சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

After Paris attacks, neo-fascists surge in polls for French regional elections

பாரிஸ் தாக்குதல்களுக்கு பின்னர், பிரெஞ்சு பிராந்திய தேர்தல்களுக்கான வாக்கெடுப்பில் நவ பாசிஸ்டுகள் மேலெழுச்சி

By Kumaran Ira 
2 December 2015

Use this version to printSend feedback

பாரிசில் நவம்பர் 13ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் சட்டம் ஒழுங்கு வெறிக்கூச்சல் மற்றும் கொடூரமான போலீஸ் அரசு நடவடிக்கைகள் ஆகியவற்றால் பிரதான ஆதாயம் அடைபவராக நவ பாசிச தேசிய முன்னணி (FN) மேல் எழுந்துள்ளது. டிசம்பர் 6 மற்றும் 13-ன் பிராந்திய தேர்தல்களுக்கான வாக்குப்பதிவில் அது முன்னணியில் இருக்கிறது.

Ipsos கருத்துக் கணிப்பின்படி, FN டிசம்பர் 6 அன்று முதல் சுற்று வாக்கெடுப்பில் PS மற்றும் வலதுசாரி குடியரசுக் கட்சியை (LR) விடவும் 30 சதவீதம் பெறும் என குறிப்பிடுகின்றது.

நவம்பர் 29 BVA கருத்துக் கணிப்பு மார்சை சுற்றிய Alpes தென்கிழக்கு மாகாணத்தில் Côte d’Azur பிராந்தியத்தில் மற்றும் லில்லை சுற்றி உள்ள வடக்கு, Nord Pas-de-Calais Picardie பகுதியில் FN வெற்றிபெறும் என்று காட்டுகின்றது. Burgundy-Franche -Comté பிராந்தியத்திலும் அது வெற்றி பெறலாம். BVA கருத்துக் கணிப்பு பிரான்சின் 12 பிராந்தியங்களிலும் FN கணிசமான வெற்றியைப் பெறும் என்று காட்டுகிறது.

FN இன் எழுச்சி, சோசலிஸ்ட் கட்சியின் திவால்நிலை மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆகியவற்றின் விளைவாகும். பிரான்சில் மில்லியன் கணக்கான மக்கள் வேலையின்றி உள்ளனர் மற்றும் PS ஆனது கடுமையான பொருளாதார சிக்கன நடவடிக்கையால் பொது செலவினங்களை தொடர்ந்து வெட்டிக்குறைத்து வருவது பொருளாதாரத்தை கீழறுத்து வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, 130 பேரைக் கொன்ற நவம்பர் 13 பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பரந்த அளவிலான சட்டம் ஒழுங்கு பற்றிய மிகை உணர்ச்சிப்பிதற்றல் சூழலில் பிராந்திய தேர்தல்கள் இடம்பெறுகின்றன.

பயங்கரவாதத்தின் மீதான போர்என்ற மறைப்பின் கீழ், PS ஆனது முன்னெதிர்பாராத பொலீஸ் அரசு நடவடிக்கைகளை திணிப்பதுடன் அடிப்படை ஜனநாயக உரிமைகளை அடியோடு அரித்தெடுத்து வருகிறது. நவம்பர் 13 தாக்குதல்களுக்கு பின்னர், PS மூன்றுமாதகால நெருக்கடிநிலையை அமல்படுத்தியது, அது எதிர்ப்புக்களை தடைசெய்யவும் முறியடிக்கவும், பொது ஒழுங்கிற்கு ஆபத்துள்ளவர் என பொலீஸ் கருதும் தனிநபர்களை வழக்கு விசாரணை எதுவுமின்றி வீட்டுக்காவலில் வைக்கவும் அரசை அனுமதிக்கிறது. PS நெருக்கடிநிலை அதிகாரங்களை காலவரையற்று செயற்படுத்த ஜனாதிபதிக்கு அனுமதி வழங்கும் வகையில் அரசியற் சட்டத்தை திருத்த உறுதி கொண்டிருப்பது, பிரான்சை ஒரு பொலீஸ் அரசாக பலமான வகையில் மாற்றும்.

செவ்வாய் அன்று, பிரதமர் இமானுவல் வால்ஸ் இந்த கொடூரமான நடவடிக்கைகளை நியாயப்படுத்தியதுடன், அவை பாரிஸ் தாக்குதல்களுக்கு பின்னர் ஏற்கப்பட்ட சட்டத்தின்படி நெருக்கடி நிலைமை முடிவுறும் பொழுதான, பிப்ரவரி 26, 2016க்கும் அப்பால் நீட்டிக்கப்படக்கூடும் என்று கருத்துரைத்தார். “நாம் இதற்கான சாத்தியத்தை புறம்தள்ளிவிட முடியாது, உண்மையில் அது அச்சுறுத்தல்களின் மீது தங்கியிருக்கிறது, மிகப் பொறுப்பாக நாங்கள் செயற்பட வேண்டிஇருக்கிறதுஎன்றார்.

