சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Washington moves toward arming Ukrainian regime

உக்ரேனிய ஆட்சிக்கு ஆயுதம் வழங்குவதை நோக்கி வாஷிங்டன் நகர்கிறது

By Niles Williamson
4 February 2015

Use this version to printSend feedback

ரஷ்யா சார்பு கிழக்கு உக்ரேனிய பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான தாக்குதலில் நேட்டோ ஆதரவிலான கியேவ் ஆட்சிக்கு ஏற்பட்ட சமீபத்திய பின்னடைவுகளுக்குப் பின்னர், அதை ஆதரித்து, ஒபாமா நிர்வாகம் உக்ரேனிய இராணுவம் மற்றும் பாசிச ஆயுதக் குழுக்களை நேரடியாக ஆயுதம் வழங்குவதை நோக்கி நகர்ந்து வருவதாக திங்களன்று நியூ யோர்க் டைம்ஸ் அறிவித்தது.

அந்த கட்டுரை புரூகிங்க்ஸ் பயிலகம், அட்லாண்டிக் கவுன்சில், மற்றும் உலகளாவிய விவகாரங்களுக்கான சிகாகோ கவுன்சில் ஆகியவற்றால் திங்களன்று பிரசுரிக்கப்பட்ட, மற்றும் ஜனாதிபதி ஒபாமாவிற்கு அனுப்பப்பட்ட ஓர் கூட்டறிக்கையை மேற்கோளிட்டுக் காட்டியது. அவ்வறிக்கை உக்ரேனில் போரைத் தீவிரப்படுத்துவதற்குரிய சிறந்த வழியைக் குறித்து வாஷிங்டன் மற்றும் நேட்டோவிற்கு ஆலோசனை வழங்கி இருந்தது.

அந்த சிந்தனைக் குழாம் அறிக்கை, அடுத்த மூன்று ஆண்டுகளில் கியேவ் ஆட்சிக்கு இராணுவ தளவாடங்களுக்காக குறைந்தபட்சம் 3 பில்லியன் டாலர்கள் வழங்க அமெரிக்காவிற்கு அழைப்புவிடுக்கிறது. இலகுரக டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட் வீசிகளை இலக்கு வைக்கும் ஏவுகணை குண்டு-தடுப்பு ராடார்கள், மத்திய தூர டிரோன்கள் மற்றும் குண்டு துளைக்காத இராணுவ வாகனங்கள் ஆகியவை, வினியோகிக்க பரிந்துரைக்கப்பட்ட சாதனங்களில் உள்ளடங்கும். அது, கியேவிற்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வழங்க, முன்னாள் சோவியத் ஆயுதங்களைக் கொண்டுள்ள கிழக்கு ஐரோப்பிய நேட்டோ அங்கத்துவ நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கின்றது.

டைம்ஸ் செய்தியின்படி, அமெரிக்க அதிகாரிகள் அந்த அறிக்கையின் பரிந்துரைகளை ஆதரிக்க வேகமாக நகர்ந்து வருகின்றனர். ஐரோப்பாவிற்கான நேட்டோ இராணுவ தளபதி ஜெனரல் பிலிப் எம். ப்ரீட்லவ், பாதுகாப்பு செயலர் சக் ஹாகெல், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் தலைமை அலுவலக தலைவர் ஜெனரல் மார்டின் திம்ப்செ என அனைவருமே கியேவிற்கு நேரடியாக ஆயுதம் வழங்குவது மீதான விவாதங்களை ஆதரித்தனர். ஒபாமாவின் ஒப்புதலுக்கு வழிவகுக்கும் வகையில், கியேவை ஆயுதம் வழங்குவதற்கு அவர் தெரிவித்து வந்த எதிர்ப்பை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் மறுபரிசீலனை செய்து வருகிறார்.

