சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

பெருந்தோட்ட இளைஞனின் மரணத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய தொழிலாளர்கள் சிறை வைக்கப்பட்டனர்

By M. Thevarajah
10 February 2015

Use this version to printSend feedback

தலவாக்கலை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பொலிஸ் அரச ஒடுக்குமுறையின் மூலம், புதிய கொழும்பு அரசாங்கம் அதன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவைப் போலவே தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களது ஜனநாயக உரிமைகளை கொடூரமாக நசுக்குவதற்குத் திரும்பியுள்ள விதத்தை காட்டியுள்ளது.

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தின் இளைஞன் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தமை தொடர்பாக எதிர்ப்பை வெளிப்படுத்திய தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து பேரை பெப்பிரவரி 5 அன்று கைது செய்த பொலிஸ், அந்த பிரதேசத்தின் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக பரந்த ஒடுக்குமுறைகளை முன்னெடுத்துள்ளது. தொழிலாளர்களின் எதிர்ப்பை அடக்குவதற்காக சம்பவத்துடன் தொடர்புபட்ட பொலிஸ் அதிகாரிகள் இருவர் இடம்மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், தொழிலாளர்களை கைது செய்யவும் அவர்களை அச்சுறுத்துவதற்கும் பொலிஸ் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

பாபுல் என்ற போதை தரக்கூடிய பாக்கை வைத்திருந்தார் என்று கூறி ஜனவரி 31 கைது செய்யப்பட்ட மனோஜ் மாரிமுத்து என்ற 21 வயது இளைஞனை தலைவாக்கலை பொலிஸ் நிலையத்துக்கு முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற போது, அவர் வண்டியில் இருந்து வெளியில் குதித்து, ஓடிச் சென்று மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து மரணித்ததாக பொலிஸ் கூறுகிறது. தனது தடுத்து வைப்பில் இருக்கும்போது மரணிக்கும் நபர்கள் தொடர்பாக தனது பொறுப்பை மூடி மறைப்பதன் பேரில் பொலிசார் இத்தகைய அறிக்கைகளை விடுவது இலங்கையில் சாதாரண நிலைமையாகியுள்ளது. அத்தகைய ஒரு சூழ்நிலையில் இந்த இளைஞனின் மரணம் சட்டத்திற்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட கொலையாக இருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.

ஜனவரி 31 பி.ப. 2.30 மணியளவிலேயே மனோஜ் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அன்று இரவு 7 மணி வரையும் அது பற்றி அவரது பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. அதன் பின்னரே மனோஜ் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து இறந்துள்ளார் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டிருந்தனர்.

மனோஜ் நீர்த்தேக்கத்திற்குள் குதித்தார் எனக் கூறும் பொலிஸ் அதிகாரிகள், அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என  தொழிலாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர். இந்த சம்பவத்தில் பொலிசார் அத்தகைய முயற்சிகளை எடுத்தமைக்கான ஆதராங்கள் கிடையாது. மனோஜின் சடலம் மறுநாள் மாலை 5 மணியளவிலேயே கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மறுநாள் அவரது சடலம் கரைக்கு கொண்டுவரப்பட்டபோது நீர்த்தேக்கத்தை சூழ குவிந்த கிரேட் வெஸ்டர்ன் மற்றும் அதைச் சூழ உள்ள பெருந்தோட்டங்களின் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள், அவரது மரணம் தொடர்பாக பொலிசார் மீது குற்றஞ்சாட்டி மறியலில் ஈடுபட்டனர். அதனால் கொழும்பு-பதுளை புகையிரத பாதையும் தலைவாக்கலை வீதியும் மறிக்கப்பட்டது. அவர்களை அடக்குவதற்காக அரசாங்கம் பொலிஸ் படையையும் பொலிஸ் அதிரடிப் படையையும் குவித்தது. ஆகாயத்தை நோக்கி சுட்ட அதிரடிப் படையினர் மக்களை விரட்டுவதற்காக அவர்களைத் தாக்கியுள்ளனர்.

செல்வன் சிவகுமார் (32), நல்லசாமி யோகேஸ்வரன் (32), பழனடியாண்டி வசந்தகுமார் (33), வீராசாமி ஆனந்தராஜ் (35), பொன்னுசாமி பிரதீப்குமார் (34) ஆகிய தொழிலாளர்கள் பின்னர் கைது செய்யப்பட்டு பெப்பிரவரி 16ம் திகதி வரை சிறை வைக்கப்பட்டுள்ளனர். மரண விசாரணைகளை நடத்திய நீதவானை அவரது நடவடிக்கைகளை மேற்கொள்ள விடாமல் இடைஞ்சல் ஏற்படுத்தியமை, சட்டவிரோத தொந்தரவு, குற்றவியல் பலாத்காரம், சட்ட விரோத ஒன்று கூடல் போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. கொழும்பு-பதுளை புகையிரத பாதையை தடை செய்தனர் என்ற குற்றச்சாட்டும் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. பொலிசார் வீடியோ மூலம் அடையாளம் கண்டுகொண்ட மேலும் 84 பேர்களது பட்டியலும் பொலிசாரிடம் உள்ளதுடன் அவர்களை பொலிசில் சரணடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நியாயமான எதிர்ப்பில் ஈடுபட்ட தலவாக்கலை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பொலிஸ் அரச ஒடுக்குமுறையின் மூலம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் தனது முன்னோடியான இராஜபக்ஷவின் அரசாங்கத்தைப் போலவே தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் ஜனநாயக உரிமைகளை கொடூரமாக நசுக்கத் திரும்பி இருக்கின்ற விதமே வெளிப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தை அரவனைத்துக்கொண்டுள்ள நவ சம சமாஜக் கட்சி உட்பட போலி இடதுகள் மற்றும் பிற்போக்கு தொழிற்சங்க அதிகாரத்துவமும், அரசாங்கத்தின் “நல்லாட்சி மற்றும் ஜனநயாகம் பற்றி பாடும் புகழ்ச்சிகளில் மூழ்கி ஒரு மாதம் கடப்பதற்கும் முன்னரே அது தொழிலாளர்கள் மீது நடத்தியுள்ள தாக்குதல் அதன் ஜனநாயக விரோத பண்பை நன்கு வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் உட்பட எந்தவொரு தொழிற்சங்கமும் பொலிசின் கொடூர நடவடிக்கையை கண்டனம் செய்யவில்லை. அதுமட்டுமன்றி, “சந்தேக நபர்களாக முத்திரை குத்தப்பட்டுள்ள தொழிலாளர்களை பொலிசில் ஒப்படைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம் தொழிலாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளின் நேரடிப் பங்காளிகளாக அவர்கள் ஆகியுள்ளனர்.

