சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK government outlines unprecedented public spending cuts

இங்கிலாந்து அரசாங்கம் முன்னொருபோதும் இல்லாதளவில் பொது செலவின வெட்டுக்களை அறிவிக்கிறது

By Julie Hyland
26 November 2015

Use this version to printSend feedback

இங்கிலாந்து சான்சிலர் ஜோர்ஜ் ஓஸ்போர்ன், மில்லியன் கணக்கான மக்கள் மீது அழிவார்ந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, பாரிய அரசு திட்ட வெட்டுக்களின் ஒரு திட்டத்தை விவரித்து, புதனன்று அவரது இலையுதிர்கால அறிக்கையை மற்றும் செலவின மீளாய்வு அறிக்கையை அறிவித்தார்.

அந்நடவடிக்கை ஒருபுறம் நாடாளுமன்றம் மற்றும் ஊடகங்களுக்கும் மற்றும் உழைக்கும் மக்களுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்துகிறது, மறுபுறம், வரிச் சலுகை வெட்டுக்களைக் கைவிடுவதென்ற ஓஸ்போர்னின் முடிவு சிக்கனத் திட்டத்தின் கடுமை குறைக்கப்பட்டுள்ளதாக வரவேற்கப்பட்டது.

ஓஸ்போர்ன் அவரது செலவின மீளாய்வு அறிவிப்பில் வரிச் சலுகை (நடைமுறையில் குறைந்த கூலி தொழிலாளர்களுக்கான சலுகைகள் மீதான) பிரச்சினைக் குறித்து பேசவிருக்கிறார்.

மூன்றாண்டு இடைமருவு காலக்கட்டத்திற்கான "இழப்பீட்டு" நடவடிக்கைகளைக் குறித்து சான்சிலர் விவரிக்காததால், பிரபுக்கள் அவை, அக்டோபரில், வெட்டுக்களை முடக்க வாக்களித்திருந்தது—முன்மதிப்பீட்டின்படி, இந்த வெட்டுக்கள் 3 மில்லியன் ஏழை குடும்பங்கள் மீது ஆண்டுக்கு சுமார் 1,000 பவுண்ட் சுமை ஏற்படுத்தும்.

செப்டம்பரில் தலைமைக்கான போட்டிக்கு முன்னதாக, தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிக்கன நடவடிக்கைக்கு அவர்களின் கடமைப்பாட்டை நிரூபிப்பதற்கு வெட்டுக்களை ஆதரிப்பதா அல்லது வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதா என்பதில் தடுமாறி போயிருந்தார்கள். ஜெர்மி கோர்பின் மட்டுமே ஒருயொரு தலைமை நபர் அந்த வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்திருந்தார்.

இருப்பினும் ஓஸ்போர்னைப் பெரிதும் கஷ்டப்படுத்தியது டோரி வலதின் பிரிவுகளிடமிருந்து வந்த எதிர்ப்புத்தான்—சான்சிலர் வேலைவாய்ப்பின்மை மீது கவனம் செலுத்தாமல் உழைக்கும் குடும்பங்களின் சுகாதார வெட்டுக்களை இலக்கில் வைத்திருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

தானே-முன்வந்து விதித்துக்கொண்ட சுகாதார செலவு உச்சவரம்பை வெட்டுக்கள் மீறுவதால், அதை கைவிடுவதாக ஓஸ்போர்ன் அறிவித்தார். ஆனால் அவர் கூற்று தவறான கருத்தை வழங்குகிறது. இறுதி விபரங்கள் இனிமேல் தான் வெளியிடப்படும் என்றாலும், அனைக்குவருக்குமான ஒரு புதிய வரிச்சலுகை திட்டத்தின் அறிமுகம் மற்றும் அத்துடன் வீட்டுச்சலுகைகளில் செய்யப்படும் வெட்டுக்களைக் கொண்டு தான் எதிர்பார்த்த சேமிப்பு சரிக்கட்டப்படும்.