ரஷ்யாவுடன் போரைத் தூண்டக்கூடிய அச்சுறுத்தல்களைக் கொண்ட ஒரு மோதலை, அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால், வாஷிங்டன் பொறுப்பற்ற விதத்தில் தீவிரப்படுத்தி வருகிறது. Right Sector அல்லது அஜோவ் பட்டாலியன் போன்ற உக்ரேனிய பாசிசவாத ஆயுதக்குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஏற்கனவே 50,000கும் மேற்பட்ட மரணங்களுக்கு இட்டுச் சென்றுள்ளன என்பதுடன், அவை ஒரு மில்லியனுக்கும் மேலானவர்கள் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்தித்தன. ரஷ்ய அதிகாரிகளோ கிழக்கு உக்ரேனில் கியேவ் ஆட்சி படைகளினால் ஒரு இரத்தஆறு உருவாவதை தடுக்க இராணுவரீதியில் அவர்கள் தலையீடு செய்வார்கள் என்பதை மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளனர் இந்நகர்வு ரஷ்யாவுக்கும் உக்ரேனின் நேட்டோ கூட்டாளிக்கும் இடையே ஓர் உலகளாவிய போரைத் தூண்டிவிடக்கூடும்.

அந்த அறிக்கை ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் விதமே, அமெரிக்க வெளியுறவு கொள்கை எதில் தீர்மானகரமாக உள்ளதோ அந்த முற்றிலும் ஜனநாயக-விரோத பாணியை நிரூபணம் செய்வதாக உள்ளது. முற்றிலும் அர்த்தமற்ற விதத்தில் டைம்ஸ் இதழால் "சுயாதீனமானது" என வரையறுக்கப்பட்டு இருக்கும் அந்த சிந்தனை குழாம் அறிக்கை, பெண்டகன், நேட்டோ மற்றும் அரசு துறையின் முன்னாள் உயர்மட்ட அதிகாரிகளின் ஒரு சதியாலோசனைக் கூட்டத்தால் எழுதப்பட்டதாகும். அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால் இவ்வாறான ஒரு கொள்கை அமெரிக்கா மற்றும் ரஷ்யா உட்பட அணுஆயுத நாடுகளுக்கு இடையே போரைத் தூண்டிவிடக்கூடிய நகர்வை அமைத்து வருகிறது.

உண்மையில் அந்த அறிக்கையை பிரசுரித்த அந்த பயிலகங்களும் சரி மற்றும் அந்த தனிநபர்களும் சரி, ஒபாமா நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியுடன் மிக நெருக்கமாக தொடர்புபட்டவர்களாவர். முதல் பெண்மணி மிஷேல் ஒபாமா, சிகாகோ கவுன்சிலின் இயக்குனர்கள் குழுவில் அமர்ந்துள்ளார்.

அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளவர்களில் பின்வருபவர்களும் உள்ளடங்குவதை ஒருவர் காணலாம்:

கிளிண்டன் நிர்வாகத்தில் துணை வெளியுறவுத்துறை செயலராகவும் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு சிறப்பு தூதராகவும் சேவை செய்த புரூகிங்க்ஸ் பயிலகத்தின் தற்போதைய தலைவர் ஸ்ட்ரோப் டால்போட். இவர் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்புக்கு இடையே ரஷ்யாவை நோக்கிய அமெரிக்க கொள்கையின் அபிவிருத்திகளையும், கிழக்கு ஐரோப்பாவில் சோவியத்-ஆதரவு முன்னாள் அரசுகள் மற்றும் காகசஸில் முன்னாள் சோவியத் குடியரசுகள் ஆகியவற்றை ரஷ்யாவிடமிருந்து விலகி வர செய்யும் முந்தைய முயற்சிகளையும் மேற்பார்வையிட்டவர் ஆவார். ரஷ்யா குறித்து ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கு நெருங்கிய ஆலோசகராக விளங்கிய டால்போட், 1993இல் ரஷ்ய நாடாளுமன்றத்தின் மீது போரிஸ் யெல்ட்சின் குண்டுமழை பொழிந்ததை ஆதரித்தார், அதில் நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

