சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Europe on the brink of war

யுத்தத்தின் விளிம்பில் ஐரோப்பா

Alex Lantier
7 February 2015

Use this version to printSend feedback

கிழக்கு உக்ரேனில் ரஷ்ய-ஆதரவிலான பிரிவினைவாதிகளை தாக்குவதற்காக, வாஷிங்டன் மேற்கத்திய ஆதரவிலான கியேவ் ஆட்சிக்கு ஆயுதங்கள் வழங்க பரிசீலித்து வருகிறது என்ற செய்திகள், உலக போர் அபாயத்தை ஐரோப்பிய அரசியல் வாழ்வின் மையத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இவ்வார தொடக்கத்தில், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் பேச்சுவார்த்தைகளுக்காக மாஸ்கோ புறப்படுவதற்கு முன்னதாக "முழு போர்" அபாயம் குறித்து எச்சரித்தார். இதே கருத்துக்கள் ஸ்வீடனின் முன்னாள் பிரதம மந்திரி கார்ல் பில்ட்டால் வெள்ளியன்று எதிரொலிக்கப்பட்டன.

துரதிருஷ்டவசமாக, ரஷ்யாவுடனான போர் எண்ணிப் பார்க்கக்கூடியதாக உள்ளது, முனீச் பாதுகாப்பு மாநாட்டின் ஒரு நேர்காணலில் பில்ட் Frankfurter Allgemeine Zeitungக்கு தெரிவித்தார். நாம் நிச்சயமாக மிகவும் ஆபத்தான ஒரு வரலாற்று காலகட்டத்தினூடாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்று தெரிவித்த பில்ட், குறிப்பாக ஒரு ஐரோப்பிய முன்னோக்கிலிருந்து நீங்கள் இந்த நிலைமையை பாருங்கள். அங்கே கிழக்கில் சண்டை நடந்து வருகிறது, அங்கே தெற்கில் சண்டை நடந்து வருகிறது. தீப்பிளம்புகள் நமக்கு மிக நெருக்கமாக வந்து கொண்டிருக்கின்றன. வல்லரசுகளுக்கு இடையிலான உறவுகளில் அங்கே பெரியளவில் நிச்சயமற்றத்தன்மை நிலவுகிறது என்பதுதான் நிலைமையை இன்னும் வெடிப்பார்ந்ததாக மாற்றுகிறது, என்றார்.

கடந்த நூற்றாண்டில் 1914 மற்றும் 1939இல் இரண்டு முறை மனிதகுலம் உலக போருக்குள் மூழ்கடிக்கப்பட்டபோது, உலக முதலாளித்துவ நெருக்கடி எந்தளவிற்கு ஆழமாக இருந்ததோ அதை விட ஆழமான ஒரு நெருக்கடியை முகங்கொடுக்கிறது. அந்த ஏகாதிபத்திய போர்களின் போக்கில் பத்து மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், ஆனால் அணுஆயுத சக்திகளால் நடத்தப்படும் மூன்றாம் உலக போரால் உண்டாக்கப்படும் பேரழிவுகளோடு ஒப்பிடுகையில் அவையெல்லாம் ஒன்றுமில்லாமல் போகக்கூடும்.

ஊடகங்கள் மௌனமாக உடந்தையாய் இருப்பதற்கு இடையே, பெரிதும் உலக மக்களின் முதுகுக்குப் பின்னால் ஓர் அணுஆயுத பேரழிவுவின் அபாயம் எழுந்துள்ளது. தற்போது அணுஆயுதமேந்திய ரஷ்யாவுடன் ஸ்வீடிஸ் அரசாங்கம் போரைப் பரிசீலிக்கிறது என்றால், அதன் கொள்கையை அது நெறிப்படுத்தி வருகின்ற நிலையில், அணுஆயுதமேந்திய ஏவுகணைகள் ஸ்டாக்ஹோமை சிதறடிக்கும் அபாயத்தைக் குறித்து அது பரிசீலிக்கிறதா? கியேவின் வலதுசாரி ஆட்சியைப் பாதுகாப்பதற்காக ஸ்வீடனை நிர்மூலமாக்கும் ஆபத்தை ஏற்பது மதிப்புடையதென்று அது கருதுகிறதா? புவிசார் அரசியல் அபிலாஷையின் கொடூரமான கணக்கிற்கு எத்தனை மில்லியன் மக்களின் வாழ்வை பலிகொடுக்க ஏகாதிபத்திய சக்திகள் தயாராக உள்ளன? என்ற இந்த வெளிப்படையான கேள்விகளை Frankfurter Allgemeine Zeitung பில்டிடம் கேட்கவில்லை.

