சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

“Left” propagandists for escalation of imperialist war

ஏகாதிபத்திய போரைத் தீவிரப்படுத்தும் “இடது" பிரச்சாரகர்கள்

Bill Van Auken
15 December 2015

Use this version to printSend feedback

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீட்டை எவ்வாறு தீவிரப்படுத்துவது என்பதன் மீது அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் எரிச்சலான விவாதங்களில் அதிகரித்தளவில் குழப்பமடைந்துள்ள நிலையில், ஒன்று மாற்றி ஒன்றாக மேற்கு ஐரோப்பிய சக்திகள் அத்தாக்குதலில் இணைந்து வருகின்ற நிலையில், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இரண்டிலும் பரந்த பெருந்திரளான மக்களது உணர்வு, சந்தேகத்திற்கிடமின்றி பெருகியளவில் போருக்கு விரோதமாக உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஏனைய நாடுகளது அரசியல் ஸ்தாபகங்களின் மூர்க்கமான முயற்சிகளும், அத்துடன் சமீபத்திய பயங்கரவாத தாக்குதல்களை பிரதிபலிப்பதில் பீதி மற்றும் வெறுப்பைத் தூண்டிவிடும் ஊடகங்களின் பிரச்சாரங்களுக்கு இடையிலும், மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள், மத்திய கிழக்கில் ஓர் இராணுவ தலையீடு குறித்து அவர்களுக்கு பொய்யுரைக்கப்படுகிறது என்பதில் மீண்டுமொருமுறை நனவுபூர்வமாக உள்ளனர்.

ISIS க்கு (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசுக்கு) எதிராக குண்டுவீசுவதன் மூலமாக பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலிருந்து தொடங்கி, ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போரில் அதேபோன்ற சலாபிஸ்ட் ஜிஹாதிஸ்ட் (Salafist jihadi) போராளிகள் குழுவுக்கு நிதியுதவி வழங்கி ஆயுதபாணியாக்குவதன் மூலமாக, "மனித உரிமைகளை" ஆதரிப்பது என்ற வரையில், இப்போருக்காக முன்வைக்கப்படும் சரமாரியான மலைப்பூட்டும் போலிக்காரணங்களுக்கு மத்தியிலும், மத்திய கிழக்கிலும் மற்றும் அதன் பரந்த எண்ணெய் வளங்கள் மீதும் மேலாதிக்கத்தை பாதுகாக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளது உந்துதலுடன் நிஜமான நோக்கங்கள் சம்பந்தப்பட்டுள்ளன என மக்களிடையே நன்கு-ஆழ்ந்த ஐயஉணர்வு உள்ளது.

இந்நிலைமைகளின் கீழ், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அதற்கு அப்பாற்பட்ட நாடுகளில் உள்ள போலி-இடது அமைப்புகளின் ஒரு கூட்டம், ஏகாதிபத்திய நடவடிக்கைகளை வேகமாக விரிவாக்கும் பிரச்சாரத்திற்குச் சேவையாற்றும் அறிக்கை ஒன்றை வெளியிடுவதில் ஒன்றிணைந்துள்ளன.

பிரெஞ்சு புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA), பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கட்சி, ஆஸ்திரேலியாவின் சோசலிச மாற்றீடு, இலங்கையின் நவ சம சமாஜ கட்சி (NSSP), அமெரிக்காவின் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO) ஆகியவை அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. அவை அனைத்துமே ஏகாதிபத்திய தலையீடுகளுக்கு "இடது" நியாயப்பாடுகளை வழங்குவதிலும் மற்றும் அமெரிக்கா-முடுக்கிவிட்ட ஆட்சி-மாற்ற போர்களைப் "புரட்சிகளாக" காட்டுவதிலும் நீண்டகால மற்றும் வெட்கக்கேடான சாதனைகளைக் கொண்டுள்ளன.

லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்கான ஏகாதிபத்திய போரை ஊக்குவித்த, இத்தகைய "இடது" அமைப்புகள் என்று கூறிக் கொள்பவைகளில் பிரெஞ்சு NPA முதலிடத்தில் இருந்தது. மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்காவிற்கான அதன் முன்னணி செய்தி தொடர்பாளர் ஜில்பேர் அஷ்கார் (Gilbert Achcar), லிபியாவில் குறைந்தபட்சம் 30,000 லிபியர்களைக் கொன்று, அந்நாட்டை ஒரு நிரந்தர உள்நாட்டு போர் நிலைக்கு கொண்டு வந்து, மௌம்மர் கடாபியைப் பதவியிலிருந்து கவிழ்த்து படுகொலை செய்த அமெரிக்க-நேட்டோ தலையீட்டை புகழ்ந்தவராவார்.

