சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Mass job losses unfold in global oil industry

உலகளவிலான எண்ணெய் நிறுவனங்களில் பெரும் வேலை இழப்புகள் அதிகரிக்கின்றன

By Gabriel Black
26 January 2015

Use this version to printSend feedback

உலகின் இரு பெரும் எண்ணெய் சேவை நிறுவனங்களான Baker Hughes மற்றும் Schlumberger இரண்டும், தங்கள் நிறுவனம்லாபகரமில்லாததாக மாறிவருவதன் ஒரு பகுதியாக தாங்கள் முறையே 7000 மற்றும் 9000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க இருப்பதை இம்மாதம் அறிவித்தன. எண்ணெய் விலைகளின் சரிவின் காரணமாக அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவிலான வேலை இழப்புக்களின் பெரும் அலையின் ஒரு சிறு பகுதிதான் மேற்கூறப்பட்ட வெட்டுக்களாகும்.

முன்னதாக 2014இன் ஜூலை மாதம் உச்சகட்டத்தை எட்டியது முதல், West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெய் அமெரிக்க எண்ணெய்க்குறியீடு 60 சதவிதத்திற்கும் மேலாக சரிந்திருக்கிறது. 2014 கோடை காலத்தில் 110 டாலர்களைச் சுற்றிக்கொண்டிருந்ததனை அடுத்து WTI, தற்போது ஒரு பீப்பாய் 44.83 டாலர்களுக்கு விற்றுவருகிறது. தீவிர விலை சரிவு அமெரிக்காவின் தற்போதைய பாறைப்படிவுகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் (Shale oil) எழுச்சி மற்றும் கனடாவின் நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் கரிய தார்மண் (tar sands industry) தொழிற்துறையின் பாதிப்பு ஆகியவற்றிற்கு காரணமாகியுள்ளது. விலை சரிவால் உற்பத்தியில் முதலாவதாக பாதிக்கப்பட இருப்பது பாறைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயாகவே இருந்து வருகிறது, ஏனெனில் மரபார்ந்த எண்ணெய் உற்பத்தியை விட குறிப்பிடத்தக்கவகையில் இதில் அதிக செலவாகிறது.

ஒரு பீப்பாய் விலை ஏறக்குறைய 50 டாலர்களாக இருந்தால், இந்த கோடைக்காலத்தின்போது டெக்ஸாஸில் மட்டுமே 1,28,000 வேலைகள் இழக்கப்படும் என்று டல்லாஸ் மத்திய ரிசர்வ் மதிப்பிடுகிறது. பிரதான பாறைகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படும் உற்பத்தி பகுதியான வடக்கு டகோடாவின், வில்லியம்ஸ் கவுண்டி பகுதியில் மட்டுமே ஜுன் மாத வாக்கில் 20, 000 வேலைகள் இழக்கப்படும் என்று MBI Energy Services இன் செயலதிகாரியான ஜிம் ஆர்தாட் CNN இடம் கூறினார்.

Baker Hughes Halliburton வாங்கிக் கொள்ளும் செயல்பாடுகளில் இருக்கிறது, அது சமீபத்தில் 1000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. Baker Hughes 9000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்திருப்பது அதன் உலக அளவிலான பணியாளர்கள் எண்ணிக்கையில் 7 சதவீதமாகும். Schlumberger இன் செயலதிகாரியான போல் கிப்ஸ்கார்ட் ஒரு செய்தியில், எண்ணெய் நிறுவனங்களின் வேலை வெட்டுக்கள் முடிந்துவிடவில்லை என்று எச்சரித்தார்.

