சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

A socialist perspective to defend Sri Lankan plantation workers

இலங்கை தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்க ஒரு சோசலிச முன்னோக்கு

By the Socialist Equality Party (Sri Lanka) 
2 December 2015

Use this version to printSend feedback

இலங்கையில் 200,000 க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள், முந்தைய சம்பள உடன்படிக்கை கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த பின்னர், முன்னெப்போதும் இல்லாதவாறு ஒரு புதிய சம்பள ஒப்பந்தம் இன்றி கடந்த ஒன்பது மாதங்களாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம், ஆரம்பத்தில் தொழிற்சங்கங்கள் முன்வைத்த 1000 ரூபாய் (7 அமெரிக்க டாலர்) அன்றாட ஊதிய அதிகரிப்பை மட்டுமன்றி, எந்தவொரு சம்பள உயர்வையும் தர மறுத்துள்ளதுடன் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை ஆழமாக வெட்டிச் சரிக்க முயற்சிக்கின்றது.

தொழிற்சங்கங்கள், நியாயமான சம்பளம் மற்றும் சிறந்த நிலைமைகளுக்காக தோட்டத் தொழிலாளர்களின் எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்காமல் தடுப்பதில் அரசாங்கத்துடனும் முதலாளிமாருடனும் உடந்தையாக இருந்து வருகின்றன. தொழிற்சங்கங்களின் உடந்தையுடன், பொலிசார் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மஸ்கெலியா மற்றும் நோர்வூட் பெருந்தோட்டங்களிலும் கேகாலை மாவட்டத்தில் கனேபல்ல தோட்டத்திலும் மே மற்றும் ஜூலை மாதங்களில் டசின் கணக்கான தொழிலாளர்களை கைது செய்தனர். வேலைச் சுமை நியாயமற்ற, எதேச்சதிகாரமான முறையில் அதிகரிக்கப்படுவதை எதிர்க்க நடவடிக்கை எடுத்தமையே அவர்கள் செய்த "குற்றம்" ஆகும். அவர்கள் இப்போது சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்காக வழக்கை எதிர்கொள்கின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சியானது (சோ...), முதலாளிகளுக்காகவும் அரசாங்கத்துக்காகவும் ஒரு தொழில்துறை பொலிஸ்காரனாக செயல்படும் தொழிற்சங்கங்களில் இருந்து முழுமையாக முறித்துக்கொள்ளாமல் தொழிலாளர்களால் எதையும் பாதுகாக்க முடியாது என்று எச்சரிக்கிறது. நாம், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளை பாதுகாக்க, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தோட்டத்திலும் தொழிற்சாலைகளிலும் சுயாதீனமான போராடும் அமைப்புகளை, அதாவது நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிக்க அழைப்பு விடுக்கின்றோம்.

தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலின் நோக்கமானது பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் மற்றும் இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்துடன் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் நடத்திய ஒரு அவசர கூட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இது பற்றிய செய்தி டெய்லி எஃப்.டீ. வலைத் தளத்தில் சமீபத்தில் வெளியானது.

மோசமாகி வரும் உலகப் பொருளாதார நெருக்கடியின் கீழ், இலங்கை தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதிகளும் அடங்களாக சந்தைகளுக்கான போட்டி தீவிரமடைவதையும் உற்பத்தி பண்டங்களின் விலை வீழ்ச்சியடைவதையும் முதலாளிகள் எதிர்கொள்கின்றனர். இதன் விளைவாக, கடந்த ஆண்டில் 22 பிரதான தோட்ட நிறுவனங்களில் 19 கம்பனிகள் 2,850 மில்லியன் ரூபா (19.9 மில்லியன் டாலர்) நஷ்டம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அவசர கூட்டம் தேயிலைத் தொழிற்துறை நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதில் கவனம் செலுத்தியது. அது "உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு மாதிரியாக வருமானப் பகிர்வு" முறைமைக்கு அழைப்பு விடுத்தது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் பராமரிக்கவும் அறுவடை செய்யவும் 1,500 முதல் 2,000 தேயிலைச் செடிகள் ஒதுக்கப்பட்டு வருவாய் அவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இந்த முறைமை தொழிலாள வர்க்கத்தை விளைவுகளுடன் பிரித்து வைக்கவும் மற்றும் தொழிலாளர்களை கம்பனியினதும் உலக சந்தைகளதும் தயவில் வாழும் "குத்தகை விவசாயிகளாகவும்" மாற்றும்.

பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத் தலைவர் ரொஷன் இராஜதுரை, தோட்டத் தொழிலாளர்களுக்கான அனைத்து சமூக செலவினங்களையும் நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்தார். அவர், தொழிலாளர்கள் ஓய்வுபெறும் போது நம்பியிருக்கும் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றுக்கு முதலாளி சட்டரீதியாக செய்யவேண்டிய பங்களிப்பு உட்பட, அகற்றப்படவேண்டிய செலவினங்களின் பட்டியல் ஒன்றை முன்வைத்தார்.