அப்போரின் தொடக்கத்தில், அஷ்கார் பின்வரும் இழிவார்ந்த வரிகளை எழுதினார்: “ஒவ்வொரு பொது விதியிலும் விதிவிலக்குகள் உள்ளன. ஐ.நா.-அங்கீகரித்த ஏகாதிபத்திய சக்திகளின் இராணுவ தலையீடுகள் முற்றிலும் பிற்போக்குத்தனமானவை என்பதும், அவை ஒருபோதும் ஒரு மனிதநேய அல்லது சாதகமான நோக்கத்தை அடையாது என்பதும் இந்த பொதுவிதியில் உள்ளடங்கும் விதிவிலக்காகும்.”

அவரும் மற்றும் NPA உம், சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தைக் கவிழ்க்க அமெரிக்கா-முடுக்கிவிட்ட போருக்கு ஆதரவு கொடுக்க சென்றனர். நேரடியான ஏகாதிபத்திய தலையீட்டை சிறந்த முறையில் எவ்வாறு கொண்டு வருவது என்பதைக் குறித்து சிரிய தேசிய கவுன்சிலுக்கு ஆலோசனை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட மேற்கத்திய உளவுவேலை அங்கங்களின் கூட்டணியை அவர்கள் சந்திக்குமளவிற்குச் சென்றனர்.

அதேபோல, ஆஸ்திரேலியாவின் சோசலிச மாற்றீடு, “ஏகாதிபத்திய-விரோத துடை-நடுங்கிகளை" “இடது" நிராகரிக்க வேண்டுமென அறிவித்து, சிரியாவில் மேற்கத்திய தலையீடு குறித்த எந்தவிதமான எந்த எச்சரிக்கைளையும் கண்டித்தது.

அதன் பங்கிற்கு, சர்வதேச சோசலிச அமைப்பு, சிஐஏ வழங்கும் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிகளைப் பெறவும் அத்துடன் நேரடியான அமெரிக்க இராணுவ தலையீட்டைக் கோரவும் "சிரிய புரட்சியாளர்களுக்கு" “உரிமை" இருப்பதாக நியாயப்படுத்தியது.

1960கள் மற்றும் 1970களின் தொடக்கத்தில் போருக்கு எதிராக மேலோங்கிய நடுத்தர வர்க்க போராட்ட இயக்கங்களிலிருந்து வந்திருந்த இத்தகைய சகல அமைப்புகளும் ஏகாதிபத்திய போருக்குப் பகிரங்க ஆதரவாளர்களாக திசைமாறி இருப்பது, ஒரு நீடித்த நிகழ்வுபோக்கின் பாகமாகும். இதன் சடரீதியலான வேர்களை, ஏகாதிபத்தியத்திற்கான ஒரு புதிய ஆதரவுத்தளமாக மாறியுள்ள, அதிகரித்தளவில் தனிச்சலுகை கொண்ட, நடுத்தர வர்க்க பிரிவுகளில் காணலாம்.

2012 மற்றும் 2013 இல் "சிரிய புரட்சியை" உத்வேகத்தோடு ஆதரித்த பின்னர், இத்தகைய அமைப்புகளில் பெரும்பாலானவை, சவூதி அரேபியா மற்றும் அரபு வளைகுடா நாடுகளின் பிற்போக்குத்தனமான அரேபிய ஆட்சிகளால், அத்துடன் துருக்கியின் இஸ்லாமியவாத அரசாங்கத்தாலும் (இவை அனைத்துமே சிஐஏ உடன் கூடி இயங்கி வந்த நிலையில்) நிதியுதவி வழங்கப்பட்டு ஆயுதமேந்தச் செய்யப்பட்ட பிரிவினைவாத சுன்னி இஸ்லாமிய போராளிகள் அந்த "புரட்சியாளர்கள்" என்றழைக்கப்பட்டவர்களில் உள்ளடங்கி இருந்தனர் என்பது அதிகரித்தளவில் வெளிப்படையாக ஆனதும், பெரிதும் சத்தமில்லாமல் மவுனமாகின.

அவை இப்போது பாரிஸ் மற்றும் கலிபோர்னியாவில் வெளிப்படையாக ISIS-தூண்டுதல் பெற்ற தாக்குதல்களுக்கு விடையிறுக்கும் சாக்கில், ஏகாதிபத்திய தீவிரப்பாட்டு முனைவிற்கு இணக்கமாக அவற்றின் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கியுள்ளன.

