சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government presents austerity budget

இலங்கை அரசாங்கம் சிக்கன வரவு-செலவு திட்டத்தை முன்வைக்கின்றது

By Saman Gunadasa
28 November 2015

Use this version to printSend feedback

கடந்த வெள்ளியன்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த, இலங்கையின் "ஐக்கிய" அரசாங்கத்தின் முதல் வரவு-செலவுத் திட்டம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்கிய அதேவேளை, உழைக்கும் மக்கள் மீது ஒரு தொகை சிக்கன நடவடிக்கைகளை சுமத்துகின்றது.

இந்த வரவு-செலவுத் திட்டமானது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வர்த்தக-சார்பு கோரிக்கைகளுக்கு ஏற்பவும் நவம்பர் 5 அன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய "பொருளாதார கொள்கை அறிக்கைக்கு" ஏற்பவும் அமைந்துள்ளது. இந்த நடவடிக்கைகளில், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை வணிகமயமாக்குதல் அல்லது தனியார்மயமாக்குதல், விலை மானியங்களை வெட்டிக் குறைத்தல் மற்றும் தொழிலாளர்கள் மீதும் வறியவர்கள் மீதும் அதிக வரிச் சுமைகளைத் திணிப்பதும் உள்ளடங்கியுள்ளன.

மக்கள் எதிர்ப்பைத் திசை திருப்புவதற்காக, கருணாநாயக்க வரவு-செலவுத் திட்டத்தின் தொழிலாள வர்க்க விரோத தன்மையை மூடி மறைக்க முயன்றார். முந்தைய அரசாங்கத்தால் சுமத்தப்பட்டிருந்த விசேட வியாபாரப் பண்ட வரி அறவீட்டைக் குறைப்பதன் மூலம் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், குழந்தைகளுக்கான பால் மா, கருவாடு, பருப்பு, பட்டாணி, டின் மீன், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு உட்பட சில அத்தியாவசியப் பண்டங்களின் விலை ஓரளவு குறைக்கப்பட்டுள்ளன.

உடனடியாக இந்த அற்ப சலுகைகள் பற்றிக்கொண்ட கொழும்பு ஊடகங்கள், அரசாங்கம் "மக்கள் சார் வரவு செலவுத் திட்டத்தை" முன்வைத்துள்ளது என்று அறிவித்தன. இந்த நடவடிக்கைகளைப் பற்றிய எந்தவொரு ஆய்வும் இந்த கூற்று அபத்தமானது என காண்பிக்கும்.

கருணாநாயக்க, பொதுச் செலவுகளைக் குறைப்பதற்கான அவசியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியே தனது வரவு-செலவுத் திட்ட உரையைத் தொடங்கினார். "தேவையற்ற விரயங்களைக் குறைப்பதற்காக அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கான செலவுத் தேவைகளை விமர்சனப் பூர்வமாக மதிப்பீடு செய்து கணிப்பதற்கு உரிய நேரம் வந்துவிட்டது," என்று அவர் அறிவித்தார்.

ஏழைகளுக்கான நாட்டின் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நலன்புரித் திட்டங்களை இலக்கு வைத்த நிதி அமைச்சர், அவை "உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கே" வரையறுக்கப்படும் என்று அறிவித்தார். கிராம சேவை அலுவலர்கள் தலைமையிலான ஒரு வலையமைப்பை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த அலுவலர்களே  சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் உண்மையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை முடிவெடுப்பர்.

தற்போதைய உர விலை மானியங்கள், ஒரு ஹெக்டேருக்கு 25,000 ரூபா என்ற நிலையான தொகையால் பதிலீடு செய்யப்படும். உர விலையை விரைவில் மிகவும் உயரும் வாய்ப்பு இருப்பதால் இந்த மாற்றம் தங்கள் நிதி பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டில் இருந்து புதிதாக நியமனம் பெறும் அரசாங்க ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை இல்லாமல் ஆக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. மாறாக தொழிலாளர்கள் ஒரு பங்களிப்பு ஓய்வூதிய முறைமைக்கு பணம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் கருணாநாயக்க தெரிவித்ததாவது: "2005-2014 இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியச் செலவு 170 சதவீதம் அதிகரித்துள்ளமை, அதன் தொடர்ச்சியான அதிகரிப்பை நிர்வகிக்கத் தகுந்த நடவடிக்கைகளை அவசியமாக்கியுள்ளது." சர்வதேச நாணய நிதியம், தாங்கிக்கொள்ள முடியாதது என வகைப்படுத்தி அரசாங்க ஓய்வூதிய நிதி கடுமையாக குறைக்குமாறு நீண்டகாலமாக கோரி வருகின்றது.

