சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Government negligence responsible for flood disaster

இந்தியா: அரசாங்கத்தின் அலட்சியப் போக்குத் தான் வெள்ளப் பேரழிவுக்கு பொறுப்பு

By Sasi Kumar and Moses Rajkumar
15 December 2015

Use this version to printSend feedback

அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து பிரிவுகளும் உழைக்கும் வர்க்கத்தினர் வாழ்வில் காட்டும் குற்றவியல் அலட்சியமே தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவிற்கு காரணம் என்பதை மீண்டும் இவ்வெள்ளச் சீற்றம் பட்டவர்த்தனப்படுத்தி உள்ளது. நவம்பர் மாத தொடக்கத்திலேயே தமிழ்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 347க்கு உயர்ந்து விட்டது. நூறு ஆயிரக்கணக்கானவர்கள் இடம் பெயர்க்கப்பட்டனர் மற்றும் 50,000க்கும் மேற்ப்பட்டோர் தற்காலிக முகாம்களில் இன்னும் வாழ்கின்றனர்.

அதிகாரபூர்வ அமைப்புக்களிடமிருந்து பெறும் நிவாரண உதவிகளில் உள்ள பற்றாக்குறை குறித்து மாநிலம் முழுவதிலும் வெள்ளத்தால் பாதிப்படைந்தோர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். சத்யவாணிமுத்துநகர், மணலி, நேரு நகர், வளசரவாக்கம் மற்றும் விருகம்பாக்கம் உள்பட பல பகுதிகளில் மக்கள் சாலை மறியல்களில் ஈடுபட்டு தங்கள் வெறுப்பையும், கோபத்தையும் வெளிப்படுத்தினர்.

டிசம்பர் மாத தொடக்கத்திலேயே பல நாட்கள் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளின் இணைப்பிலிருந்து மாநிலத்தின் தலைநகரமான சென்னை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்நகரின் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது மற்றும் தொலைபேசி வலையமைப்புகளும் செயல்படவில்லை. புதன்கிழமை அன்றே கனமழை நின்றுவிட்டபோதும், மிகவும் பாதிப்பிற்கு உள்ளான பகுதிகளில் நூறு ஆயிரக்கணக்கான மக்கள் தண்ணீர், மின்சாரம், பால் மற்றும் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இன்றி இருக்கின்றனர்.

மழை நின்று மூன்று நாட்களுக்கு பின்னரும், மாநிலத் தலைநகர் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீரை வடியச்செய்யும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் முனைப்புடன் ஈடுபடவில்லை. தலைநகர் மற்றும் மாநிலம் முழுவதிலும் பத்தாயிரக்கணக்கான மக்கள் இன்னும் மீட்கப்படவேண்டியுள்ளனர், மேலும் முறையான நிவாரண உதவிகளும் சென்றடைய வேண்டியுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக கருத்தின்படி, கடலூர் மற்றும் பிற மாவட்டங்களில் 20,000 ஹெக்டேருக்கும் மேற்ப்பட்ட நெல் விளைநிலங்கள் பாதிப்படைந்து உள்ளன.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவி மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஜெயலலிதா ஜெயராமன், அரசு அதிகாரிகளின் மந்த செயல்பாட்டின் மீது பொதுமக்களிடையே வளர்ந்துவரும் கோபத்தை எதிர்கொள்ளும் விதமாக ஊடகத்தில் பேசியபோது, 'பெரும் கனமழை ஏற்படும்போது இழப்புக்கள் தவிர்க்க இயலாதது' என்றார். நூறு ஆண்டுகளுக்கு மேல் கழித்து பெய்த இம்மாபெரும் கனமழையினால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் அழிவிற்கு முக்கிய காரணம், மத்திய, மாநில மற்றும் நகர மட்டங்களில் அடுத்தடுத்துவந்த அரசாங்கங்கள், நகரில் கட்டடங்கள் அமைத்தல் மற்றும் முறையான வெள்ளக் கட்டுபாட்டு வடிகால் அமைப்பினை பராமரித்தல் போன்றவற்றில் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கத் தவறியதே ஆகும்.