வால்ஸ் நவம்பர் 13 தாக்குதல்களுக்கு பின்னரான பாரிய அளவிலான பொலீஸ் ஒடுக்குமுறையையும் மக்களை வீட்டுக்காவலில் சிறையிட்டு வைப்பதற்கான பல சட்டபூர்வமல்லாத முடிவுகள் பற்றியும் தற்பெருமை பீற்றிக் கொண்டார். வால்ஸின்படி, “தாக்குதல்களுக்கு பின்னர் இருந்து, 2000 நிர்வாக பொலீஸ் தேடுதல் வேட்டைகளுக்குமேல் (சட்ட ரீதியான கட்டுப்பாடு எதுவுமின்றி) மேற்கொள்ளப்பட்டன, மற்றும் நெருக்கடிநிலைமைகளின் உள்ளடக்கத்தில் 210 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.”

திங்கள் அன்று தொடங்கிய COP21 புவிவெப்பநிலை மாநாட்டின்பொழுது, அரசாங்கமானது சூழலியல் தொடர்பான எதிர்ப்புக்களை தடைசெய்து, 300 ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமேல் கைது செய்து தடுத்து வைத்தது.

அடிப்படை ஜனநாயக உரிமைகளை அழிப்பதற்ககான PS அரசாங்கம் மற்றும் முழு அரசியல் ஸ்தாபகங்களின் உந்துதலானது, FN பலப்படுத்தி வருகிறது. கடுமையான சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை மற்றும் புலம்பெயர்வு எதிர்ப்பு கொள்கைகளுக்கான அழைப்புக்களின் அடிப்படையில் அது பிரச்சாரம் செய்து வருகிறது.

நவம்பர் 13 தாக்குதல்களுக்கு பின்னர், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட், “தேசிய ஐக்கியத்தைமுன்னெடுத்தல் என்ற பெயரில் FN தலைவர் மரின் லு பென் எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக பிரான்சின் பிரதான நகரங்களின் தொழிலாள வர்க்க புறநகர்ப்பகுதிகளை நோக்கி திருப்பப்பட்டு வரும் நெருக்கடிநிலையை மூன்று மாதகால நீடிப்பதற்கு ஆதரவளித்ததுடன், நெருக்கடி நிலையானது, “புறநகர்ப்பகுதிகளின் ஆயுதக் களைப்புக்குபயன்படுத்தப்பட வேண்டும் என்று லூ பென் கேட்டுக் கொண்டார்.

லூ பென், பிரான்சிற்கு புலம்பெயர்வுஉடனடியாக நிறுத்தப்படவும் கூட அழைப்பு விடுத்தார். அவ்வம்மையார், பிரான்சில் தற்போது இருக்கும் புகலடம் கோருவோர் அனைவரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற FN துணைத்தலைவர் புளோரியான் பிலிப்போவின் கூற்றை அங்கீகரித்தார்.

ஊடகங்களும், ஒன்றரை வருடமே இருக்கும் அடுத்த பிரதான தேர்தல் சுற்றில், மே17 ஜனாதிபதி தேர்தல்கள் உள்பட, வருகின்ற தேர்தல்களில் தேசிய மட்டங்களில் FN கணிசமாக பலமடையும் சாத்தியம் பற்றி விவாதிக்கத் தொடங்கியுள்ளன.

FN சார்பில் பேசவல்ல அதிகாரியை மேற்கோள்காட்டி, “தாக்குதல்கள் பிராந்திய தேர்தல்களில் FNக்கு ஆதாயமாக இருக்குமா?” என Libération பத்திகை கேட்டது, அவர் கூறினார், ”இடதும் (அதாவது, PS) நாமும் ஆதாயம் அடைபவர்களாக இருக்கக்கூடும். எமது முன்மொழிவுகளும் நடவடிக்கைகளும் நிரூபணமாகிவிட்டிருக்கின்றன என அவர்கள் அறிவித்தனர். உரிமையானது எங்களுக்கிடையில் நகரமுடியாது சிக்கிக்கொண்டுள்ளது.”

இதில் என்றுமில்லாதவாறு மிகத்தெளிவாக வெளிவருவது முழு ஆளும் தட்டின் திவால்நிலை ஆகும். PS இன் போலி இடது துணைக்கோள்களின்ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA)— ஆதரவுடன் 2012ல் ஆட்சிக்கு வந்த்திலிருந்து, ஹோலண்ட் பெரு முதலாளிகளுக்கு பல பத்து பில்லயன் கணக்கான யூரோக்களை அளித்து, பொருளாதார சிக்கனக் கொள்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார், ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பன்முக யுத்தங்களை நடத்தி வருகிறார்.