நேட்டோ அரசாங்கங்கள், அவை எதிர்கொண்டுள்ள நெருக்கடியின் வரலாற்று குணாம்சத்தை சுட்டிக்காட்டி உள்ள போதினும், அதை எவ்வாறு தீர்ப்பது என்பதற்கு எந்தவித யோசனையையும் அவற்றில் எதனிடமும் இல்லை. அதற்கு மாறாக, அவை எரியும் தீயில் எண்ணெய் வார்த்து வருகின்றன. ஏகாதிபத்திய சக்திகள் கருங்கடலுக்கு போர் கப்பல்களை அனுப்பி வருகின்ற அதேவேளையில், ரஷ்யாவினது எல்லையொட்டிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பத்தாயிரக் கணக்கான நேட்டோ துரித எதிர்நடவடிக்கை துருப்புகளை அனுப்ப அவை தயாரிப்பு செய்து வருகின்றன.

கியேவிற்கு அமெரிக்கா ஆயுதங்கள் வினியோகிப்பதன் தாக்கங்கள் குறித்த கவலையால் உந்தப்பட்டதாக வெளிப்பார்வைக்கு காட்டிக் கொண்டு, மேர்க்கெலும் ஹோலாண்டும் மாஸ்கோவில் சமாதான பேச்சுவார்த்தைகளுக்காக சந்தித்ததாலும் கூட, ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயன் ரஷ்யாவை இலக்கில் கொண்ட துரித எதிர்நடவடிக்கை படைகளில் ஜேர்மன் பங்கு வகிப்பதை ஊக்குவித்தார்.

"ஜேர்மனி ஒரு கட்டமைப்பு கொண்ட தேசம் மட்டுமல்ல, புதிய நேட்டோ தாக்குமுகப்பு படையின் முக்கிய ஆதரவாளரும் கூட," என்று தெரிவித்த அப்பெண்மணி, "வடகிழக்கு பன்னாட்டு படைகளை (Multinational Corps Northeast) ஆயத்தப்படுத்துவதிலும், அத்துடன் கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள நேட்டோ அங்கத்துவ நாடுகளில் அது ஸ்தாபித்து வரும் இராணுவத் தளங்களைக் கட்டமைப்பதிலும் கூட நாங்கள் உதவி வருகிறோம்," என்றார். "OSCE [ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைப்பு] வகிக்கும் பாத்திரத்தை பலப்படுத்தவும் மற்றும் ரஷ்யாவை பொறுத்த வரையில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பொதுவான நிலைப்பாட்டை கொண்டிருக்க உறுதிப்படுத்தவும் [ஜேர்மன்] மத்திய அரசாங்கத்தின் அயராத பொறுப்புணர்வை" அவர் பாராட்டினார்.

உக்ரேனுக்கு நேரடியாக ஆயுதம் வழங்கும் அமெரிக்க பரிந்துரைகளுக்கு ஒரு சாத்தியமான மாற்றீடாக, SWIFT சர்வதேச பரிவர்த்தனை அமைப்புமுறையில் இருந்து ரஷ்யாவை நீக்குவது உட்பட, இதுவே ஒரு போர் நடவடிக்கை என்றளவிற்கு ஒரு பொருளாதார அடியாக பார்க்கப்படுகின்ற நிலையில், அதன்மீது கூடுதல் பொருளாதார தடைகளுக்கு ஐரோப்பிய குரல்கள் அழுத்தம் அளித்து வருகின்றன.