விலை சரிவால் உண்டான நிதிச்சிக்கல்களை சமாளிக்கும் திறன் குறைவாக இருப்பதால், பல சிறிய எண்ணெய் நிறுவனங்களும்கூட கணிசமான வேலைகளை நீக்கி வருகின்றன. ஓக்லஹாமா, டுல்சாவில் அமைந்திருக்கும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனமான Laredo Petroleum அதன் பணியாளர்கள் எண்ணிக்கையில் 20 சதவீதத்தினரைக் குறைக்கும் என்பதுடன் டெக்ஸால், டல்லாஸில் இருக்கும் அதன் அலுவலகத்தினை மூடிவிடும். 2012இல் இந்நிறுவனம் 340 பணியாளர்களை பணியமர்த்தியது. 2012இல் கிட்டத்தட்ட 2599 பணியாளர்களுடன் கூடிய பன்னாட்டு எண்ணெய் நிறுவனமான Apache Corporation அதன் உலக அளவிலான பணியாளர்களில் 5 சதவீதத்தினரை நீக்கும். Suncor Energy 1000 பணியாளர்களையும், Ensign Energy Services 700 பணியாளர்களையும், Hercules Offshore 324 பணியாளர்களையும் மற்றும் Civeo 200 பணியாளர்களையும் நீக்கும் என்று அறிவித்துள்ளன, இவை அனைத்திற்கும் எண்ணெய் விலை சரிவே காரணம்.

US Steel அதன் 756 பணியாளர்களை நீக்க இருப்பதை ஏற்கெனவே அறிவித்துவிட்டது, கிழக்கு சிகாகோவின் அதன் உலோகத்தகட்டு ஆலையின் 389 பணியாளர்களை நீக்கி அதனை மூடப்போவதாக அறிவித்ததனை அடுத்து இப்போது அது நீக்கும் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1300 ஆகிவிடும். US Steel செயல்பாடுகளில் மிகுந்த இலாபகரமான பகுதி என்றால் அது மேற்சொன்ன  குழாய்வழி மற்றும் எண்ணெய் பீப்பாய்களுக்கான எண்ணெய் வள நாடுகளின் குழாய் பொருட்கள்தான்.  மார்ச் 1 அன்று Arcelor Mittal நிறுவனமும் இண்டியான துறைமுக Long Carbon தொழிற்சாலையில் அதன் மின் உலையை மூடும்போது 304 வேலைகள் நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கணக்கிடப்பட்ட நிறுவனங்களில் 22 சதவீத நிறுவனங்கள் அடுத்த ஆறு மாதங்களில் சில பணியாளர்களை பணிக்கமர்த்த (அவர்களில் பலர் ஒப்பந்த அடிப்படையில்) திட்டமிடுவதாக, Rigzone கணக்கிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு மேலாளர்களின் ஒரு கணக்கெடுப்பு காண்பிக்கிறது அப்படி கணக்கிடப்பட்டவர்களில் 29 சதவீதத்தினர் பணியாளர் சேர்ப்பில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றனர். தற்போதைய எண்ணெய் அகழ்வதில் ஐந்து வருடக் குறைவு மற்றும் சரிவினை கருத்தில்கொண்டு புதிய அகழ்வுகளும் பெருமளவு குறைந்திருக்கிறது

எண்ணெய் நிறுவன வேலைநீக்கங்கள் அத்துறையின் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மட்டுமல்லாது அவர்களை சார்ந்து தங்களது வேலைக்காக சில்லரை நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் பிற சேவை நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் சமூகத்தில் இருப்பவர்கள் ஆகியோரிடையே மிகுந்த தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது,

வடக்கு டகோடாவில் எண்ணெய் நிறுவன ட்ரக் ஓட்டுநரான ஜோன் ராபர்ட்ஸுடன் CNN உரையாடியது, அவர் பல எண்ணெய் நிறுவன பணியாளரைப் போன்று நிறுவன விடுதிகளில் தங்கவைக்கப்பட்டார். Schlumberger இவரை பணி நீக்கம் செய்தபோது, வீட்டை விட்டு வெளியேற தனக்கு 24 மணி நேர அவகாசமே வழங்கப்பட்டதாக ராபர்ட் CNN இடம் தெரிவித்தார். தற்போது ராபர்ட் ஒரு நண்பரின் இடத்தில் தங்கி வருகிறார், எண்ணெய் அகழ்வு பணியாளரான ஆரோன் நீஃபர் செய்தி முகமையிடம் தான் மிகவும் கவலைப்பட்டதாகவும், ஆனால் அதே நேரம் அவர்கள் ஏற்கெனவே பணியாளர்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துவிட்டதாகவும் கூறினார். ஆரோன் மற்றும் ராபர்ட்ஸ் இருவரும் திருமணமானவர்கள், இருவருக்கும் பல குழந்தைகள் உள்ளன.