ஹோலண்டின் கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தில் நிலவும் பரந்த எதிர்ப்பின் வெளிப்பாட்டை தொழிற்சங்கங்களும் போலி இடதுகளும் தடுக்கின்ற நிலைமைகளின் கீழ், PS அதிகளவில் பொருளாதார சிக்கன கொள்கைகளுக்கும், யுத்தத்திற்கும் மற்றும் கடுமையான பொலீஸ் அரசு நடவடிக்கைகளுக்கும் அழைப்பு விடுப்பதானது, FN பலப்படுத்த மட்டுமே செய்யும். மக்களின் பரந்த பகுதியினர் PS மற்றும் LR இரண்டுடனும் ஆழமாக ஏமாற்றம் அடைந்துள்ள நிலைமையில், ஐரோப்பிய மற்றும் வட்டார தேர்தல்களில் அது கணிசமான வெற்றியை ஈட்டியுள்ளது.

பிரெஞ்சு முதலாளித்துவத்தின் சமூப்பொருளாதார சீர்குலைவானது, FN வெற்றிபெற்றிருக்கும் Nord-Pas-de-Calais-Picardie இல் எடுத்துக்காட்டாக காட்டப்பட்டிருக்கிறது, ஆனால் அது பல பத்தாண்டுகளாக PS மற்றும் PCF ஆல் ஆதிக்கம் செய்யப்பட்ட பகுதி ஆகும். தொழிற்துறை இடம்பெயர்தல் மற்றும் நிலக்கரி சுரங்கம் மூடல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, அப்பிராந்தியம் 12.5 சதவீதம் வேலையின்மை வீதத்தை கொண்டிருக்கிறது, மற்றும் பிரான்சில் அதிகம் ஏழ்மை வீதம் உள்ள பகுதிகளுள் ஒன்றாக உள்ளது. அரசு புள்ளிவிவர நிறுவனத்தின் (INSEE) படி, இப்பிராந்தியத்தில் வாழும் 6 மில்லியன் மக்களில் 1 மில்லியன் பேர் ஏழ்மையில் வாழ்கின்றனர்.

இந்த பிரச்சினைகளுக்கு ஆளும் வர்க்கத்திடம் ஒடுக்குமுறையையும் எதேச்சாதிகார ஆட்சியை நோக்கி நகருவதையும் தவிர வேறு தீர்வு எதுவும் இல்லை. PS அதனுடைய கொள்கைகளை ஏற்று வருவதாக கூறும் FN இன் கூற்று உண்மையின் தெளிவான கூறாக உள்ளது: அப்பட்டமான புலம்பெயர் எதிர்ப்பு பேரினவாதத்தை முன்னிலைப்படுத்தல், எதேச்சாதிகார நடவடிக்கைகள், பொருளாதார சிக்கன கொள்கை மற்றும் ஏகாதிபத்திய யுத்தம் எனஆரம்ப தசாப்தங்களில் FN இன் பகுதிகளில் இருந்திருக்கக்கூடியவைஇப்பொழுது முதலாளித்துவ அரசியலின் பிரதான ஓடையாக ஆகி இருக்கிறது.

PS ஆட்சிக்கு வந்ததிலிருந்து, உளவுத்துறை முகவாண்மைகளால் உள்நாட்டு உளவறிதலை சட்டபூர்வமானதாக ஆக்கும் மற்றும் உள்நாட்டைக் கண்காணிக்க பிரான்சின் உள்ளே இராணுவத்தை இறக்கும், ஒரு பெரிய அளவிலான பொலீஸ் அரசு எந்திரத்தை கட்டியமைப்பதற்கு PS தலைமைதாங்கி வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குள்ளே, இந்த அரசு எந்திரமானது, அதி வலது கட்சியான FN, அதாவது இதன் உறுப்பினர்கள்தான் நாஜி ஒத்துழைப்பாளரான விச்சி ஆட்சியை பகிரங்கமாக பேணியவர்கள், மனித இன அழிப்பு என்பதை மறுத்தவர்கள், மற்றும் அல்ஜீரியாவில் காலனித்துவ ஆட்சியை நியாயப்படுத்தியவர்கள், இப்படிப்பட்ட இதன் கரங்களில் கிடைக்கக்கூடும். நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதாக மேலீடாக நியாயப்படுத்தப்படும் அதேவேளை, நவம்பர் 13க்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொலீஸ் அரசு நடவடிக்கைகள், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் அச்சுறுத்துகின்றன என்பதை இது கோடிட்டுக்காட்டுகிறது.