வரவு-செலவு திட்டம், பெரிய வணிகர்கள் மற்றும் பணக்காரர்களுக்கு நேரடி வரிகளைக் குறைக்கும் அதே சமயம், அரசாங்கத்தின் வரி வருமானத்தில் 80 சதவிகிதத்தை சேகரிக்கின்ற மறைமுக வரிகளை அதிகரித்துள்ளது. இந்த மறைமுக வரிகளின் சுமை, ஏற்கனவே உயர்ந்து வரும் விலைவாசிகளை சமாளிக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் மிக வறிய சமூகத் தட்டினர் மீது சுமத்தப்படுகின்றது.

மது மற்றும் புகையிலை 25 சதவிகித கூடுதல் வரியை ஈர்க்கும். சேவைகளுக்கான பெறுமதி சேர்ப்பு வரியானது 11ல் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்கப்படுவது, குறிப்பாக தண்ணீர் மற்றும் மின்சார கட்டணங்களை அதிகரிக்கச் செய்யும். அனைத்து இறக்குமதிகள், உற்பத்தி மற்றும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட சேவைகளை மீதும் விதிக்கப்படும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி, 2 வீதத்தில் இருந்து 4 சதவீதம் வரை இரட்டிப்பாக்கப்படும். அனைத்து இறக்குமதிகள் மீதுமான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரி (பிஏஎல்), 5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருணாநாயக்க அரசாங்கத் துறை தொழிலாளர்களின் நிலைமைகள் மீதும் பெரும் தாக்குதல்களை சமிக்ஞை செய்தார். "பொதுத்துறை செயற்பாட்டின் பெறுபேறுகள் குறிப்பட்ட மட்டத்துக்கு கீழேயே உள்ளது என்று குறிப்பிடுவதையிட்டு நான் வருந்துகிறேன். அது திருத்தப்பட வேண்டும். உற்பத்தித் திறன், நாட்டில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் இடையூறாக இருக்கும் ஒரு தீவிர பிரச்சினையாகி உள்ளது," என்று அவர் கூறினார்.

நிதி அமைச்சர், அதிக தனியார்மயமாக்கல் உட்பட ஒரு தொகை வணிக சார்பு நடவடிக்கைகளை முன்மொழிந்தார். அவர், நுரைச்சோலை அனல் மின் நிலையம் போன்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் தனியார் முதலீட்டை அதிகரிக்க ஒரு விசேட தேவை சாதனத்தை (SPV) நிறுவுவதற்கு முன்மொழிந்தார்.

தவிர்க்க முடியாமல் நிதி இன்றி தத்தளிக்கும் மற்றும் தரம் குறைந்துவரும் அரச பல்கலைக்கழகங்களுடன் தனியார் பல்கலைக்கழகங்கள் போட்டியிட உள்ளன. தனியார் மருத்துவ கல்லூரிகளை ஸ்தாபிப்பது தொடர்பாக மாணவர்களின் எதிர்ப்புக்களை மழுங்கடிக்கும் முயற்சியில், "நமது அரசாங்கம், தனியார் பல்கலைக்கழகங்கள் செயல்படவும் மருத்துவம் தவிர, ஏனைய பாடத் திட்டங்களை வழங்கவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறது", என கருணாநாயக்க அறிவித்தார்.

தனியார் துறை இரண்டு ஆண்டுகளில் 2,500 ரூபாவால் மாத சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என நிதி அமைச்சர் "வேண்டுகோள்" விடுத்தார். எனினும் அவர், 10,000 ரூபாவால் பொதுத்துறை சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியின் மீதமுள்ள பகுதியை வழங்குவது பற்றி மௌனம் காத்தார்.

பெருநிறுவன மற்றும் தனிநபர் வருமான வரி விகிதங்கள் 15 சதவீதம் மற்றும் 30 சதவீதம் என இரண்டு வகைகளில் "எளிமைப்படுத்தப்பட்டுள்ளன". சூதாட்டம், மதுபானம், புகையிலை, வங்கி, நிதி சேவைகள் மற்றும் வர்த்தகம் தவிர்ந்த, ஏனைய அனைத்து வணிகத் துறைகளுக்கும்ம், முந்தைய 28 சதவீத பொது வரி விகிதம் 15 சதவீதமாக குறைத்து விதிக்கப்பட்டுள்ளது. திங்களன்று வரவு செலவுத் திட்டத்துக்குப் பிந்திய ஒரு கலந்துரையாடலில், இலங்கை இப்போது உலகின் சிறந்த வருமான வரி விகிதத்தைக் கொண்டிருப்பதாக கருணாநாயக்க பெருமைபட்டுக்கொண்டார்.

