சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

American Nazi web site acclaims Humboldt Professor Jörg Baberowski

மெரிக்க நாஜி வலைத்தளம் ஜோர்க் பாபரோவ்ஸ்கியைப் பாராட்டுகிறது

By Johannes Stern
19 December 2015

Use this version to printSend feedback

அகதிகள் விவகாரத்தில் ஹம்போல்ட் பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியின் கண்ணோட்டங்களுக்கு ஜேர்மன் வலது-சாரிப் பத்திரிகையான Junge Freiheitற்றும் பாசிச ஜேர்மன் தேசிய ஜனநாயகக் கட்சி (NPD) ஆகியவற்றின் ஆதரவு வெளிப்பட்டதற்கு அடுத்தபடியாக, அவை இப்போது அமெரிக்க நவ-நாஜிக்களின் பாராட்டுக்களையும் பெற்றிருக்கின்றன.

பாரிய புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையால் ஜேர்மன் அடையாளம் முற்றிலும் அழிந்து விடும் என்கிறார் ஜேர்மன் பேராசிரியர் என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையை டிசம்பர் 8 அன்று Daily Stormer வெளியிட்டிருந்தது. மேலும் மேலும் அதிகமானோர் நிதர்சனத்தை கூற விரும்புகின்றனர் என்ற கருத்துரையுடன் பார்பெரோவ்ஸ்கியின் ஒரு புகைப்படமும் அந்த வலைத் தள கட்டுரையில் இடம்பெற்றிருந்தது.

1923 மற்றும் 1945 இடையே ஜூலியஸ் ஸ்ட்ரீச்சரால் வெளியிடப்பட்ட Der Stürmerன்ற யூத-விரோத நாஜிக் குப்பையின் ஒரு நவீன பதிப்பைப் போல Daily Stormer தொனிக்கிறது.

யூதப் பிரச்சினை மற்றும் இன யுத்தம் ஆகிய தலைப்பிட்ட பத்திகளின் கீழ், லு பென்னுக்கு எதிராக உலகம் ஒன்றுபட யூதர்கள் வலியுறுத்துகிறார்கள் மற்றும் உண்மையான கொரில்லா ஆறுவயது வெள்ளை இனச் சிறுவனை அவனது படுக்கையில் கொலைசெய்தது (வழக்கம் போல, காரணம் ஏதும் இல்லாமல் தான்) என்பன போன்ற தலைப்புகளுடன் வெறுப்பைக் கக்கக் கூடிய இனவாத மற்றும் யூத-விரோதக் கட்டுரைகள் வெளியாகின்றன.

ணையத்தில் அதிகம் வாசிக்கப்படும் வெறுப்புவளர்க்கும் தளமாக Stormfront.org Daily Stormer இடம்பெயர்த்திருப்பதாக விக்கிபீடியா தகவல் கூறுகிறது. நவ-நாஜியும் யூத-விரோதம் கொண்டவருமான ஆண்ட்ரூ ஆங்ளின் தான் Daily Stormer பத்திரிகையின் ஆசிரியர், அவர் தான் பார்பெரோவ்ஸ்கி குறித்த கட்டுரையையும் எழுதியிருக்கிறார். 2013 இல் Daily Stormer ஐ நிறுவும் முன்பாக, ஆங்ளின் Total Fascism என்ற ஒரு வலைப்பதிவை நடத்தி வந்தார், அதில் அவர் அடோல்ஃப் ஹிட்லரை வியந்து வந்ததோடு கிரேக்க பாசிசக் கட்சியான பொன் விடியல் (கோல்டன் டான்) கட்சிக்கு பிரச்சாரமும் செய்து வந்திருந்தார். அமெரிக்காவில் குடியரசுக் கட்சியில் நடந்துவருகின்ற ஜனாதிபதி வேட்பாளருக்கான முதனிலைப் போட்டியில், முஸ்லீம்கள் அமெரிக்காவில் நுழைவதற்குத் தடைவிதிக்க அழைப்பு விடுத்த பாசிச வேட்பாளர் டொனால்ட் டிரம்ஸ் ஐ ஆங்ளின் ஆதரித்துக் கொண்டிருக்கிறார்.