தோட்ட நிறுவனங்கள் ஏற்கனவே ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு 1,100 ரூபா செலவிடுகிறது என்று இராஜதுரை முறைப்பாடு செய்தார். உண்மையில், ஒரு தொழிலாளியின் தினசரி மொத்த ஊதியம் 620 ரூபாய் மட்டுமே. வேலைக்கு வராத நாட்கள் மற்றும் இலக்குகள் பூர்த்தி செய்யப்படாததற்கும் சம்பளத்தை வெட்டினால் இந்த தொகை இன்னும் குறைவாக இருக்கும். தோட்ட உரிமையாளர் சங்கத்தின் இலக்கு என்னவெனில், சம்பளத்துடனான விடுமுறை, மருத்துவ உதவி, குழந்தை பராமரிப்பு சேவை மற்றும் வீடுகள் உட்பட, தொழிலாளர்களுக்கு பாரம்பரியமாக வழங்கப்பட்ட அல்லது போராடிப் பெற்ற நன்மைகளையும் அபகரிப்பதாகும். முதலாளிகள் இவற்றை தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகளாக கருதவில்லை. மாறாக கம்பனியின் இலாபத்தில் இருந்து தகாத முறையில் வெட்டிக்கொள்ளப்படுவதாகவே கருதுகின்றன.

முதலாளிமார், அனைத்து சமூக நலன்களையும் ஒழிக்கும் வகையில் தொழில் நிர்வாகத்தில் ஒரு பாரதூரமான மறுசீரமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் அதேவேளை, ஒவ்வொரு தொழிலாளியினதும் உற்பத்தி இலக்குகளையும், அத்துடன் ஒரு கிலோ தேயிலைக் கொழுந்துக்கான பணத் தொகையையும் ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்க முகாமைத்துவத்துக்கு அதிகாரமளித்து வருகின்றது.

பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் தோட்ட உரிமையாளர் சங்கம், தொழிலாளர்கள் மீது இந்த கடுமையான நடவடிக்கைகளை திணிப்பதில் அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆதரவைப் பெறுகின்றது. அது, பண பரிமாற்ற சிக்கல்களை மேற்கோளிட்டு, "கடந்த சம்பள கூட்டு ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பதற்கும்அதற்காகதொழிற்சங்கங்களுடன் ஒரு உடன்படிக்கைக்குச் செல்வதற்கும்அரசாங்க ஆதரவு தேவை என வலியுறுத்துகிறது.

பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத் தலைவர் இராஜதுரை ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், "மிகப் பெருமளவில் தொழிற்துறையின் எதிர்கால நீடிப்பும் அதன் உயிர்பிழைப்பும் தொழிலாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது" என்றார். கடந்த காலத்தில் போலவே, அதே துதியை பாடவுள்ள தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் கம்பனிகளின் இலாபங்களை பெருக்க அர்ப்பணிக்க வேண்டும் அல்லது பெரும் வேலை இழப்புக்களை எதிர்கொள்ள நேரும் என வலியுறுத்தவுள்ளன.

அனைத்து தொழிற் சங்கங்களும் தோட்டத் தொழிலாளர்களின் எந்தவொரு சுயாதீனமான போராட்டத்தையும் ஒடுக்குவதில் முற்றிலும் துரோக பாத்திரத்தை ஆற்றியுள்ளன.

* 2006ல் ஒரு பெரும் வேலைநிறுத்த இயக்கத்தின் மத்தியில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முயற்சிகளைக் கீழறுப்பதாக குற்றம் சாட்டிய போது, தொழிற்சங்கங்கள் அவரது வழியில் விழுந்தன.

* 2009ல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (.தொ.கா.) முதலாளிமாருடன் ஒரு விற்றுத் தீர்க்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அதேவேளை, மலையக மக்கள் முன்னணி (..மு.) மற்றும் ஏனைய எதிர் தொழிற்சங்கங்களும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் முன்னெடுத்த மெதுவாக வேலைசெய்யும் பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுப்பதாக கூறிக்கொண்டன. ஆயினும் அது, தொழிலாளர்களின் எதிர்ப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதை முடித்துவிடுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது.

* 2011ல், தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ், ஒரு சிறிய ஊதிய உயர்வுக்கு பிரதியுபகாரமாக இரண்டு வருடங்களுக்கு வேலைநிறுத்தம் செய்யாமல் தொழிலாளர்களைக் கட்டிப்போடும் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கம்பனிகளுடன் கையெழுத்திட்டன. தொழிலாளர்கள் உற்பத்தி இலக்குகள் எதேச்சதிகாரமாக உயர்த்தப்படுவதற்கு எதிராக வேலை நிறுத்தத்தில் குதித்தபோது, அவர்களின் நடவடிக்கை சட்ட விரோதமானது என்று அறிவித்த .தொ.கா., வேலை நிறுத்தக்காரர்களை மிரட்டுவதற்காக நிர்வாகங்களுடனும் பொலிசுடனும் ஒத்துழைத்தது.

* 2013ல், தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை மீறி இரகசியமாக ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நிபந்தனைக்கு ஈடாக மற்றொரு அற்ப சம்பள உயர்வு கொடுக்கப்பட்டது. இதை தோட்ட நிர்வாகங்கள் ஒருதலைப்பட்சமாக தொழிலாளர்கள் மீது வேலைச் சுமையை அதிகரிக்க சுரண்டிக்கொண்டன.

