சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Shia insurgents disband US-backed Yemeni government

ஷியா கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க ஆதரவிலான யேமன் அரசாங்கத்தைக் கலைத்தனர்

By Thomas Gaist
10 February 2015

Use this version to printSend feedback

ஹௌத்தி கிளர்ச்சியுடன் தொடர்புபட்ட பழங்குடியின போராளிகள் குழுக்கள், கடந்த செப்டம்பரில் யேமன் தலைநகர் சானாவின் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக கைப்பற்றியபோது தொடங்கிய ஒரு மெதுவான நிகழ்முறை நகர்வின் முடிவான நடவடிக்கையாக, கடந்த வாரம் யேமன் நாடாளுமன்றத்தை மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ அரசாங்க அமைப்புகளைக் கலைக்க நகர்ந்தன.

இடைப்பட்ட நான்கு மாதங்களாக முற்றுகையில் வைத்திருந்த பின்னர், ஜனாதிபதி மாளிகையை மற்றும் ஜனாதிபதி அப்த்-ரபு மன்சூர் ஹாதியின் பிரத்யேக வசிப்பிடத்தை ஜனவரியில் கைப்பற்றினர். போராளிகள் அவரது வீட்டில் துப்பாக்கி முனையில் ஹாதி உடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர்.

யேமன் அரசின் நிறைய பிரிவுகளை கட்டுப்பாட்டில் தருமாறு ஹௌத்தியின் முறையீடுகளுக்கு ஆரம்பத்தில் ஹாதி உடன்பட்டார், ஆனால் சில தினங்களிலேயே அவர் அந்நாட்டின் பிரதம மந்திரி மற்றும் முன்னணி மந்திரிசபை உறுப்பினர்களுடன் இராஜினாமா செய்தார். அதற்கடுத்து ஏற்பட்ட அதிகார வெற்றிடத்தை, ஹௌத்தி ஒரு "புரட்சிகர குழுவை" ஸ்தாபிப்பதற்கு ஆதாயமாக எடுத்துக் கொண்டுள்ளதுடன், அவர்கள் ஏதோவொரு விதமான கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கில் தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

யேமன், அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கைகளின் ஒரு முக்கிய இராணுவ தளமாக உள்ளது என்பதுடன், ஒபாமா நிர்வாகம் அதன் கட்டுப்பாட்டை பேண தற்போது வழிவகைகளைப் பரிசீலித்து வருகிறது. ஹௌத்தி உடன் வேலை செய்யும் சாத்தியக்கூறும் இதில் உள்ளடங்கும். இதற்கிடையே ஹாதி ஆட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டதை, அப்பிராந்தியம் முழுவதிலும் அமெரிக்க கொள்கைக்கான ஒரு "முன்மாதிரியாக" சமீபத்தில் ஒபாமா உற்சாகத்தோடு கூறியிருந்தார்.

அமெரிக்கா நீண்டகால யேமன் ஆட்சியாளர் அலி அப்துல்லாஹ் சலெஹ் மற்றும் அவருக்கு அடுத்து வந்தவருடன் நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்தது. சலெஹ் 2012இல் பதவியிலிருந்து வெளியேறினார், அவருக்குப் பின்னர் அப்பதவிக்கு வந்த அப்த் ரபு மன்சூர் ஹாதி, “பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" யேமனின் பங்களிப்பை ஒருங்கிணைக்க ஓர் அமெரிக்க சிறப்பு தூதருடன் நெருக்கமாக வேலை செய்தது. சலெஹ் மற்றும் ஹாதி இருவருமே அப்பிராந்தியத்தின் ஒரு முதன்மை அமெரிக்க கூட்டாளியான சவூதி அரேபியாவிடமிருந்து நிதியியல் ஆதரவைச் சார்ந்திருந்தனர். அது ஹௌத்தி ஆட்சிப்பொறுப்பை எடுத்துக்கொண்டதற்கு விடையிறுப்பாக உதவிகளை நிறுத்தி உள்ளது.