அவர்களது தலையீட்டின் வேட்கை அந்த அறிக்கையின் இரண்டாவது பத்தியில் தெளிவாக வெளிப்படுகிறது: “சிரியாவில், எதிர்புரட்சியின் முதல் வடிவம் அசாத் ஆட்சியால் ஆதரிக்கப்பட்டது. ரஷ்யாவின் மரணகதியிலான குண்டுவீச்சுக்கள் மற்றும் ஈரானின் தலையீடு, ஹெஸ்புல்லா மற்றும் பிரிவினைவாத ஈராக்கிய போராளிகளே இந்த ஆழ்ந்த பிற்போக்குத்தனமான, ஜனநாயக-விரோத திட்டத்தை பாதுகாக்கின்றனர். சிரியாவில், ஜனநாயக மற்றும் புரட்சிகர படைகளை நோக்கி வழமையாக மேற்கத்திய சக்திகள் காட்டும் அவநம்பிக்கையால் அசாத் ஊக்கம் பெற்றுள்ளார்...”

மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் மற்றும் ஒட்டுமொத்த சமூகங்களின் பேரழிவுக்கும் இட்டுச் சென்றுள்ள, அப்பிராந்தியத்தைச் சீரழித்துள்ள, தசாப்தகால அமெரிக்க ஏகாதிபத்திய போரைக் குறித்து அங்கே அந்த அறிக்கையில் ஒரு வார்த்தை கூட இல்லை. இத்தகைய அமைப்புகளின் நிலைப்பாட்டிலிருந்து, ரஷ்யாவின் ஆக்ரோஷம், ஈரானிய தலையீடு மற்றும் "பிரிவினைவாத ஈராக்கிய போராளிகள் குழுக்கள்"—இவையும் மற்றும் "சிரியாவில் ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகள்" என்றழைக்கப்படுபதை ஆதரிக்க மற்றும் போதுமான "நம்பிக்கையை" வழங்க அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் தவறியமை ஆகியவையே அவற்றிற்கு பிரச்சினையாகத் தெரிகிறது.

இந்த கடைசி வசனம், “மிதமான கிளர்ச்சியாளர்கள் (moderate rebels) என்று மேற்கத்திய அரசாங்கங்கள் பிரயோகிக்கும் பதத்தைப் போலவே, பெரிதும் அதேரீதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு விடயங்களிலுமே, இந்த ஜனநாயகவாதிகள், புரட்சியாளர்கள் மற்றும் மிதவாதிகளது பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இது ஏனென்றால், அசாத் ஆட்சிக்கு எதிராக சண்டையிடும் நிஜமான சக்திகளில், ISIS, அல்-நுஸ்ரா மற்றும் அஹ்ரார் அல்-ஷம் உட்பட அல் கொய்தா இணைப்பு கொண்ட சுன்னி பிரிவினைவாத போராளிகள் குழுக்கள் உள்ளடங்கி உள்ளன என்பதால் ஆகும்.

இத்தகைய அமைப்புகளின் நிலைப்பாடு, அமெரிக்காவின் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு அதன் வலைத் தளத்தில் டிசம்பர் 9 இல் பிரசுரித்த ஒரு கட்டுரையில் முன்பினும் அதிக வெளிப்படையாக இருந்தது —அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியவாறு பெரிதும் அதே விதத்தில் ரஷ்யா ISIS மீது குண்டுவீசாமல், மாறாக "ISIS-அல்லாத எதிர்ப்பு குழுக்கள்" மீது குண்டுவீசுவதாக அக்கட்டுரை ரஷ்யாவை கண்டித்திருந்தது, மீண்டும் இங்கே, வெளிப்படையான காரணங்களுக்காக, அக்குழுக்கள் பெயரிட்டு கூறப்படாமலேயே விடப்பட்டுள்ளன.

அக்கட்டுரை குறிப்பிடுகிறது: “உத்தியோகபூர்வ அமெரிக்க கொள்கை அசாத்தை நீக்குவதற்கு அழைப்புவிடுக்கின்ற போதினும், ரஷ்யாவின் தலையீடு அந்த ஆட்சியின் நிலைப்பாட்டிற்கு முட்டுக்கொடுத்து, சிரியாவின் எதிர்காலம் குறித்த ஒரு புதிய கணக்கீட்டு தொகுப்பை உருவாக்குகிறது, இது அமெரிக்க வெளியுறவு கொள்கை ஸ்தாபகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க போக்கால் ஏறத்தாழ உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அது தொடர்கிறது: “நடைமுறை அர்த்தத்தில், அமெரிக்க இராணுவம் ஏற்கனவே அசாத் உடன் அதன் சமாதானத்தை வெளிப்படுத்தி உள்ளது. அமெரிக்காவினால் ஆதரிக்கப்படும் தரைப்படைகள் மீது ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்கு அதன் எதிர்ப்பு, ஏறத்தாழ வெறும் வனப்புரையாக உள்ளது...”

