சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The danger of escalation in Ukraine

உக்ரேனில் போர் விரிவாக்கத்தின் அபாயம்

Alex Lantier
11 February 2015

Use this version to printSend feedback

வாஷிங்டன் நேரடியாக கியேவில் உள்ள நேட்டோ ஆதரவிலான உக்ரேனிய ஆட்சிக்கு ஆயுதங்கள் வழங்கக்கூடுமென கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்க அரசாங்கம் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளின் சொல்லாட்சிகள், அதிகளவில் பொறுப்பற்றரீதியிலும் மற்றும் அதிதீவிரத்துடனும் மாறியுள்ளன. போர்நாடும் செய்திகள் அனைத்திலும், உக்ரேன் மீதான ஒரு பரந்த மோதலில் மனித உயிர்களின் விலை என்ன என்பதைக் குறித்தோ, அது என்ன வரம்புகளைக் கொண்டிருக்கும், அல்லது ரஷ்யா மற்றும் நேட்டோவிற்கு இடையே அது ஓர் அணுஆயுத பரிவர்த்தனையாக தீவிரமடையக்கூடுமா என்பதைக் குறித்தோ யாரும் தெளிவாக குறிப்பிடுவதில்லை.

முனீச் பாதுகாப்பு மாநாட்டில், அமெரிக்க செனட்டர் லிண்ட்செ கிரஹாம் ஒரு பிரதான போர் வெடிக்கக்கூடும் என்பதைத் தெளிவுபடுத்தினார், இருப்பினும் கியேவிற்கு வாஷிங்டன் எவ்வாறாயினும் ஆயுதங்கள் வழங்குமாறு அழைப்புவிடுத்தார். நீங்கள் [உக்ரேனிய ஆட்சிக்கு] ஒரு தற்காப்பு தகைமையை அளித்தால், இது எவ்வாறு போய் முடியுமென எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு தெரிந்ததெல்லாம், எனது தேசம் தீமைகளைத் தாக்குபிடித்து நிற்க வேண்டியுள்ள போதும் மற்றும் சுதந்திரத்திற்காக நிமிர்ந்து நிற்க வேண்டிய போதும், நான் சுதந்திரத்திற்காக நின்றேன் என்பதால், நான் நல்ல விதமாக உணர்கிறேன். அவர்கள் இறந்து போகலாம். அவர்கள் தோற்று போகலாம். ஆனால் யாராவது பின்னாலிருந்து இதை சிறந்த முறையில் உந்தவில்லையென்றால், நாம் தோற்று போவோம் என்பதை என்னால் கூற முடியும், என்றார்.

ரஷ்யா பீதியுற்று பின்வாங்கும் வரையில் அதை இராணுவரீதியில் அச்சுறுத்துவதற்கு, ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி போலாந்து நாடாளுமன்றத்தில் பரிந்துரைத்தார். உக்ரேன் இராணுவரீதியில் வெற்றிபெற முடியாதென புட்டின் நமக்கு காட்டியுள்ளார். அவராலும் இராணுவரீதியில் வெல்ல முடியாது என்பதை இப்போது நாம் அவருக்கு காட்ட வேண்டும்.

மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான சிந்தனைக்கூட மையத்தின் ஓர் அறிக்கை (CSIS) கியேவ் ஆட்சிக்கு ஆயுதம் வழங்குவதற்காக வாதிட்டது: தடைகளை இறுக்குகின்ற அதேவேளையில், உக்ரேனிய இராணுவத்தைப் பலப்படுத்தும் அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகளின் ஒரு நம்பகமான கடமைப்பாடானது, மாஸ்கோ ஓர் அரசியல் மற்றும் இராணுவ பேரழிவின் அபாயத்தை எடுக்கிறது என்பதை அதற்கு சமிக்ஞை செய்ய உதவும் ... என்று குறிப்பிட்டது.

