சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

US, European powers prepare new air and ground operations against Libya

அமெரிக்க, ஐரோப்பிய சக்திகள் லிபியாவிற்கு எதிராக புதிய விமானப்படை மற்றும் தரைப்படை நடவடிக்கைகளை தயாரிக்கின்றன

By Thomas Gaist
21 December 2015

Use this version to printSend feedback

அமெரிக்கா மற்றும் நேட்டோ லிபியா எல்லைக்குள் புதிய இராணுவ நடவடிக்கைகளை நடத்த தயாரிப்பு செய்து வருவதை ஞாயிறன்று வெளியான கார்டியன் இதழின் ஒரு செய்தி தெளிவுபடுத்தியது.

மேற்கத்திய சக்திகள் அந்நாட்டில் ISIS இலக்குகளுக்கு எதிராக தாக்குதல்களுக்கு ஒப்புதல் வழங்க, மால்டிஸ் (Maltese) அரசாங்கத்தின் பெயரளவிற்கான தலைமையின் கீழ் கடந்த வாரம் ஒன்றுகூடிய, புதிதாக நிறுவப்பட்ட லிபிய "ஐக்கிய அரசாங்க" கூட்டணிக்கு அழுத்தமளித்து வருவதாக அந்த பிரிட்டிஷ் பத்திரிகை குறிப்பிட்டது.

“ஐக்கிய கூட்டணியின்" முதல் வேலை, "மேற்கின் உதவிக்கு ஒரு நேரடி அழைப்பு" விடுப்பதென லிபியாவிற்கான ஐரோப்பிய ஒன்றிய தூதர் தெரிவித்தார். இங்கிலாந்து பிரதம மந்திரி டேவிட் கேமரூன், "ISIS க்கு [டயஷ் - Daesh] எதிரான சண்டையில் லிபியாவின் ஒரே ஐக்கியப்பட்ட பிரதிநிதித்துவ அரசாங்கமாக" சேவையாற்றுமாறு அப்புதிய கூட்டணிக்கு அழைப்புவிடுத்தார். ஏகாதிபத்திய ஆதரவிலான அந்த "ஐக்கிய அரசாங்கத்தின்" ஒத்துழைப்பிற்கு வளைகுடா ஆட்சிகளும் படைகளை அனுப்புமென பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி பிலிப் ஹம்மோண்ட் தெரிவித்தார்.

அந்த புதிய அரசாங்க கூட்டணியை வாஷிங்டன் "முழு ஒத்துழைப்புடன் மற்றும் தொழில்நுட்ப, பொருளாதார, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத-எதிர்ப்பு உதவிகளுடன்" ஆதரிக்குமென அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜோன் கெர்பி உறுதியளித்தார். வெள்ளியன்று அவரது ஆண்டு இறுதி பத்திரிகையாளர் சந்திப்பில், ஜனாதிபதி பராக் ஒபாமா, 2011 போருக்குப் பின்னர் "அங்கே உடனடியாக அரசாங்கத்தை மறுகட்டமைப்பு செய்வதில்" நேட்டோ கூட்டணி தோல்வியடைந்ததன் விளைவாக அந்நாடு இப்போது "மிகவும் மோசமான நிலைமையை" முகங்கொடுத்திருப்பதாக கூறி, லிபியாவில் ஒரு புதிய அமெரிக்க-நேட்டோ இராணுவ தலையீட்டிற்கான திட்டங்களை எடுத்துரைத்தார்.

இந்த "ஐக்கிய அரசாங்கம்" என்றழைக்கப்படுவதில் லிபியா மீது இப்போது இறையாண்மை உரிமைகோரும் இரண்டு ஆட்சிகளில் எதுவும் உள்ளடங்கியில்லை. அதேபோல அம்மண்ணில் கடுமையாக சண்டையிட்டுவரும் பல ஏனைய கன்னைகளும் அதில் உள்ளடங்கவில்லை, அங்கே பழங்குடியின-அடிப்படையில் அமைந்த குறைந்தபட்சம் ஆறு பிரதான போராளி குழுக்கள் மூலோபாய மத்தியத்தரைக்கடல் கடல் பிரதேசத்தின் பாகங்களை கட்டுப்பாட்டில் பெற போராடி வருகின்றன. இதில் லிபிய தேசிய இராணுவம், அன்சார் அல்-ஷரியா (Ansar al-Sharia), இஸ்லாமிய-விரோத சிரேனைகா (Cyrenaica) போராளி குழு, இஸ்லாமிய அரசு, ஷூரா (Shura) புரட்சிகர கவுன்சில், மற்றும் "மிதவாத இஸ்லாமியவாதிகள்" மற்றும் பேர்பெர் (Berber) போராளி குழுக்கள் என்றழைக்கப்படும் லிபிய விடியல் கூட்டணி (Libya Dawn coalition) ஆகியவை உள்ளடங்கும்.