ஓக்லஹாமா, ஹோமினியில் உணவகம் ஒன்றின் உரிமையாளரான கிறிஸ் காப்ரியல் உள்ளூர் KOTV செய்தி நிலையத்திடம், நீங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் இல்லை என்று நினைக்கிறேன், இருந்தாலும் நீங்கள் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். நாம் ஒவ்வொருவரும் குறிப்பாக இந்த பகுதியில், பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றார். காப்ரியல் அப்பகுதியில் வாரம் ஒரு முறை அனைத்து தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இலவச உணவு வழங்க ஆரம்பித்திருப்பதாக KOTV இடம் தெரிவித்தார், இப்பகுதி மக்களுக்கு எண்ணெய் தொழிற்துறை பிராணவாயு மற்றும்ரத்தம் போன்றது.

நாங்கள் அனைவரும் அது குறித்து கவலைப்படுகிறோம். உங்கள் சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டுவிட்டது என்று கற்பனை செய்து பாருங்கள், மேலும் ஒரு கேலன் எரிபொருளுக்காக நீங்கள் ஒரு டாலருக்கும் குறைவாகத்தான் பணம் கொடுக்கிறீர்கள், ஆச்சரியமாக இருக்கிறதா? என்று சிலர் கூறினால். இல்லை. எனக்கு அது குறித்து ஆச்சரியமாக இல்லை என்று கேப்ரியலின் உணவகத்தில் எண்ணெய் நிறுவன பணியாளர் KOTV-இடம் கூறுகிறார்.

ஒவ்வொருவரும் நீக்கப்பட்டு வருகிறார்கள், இது மிக மோசமான நேரம் என்று டெக்ஸாசில் அந்தோனி ராட்ரிகெஸ் KSAT news இடம் தெரிவித்தார். எண்ணெய் விநியோக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் ராட்ரிகெஸ், விலை சரிவானது உங்களுக்கான பொறியை வைக்கிறது, ஒவ்வொரு நாளும் வேலை பற்றி கவலைப்பட வைக்கிறது என்றார். டெக்ஸாஸ், டில்டனில் உணவகம் ஒன்றின் உரிமையாளரான டி.ஜே.படேல் என்பவரிடமும் KSAT பேட்டி கண்டது. அவர், நிறுவனங்கள் தொடர்ந்து இருந்து வந்ததால் அனைவருக்கும் சொந்தமாக அறைகள் இருந்தது. இப்போது அவர்கள் 30 நிமிடம் அல்லது 1 மணி நேர பயண தூரத்தில் வசித்தால், அறைகளில் தங்குவதற்குகு பதிலாக அவர்கள் வீட்டிற்கே திரும்பி போவார்கள் என்றார்.

சர்வதேச அளவில் எண்ணெய் வெட்டுக்களும் அதிகரித்து வருகின்றன. மெக்ஸிக்கோவில் மெக்ஸிகன் பெட்ரோலிய நிறுவனத்தில் 10,000 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். வடக்கு கடலின் பெட்ரோலிய உற்பத்தி பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்றின் தலைவரான சேர் இயன் வூட் பொது அறிவிப்பு ஒன்றில், இவ்வருடம் அப்பகுதியில் 40,000 வேலைகள் ஆபத்தில் உள்ளன என்று எச்சரித்திருக்கிறார்.