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவதற்கு அமெரிக்கா பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட வேண்டுமென கட்டுரையாளர் ரோஜர் கோஹன் நியூ யோர்க் டைம்ஸில் எழுதுகையில் முறையிட்டார். மாஸ்கோ புரிந்து கொள்ளும் ஒரு மொழி இருக்கிறது: அதாவது டாங்கி-தகர்ப்பு ஏவுகணைகள், போர்க்கள ராடார்கள், உளவுபார்ப்பு டிரோன்கள் என்பதாகும். அவற்றைக் கொண்டும் மற்றும் ஏனைய ஆயுதங்களைக் கொண்டும் உக்ரேன் இராணுவத்தை பலப்படுத்துங்கள். ஆதாயமடைவதற்கு கொடுக்க வேண்டிய விலையைக் குறித்த புட்டினின் ஆய்வை மாற்றுங்கள். அங்கே அபாயங்களும் உள்ளன, ஆனால் அபாயம் இல்லாத எந்த கொள்கையும் இல்லை, என்றார்.

அரசியல் ஸ்தாபகமும் மற்றும் ஊடகங்களும் ஒன்று அவற்றின் சொந்த பிரச்சாரத்தின் மீது வெறி கொண்டு, ஒரு கூட்டம் மிகுந்த திரையரங்கில் கூச்சலிட்டு கொண்டே சுட்டுத்தள்ளும் நடவடிக்கைக்கு இணையான சர்வதேச இராஜாங்க நடவடிக்கைகளில் இருந்து அவற்றால் விலகிக் கொள்ள முடியுமென அவை நம்ப வேண்டும், அல்லது அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதன் பொருளை அவர்கள் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில், பில்லியன் கணக்கானவர்களின் வாழ்வை விலையாக கோரும் நேட்டோ மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான அணுக்கதிர் விளைவுகளைத் தூண்டக்கூடிய ஒரு பிரதான ஐரோப்பிய பெருநில போரைத் தொடங்க அவர்கள் நகர்ந்து வருகிறார்கள்.

அதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுபவர்களின் நோக்கம் என்னவாக இருந்தாலும் சரி, அவர்கள் உத்தேசத்தில் இருக்கும் இலக்குகளால் அத்தகைய அச்சுறுத்தல்கள் மிகவும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று கிரெம்ளினின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் நிகோலய் பட்ருஷெவ் கூறுகையில், உக்ரேனில் நேட்டோ தலையீட்டை அவர் ரஷ்யாவின் உயிர்பிழைப்புக்குரிய சவாலாக பார்ப்பதாக தெரிவித்தார். அமெரிக்கர்கள், உக்ரேனிய சம்பவங்கள் மூலமாக ஆட்சி மாற்றத்தை எட்டுவதற்காகவும் மற்றும் இறுதியாக எங்கள் நாட்டை உடைக்கவும், ரஷ்ய கூட்டமைப்பை ஓர் உள்பிராந்திய இராணுவ மோதலுக்குள் இழுக்க முயன்று வருகின்றனர், என்றார்.

கியேவ் ஆட்சிக்கு ஆயுதங்கள் வழங்க வாஷிங்டன் முடிவெடுத்தால், அந்த மோதல் "வெறுமனே இன்னும் மேற்கொண்டும் தீவிரமடையும்" என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஒரு நெருங்கிய கூட்டாளியான பட்ருஷெவ் எச்சரித்தார்.