சகல தொழிற்சங்கங்களும் ஏதாவதொரு வழியில் அரசியல் ஸ்தாபகத்துடன் பிணைந்துள்ளன. .தொ.கா. முந்தைய அரசாங்கத்தின் ஒரு பங்காளியாக இருந்து அதன் கட்டளைகளை நிறைவேற்றியது. ..மு., தொழிலாளர் தேசிய சங்கம் (தொ.தே..) மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் (.தொ.கா.) தலைவர்களும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களாக உள்ளனர். அவர்கள் ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்த போதிலும், பின்னர் .தொ.கா. அதிகம் கோரியதாக கண்டனம் செய்தனர்.

தொழிலாளர்கள் வாஷிங்டனின் ஆதரவுடன் ஜனவரி தேர்தலில் பதவியில் அமர்த்தப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது, அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி (.தே..) அரசாங்கத்தின் மீது எந்த போலி நம்பிக்கையும் வைக்கக் கூடாது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ..சு..) உழைக்கும் மக்களின் இழப்பில் பெருநிறுவன இலாபத்தைப் பாதுகாப்பதில் நீண்ட சரித்திரம் கொண்ட பெரும் வர்த்தகர்களின் கட்சிகள் ஆகும்.

சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் "ஜனநாயகப் புரட்சி" நடத்தியதாகக் கூறிக்கொண்டே ஆட்சிக்கு வந்தனர்ஆயினும், ஒரு ஆண்டு கூட கடக்கவில்லை, அரசாங்கம் சுத்தமான குடிநீர் கோரிய கிராமப்புற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகவும் இலவச கல்வியை பாதுகாப்பதற்காக ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களுக்கு எதிராகவும் தமது நிலைமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகவும் பொலிசைப் பயன்படுத்தியது.

மே 2012ல், சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய தோட்டத் தொழிலாளர்களின் மாநாட்டில், தொழிற்சங்கங்களின்  தசாப்த கால காட்டிக்கொடுப்பில் இருந்து அவசியமான அரசியல் படிப்பினைகளைப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியது. நாம் தொழிற்சங்கங்களிடம் இருந்து அமைப்பு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முழுமையாக விலகிக்கொள்ளுமாறும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் சுயாதீன நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புமாறும் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியின் மத்தியில் அந்த பணிகள் இன்று இன்னும் அவசரமானவையாகும். இலங்கையில் தேயிலை தோட்டங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன. கேள்வி என்னவெனில் இதைச் செய்யபோவது எந்த வர்க்கம் என்பதுதான். அது முதலாளித்துவமா அல்லது தொழிலாள வர்க்கமா? அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டுடன் தோட்டக் கம்பனிகள் தமது பிற்போக்கு நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டுள்ளன. இதற்குத் தோட்டத் தொழிலாளர்கள் தமது பதிலை அளிக்க வேண்டும்.

நாம் பின்வரும் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை முன்மொழிகின்றோம்:

* சகல தோட்டத் தொழிலாளர்களுக்கும் பிரஜா உரிமை வேண்டும்!

* வாழ்க்கை செலவுக்கு ஏற்ற உத்தரவாதப்படுத்தப்பட்ட மாதச் சம்பளம் வேண்டும்!

* வேலைச்சுமையை அதிகரிக்க வேண்டாம்! சம ஊதியத்துடன் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வேண்டும்!

* சகலருக்கும் வீடுகள், சுகாதார மற்றும் கல்வி வசதிகள் வேண்டும்!

2012ல் சோசலிச சமத்துவக் கட்சி அறிக்கை விளக்கியதாவது:

" தனியார் இலாபத்துக்காக நடத்தப்படும் தோட்டங்கள் முதலாளிகளின் உரிமையின் கீழ் இருக்கும் வரை இந்த இன்றியமையாத கோரிக்கைகளை நிறைவேற்றுவது சாத்தியமற்றது. சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் .வை.எஸ்.எஸ்.. தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன.

"தோட்டத் தொழிலாளர்கள், சோசலிச வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தில், தமது வாழ்க்கைத் தரமும் சீரழிக்கப்படுவதை எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினர் மற்றும் ஒடுக்கப்பட்ட கிராமப்புற வெகுஜனங்களின் பக்கமும் திரும்ப வேண்டும். சமூகம், ஒரு சிறிய செல்வந்த தட்டின் இலாபங்களுக்காக அன்றி, உழைக்கும் மக்களின் அடிப்படை சமூகத் தேவைகளை பூர்த்தி செய்ய மேலிருந்து கீழ் வரை புதுப்பிக்கப்பட வேண்டும். தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் சோசலிசக் குடியரசு ஒன்றியங்களின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காக சோசலிச சமத்துவக் கட்சியும் .வை.எஸ்.எஸ்..யும் போராடுகின்றன."

நாம் இந்த அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டம் சம்பந்தமாக ஒரு விரிவான கலந்துரையாடலை தொடங்குவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி உடன் தொடர்பு கொள்ளுமாறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.