அரேபிய தீபகற்பத்தில் அல் கொல்தாவை இலக்கில் வைத்து நடத்தப்பட்டு வருகின்றன அமெரிக்க டிரோன் போர் மற்றும் அமெரிக்க சிறப்பு படைகளின் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு உத்தரவாதம் பெற, ஒபாமா நிர்வாகம் ஹௌத்தி உடன் இணைந்து வேலை செய்ய விரும்புவதைச் சுட்டிக் காட்டும் விதமாக, லோஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸிற்கு ஒரு நிர்வாக அதிகாரி தெரிவித்தார். “எங்களுடன் பேச விரும்பும் ஒவ்வொருவருடனும், நாங்கள் பேசுவோம்,” என்றார். ஆனால் இதுவரையில் ஹௌத்தி அமெரிக்க தூதரக அதிகாரிகளைச் சந்திக்க மறுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்த அரசாங்கம் அல் கொய்தாவிற்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பில்முந்தைய அரசாங்கம் அளவிற்கு உத்வேகத்தோடு இணங்கி வருமா என்பது ஒருபுறம் இருக்கஇணங்குமா என்பதே அமெரிக்க அதிகாரிகளுக்கு மைய கேள்வியாக உள்ளது,” என்று டைம்ஸ் எழுதியது.

அல் கொய்தாவிற்கு எதிரான ஒரு போராட்டம் என்ற வார்த்தைகளில் அது இருந்த போதினும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான கவலையே, புவிசார் மூலோபாய இடத்தில் அதுவும் குறிப்பாக எண்ணெய் போக்குவரத்திற்கு ஒரு முக்கிய இடத்தில் அமைந்துள்ள யேமனை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உறுதிப்படுத்துவதாகும்.

அதே நேரத்தில் அமெரிக்காவின் ஏனைய கன்னைகள், ஹௌத்திக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு அழைப்புவிடுத்துள்ளன. செனட்டர் ஜோன் மெக்கெயின் நிறைய "தடைப்படை துருப்புகளுக்கு" அழைப்பு விடுத்துள்ளார், அத்துடன் ஹௌத்தி உட்பட ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக ஒரு பிராந்தியம் தழுவிய இராணுவ தீவிரப்பாட்டிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹௌத்தி ஆட்சிப்பொறுப்பை எடுத்துக்கொண்டது மத்திய கிழக்கு முழுவதிலும் "ஈரான் அணிவகுக்கிறது" என்பதை எடுத்துக்காட்டுவதாக மெக்கெயின் எச்சரித்துள்ளார்.

கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் (CSIS) ஆண்டனி கோர்டெஸ்மேன், அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கான மூலோபாய நலன்கள் பணயத்தில் இருப்பதாக சுட்டிக் காட்டினார். “அமெரிக்கா பல ஆண்டுகளாக யேமனில் ஒரு சிறியளவிலான போரில் ஈடுபட்டு வந்துள்ளது, அது முடிவாக அதை இழந்து வருவதாக தெரிகிறது. யேமன் வெகு தொலைவில் சென்றுவிட்டதாக தெரிகிறது, ஆனால் சவூதி அரேபியாவின் எல்லையில் உள்ள அது, உலகளாவிய பொருளாதாரத்திற்கும், அத்துடன் அமெரிக்காவிற்கும் கிடைக்கும் எண்ணெய் ஏற்றுமதிகளின் ஒரு முக்கிய மையமாகும். யேமன் அரேபிய தீபகற்பத்தில் அல் கொய்தாவின் மையமாகவும் உள்ளதுதர்க்கரீதியில் கூறுவதானால் அமெரிக்காவிற்கு மிக நேரடியான பயங்கரவாத அச்சுறுத்தலாக உள்ளது.”

அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிரதான கூட்டாளிகளான இஸ்ரேல், துருக்கி மற்றும் சவூதி அரேபியாவும் ஹௌத்திக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

சவூதி அரேபியா மற்றும் ஈரானுக்கு இடையே அதிகரித்துவரும் பதட்டங்களின் ஒரு பிரதிபலிப்பாக, சவூதியின் மேலாளுமையில் உள்ள வளைகுடா கூட்டுறவு கவுன்சில் (GCC) புதிய அரசாங்கத்திற்கு ஓர் உத்தியோகப்பூர்வ கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அந்த ஆட்சிக்கவிழ்ப்பு "அப்பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரப்பாட்டிற்கு மற்றும் அதன் மக்கள் நலன்களுக்கு" ஒரு மரணகதியிலான அச்சுறுத்தலை பிரதிநிதித்துவம் செய்வதாக GCC தெரிவித்தது.