முதலீட்டு வசதிக்காக சென்னையில் நிகழ்ந்த திட்டமிடப்படாத நகரமயமாக்கத்தின் காரணமாக ஏற்கனவே உள்ள வெள்ளச்சமவெளி பகுதிகள் மற்றும் வடிகால் அமைப்புக்களுக்கு தேவையான இடம் சுருங்கியதால் தான் தற்போதைய அழிவு ஏற்பட்டது என பல வல்லுநர்களும் சுட்டிக்காட்டி உள்ளனர். தற்போது வெள்ளத்தில் மூழ்கிய ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப பூங்காவானது ஒரு வடிகால் பகுதியில்தான் கட்டப்பட்டிருந்தது என சென்னையை சார்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான நித்யானந்த் ஜெயராமன் என்பவர் தெரித்தார். சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு, கடந்த ஆண்டில் தொடக்கிவைக்கப்பட்ட விமான ஓடுதளமானது அடையாறு வெள்ளச் சமவெளிப் பகுதியில்தான் கட்டப்பட்டுள்ளது. "சென்னை வெள்ளங்கள் வரவிருக்கும் நிகழ்வுகளின் ஒரு அடையாளமே", எனவும் எச்சரித்தார்.

நகருக்குள் கொண்டுவரப்படும் வெள்ள நிவாரணப் பொருட்கள் மீது 'அம்மா' (ஜெயலலிதா) நாமத்தை கொண்ட ஒட்டு தாள்கள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்று அஇஅதிமுக அடியாட்கள் வலியுறுத்துவதற்கு எதிராக சமூக ஊடகங்களில் கோபம் ஊற்றெடுத்து வருகிறது’’ என டைம்ஸ் ஆப் இந்தியா அறிவித்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சரும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவியுமான ஜெ.ஜெயலலிதாவின் சலனமற்ற புன்னகையுடன் இருக்கும் புகைப்படம் பொறித்த ஒட்டுதாள்களை உணவுப் பொட்டலங்கள் மற்றும் பிற வெள்ள நிவாரணப் பொருட்கள் மீது கண்டிப்பாக ஒட்டிட தொண்டு நிறுவனங்கள் மிரட்டி பணிய வைக்கப்படுகிறார்கள். அடியாட்கள் தங்களை அஇஅதிமுக உறுப்பினர்கள் எனக்கூறிக்கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டனர்.

அரசின் தோல்வியை மூடிமறைக்கும் விதமான அஇஅதிமுகவினரின் இக்கொடூர முயற்சியானது வெள்ள பாதிப்பிற்கு பலியான உழைக்கும் வர்க்கத்தினர் மீதான மிகவும் இழிவான நிலைப்பாட்டை அம்பலப்படுத்துகிறது.

WSWS நிருபர்கள் சென்னையில் ஒரு மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியான வில்லிவாக்கம் அருகே சிட்கோ நகருக்குச் சென்று அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசினார்.

ஏழுமலை, 31 ஒரு ஆட்டோ ஓட்டுநர் அரசாங்கம் எந்தவித முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை மற்றும் கால்வாய்கள் தூர் வாரப்படவில்லை இந்த சிட்கோ நகர் பாதிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் வீல்ஸ் இந்தியா ஏரி இல்லாததால்தான். அந்த ஏரியை அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து மெட்ரோ ரயில் சேவைக்காக எடுத்த மண்ணை அந்த ஏரியில் கொட்டி நிலத்தை சமப்படுத்தி விற்பனை செய்துள்ளனர். அதன் விளைவாக கனமழைக்கு பின்னர் தண்ணீர் போக வழியில்லாமல் வீடுகளிலும் சாலைகளிலும் தண்ணீர் புகுந்து விட்டது. சுமார் 300 ஏழைகளின் குடிசைகளும் மூழ்கியது.’’