ரஷ்ய ஆட்சியின் அச்சங்கள், முன்னணி அமெரிக்க மூலோபாயவாதிகளால் தூண்டிவிடப்பட்டு வருகின்றன. கியேவ் ஆட்சிக்கு ஆயுதங்கள் வழங்கும் அவர்களின் நோக்கமானது, ரஷ்யாவை அவமானப்படுத்தவும் மற்றும் அமெரிக்காவிற்கு சவால் விடுக்கக்கூடிய பிரதான சக்தியாக உள்ள அதை உடைப்பதற்காகவும் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வை விலையாக கொண்ட அழிவுகரமான நகர்புற போர்முறையில் ரஷ்யாவைச் சிக்க வைப்பதாகும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வில்சன் மைய சிந்தனை குழாமில் கடந்த ஆண்டு உரையாற்றுகையில், முன்னாள் கார்டர் நிர்வாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜ்பிக்னீவ் பிரிஜேஜென்ஸ்கி "ரஷ்யா ஓர் உலக வல்லரசு என்ற தீர்மானத்தை ... நியாயப்படுத்தும் ஒரு பேரார்வக் கண்ணோட்டம்" ரஷ்யாவில் எழுந்துள்ளதற்கு எதிராக எச்சரித்தார். உக்ரேன் "அவ்விடத்தில் ரஷ்யாவிற்கு ஒரு நீடித்த பிரச்சினையாக பரிணமிக்கும் என்பது மட்டுமல்ல, மாறாக அது பிராந்தியத்தின் ஒரு பெரும் பகுதிகளினது நிரந்தர இழப்பையும் பிரதிநிதித்துவம் செய்கிறது, அது ரஷ்யாவின் ஏகாதிபத்திய விரிவாக்கத்தின் போக்கில் அதனால் பாதிக்கப்பட்ட மிகப்பெரிய பிராந்திய இழப்பாகும். அதையொட்டி இதன்விளைபயனாக, உலகில் ரஷ்யாவின் இடம் மற்றும் அது வகிக்கும் பாத்திரம் சம்பந்தமாக, அது இந்த புதிய கட்டுக்கதைக்கு எதிராக வேலை செய்யக்கூடும், என்று அவர் நம்புவதாக தெரிவித்தார்.

பிரிஜேஜென்ஸ்கி தொடர்ந்து குறிப்பிட்டார், அது குறித்து வெளிப்படையாக இருப்பது, மற்றும் உக்ரேனியர்கள் எதிர்த்தால், அவர்களுக்கு ஆயுதங்கள் கிடைக்கும் என்று உக்ரேனியர்களுக்கும் மற்றும் உக்ரேனை அச்சுறுத்தக்கூடியவர்களுக்கும் கூறுவது மிகவும் நல்லதாக இருக்கும் ... மேலும் என்னைப் பொறுத்த வரையில், உக்ரேனியர்கள் குறிப்பாக வெற்றிகரமாக நகர்புற போர்முறை எதிர்ப்பில் ஈடுபட அனுமதிக்கும் வகையில், ஆயுதங்களை வடிவமைக்க வேண்டும். ஆயிரக் கணக்கான டாங்கிகளுடன், பெரும் படை பிரயோகத்தை ஒழுங்கமைக்கக்கூடிய ஓர் இராணுவத்தைக் கொண்டிருக்கும் ரஷ்ய இராணுவத்தை திறந்தவெளியில் எதிர்கொள்ளும் வகையில் உக்ரேனியர்களை ஆயுதபாணியாக்க முயற்சிப்பதில் அங்கே எந்த அர்த்தமும் இல்லை, என்றார்.

பிரிஜேஜென்ஸ்கி விவரித்தார்: பிரதான நகரங்களில், ஹார்கிவ், கியேவ் என்று வைத்துக் கொள்வோம், அங்கே எதிர்ப்பு கிளம்ப வேண்டுமென்றால் மற்றும் வீதிச் சண்டைகள் அவசியமாக வேண்டுமானால், அது நீண்ட காலமெடுப்பதாக மற்றும் செலவு பிடிப்பதாக இருக்கும். இந்த விடயத்தின் உண்மை என்னவென்றால், மேலும் இங்கேதான் இந்த மொத்த நெருக்கடியின் சரியான காலநேரம் முக்கியமாகின்றது. ரஷ்யா இதுவரையில் அம்மாதிரியான முயற்சியைக் கையாள தயாராகவில்லை. அதற்கு மிகவும் இரத்தக்களரியுடன் விலைக்கொடுக்க வேண்டியதாக இருக்கும், நிதிச்செலவுகளைப் பொறுத்தவரையில் முடக்கும் வகையில் செலவுகூடியதாக இருக்கக்கூடும், என்றார்.

இது, மனித நடவடிக்கைகளில் போர் முற்றிலும் ஊகிக்கவியலாதது என்ற இராணுவ விஞ்ஞானத்தின் ஓர் அடிப்படை பழமொழியாகும்.