ஹௌத்தி வெற்றியானது, 2009இல் அந்த போராளிகளுக்கு எதிராக ஒரு சிறியதும் பேரழிவுகரமானதுமான இராணுவ நடவடிக்கையைத் தொடுத்த சவூதி முடியாட்சிக்கு எதிரான ஒரு முக்கிய அடியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

ஹௌத்தி கைப்பற்றுதல் யேமனிலேயே ஓர் உள்நாட்டு போரைத் தூண்டிவிடவும் அச்சுறுத்துகிறது. Asharq Al-Awsatஆல் மேற்கோளிடப்பட்ட ஆதாரங்களின் கருத்துப்படி, ஹௌத்தி தலைமையிலான புதிய அரசாங்கம் ஏற்கனவே யேமனின் பெரும் எண்ணெய் வளங்கள் நிறைந்த மாரீப் உட்பட அந்நாட்டின் மேற்கத்திய மாகாண இலக்குகளுக்கு எதிராக விமான தாக்குதல்களைத் தொடுக்க தயாரிப்பு செய்து வருகிறது. “அதிகாரத்தைக் கைப்பற்றி, ஹௌத்தி அரசாங்கம் அதிகார வெற்றிடத்தை உருவாக்கி வருவதால், நிலைமை மிக மிக பயங்கரமாக மோசமடைந்து வருகிறது. அங்கே ஜனாதிபதி ஹாதியின் சட்ட அங்கீகாரத்தை மீட்டமைக்க வேண்டும்,” என்று .நா. பொது செயலாளர் பான் கீ மூன் அறிவித்தார்.

இந்த அபிவிருத்திகள் ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் பரந்த பகுதிகள் முழுவதிலும், தேசிய-அரசு கட்டமைப்பின் ஒரு பரந்த உடைவின் பாகமாக உள்ளன, அது முடிவில்லா நவ-காலனித்துவ போர்களின் பாதிப்பு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் ஆக்கிரமிப்புகள் என இவற்றின் கீழ் தீவிரமடைந்து வருகின்றன.

செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாயை அணுகும் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள பாப் அல்-மண்திப் ஜலசந்தி போன்ற உலகின் மிக முக்கிய மூலோபாய இரத்த நாளங்களில் ஒன்றான யேமனின் அதிகார இடத்தை விட்டுவிடுவதென்பது, யேமனின் அரசாங்கம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அது வடக்கு ஆபிரிக்க எண்ணெய் போக்குவரத்தையும், அத்துடன் ஆசியாவிற்குள், இந்திய பெருங்கடலுக்குள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தானிய ஏற்றுமதிகளின் ஓட்டத்தையும் தடுத்து நிறுத்த கூடிய சாத்தியக்கூறு உள்ளது என்பதை அர்த்தப்படுத்துகிறது.

சவூதி அரேபியாவுடன் ஒரு நீண்ட எல்லைக் கொண்டிருப்பது உட்பட அது முக்கிய மூலோபாய இடத்தில் அமைந்திருப்பதன் காரணமாக யேமன் பயங்கரவாதிகளுக்கு இடங்கொடுப்பதற்கு பூமியின் மிகவும் மோசமான இடங்களில் ஒன்றாக உள்ளது. அது தெற்கில் செங்கடலை அணுகுவதைக் கட்டுப்படுத்தும் பாப் அல்-மண்திப் ஜலசந்தியான அப்பிராந்தியத்தின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றையும் கொண்டிருக்கிறது" என்றுயேமனுக்கான போராட்டமும், அரேபிய தீபகற்பத்தில் அல் கொய்தாவின் சவால்" என்ற அமெரிக்க இராணுவ போர் கல்லூரி ஆவணம் குறிப்பிட்டது.

அப்தெல் பதாஹ் அல் சிசி புதிய சூயஸ் கால்வாய் திட்டத்திற்கு 60 பில்லியனுக்கும் மேலான எகிப்திய பவுண்டுகளை ஒதுக்கியுள்ள நிலையில், அவரது பாரிய நலன்களும் பணயத்தில் உள்ளது.