சிந்தனை குழாமான Social Market Foundation (SMF) இன் கருத்துப்படி, சலுகைகளை நான்காண்டுகளுக்கு நிறுத்துவதுடன் சேர்ந்து, “அனைவருக்குமான வரிச்சலுகை வெட்டுக்களும் இருக்கும், மற்றும் அனைவருக்குமான வரிச்சலுகை கோரும் புதியவர்கள் அனேகமாக முன்னர் வரிச்சலுகை பெற்று வருவோரைவிட மிக மிக சொற்ப ஆதரவையே பெறக்கூடும். நீண்டகால ஓட்டத்தில், இது, சான்சிலரின் வரிச்சலுகை வெட்டுக்கள் நடைமுறையில் ஏதோவிதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதையே குறிக்கும்.”

அதனால் தான், இவ்வாறிருப்பினும் சுகாதார செலவுகளில் 12 பில்லியன் பவுண்ட் கூடுதல் குறைப்புக்கான இலக்கை தம்மால் எட்ட முடியுமென்று ஓஸ்போர்னால் கூற முடிகிறது. செய்திகளின்படி, அனைவருக்குமான வரிச்சலுகை பெற உள்ள சில குடும்பங்கள் 2,000 பவுண்ட்க்கு அதிகமாகவே இழக்க வேண்டியிருக்கலாம்.

2020க்குள் உபரியாக 20 பில்லியன் பவுண்டை அடையும் திட்டங்களை அவர் விவரித்தார், அதில் அரசு செலவினங்களில் பாரிய வெட்டுக்களும் உள்ளடங்கி உள்ளன. இது எந்த நிலைமைகளின் கீழ் என்றால், ஐந்தாண்டுகால சிக்கனத் திட்டங்களுக்கு இடையிலும், வரவுசெலவு திட்டக்கணக்கு பற்றாக்குறையைக் குறைக்கும் அவரது இலக்குகளைச் சான்சிலர் ஏற்கனவே பூர்த்தி செய்ய தவறியுள்ளார். பொதுத்துறை நிகர கடன் ஓராண்டுக்கு முன்னர் இருந்த 8.2 பில்லியன் பவுண்டுடன் ஒப்பிடுகையில் கடந்தமாதம் 1.1 பில்லியன் பவுண்ட் அதிகரித்து, ஆறு ஆண்டுகளிலேயே இந்த அக்டோபரில் மிக அதிகபட்ச அளவை எட்டியது. இந்த உயர்வு குறைந்தளவிலான சம்பள உயர்வின் காரணமாக எதிர்பார்த்ததை விட குறைந்திருந்த வரி வருவாய்களோடு சேர்ந்து, மந்தமான பொருளாதார வளர்ச்சியின் விளைவால் ஏற்பட்டது. மொத்த கடன், இந்த ஆண்டு திட்டமிட்டதை விட 11 பில்லியன் பவுண்ட் அதிகமாக, 80 பில்லியன் பவுண்டுக்கு அதிகமாக இருக்குமென கணிக்கப்படுகிறது.

மொத்த சுகாதார செலவினங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவீதம் என்பதிலிருந்து 2019/2020 க்குள் 17 சதவீதத்திற்கும் குறைவாக குறைக்கப்பட உள்ளது, குறிப்பாக இதில் இயலாமை சலுகை (incapacity benefit) மற்றும் வீட்டுவசதி உதவிகள் பாதிக்கப்படும். இது மொத்த செலவினங்களில் 20 பில்லியன் பவுண்ட் வெட்டுப்படுவதற்குக் கூடுதலாக செய்யப்படுவதாகும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 38.6 சதவீதத்திலிருந்து அதேகாலக்கட்டத்தில் 35.5 சதவீதத்திற்கு வெட்டப்பட உள்ளது.