இதற்கிடையே ஐரோப்பிய ஊடகங்களோ கிரெம்ளினை ஆக்ரோஷத்துடன் வம்புசண்டைக்கு வரும் நாடாக கண்டித்தும், உக்ரேன் குறித்த நெருக்கடிக்கு அதை குற்றஞ்சாட்டியும், பொதுமக்களின் கண்ணோட்டத்தை மாற்ற சளைக்காது வேலை செய்து வருகின்றன.

"பிராந்தியமயப்படுத்தப்பட்ட ஒரு மரணகதியிலான மோதலுக்கும், மிகப்பெரிய படுமோசமான மோதலுக்கும் இடையே வரலாறு தள்ளாடிக்கொண்டிருக்கிறது... அதன் தொடர்ச்சியான பின்விளைவுகளில் ஒன்று ஐரோப்பாவுக்கு மிக நன்றாகவே தெரியும்," என்று Le Monde வெள்ளியன்று பிரசுரித்த ஒரு தலையங்கத்தில் எச்சரித்தது. அந்த பத்திரிகை, இந்த நெருக்கடிக்கான பழியை வெளிப்படையாக புட்டின் மீது சுமத்த மேற்சென்றது. "முக்கியமாக, எல்லாமே விளாடிமீர் புட்டின் எனும் ஒரேயொரு மனிதரைச் சார்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டணி சேர முயன்றதற்காக கியேவை அவர் போதுமான அளவிற்கு தண்டித்துள்ளார் என்பதை ரஷ்ய ஜனாதிபதி நினைத்துப் பார்க்கிறாரா? அவர் பதட்டங்களைக் குறைக்க விரும்புகிறாரா, அல்லது போரைத் தூண்டிவிட விரும்புகிறாரா?" என்று அது எழுதியது.

ஒரேயொரு மனிதரின் தொடர்ச்சியான பின்விளைவுகள் சம்பந்தப்பட்ட Le Monde இன் கட்டுக்கதையானது, அப்பட்டமான பொய்களின் அடிப்படையில் ரஷ்யாவை அரக்கத்தனமாக சித்தரிப்பதன் பாகமாக உள்ளது. ஏகாதிபத்திய சக்திகளின் மேலாதிக்க அபிலாஷைகள் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கவியலாத நெருக்கடியால் தூண்டிவிடப்பட்ட போர் அபாயத்தை உந்திச் செல்வது, ஏகாதிபத்திய சக்திகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளாகும்.

உலகப் பொருளாதாரத்தின் மீது அவற்றின் பலம் மங்கிப்போய் கொண்டிருப்பதுடன், தொழிலாள வர்க்கத்திற்குள் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்து வருவதோடு, உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய சக்திகள் ஆட்டம் கண்டு போயுள்ளன. "வல்லரசுகளுக்கு இடையிலான உறவுகளில் நிலவும் நிச்சயமற்றத்தன்மை" என்று பில்ட் எதை அழைக்கிறாரோ அதனால் பீதியுற்ற அவை, பாசிசவாத துணைஇராணுவப் படைகளால் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு வழிவகை மூலமாக உக்ரேனை கைப்பற்றியும், அதன் அண்டை நாடான ரஷ்யாவை ஒரு அரை-காலனித்துவ நாடாக மாற்றும் நோக்கத்துடன் அதற்கு ஒரு பேரழிவுகரமான அடியைக் கொடுக்கும் விதத்தில் அவற்றின் புவிசார் அரசியல் நிலைப்பாட்டை பலப்படுத்த முனைந்துள்ளன.

கடந்த ஆண்டு வாஷிங்டனும் பேர்லினும் கியேவில் பாசிசவாத Right Sector போராளிகள் குழு போன்ற சக்திகளால் தலைமை கொடுக்கப்பட்ட ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரிப்பதில், நேட்டோ அதிகாரங்களை தலைமையேற்று கொண்டு சென்றன. ரஷ்ய-ஆதரவு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை பதவியிலிருந்து இறக்கி, அவை ஒரு வலதுசாரி ஆட்சியை நிறுவின. அது தொழிலாள வர்க்கத்தின் மீது மூர்க்கமான சிக்கன நடவடிக்கைகளை திணித்ததுடன், கிழக்கு உக்ரேனின் ரஷ்ய-ஆதரவு பிராந்தியங்களில் எழுந்த எதிர்ப்பை இரத்தத்தில் மூழ்கடிக்க முனைந்தது.