சிகாகோ கவுன்சிலின் தற்போதைய தலைவர் இவோ டால்டெர், ஒபாமாவினது 2008 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு வெளியுறவு கொள்கை ஆலோசகராகவும் மற்றும் 2011இல் லிபியா மீதான போரின் போது நேட்டோவின் அமெரிக்க பிரதிநிதியாக இருந்தவரும் ஆவார். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தலைமையிலான அந்த குண்டுவீச்சு நடவடிக்கையில் பத்து ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு லிபியாவைச் சீரழித்ததுடன், அது மௌம்மர் கடாபியின் விசாரணையற்ற கும்பலாக அடித்துக் கொல்லும் படுகொலையில் போய் முடிந்தது.

புதிய அமெரிக்க பாதுகாப்புக்கான மையம் எனும் சிந்தனைக்குழாமின் தற்போதைய தலைவராக மிசெல் புளோர்னொய், 2009இல் இருந்து 2012 வரையில் லியோன் பானெட்டாவின் கீழ் இணை பாதுகாப்புத்துறை செயலராக இருந்தவராவார். ரஷ்யா, உக்ரேன் மற்றும் யுரேஷியாவை நோக்கிய அமெரிக்க கொள்கையை நெறிப்படுத்தி, கிளிண்டன் நிர்வாகத்தின் பாதுகாப்புத்துறையிலும் இவர் சேவை செய்தார். தனது பதவியை நவம்பரில் இராஜினாமா செய்ப்போவதாக அறிவித்த தற்போதைய பாதுகாப்புத்துறை செயலர் சக் ஹாகெலைப் பிரதியீடு செய்யக்கூடிய ஒரு சாத்தியமான வேட்பாளராக இவர் கருதப்பட்டார்.

உக்ரேனுக்கான இரண்டு முன்னாள் அமெரிக்க தூதர்கள் ஜோன் ஹெர்ப்ஸ்ட் மற்றும் ஸ்டீவன் பிஃபர் ஆகியோரும் அந்த அறிக்கையில் அவர்கள் பெயரிட்டு கையெழுத்திட்டனர். மிக முக்கியமாக, ஒரு மேற்கத்திய ஆதரவிலான அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த அமெரிக்க ஆதரவிலான 2004-2005 ஆரெஞ்சு புரட்சியின் போது, ஹெர்ப்ஸ்ட் தான் தூதராக இருந்தார். சிஐஏ இன் நிதி தேவைகளுக்கும் மற்றும் நடவடிக்கைகளுக்கும் ஒரு நீண்டகால ஊற்றாக உள்ள USAID மூலமாக, உக்ரேனில் மேற்கத்திய ஆதரவிலான ஊடகங்களின் அபிவிருத்தியை ஊக்குவிக்க, 2006இல் அவரால் 2.3 மில்லியன் டாலர்கள் நிதியுதவிகளைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது.

உக்ரேனில் அதுபோன்றவொரு மோதலுக்கு அழைப்புவிடுப்பதில், கையெழுத்திட்டிருந்த அந்நபர்கள் அனைவரும் ஜனாதிபதி ஜிம்மி கார்டருக்கு முன்னாள் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்த ஜ்பிக்னீவ் பிரிஜேஜென்ஸ்கி இன் அடியொற்றி பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது புரூகிங்க்ஸ் பயிலக அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டு வருவதும் மற்றும் நியூ யோர்க் டைம்ஸில் விவாதிக்கப்பட்டதுமான அந்த கொள்கைகளை வரைந்தளித்து, கடந்த ஆண்டு வில்சன் மையத்தில் பிரிஜேஜென்ஸ்கி ஓர் உரை நிகழ்த்தி இருந்தார்.