கூலிகள் மற்றும் மருத்துவத்தை உள்ளடக்கிய "செயல்பாட்டு செலவுகள்" (Running costs) 16.6 சதவீதத்திலிந்து 14.6 சதவீதமாக குறைய உள்ளன. சொத்துக்கள் விற்கப்பட்டு வருகின்ற நிலையில், மூலதன செலவுகளும் 2.2 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதத்திற்கு வெட்டப்படும்.

சான்சிலர் அவரது அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக, நிதிய ஆய்வுகளுக்கான பயிலகம், “பாதுகாக்கப்படாத" அரசுத்துறைகள் என்றழைக்கப்படுவதில் வெட்டுக்கள் சராசரியாக 27 சதவீதம் இருக்கக்கூடுமென தெரிவித்திருந்தது.

ஆரோக்கியம் மற்றும் கல்விக்காக செலவினங்களை பிரத்யேகமாக ஒதுக்கிவிட்டதாக அரசாங்கம் கூறுகின்ற நிலையில், இராணுவத்திற்கான கூடுதல் நிதிகளை அறிவித்தன் மூலம், நீதித்துறை, போக்குவரத்து மற்றும் உள்ளாட்சி அரசுகள் ஆகியவற்றின் பாகத்திலிருந்து அடிமட்டத்திற்கு குறைக்கப்பட்டு வருகின்றன. இருபத்திரெண்டில் 17 துறைகள் அவற்றின் நிதி ஒதுக்கீடுகளிலிருந்து 1 சதவீதம் மற்றும் 37 சதவீதத்திற்கு இடையே இழப்பைப் பெறும். இது 2010 க்குப் பின்னர் முக்கிய அரசு துறைகள் எங்கிலும் செய்யப்பட்ட செலவின குறைப்புகளின் ஒட்டுமொத்த கூட்டுத்தொகையை அண்மித்து 50 சதவீதத்திற்கு ஆக்குகிறது.

அந்த வெட்டுக்கள் எங்கெங்கே செய்யப்படவிருக்கின்றன என்பதைக் குறித்து ஓஸ்போர்ன் எந்த விபரமும் வழங்கவில்லை, அத்துடன் "அந்த சேமிப்புகளில் சுமார் ஒருகால் பகுதி எவ்வாறு பெறப்படும் என்பதை மட்டுந்தான் அந்த இலையுதிர்கால அறிக்கை விவரிக்கிறது" என்று SMF கணக்கிடுகிறது.

யதார்த்தத்தில் பாதுகாக்கப்பட்ட துறைகள் என்று கருதப்படுபவையும் கூட வெட்டுக்களை முகங்கொடுக்க உள்ளன.