ISO இன் வாதத்தில் இருக்கும் உந்துதல், சிரிய கொள்கை மீது அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் மற்றும் இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்குள் நடந்துவரும் விவாதத்தை நோக்கி திரும்பியுள்ளது. இடது என கூறிக்கொள்ளும் இந்த அமைப்பு, ரஷ்யாவை எதிர்த்து ஆட்சி மாற்றத்திற்கான போரை வாஷிங்டன் மேற்கொண்டு தொடர்ந்து நடத்த வேண்டுமென கோருவதன் மூலமாக, ஆளும் வர்க்கம் மற்றும் பெண்டகனின் மிகவும் போர்வெறி கொண்ட கன்னைகளை ஆதரிக்க பொறுப்பேற்கிறது.

உண்மையை தலைகீழாக திருப்புவதன் மூலமாக, இத்தகைய அமைப்புகள் அனைத்தும் ரஷ்யாவை ஓர் ஏகாதிபத்திய சக்தியாக மற்றும் மத்திய கிழக்கின் பிரதான ஆக்கிரமிப்பாளராக சித்தரிக்கின்றன, அதேவேளையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அப்பாவியாக மற்றும் அதிகரித்தளவில் சக்தியை செலவிட்டிருப்பதாக சித்தரிக்கின்றன.

சிரியாவில் விளாடிமீர் புட்டின் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தலையீட்டில் எந்த முற்போக்கு உள்ளடக்கமும் இல்லை, அது ரஷ்யாவை ஆளும் குற்றகரமான தன்னலக்குழுக்களின் நலன்களது பாதுகாப்பிற்காக நடத்தப்படுகிறது என்றாலும், அது ஒரு பாதுகாப்பு குணாம்சத்தைக் கொண்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் வெளிநாடுகளில் 800 க்கும் அதிகமான இராணுவ தளங்களைக் கொண்டுள்ளதுடன், அதன் மொத்த தேசிய வருவாய், ரஷ்யாவினது மொத்த தேசிய வருவாயை விட 39 மடங்கு அதிகம் என்பதைக் கூற வேண்டியதே இல்லை என்ற நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மற்றொரு ஆக்ரோஷமான தலையீட்டிலிருந்து மத்திய கிழக்கில் அதன் கடைசி கூட்டாளியை மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு வெளியே இருக்கும் அதன் ஒரேயொரு இராணுவ தளத்தைக் காப்பாற்றி கொள்வதிலிருந்து ரஷ்யாவின் தலையீடு வடிவெடுக்கிறது.

“ரஷ்ய ஏகாதிபத்திய" கட்டுக்கதை குறித்த போலி-இடதின் வினோதமான தீர்மானம் அச்சுறுத்தலானரீதியில் முக்கியத்துவம் பெறுகிறது. “மனித உரிமைகள்" என்ற பொய் அடையாளத்தின் கீழ் லிபியா மற்றும் சிரியாவில் ஏகாதிபத்திய தலையீடுகளை ஊக்குவித்து நியாயப்படுத்தி உள்ள அவை, இப்போது உலகின் இரண்டு மிகப்பெரிய அணுஆயுத சக்திகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஏற்படக்கூடிய போர் உள்ளடங்கலாக, பெரும் இரத்தந்தோய்ந்த மோதல்களுக்கு அவற்றின் முயற்சிகளை அர்ப்பணித்து வருகின்றன.

ஒரு நிஜமான பரந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தை ஒருங்கிணைப்பது என்பது, இராணுவவாதம் மற்றும் அதன் ஆதாரமான முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒருங்கிணைக்கும் போராட்டத்தின் பாகமாக, இத்தகைய போலி-இடது அமைப்புகளின் முகமூடிகளை கிழித்து, அவர்களின் அரசியல் செல்வாக்கின் வேர்களை பிடுங்கி காட்டும் ஒரு சளைக்காத போராட்டத்தினூடாக மட்டும் நடத்த முடியும்.