 

 

 

 

 

 

 


ஜெயந்தி

ஜெயந்தி, 35 கூறுகையில் என் கணவர் தெருவில் காய்கறி கடை வைத்துள்ளார். கடந்த ஒரு மாதகால தொடர் மழை காரணமாக கடை வைக்க முடியவில்லை. நாங்கள் உணவுக்கும் குடிநீருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறோம். புதிதாக காய்கறிகள் வாங்குவதற்கு பணம் இல்லாததால் வெறும் கையோடு இருக்கிறோம். அரசு அறிவித்த நிவாரணத்தொகை எந்தவகையிலும் போதுமானதல்ல. அந்த அற்பத்தொகை கூட எப்பொழுது கிடைக்கும் என்பதும் நிச்சயமில்லை. இந்த பகுதிகளில் வாழும் அநேக ஏழை மக்களின் வாழ்கை நிலைமை ஒன்றாகத்தான் உள்ளது.

 

 

 

 

 

 

 


கஸ்தூரி

கஸ்தூரி, 53 குறிப்பிடும்பொழுது நான் ஒரு சிறிய வாடகை வீட்டில் தான் இருக்கிறேன். விதவை என்பதனால் ஓய்வூதிய தொகை ஆயிரம் ரூபா கிடைக்கிறது. இந்த ஓய்வூதியம் எனது குடும்பத்துக்கு முற்றிலும் போதவில்லை.

எந்த ஒரு அரசாங்கமும் என்னுடைய வாழ்வாதாரத்திற்கு வேறு எந்தவித உதவியும் செய்யவில்லை. இந்தநிலையில் கூடுதலாக மழை வெள்ளம் புகுந்து அனைத்து பொருட்களும் சேதமடைந்து தெருக்களில் நிற்கிறோம். அரசாங்கங்கள் எந்தவித உதவியும் வழங்கவில்லை என்பது மட்டுமல்ல ஆளும் கட்சி ஆட்கள் தொண்டு நிறுவனங்கள் கொடுப்பதை கூட தடுத்து நிறுத்துகின்றன. இந்த பகுதியில் ஜனங்களே முன்முயற்சி எடுத்து வெள்ளத்தண்ணீர் செல்ல வெட்டி வழிவகுத்தனர். இந்த நிலை மறுபடியும் அடுத்த பருவமழைக்காலத்தில் ஏற்படும். நாம் படும் துயரங்களை உங்கள்  இணைய தளங்களில் எழுதுங்கள்.’’

ஒரு சென்னை மாநகராட்சி போக்குவரத்து ஓட்டுநர் உலக சோசலிச வலைத் தளத்துக்கு கூறியதாவது ‘’நாங்கள் பல நாட்களாக தண்ணீர் மின்சாரம் இல்லாத நிலையில் எங்கள் மேல் மாடியில்தான் தங்கியிருந்தோம். எங்கள் கீழ்தள வீடுகளில் முழுமையாக தண்ணீர் புகுந்துவிட்டது. எங்களுக்கு அரசாங்க அமைப்புகளை விட அதிகமாக தொண்டுநிறுவனங்கள் முஸ்லிம் அமைப்புகளிடம் இருந்துதான் உதவிகள் - குடிதண்ணீர் மற்றும் உணவுபொட்டங்கள் கிடைத்தன. சிட்கோ நகர் முழுவதுமே மூழ்கியது. சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டிலுள்ள அனைத்து பொருட்களும் சேதமடைந்துவிட்டன.

அவர் அடுத்து அடுத்து வந்த அரசாங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் பற்றி விமர்சித்தார்; ‘’மன்மோகன் சிங் அரசாங்கமும் மோடி அரசாங்கமும் ஒரே கொள்கைதான் பின்பற்றுகின்றனர். சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கம் தான் வந்திருக்கின்ற மோடி அரசாங்கத்தின் தொழிலாளர் விரோதக்கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

‘’ஸ்ரீபெரும்பந்தூரிலுள்ள நோக்கியா தொழிற்சாலை மூடியதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகளை இழந்துள்ளனர்.

மத்திய மாநில அரசாங்கங்கள் தொழிலாளர்களின் நலன்கள் பற்றி அக்கறை கொள்ளவில்லை. சம்பளம் மற்றும் இதர சலுகைகள் தொடர்பான எங்களுடைய கோரிக்கைகள் பற்றி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிச கட்சியுடன் இணைந்த சிஐடியு மற்றும் ஏஐடியுசி உள்பட தொழிற்சங்கங்களுக்கு இலஞ்சங்கள் சன்மானங்களாக வழங்கப்படுகின்றன. மற்றும் அவை தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுகின்றன.