தேசிய சுகாதார சேவை (NHS) பொறிவை முகங்கொடுக்கிறது என்ற எச்சரிக்கைகளுக்குப் பின்னர், இந்த வார தொடக்கத்தில், அதற்குள் உடனடியாக 3.8 பில்லியன் பவுண்டைப் பாய்ச்ச அரசாங்கம் நிர்பந்திக்கப்பட்டது. ஆனால் அந்த பணம் சில குறிப்பிட்ட சுகாதார வகைமுறை பகுதிகளின் பாதுகாப்பான நிலைமையை முடிவுக்குக் கொண்டு வருவதிலிருந்து திரும்பப் பெறப்படும். குறிப்பாக, பயிற்சி தாதிமார்கள் மாணவக் கடன்களைப் பெற நிர்பந்திக்கப்படுவதால், அவர்களுக்கான பொது நிதி நிறுத்தப்படலாம். NHS இங்கிலாந்து 22 பில்லியன் பவுண்ட் "திறப்பாட்டு சேமிப்பைச்" (efficiency savings) செய்ய உள்ளது. சராசரி வருமானங்களுக்கேற்ப உச்சவரம்பு காலத்தை உயர்த்துவதென்ற அரசாங்கத்தின் வாக்குறுதியிலிருந்து சான்சிலர் பின்வாங்கியதால், எல்லா மாணவர்களும் அவர்களின் கடன் திரும்ப செலுத்துவதில் ஓர் உயர்வை முகங்கொடுக்க உள்ளனர். அதற்கு மாறாக 2 மில்லியன் பட்டதாரிகள் ஆண்டுக்கு கூடுதலாக 306 பவுண்டு சுமையேற்கும் வகையில், அது ஒருநிலைப்படுத்தப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் செலவினங்கள் ஏற்கனவே 2010 க்குப் பின்னரில் இருந்து 25 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது, மேலும் இங்கிலாந்து எங்கிலும் அதிகாரப் பகிர்விற்கான அதன் திட்டங்களை அரசாங்கம் அதிகரிக்கையில் மேற்கொண்டு இன்னமும் வீழ்ச்சியடையும். “Northern powerhouse” என்றழைக்கப்படுவதை உருவாக்கியமை நேரடியாக பொது நிதி வெட்டுக்கள், முக்கிய சொத்துக்களைத் தனியார்மயமாக்குதல், பிராந்தியங்களுக்கு இடையே போட்டியை ஏற்படுத்த வரி மற்றும் கூலி வேறுபாடுகளை அறிமுகம் செய்வதுடன் நேரடியாக பிணைந்துள்ளது.

இது வேலைகள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக கொடுப்பனவுகள் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். உள்ளாட்சி அரசாங்கங்களுக்கான சுமார் 6 பில்லியன் பவுண்ட் மானியங்கள் குறைக்கப்பட உள்ளன, இது குறிப்பாக முதியோர் பராமரிப்பைப் பாதிக்கும், அதேவேளையில் கவுன்சில் வரிக்கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.

எதிர்பார்த்தவாறே அவர் பொலிஸ் வரவு செலவு திட்டக்கணக்கில் வெட்டு செய்யப் போவதில்லையென ஓஸ்போர்ன் அறிவித்தார், அதற்கு முன்னதாக முன்னணி பொலிஸ் தலைவர்கள் அரசாங்கத்தை அச்சுறுத்தி இருந்தனர். MI5 மற்றும் MI6 இன் விரிவாக்கம் உட்பட “பயங்கரவாத எதிர்ப்பு" நிதிக்கு 30 சதவீத அறிவிப்பும் சேர்கிறது, சமூக சமத்துவமின்மை அதிகரித்துவரும் நிலைமைகளின் கீழ் அரசின் ஒடுக்குமுறை அதிகாரங்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தி வருகிறது.

பொதுச் செலவினங்களின் அளவு முன்னொருபோதும் இல்லாதளவிற்குக் குறைக்கப்படுகிறது. வெறும் 10 ஆண்டு இடைவெளியில், 2010 இல் இருந்து 2020 வரையிலும், அரசாங்க செலவினங்கள் GDP இன் சதவீதத்தில் 10 சதவீதம் அளவிற்கு, 45.5 சதவீதத்திலிருந்து 35.5 சதவீதத்திற்கு, வீழுமென முன்கணிக்கப்படுகிறது.

IFS இயக்குனர் பால் ஜோன்சன், சான்சிலர் அறிக்கைக்கு முன்னரே கூறுகையில், “அரசின் ஏற்பாடுகள் 2010 இல் என்னவாக இருந்ததோ அதிலிருந்து 2020 இல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்…. கடந்த நாடாளுமன்றத்தில் நாம் என்ன பார்த்தோமோ அதன் மீது இந்த வெட்டுக்களை வைத்து பார்த்தீர்களேயானால், அங்கே ஒப்பிடுவதற்கு நிஜத்தில் ஒன்றுமே இருக்காது. நாம் இதை போல எதுவுமே செய்திருக்க மாட்டோம். அரசின் அளவு ஒட்டுமொத்தமாக சுமார் 1990களின் இறுதியில் என்னவாக இருந்ததோ அந்தளவிற்கு தான் இருக்கும், அது போருக்குப் பிந்தைய காலத்தை விட வரலாற்றுரீதியில் குறைவாகும்.”