எந்தவிதமான நிஜமான ஐக்கியத்தையோ அல்லது ஸ்திரப்பாட்டையோ பாதுகாப்பதற்கு அல்லாமல், அந்த புதிய அரசாங்கம், மற்றொரு இராணுவ தாக்குதலுக்கு ஒரு சட்டபூர்வ மறைப்பிலையை ஜோடிக்க ஒன்றுதிரட்டப்பட்டுள்ளது. ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிற்கு எதிராக மற்றொரு சுற்று நவகாலனிய சூறையாடல்களை நடத்த, ஏகாதிபத்திய சக்திகள் லிபியாவிற்கு எதிரான 2011 போரில் உண்டான அரசியல் குழப்பங்களைச் சுரண்ட முனைந்துள்ளன. ஆபிரிக்காவிலேயே லிபியாவில் தான் மிகப்பெரிய எண்ணெய் வயல்கள் உள்ளன.

கடந்த வாரம், மேற்கத்திய ஊடகங்கள் ISIS இன் (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு) லிபிய பிரிவின் வளர்ச்சியிலிருந்து அதிகரித்துவரும் அச்சுறுத்தலைக் குறித்து செய்தி வெளியிட்டன. ISIS போராளி குழுக்கள் முக்கிய நகரமான அஜ்தாபியாவைக் கைப்பற்றுவதில் விளிம்பில் இருப்பதாக ஞாயிறன்று அவை வாதிட்டன. அதுபோன்றவொரு வெற்றி லிபியாவினது எண்ணெய் வளங்களின் ஒரு கணிசமான பாகத்தின் மீது போராளி குழுக்களுக்குக் கட்டுப்பாட்டை அளிக்குமென ஊடக செய்திகள் வலியுறுத்தின.

அப்போர் தயாரிப்புகளுக்கான கபடத்தனம், அத்தகைய அபிவிருத்திகள் மீது அமெரிக்க ஊடகங்கள் காட்டிய முழு மவுனத்தால் அடிக்கோடிடப்படுகிறது. லிபியாவில் அதிகரித்துவரும் தீவிரப்பாடு, ஈராக், சிரியா மற்றும் யேமனை ஏற்கனவே சுற்றி வளைத்து பரவிவரும் ஒரு போரில் ஒரு புதிய முன்னணியைக் கொண்டு வருகிறது என்பதுடன், எந்தவித பொது விவாதமோ அல்லது கலந்துரையாடலோ இல்லாமல் அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால் தொடங்கப்பட உள்ளது.

லிபியாவில் அமெரிக்க சிறப்புப்படை நடவடிக்கை ஒன்று கடந்த வாரம் தோல்வியடைந்தது, உள்நாட்டு படைகளிடமிருந்து வந்த எதிர்பாரா எதிர்ப்பைச் சந்தித்த பின்னர் அதிரடிப்படையினர் அவசர அவசரமாக பின்வாங்கியதாக கார்டியன் குறிப்பிட்டது.

அமெரிக்க பிரசன்னத்திற்கு அப்பகுதியின் கட்டுப்பாட்டைக் கொண்ட லிபிய படைகள் விரோதமாக இருந்தது தெளிவானதும், “உறவுகளைப் பேணுவதற்காக" அனுப்பப்பட்ட அமெரிக்க துருப்புகள், அனுப்பப்பட்டு வெகு விரைவிலேயே திரும்பி அழைக்கப்பட்டதாக செய்திகள் குறிப்பிட்டன. அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, இராணுவ சீருடையின்றி மற்றும் அதிநவீன தொலைநோக்கி ஆடிகளுடன் கூடிய சத்தம்வராத துப்பாக்கிகளை ஏந்திய அமெரிக்க சிப்பாய்கள், லிபிய விமான நிலையத்திற்கு வெளியே குழுவாக நின்று புகைப்படமெடுத்துக் கொண்டனர்.

பெயர் வெளியிடாத அமெரிக்க அதிகாரிகளின் கருத்துப்படி, லிபியாவில் அமெரிக்க அதிரடிப்படையினர் "இப்போது சில காலமாக" இரகசிய நடவடிக்கைகளில் இருப்பதாகவும், அந்நாட்டிற்கு "உள்ளேயும் வெளியேயும்" நகர்ந்து வருவதாகவும் ஞாயிறன்று NBC News வாசகர்களுக்கு தெரிவித்தது.

அமெரிக்க சிறப்புப்படைகள் 2011 க்கு முன்னதாக லிபியாவிற்கு உள்ளே பரந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பது ஏற்கனவே நன்கு நிறுவப்பட்டிருந்தது. அதேவேளையில் லிபிய மற்றும் சிரிய அரசாங்கங்களுக்கு எதிரான போர்களுக்காக, அமெரிக்காவும் நேட்டோவும், இஸ்லாமிய போராளி குழுக்களை ஒன்றுதிரட்ட முனைந்திருந்தன. அச்செய்திக்கு முன்னதாக கடந்த வாரம் வெளியான ஒரு விரல்விட்டு எண்ணக்கூடிய செய்திகளில் ஒன்று அமெரிக்க பத்திரிகைகளால் மறைக்கப்பட்டிருந்தது, அந்த NBC செய்தி, போர் உத்தியோகபூர்வமாக முடிந்த பின்னரும் கூட அமெரிக்க படைகள் லிபியாவில் தொடர்ந்து இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த உண்மையை எடுத்துக்காட்டுகிறது.