குறிப்பாக உக்ரேனியர்கள் நகர்புற எதிர்ப்பு போர்முறையில் திறமையாக ஈடுபடுவதற்கு உதவும் வகையிலான ஆயுதங்களைக்" கியேவிற்கு வழங்குமாறு வாஷிங்டனுக்கு அவர் அழைப்புவிடுத்தார். “ஆயிரக் கணக்கான டாங்கிகளுடன், பெரும் படை பிரயோகத்தை ஒழுங்கமைக்கக்கூடிய ஓர் இராணுவத்தைக் கொண்டிருக்கும் ரஷ்ய இராணுவத்தை திறந்தவெளியில் எதிர்கொள்ளும் வகையில் உக்ரேனியர்களை ஆயுதபாணியாக்க முயற்சிப்பதில் அங்கே எந்த அர்த்தமும் இல்லை.” அதற்கு பதிலாக ரஷ்யாவை மிரட்டுவதற்கும், பின்னர் உக்ரேனில் எவ்விதத்திலேனும் தலையிட அது முடிவு செய்தால், அதற்கு நகர்புறத்தில் இனப்போர் முறையில் இறங்குவதற்குரிய ஒரு கொள்கையை அவர் பரிந்துரைத்தார்.

அவர் விவரித்தார், “இரண்டாம் உலக போரில் மற்றும் மிக சமீபத்தில் செசென்யாவில் நகர்புற எதிர்ப்பிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு வரலாறு இருக்கிறது. செசென்யா தலைநகரில் வீட்டுக்கு வீடு மோதல் மூன்று மாதங்கள் நீடித்தது. விடயம் என்னவென்றால், [ரஷ்யா மீது] படையெடுக்கும் முயற்சி அரசியல்ரீதியில் வெற்றி பெற வேண்டுமானால், அது பிரதான நகரங்களை கைப்பற்றுவதை உள்ளடக்கி இருக்க வேண்டும். பிரதான நகரங்களில், ஹார்கிவ், கியேவ் என்று வைத்துக் கொள்வோம், அங்கே எதிர்ப்பு கிளம்ப வேண்டுமென்றால் மற்றும் வீதி சண்டைகள் அவசியமாக வேண்டுமானால், அது நீண்ட காலமெடுப்பதாக மற்றும் செலவு பிடிப்பதாக இருக்கும். இந்த விடயத்தின் உண்மை என்னவென்றால், மேலும் இங்கே தான் இந்த மொத்த நெருக்கடியின் சரியான காலநேரம் முக்கியமாகின்றது. ரஷ்யா இதுவரையில் அம்மாதிரியான முயற்சியைக் கையாள தயாராகவில்லை. அதற்கு மிகவும் இரத்தக்களரியுடன் விலைக்கொடுக்க வேண்டியதாக இருக்கும், நிதிச்செலவுகளை பொறுத்தவரையில் முடக்கும் வகையில் செலவுகூடியதாக இருக்கக்கூடும்,” என்றார்.

பிரிஜேஜென்ஸ்கியால் வரையப்பட்ட மூலோபாயம் வஞ்சகமானதும், பிற்போக்குத்தனமானதும் ஆகும். உக்ரேனில் ரஷ்யா அனைத்து செல்வாக்கையும் துறப்பதற்கும், மற்றும் டான்பாஸை நேட்டோ பினாமிகள் நசுக்குவதை அனுமதிப்பதற்காக, ரஷ்யாவை அச்சுறுத்தும் அமெரிக்க நடவடிக்கைகள் தோல்வி அடைந்தால், மில்லியன் கணக்கானவர்கள் வசிக்கும் நகரங்களுக்குள் சண்டையிடப்படும் ஒரு போரில் ரஷ்யயர்களை முற்றாக பலமிழக்க செய்ய, அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் பயன்படுத்தப்படும் என்பதுடன், அது முழு அளவிலான அணுஆயுத போராக தீவிரமடையக்கூடும்.