்கின்றது.

சிறிசேனவே கூட இராஜபக்சவின் ஒரு நெருக்கமான கூட்டாளியாவார். அவர் 2009 இராணுவ தாக்குதலின் கடைசி இரண்டு வாரங்களின்போது பதில்பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கையில்தான் படுமோசமான போர் குற்றங்கள் நடத்தப்பட்டன. விக்கிரமசிங்கவை பொறுத்த வரையில், அவர் விடுதலை புலிகளுக்கும் அவரது அரசாங்கத்திற்கும் இடையே கையெழுத்தான 2002 புரிந்துணர்வு ஒப்பந்தத்தை" முறித்துவிட்டு, 2006 இல் மீண்டும் போர் தொடங்க அனுமதியளித்தார்.

தமிழ் தேசியவாத கட்சிகள், தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு சிறிய அடுக்கை பிரதிநிதித்துவம் செய்கின்றன. அவை சிங்கள முதலாளித்துவ வர்க்கத்துடன் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டால், அது தமது "சொந்த" மக்களையே சுரண்ட அனுமதிக்குமென நம்புகின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரைக்கின்ற "தீர்வுகளிலிருந்து" தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை. தமிழ் தொழிலாளர்களது நலன்கள், தமிழ் தேசியவாதத்துடன் முறித்துக் கொள்வதோடு, சிங்கள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் ஐக்கியத்துடன் ஏகாதிபத்தியம் மற்றும் சிக்கன திட்டங்களுக்கு எதிரானவொரு கூட்டு போராட்டத்தின் மூலமாக மட்டுமே முன்னெடுக்க முடியும்.

இலங்கை முழுமையிலும் தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஐக்கியப்பட்ட இயக்கத்திற்கான சாத்தியக்கூறு, யூ.என்.பி. மற்றும் ஸ்ரீ..சு.கட்சியை பீதியூட்டுவது போலவே, அதேயளவிற்கு தமிழ் தேசியவாத கட்சிகளையும் பீதியூட்டுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் தமிழ் தேசியவாதிகள் கணிசமான மக்கள் ஆதரவை இழந்திருப்பதற்கு அங்கே தெளிவான அறிகுறிகள் உள்ளன. தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பால் கடந்தகாலத்தைப் போல கூட்டங்களுக்கு மக்களை ஈர்க்க முடியவில்லை. ஒருசில நூற்றுக்கணக்கான மக்களே கூட்டங்களில் கலந்து கொண்டனர், சில இடங்களில் நூறுக்கும் குறைவானவர்களே இருந்தனர். கொடூரமான உள்நாட்டு போரின் விளைவாக 40,000க்கும் அதிகமான தமிழர்கள் காணாமல் போன நிலையில், 1977 இல் ஸ்தாபிக்கப்பட்ட "வடக்கில் இலங்கை ஆயுதப்படைகளால் கைது செய்யப்பட்ட பெற்றோர்கள், பாதுகாவலர்கள், பொதுமக்களுக்கான அமைப்பு" தேர்தல்களை புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்திருந்தது.

இத்தகைய நிலைமைகளின் கீழ் தான், அதேபோன்ற தமிழ் தேசியவாத வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் ஏனைய தமிழ் கட்சிகள் குறிப்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF), ஜனநாயக போராளிகள் கட்சி (CD) தமிழ் தேசிய கூட்டமைப்பின் திவாலான வேலைத்திட்டத்திற்கு மக்களின் எதிர்ப்பை தடுமாறச்செய்யும் ஒரு முயற்சிக்கு முன்வந்தன. யாழ்பாண மாவட்டத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு 15,022 வாக்குகளும் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சிக்கு 1,979 வாக்குகளும் கிடைத்தன. ஜனநாயக போராளிகள் கட்சி, ஏனைய இடங்களில் தமிழ் தேசிய கூட்டணியின் வாக்குகளை பிரிக்க விரும்பவில்லையெனக் கூறி யாழ்பாண மாவட்டத்தில் மட்டுமே போட்டியிட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஜனநாயக போராளிகள் கட்சியும் பிரதானமாக "சர்வதேச சமூகத்துடனான" அதாவது, ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்துடனான முன்மொழியப்பட்ட அவற்றின் பேரம்பேசும் தந்திரோபாயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வேறுபடுகின்றன. அவை ஏகாதிபத்திய சக்திகளுடனான ஓர் உடன்படிக்கையை கொண்டு ஒரு தனி "பாரம்பரிய தாய்நாட்டை" பெறுவதன் மூலமாக அவர்களது நலன்களைப் பெற முடியுமென அதே நப்பாசைகளை விற்பனை செய்கின்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி, பேரம்பேசல்களில் "தமிழர்களின் நலன்களை முறையாக உயர்த்தவில்லை" என்பதற்காக .தே.கூட்டணியை குற்றஞ்சாட்டுகிறது.

விடுதலை புலிகளின் 2009ன் மோசமான தோல்விக்கு பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கையின் வட-கிழக்கில் ஒரு சிறிய தமிழ் அரசுக்கான விடுதலை புலிகளின் கோரிக்கையிலிருந்து தன்னை தூர விலக்கிக்கொண்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி, பிரிவினைவாத உணர்வுகளை ஊக்குவித்துக் கொண்டு, தங்களைத்தாங்களே விடுதலைப் புலிகளை பின்தொடர்வோராக காட்டிக் கொள்கின்றன. இருப்பினும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு இயைந்து செல்லும் அவர்களது முன்னோக்கு, இன்றியமையாதரீதியில் .தே.கூ. இல் இருந்து வேறுபட்டதல்ல.

அத்தேர்தல்களுக்கு பின்னர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தலைவர் கஜேந்திரன் பொன்னம்பலம் கூறுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதை போல, சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான ஓர் தீர்வுக்காக உழைக்குமானால்" அவரது கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவளிக்குமென தெரிவித்தார். இவ்விதத்தில் அவர் கொழும்பில் அமெரிக்க-ஆதரவிலான அரசாங்கத்தை ஒன்றுசேர்க்கும் முயற்சிக்கு மறைமுக ஆதரவை முன்மொழிகிறார்.