கிழக்கு ஐரோப்பாவில் ஓர் இராணுவத்தை கட்டியெழுப்புவதை நியாயப்படுத்த, நேட்டோ அதிகாரங்கள், கிரிமியா மற்றும் டொன்பாஸ் போல, கிழக்கு உக்ரேனில் கியேவ் ஆட்சிக்கு எதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பை பிடித்துக் கொண்டன. 5,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ள மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்தப்படுத்தி உள்ள, கியேவ் ஆட்சியின் டொன்பாஸ் போரை அவை ஆதரித்துள்ளன. டொன்பாஸிற்கு எதிராக ஒரு பரந்த தாக்குதலைத் தடுக்க அது இராணுவரீதியில் தலையீடு செய்யுமென கிரெம்ளின் இப்போது சமிக்ஞை காட்டியதும், நேட்டோ அதிகாரங்களோ முழு போரைக் கொண்டு விடையிறுக்க அவை தயாராக இருப்பதாக சுட்டிக் காட்டி வருகின்றன.

ஏகாதிபத்திய சக்திகளின் போர் வெறிக்கு மாற்றீடாக சர்வதேச தொழிலாள வர்க்கம் உலக சோசலிச புரட்சியின் மூலோபாயத்தை முன்வைக்க வேண்டும்.

போர் அச்சுறுத்தல் என்பது, அரசியல் வாழ்வின் ஒரு நிலையான அம்சமாக மாறியுள்ளது. செப்டம்பர் 2013 இல் அமெரிக்காவும் பிரான்ஸூம் சிரியாவை தாக்கியபோதும்; 2014 இல் இதுவரையில் தீர்க்கப்படாத உக்ரேன் மீது MH17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதை தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக வெளியிடப்பட்ட அச்சுறுத்தல்களின் போதும்; இப்போது, கிழக்கு உக்ரேனிய போர் சம்பந்தமாகவும் என சமீபத்திய ஆண்டுகள் பல தொடர்ச்சியான போர் பீதிகளைக் கண்டுள்ளன. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய தலையீடு இல்லாத நிலையில், இத்தகைய நெருக்கடிகளில் ஏதோவொன்று மனிதகுலத்தின் உயிர்வாழ்வையே அச்சுறுத்துகின்ற ஒரு கட்டுப்படுத்தவியலா போரைத் தூண்டிவிடும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கடந்த ஆண்டு "சோசலிசமும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டமும்" என்ற அதன் அறிக்கையில் எழுதி இருந்தது:

"உலகளாவிய மட்டத்தில் ஒருங்கிணைந்த பொருளாதாரத்தை பகுத்தறிவுடனான ஒரு அடிப்படையில் ஒருங்கிணைப்பதும், இவ்வாறாய் உற்பத்தி சக்திகளின் ஒத்திசைவான அபிவிருத்தியை உறுதி செய்வதும், முதலாளித்துவத்தின் கீழ் சாத்தியமற்றது என்பதையே ஏகாதிபத்திய மற்றும் தேசிய அரசு நலன்களிடையிலான மோதல் வெளிப்படுத்துகிறது. எப்படியிருப்பினும், ஏகாதிபத்தியத்தை அதன் முடிவின் எல்லைக்கு இட்டுச்செல்லும் அதே முரண்பாடுகள் தான் சோசலிசப் புரட்சிக்கான புறநிலையான உத்வேகத்தையும் வழங்குகின்றன. உற்பத்தியின் உலகமயமாக்கமானது தொழிலாள வர்க்கத்தின் பாரியதொரு பெருக்கத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. எந்த தேசத்திற்கும் விசுவாசத்திற்கான கடமைப்பாடற்ற இந்த சமூக சக்தி மட்டுமே போருக்கு மூலகாரணமாய் திகழும் இலாபநோக்கு அமைப்புமுறைக்கு ஒரு முடிவு கட்டத் திறன்படைத்ததாகும்."