அரசாங்கம் வெளிநாட்டினர் காணிகளை சொந்தமாக வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்கியதோடு வெளிநாட்டவர்கள் நிலங்களை குத்தகைக்கு எடுக்கும்போது விதிக்கப்பட்ட வரியை விலக்கிக்கொண்டது. அது பிரஜைகள் அல்லாதவர்களின் இலாபங்கள் மீதான வருமான வரியை நீக்கிவிட்டதுடன் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எந்த வங்கிக் கணக்கையும் வழங்க அனுமதித்துள்ளது. கருணாநாயக்க ஆடம்பர வீடுகள் மீதான மாளிகையை வரி உட்பட செல்வந்தர்கள் மீதான வரி, ஆடம்பர மற்றும் அரை சொகுசு கார்கள் மீதான தீர்வையையும் பெருநிறுவனங்களின் கொழுத்த இலாபத்தின் மீதான வரிகளையும் கூட அகற்றியுள்ளார்.

2016 வரவுசெலவுத் திட்டமானது தனியார் முதலீட்டை ஊக்குவிக்கவும் மற்றும் உள்ளக பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளமைக்காக அதை இலங்கை வர்த்தக சம்மேளனம் வரவேற்றுள்ளதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அது வரவுசெலவுத் திட்டத்தின் முதலீட்டாளர் சார்பு முன்மொழிவுகளை கண்டிப்பாக அமல்படுத்துமாறு கோரியுள்ளது: "வரவுசெலவுத் திட்டத்தின் திசை பரந்தளவில் முன்னேற்றமானதாக உள்ள அதே வேளை, அதற்கு நிச்சயமான மைல்கற்களுடனான குவிமையப்படுத்தப்பட்ட செயல்படுத்தல் மூலோபாயம் தேவை."

எல்லாவற்றுக்கும் மேலாக, வரவு-செலவுத் திட்டமானது தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீதமாக உள்ள வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை 2020 க்குள் 3.5 சதவீதமாக குறைக்கக் கோரும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை இட்டுநிரப்புவதற்கே வரையப்பட்டுள்ளது. அரசாங்கம் கனமான அந்நிய செலாவணி நெருக்கடியை தவிர்ப்பதற்காக 4 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறுவதற்கு ஏங்கிக்கொண்டிருக்கின்றது. கருணாநாயக்க குறிப்பிட்டவாறு, ஏற்றுமதியானது 2000ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33 சதவீதத்தில் இருந்து 201 ல் 14 சதவிகிதமாக சரிந்துள்ளது.

நிதி அமைச்சர், சந்தை-சார்பு திட்டத்தை அமுல்படுத்துவதில் ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கங்களின் சாதனைகளை மேன்மையை பாராட்டியே தனது வரவுசெலவுத் திட்ட உரையை ஆரம்பித்தார். ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கமே 1977ல் வெளிநாட்டு முதலீடுகளுக்கு இலங்கை திறந்துவிடுவதை ஆரம்பித்து வைத்தது. முந்தைய விக்கிரமசிங்க அரசாங்கம், 2001 முதல் 2004 வரை அதன் அவப்பெயர் பெற்ற "புத்துயிர் பெறும் இலங்கை" என்ற வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதை வீராப்பாகத் தூக்கிப் பிடித்த கருணாநாயக்க, அது பொருளாதாரத்தின் எதிர்மறை வளர்ச்சியை சாதகமான வளர்ச்சியாகத் திருப்பியது, என்றார்.

வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டு மசோதாவின் முதல் வாசிப்பு சுட்டிக் காட்டியவாறு, அரசாங்கம் ஆயுதப் படைகள் மற்றும் பொலிசுக்கு முன்னெப்போதும் இல்லாதளவு 306 பில்லியன் ரூபாய்களை (2.2 பில்லியன் டொலர்) ஒதுக்கியுள்ளது. வரவு செலவுத் திட்ட உரையில், பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 428ல் இருந்து 600 வரை அதிகரிக்கும் என்று நிதி அமைச்சர் கூறினார். அரசாங்கம், அதனது வரவு செலவுத் திட்டத்தினால் தவிர்க்க முடியாதபடி வெடிக்கக் கூடிய எதிர்ப்பின் மீது பொலிஸ் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட தயாரித்து வருவதற்கான அறிகுறியே இது.