உக்ரேனின் பிரதான நகரங்களில் மில்லியன் கணக்கான உயிர்களை விலையாக கொடுப்பதைச் சம்பந்தப்படுத்தி உள்ள, பிரிஜேஜென்ஸ்கியால் வரையப்பட்ட அதுபோன்றவொரு திட்டம் வேகமாக ஒரு பெரும் மோதலுக்கு இட்டுச் செல்லும் எண்ணிலடங்கா சூழல்களை ஒருவரால் நினைத்துப் பார்க்க முடியும். கியேவில் மற்றும் மேற்கு உக்ரேனில் வீட்டுக்கு வீடு சண்டையிடுவதில் ஈடுபடுவதை வேண்டுமானால் ரஷ்யா தேர்ந்தெடுக்காமல் போகாமல், ஆனால் நேட்டோ படைகளையும் மற்றும் தலையீடு செய்வதற்கு நேட்டோ உடன்படிக்கைகளால் பிணைந்துள்ள பால்டிக் போன்ற கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் உள்ள அதன் துணை ஆட்சிகளை தாக்குவதையும் தேர்ந்தெடுக்காமல் போகாது. அணுஆயுதமல்லாத ஆயுதங்களில், ரஷ்யா பெரும் இராணுவ மேலாளுமை கொண்டுள்ள இந்த பகுதிகளில் நடக்கும் இத்தகைய சண்டை, நேட்டோவிற்கு பாதகமாக சென்றால் அது அணு ஆயுதங்களுடன் பதிலடி அளிக்காமல் போகுமா?

இறுதியாக எழும் கேள்வி இதுதான்: நேட்டோ அதிகாரங்களின் வெளியுறவு கொள்கையின் அசுரத்தனம் மற்றும் அடாவடித்தனத்தின் புறநிலை ஆதாரமாக இருப்பது என்ன? இத்தகைய ஆக்ரோஷமான மற்றும் தற்கொலைக்கு ஒப்பான கொள்கைகளை ஏற்ற கடைசி இரண்டு ஆட்சிகள், இரண்டாம் உலக போருக்கு முந்தைய ஆண்டுகளில் இருந்த நாஜி ஜேர்மனியும் ஏகாதிபத்திய ஜப்பானும் ஆகும். தனிமைப்படுத்தப்பட்ட ஆளும் மேற்தட்டுக்களாக, சமூக பதட்டங்கள் மற்றும் சர்வதேச முரண்பாடுகளை முகங்கொடுத்து, இதற்காக அவற்றிடம் எவ்வித பகுத்தறிவுபூர்வ தீர்வுகளும் இல்லாமல், போரில் அனைத்தையும் பணயமாக வைத்திருந்த நிலையில், அவற்றின் கொள்கைகள் ஓர் ஆழ்ந்த முறைப்பட்ட நெருக்கடியை பிரதிபலித்தன.

அங்கே அமெரிக்க கொள்கையின் அடாவடித்தனத்திற்கும் மற்றும் ஹிட்லர் அல்லது ஹிரோஹிடோவினதிற்கும் இடையிலான ஓர் அபாயகரமான சமாந்தரம் உள்ளது. இன்றைய மின்ஸ்க் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக நேற்று நள்ளிரவு சில செய்திகள் உடன்படிக்கைகள் எட்டப்படும் என்று குறிப்பிட்ட நிலையில், கிரெம்ளின் அடிபணிந்து, ஏதேனும் உடன்படிக்கை எட்டப்பட்டாலும் கூட, அது அமெரிக்காவினால் கோரப்படும் ஒரு புதிய சுற்றுக்கான தொடக்க புள்ளியாக இருக்கும் என்பதை மட்டுமே நிரூபிக்கும்.

நிலைமை அசாதாரணமான விதத்தில் அபாயகரமாக உள்ளது. ஏதேனும் குறுகிய-கால தீர்வு ஒன்றுசேர்த்து ஒட்டப்பட்டாலும் கூட, அது நெருக்கடியை புதுப்பிக்க ஒரு சிறிய இடைவேளையாக மட்டுமே இருக்கும்.