அரசு பயிலகம் "நீடித்த" வெட்டுக்களின் ஒரு தசாப்தத்தை "முன்நிகழ்ந்திராதது" என்று வர்ணித்தது.

இதைத் தொடர்ந்து வரவு செலவு திட்டக்கணக்கிற்கு பொறுப்பான அலுவலகம் அறிவிக்கையில், அது அடுத்த ஐந்தாண்டுகளுக்கான சராசரி கீழ்நோக்கிய வருவாயை 2016 இல் 0.2 சதவீதம் அளவிற்கும், 2019 க்குள் 0.4 சதவீத ஒரு வெட்டுக்கும் மறுதிருத்தம் செய்திருப்பதாக அறிவித்தது.

இத்தகைய நடவடிக்கைகளின் முன்னால், தொழிற்கட்சியோ, ஓஸ்போர்ன் மற்றும் அந்த அரசாங்கம் ஒரு சுதந்திரமான சவாரியை மேற்கொள்ள அனுமதிக்கிறது. சான்சிலரின் அறிக்கைக்கு முன்னதாக பிரதம மந்திரியின் கேள்வி நேரத்தில், தொழிற்கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் வரவிருக்கின்ற வெட்டுக்களைக் குறித்து எதையும் குறிப்பிடாமல் சமாளிப்போடு தவிர்த்து கொண்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பெண்களை அகதிகளாக ஏற்றுக்கொள்வதை நிறுத்துவதன் மீதான கேள்விகளில் மட்டுமே கவனம் செலுத்தி, அவர் அவரது சொந்த நாடாளுமன்ற அங்கத்தவர்களுடனான எந்த மோதலையும் தவிர்க்க முயன்றார்—ஏனெனில் அவர்களில் பலர் சிக்கனத் திட்டத்தை ஆதரிக்கின்றனர் மற்றும் சிரியாவில் இராணுவ தலையீட்டுக்கு ஆதரவாக அவர்கள் வாக்களிப்பதைத் தடுக்கும் திட்டங்களுக்கு எதிராக ஒரு கலகத்தில் ஈடுபடவும் அவர்கள் அச்சுறுத்தி உள்ளனர்.

பிரபுக்கள் சபையில் அரசாங்கத்தினது தோல்விக்குப் பின்னர், நிழல் அமைச்சரவை சான்சிலர் ஜோன் மெக்டொன்னெல் வரிச்சலுகை வெட்டுக்களுக்குக் குழிபறிக்குமாறு ஓஸ்போர்னுக்கு அழைப்புவிடுத்தார். அவருக்கு தொழிற்கட்சியின் ஆதரவு இருக்கும் மற்றும் எந்தவித பின்னடைவிலிருந்தும் அக்கட்சி "அரசியல் ஆதாயம்" தேட முயலாது என்றவர் உறுதியளித்தார்.

அச்சம்பவத்தின் போது, சான்சிலரின் அறிக்கையைத் தொடர்ந்து ஒரு விட்டுக்கொடுப்பான சண்டையில் மெக்டொன்னெல் கவனமாக வெறுமனே ஓஸ்போர்னை வலதிலிருந்து விமர்சித்தார். தலைவர் மாவோவின் சிறிய செந்நூல் இன் ஒரு பிரதியை நாடாளுமன்றத்தின் செய்தி வழங்கும் பெட்டியை நோக்கி தூக்கிவீசி, மெக்டொன்னெல் சீனாவிற்கு பொதுச் சொத்துக்களை விற்பதற்காக "தோழர் ஓஸ்போர்ன்" ஆகிறார் என்று இடித்துரைத்தார்.