இஸ்லாமிய ஜிஹாதிஸ்ட் சக்திகளுடன் சண்டையிடுவது என்ற பெயரில் நடத்தப்பட உள்ள பகிரங்கமான விமானப்படை மற்றும் தரைப்படை நடவடிக்கைகளுக்கான ஏகாதிபத்திய சக்திகளின் தயாரிப்புகளுக்கு இடையே தான் லிபியாவில் அந்த அமெரிக்க இரகசிய நடவடிக்கைகள் மீதான ஆதாரங்கள் வருகின்றன. இந்த ஜிஹாதிஸ்ட் சக்திகள் எல்லாம், லிபியாவில் மௌம்மர் கடாபியைப் பதவியிலிருந்து கவிழ்த்து படுகொலை செய்ததைக் கண்ட போரிலும் மற்றும் பின்னர் சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிராக அனுப்புவதற்கும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய உளவுத்துறை அமைப்புகள் மற்றும் சவூதி அரேபியா போன்ற அதன் பிராந்திய கூட்டாளிகளால் நிதியுதவி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கப்பட்ட அதே போராளி குழுக்கள் தான்.

லிபியாவில் புதிய நடவடிக்கைகளுக்கான மிகவும் ஆக்ரோஷமான முன்மொழிவுகள் இலண்டனிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றன, அது ரோமின் முன்னாள் காலனிய பகுதிகளை ஆக்கிரமிக்க ஓரளவிற்கான தரைப்படைகளை அனுப்பும் ஒரு மூலோபாயத்தைத் தந்திரமாக செயல்படுத்துவதற்காக இத்தாலியுடன் கூடி இயங்கி வருகிறது. புதிய மேற்கத்திய-ஆதரவிலான போராளி குழுக்களுக்குப் பயிற்சியளிக்கும் திட்டங்களின் பாகமாக 1,000 க்கும் கூடுதலான துருப்புகளை அனுப்ப பிரிட்டன் தயாரிப்பு செய்து வருவதாக Al Alam குறிப்பிடுகிறது.

இம்மாத தொடக்கத்தில், பிரெஞ்சு பிரதம மந்திரி மானுவேல் வால்ஸ், லிபியாவிற்கு எதிராக பிரான்ஸ் அதன் சொந்த புதுப்பிக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடங்கும் என்பதைத் தெளிவுபடுத்தி இருந்தார். “[நா]ம் ஓர் எதிரியைக் கொண்டுள்ளோம், டேஷ், சிரியாவில், ஈராக்கில் மற்றும் நாளை ஐயத்திற்கிடமின்றி லிபியாவில் நாம் போராடி அதை நசுக்க வேண்டும்,” என்றார்.

ISIS "அதன் கலிபா என்றழைக்கப்படுவதை விரிவாக்க சிறந்த வாய்ப்பாக" லிபியாவைப் பார்க்கிறது என்றும், அந்த இஸ்லாமிய குழு சிரியா மற்றும் ஈராக்கில் மேற்கத்திய சக்திகளது தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பிரதிபலிப்பாக புதிய பாதுகாப்பான பகுதிகளை ஸ்தாபித்துள்ளதாகவும் கடந்த வாரம் ஐக்கிய நாடுகளுக்கான அறிக்கை ஒன்றில் பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டது.

2011 குண்டுவீச்சு நடவடிக்கையில் வெறும் இடிபாடுகளாக மாற்றப்பட்டுள்ள சிர்ட்டே நகர் மீதான கண்காணிப்பு நடவடிக்கை உட்பட, பிரெஞ்சு இராணுவம் ஏற்கனவே புதிய நடவடிக்கைகளுக்கான தயாரிப்பில் உளவுவேலை நடவடிக்கைகளை நடத்தி வருகிறது. நூற்றுக் கணக்கான ISIS போராளிகள் சிர்ட்டே நகரில் குவிந்துள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வாரியிறைத்துக் கொண்டிருக்கையில், அந்நகரம் மேற்கத்திய அதிகாரங்களின் மைய இலக்கில் மீண்டுமொருமுறை வருவதாக தெரிகிறது.

“ISIS க்கு எதிரான போர்" என்பது மத்தியக் கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் ஒரு புதிய ஏகாதிபத்திய துண்டாடலுக்கான மொத்த-நோக்கத்திற்கும் சாக்குபோக்காக மாறியுள்ளது.