Screenshot from December 8 edition of the Daily Stormer

ட்ரம்ஸ்க்கான ஆங்ளினின் ஆதரவைப் போலவே, பார்பெரோவ்ஸ்கிக்கு அவரளிக்கும் ஆதரவும் வெறும் தற்செயலானதல்ல. அகதிகள் விடயத்தில் பார்பெரோவ்ஸ்கியின் அதி-வலதுசாரிக் கண்ணோட்டங்கள், கிறிஸ்தவ மேற்கு குறித்த அவரது சுட்டிக்காட்டல்கள், மற்றும் ஒரு புதிய ஜேர்மன் போர்க் கொள்கைக்கு அவர் ஆலோசனையளிப்பது இவை அனைத்தும் அமெரிக்க பாசிஸ்டுகளை கவர்ந்திருக்கின்றன என்பது தெளிவு.

ஃபிங்டன் போஸ்டில் டிசம்பர் 7 அன்று பார்பெரோவ்ஸ்கி அளித்த நேர்காணலில் ஆங்ளின் ஏற்புடன் மேற்கோள் காட்டுகின்ற சில பத்திகளைப் பார்க்கலாம்:

9/11 கூட ஒரு திருப்புமுனையாக உடனடியாக உணரப்பட்டதில்லை. ஆனால் நமது நாட்டை ரொம்பவும் மாற்றிவிடத்தக்க அடிப்படையான புதியதொரு விடயம் இப்போது நடந்து கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன். ஜேர்மனி இனியும் போர்கள் மற்றும் மோதல்களில் இருந்து ஒதுங்கியே இருக்க முடியாது. பாரிய புலம்பெயர்ந்தோர் வருகையின் ஒரு பின்விளைவாய் நாம் அறிந்து வைத்திருக்கின்ற ஜேர்மனி காணாமல் போகவிருக்கிறது.

மக்கு விலைமதிக்கவியலாததாக இருந்த, நமது வாழ்க்கை முழுவதிலும் நமக்குக் கொடுக்கப்பட்டு வந்திருக்கின்ற ஒவ்வொன்றுமே மாறியாக வேண்டியிருக்கும், ஏனென்றால் ஒரு மாறுபட்ட கலாச்சாரப் பின்னணியில் இருந்து, நாம் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்த மாறுபட்ட சிந்தனைகள் கொண்ட மக்கள் வருகிறார்கள்.

ரு ரஷ்யக் கல்வியறிஞருக்கு விசா கிடைப்பதில் பிரச்சினை இருக்கிறது, ஆனால் ஜேர்மனிக்கு ஒரு பாஸ்போர்ட் கூட இல்லாமல் வருகின்ற பாகிஸ்தானின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அத்தனை வாய்ப்புகளும் திறந்திருக்கின்றன  என்னும் நிலை பத்தமாய் இருக்கிறது. நாம் நாட்டிற்குள் புலம்பெயர்ந்து வருபவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை.

நீங்கள் பாட்டுக்கு எல்லைகளைத் திறந்து விட்டு புலம்பெயர்வோரை உள்ளே அனுப்பிக் கொண்டே இருக்க முடியாது... ஏனென்றால் அதற்கு நாம் ஒரு மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியதாய் ஆகும்.

ப்போது எல்லைகள் மூடப்பட வேண்டும். அதுதான் நெருக்கடிக்கு ஏற்ப நடந்து கொள்வதில் ஐரோப்பிய அண்டைவாசிகளையும் பங்கேற்கச் செய்ய விடுக்கப்படுகின்ற ஒரு தெளிவான சமிக்கையாக இருக்கும். ஆனால் அது நடக்குமா? எனக்கு சந்தேகம் தான்.

ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்கெல் மற்றும் வெகுஜன ஊடகங்கள் மீதான பார்பெரோவ்ஸ்கியின் விமர்சனத்தையும் ஆங்ளின் ஆதரிக்கிறார். ஹம்போல்ட் பேராசிரியரின் மற்ற மேற்கோள்களுடன் பின்வரும் கூற்றுகளையும் அவர் மேற்கோளிடுகிறார்:

ந்த விமர்சனம் குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்களுக்கு உரியதாகும்... செய்தியாளர்கள் கீழ்ப்படிந்து நடப்பவர்களாக இருப்பதோடு விமர்சனப்பார்வையற்ற செய்திச் சேகரிப்பை வழங்குகின்றனர், அவர்கள் விமர்சனபூர்வ கேள்விகளை வழங்குவதில்லை, மாறாக  சான்சலர் மற்றும் அவரது மூலோபாயத்தின் ஒரு அங்கநீட்சியாக தங்களைக் கருதுகின்றனர்.

லகெங்கும் இருந்து அனுப்பப்படுகின்ற அகதிகளுடன் செல்ஃபிக்கள் எடுப்பது புத்திசாலித்தனமல்ல, ஜேர்மனியில் வந்து கூடச் சொல்லி உலகத்தை அழைப்பதும் புத்திசாலித்தனமல்ல...

ட்டுரையின் முடிவில், உள்வரும் அகதிகளுடன் மேர்கெல் எடுத்துக்கொண்ட சில செல்ஃபிக்களை மறுபிரசுரம் செய்திருக்கும் ஆங்ளின் அதன்பின் இட்டிருக்கும் கருத்துரை: lol @ selfie queen. What a narcissistic bitch. (செல்ஃபி ராணியைப் பார்த்து உரத்த சிரிப்பு. என்ன ஒரு சுயமோகப் பொம்பளை)

ஆங்ளின் போன்றதொரு நவ-நாஜி பார்பெரோவ்ஸ்கியால் கவரப்படுவதன் காரணத்தை இப்போது சுலபமாகக் கண்டுபிடித்திருக்க முடியும். ஹம்போல்ட் பேராசிரியர் பெற்றிருக்கக் கூடிய சர்வதேச அங்கீகாரம் அவரது கல்விப்புலமைப் படைப்புகளின் அடிப்படையில் அல்ல (அவரது புத்தகங்களில் எதுவும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கவில்லை), மாறாக இரண்டாம் உலகப் போரிலான நாஜிக் குற்றங்களை அவர் குறைத்துக் காட்டுவதன் அடிப்படையினால் ஆனதாகும்.

2014 பிப்ரவரியில்  Der Spiegel இல் வந்த ஒரு நீண்ட கட்டுரையில், (இது Spiegel Online சர்வதேசப் பதிப்பிலும் வெளியிடப்பட்டது) பார்பெரோவ்ஸ்கி, ஜேர்மன் வரலாற்றாசிரியர்களில் மிகப் பயங்கரமான நாஜி வக்காலத்துவாதியான ஏர்ன்ஸ்ட் நோல்டவை பகிரங்கமாய் ஆதரித்திருந்தார். நோல்டவுக்கு அநீதி இழைக்கப்பட்டது. வரலாற்றுரீதியாகப் பார்த்தால், அவர் கூறியது சரியே என்றார் பார்பெரோவ்ஸ்கி.

தே கட்டுரையில் Führer ஐயும் (ஹிட்லரை) ஒரு நல்ல வெளிச்சத்தில் காண்பிக்க பார்பெரோவ்ஸ்கி முனைகிறார். ஹிட்லர் ஒரு மனநோயாளியும் அல்ல, கொடூரமானவரும் அல்ல என்றார் பார்பெரோவ்ஸ்கி. யூதர்களைப் படுகொலை செய்வது குறித்து தனது மேஜையில் அமர்ந்து பேசுவதற்கு அவர் விரும்பியதில்லை.

தி-வலது மற்றும் பாசிச வட்டாரங்களால் பாராட்டப்படுகின்ற மற்றும் ஊக்குவிக்கப்படுகின்ற ஒருவர் ஜேர்மனியின் முன்னணிப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஒரு பிரதான பதவியில் இருப்பதும், ஜேர்மன் ஊடகங்களில் ஏறக்குறைய அன்றாடம் காட்சியளிப்பதும், அத்துடன் அவரது கண்ணோட்டங்களுக்கு எதிரான குறிப்பிடத்தக்க விமர்சனங்களுக்கு எதிராய் பல்கலைக்கழக நிர்வாகத்தால் அவர் பாதுகாக்கப்படுவதும் முறைகேடானதாக இருக்கிறது.