மனோஜ்ஜின் தந்தை பொலிசாரின் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கின்றார். பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட மனோஜ்ஜின் மரணத்திற்கு பொலிசார் பொறுப்புச் சொல்ல வேண்டும் என மாரிமுத்துவும் தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் தொழிலாளர்களும் கூறுகின்றனர்.

“எனது மகனை ஏன் கைது செய்தார்கள் என எனக்குத் தெரியாது. அவர் சட்ட விரோத பாபுலையோ வேறு போதைகளையோ பயன்படுத்துவதில்லை. இந்த மரணத்திற்கு பொலிசார் பொறுப்புச் சொல்ல வேண்டும் என மாரிமுத்து தெரிவித்தார்.

“அவன் எனது ஒரே பிள்ளை. வயது 21. பாடசாலை கல்வி முடிந்த பின்னர் டெலிகொம் நிறுவனம் புதிதாக கட்டும் தொலைத் தொடர்பு கோபுரத்திலேயே அவர் வேலை செய்தார். நானும் எனது மனைவியும் ஓய்வு பெற்றவர்கள். எங்களுக்கு சிறிய கோழிப் பண்ணை இருந்தாலும் மகனிலேயே தங்கியிருந்தோம். கைது செய்யப்பட்ட அன்று அவர் கோழித் தீணி வாங்கச் சென்றிருந்தார். எனது மகன் சட்ட விரோத பாபுல் விற்றதாக சில ஊடகங்கள் பொய் கூறியுள்ளன. அது பொலிஸ் கட்டிய கட்டுக்கதை. எனது மகன் மக்களுடன் ஐக்கியமானவர், என மாரிமுத்து மேலும் கூறினார்.

“அவரது உயிரைக் காப்பதற்காக உடனடி நடவடிக்கை எடுத்திருக்க முடியும். இது மிகவும் கவலைக்குரிய சம்பவம். அதனாலேயே மக்கள் பொலிசுக்கு எதிராக மறியலில் ஈடுபட்டனர், என ஒரு பெண் கூறினார்.

உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய கிரேட் வெஸ்டர்ன் தோட்டத் தொழிலாளர்கள், சம்பவம் தொடர்பாக தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளை கடுமையாக கண்டனம் செய்தனர். “தேர்தல் காலத்தில் மட்டுமே தொழிற்சங்கங்கள் வருகின்றன. இந்த நெருக்கடியான நிலைமையில் அவர்கள் எங்களை முழுமையாக கைவிட்டுவிட்டனர். அவர்கள் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தில் சேர்ந்து தமது வரப்பிரசாதங்களை தக்கவைத்துக்கொள்கின்றனரே தவிர, எங்களை கணக்கில் எடுப்பதில்லை. லிந்துலை பொலிஸ் அதிகாரி, வீடியோவில் அடையாளம் காணப்பட்ட 84 பேரின் பெயர் மற்றும் வதிவிடத்தை தேடித் தருமாறு தொழிற்சங்கத் தலைவர்களிடம் கூறியுள்ளார். தொழிற்சங்க தலைவர்கள் அதற்கு உடன்பட்டுள்ளனர, என ஒரு தொழிலாளி கூறினார்.

தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு பொலிசாகவே தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் செயற்படுகின்றன. தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் மிகவும் வறிய தட்டினராவர். அவர்களை அந்த நிலைமையில் அடைத்து வைப்பதற்குப் பிரதான பொறுப்பாளிகள் தோட்டத் தொழிற்சங்கங்களே ஆகும்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மக்களுக்கு எதிரான பொலிஸ் தொந்தரவுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தலவாக்கலை நகரின் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கூறினார். “தோட்டப்புறங்களில் எந்தவொரு அரசியல் கட்சியும் அதைச் சவால் செய்யவில்லை. எவரும் அதற்கு எதிராகப் போராடவில்லை என அவர் கூறினார்.

“அன்று இங்கு யுத்தக் களம் போல் இருந்தது. மக்களுக்கு எதிராக பொலிசாரும் கலகம் அடக்கும் பொலிசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். இலங்கையில் போர் முடியவில்லை. இப்போது இந்தப் பிரதேசங்களில் மக்களுக்கு எதிரான யுத்தம் ஒன்று நடக்கின்றது. எங்களுக்கு எதிராக அரசாங்கத்துடன் சேரும் எமது தலைவர்கள் சுயநலவாதிகள், ஒரு கடைக்காரர் கூறினார்.

பொலிசில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த அல்லது “தற்கொலை செய்துகொண்ட முதல் மனிதர் மனோஜ் அல்ல: கடந்த சில ஆண்டுகளில் டசின் கணக்கானவர்கள் அவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அறிவிக்கின்றது. சரளமாக அந்த மரணங்கள் தொடர்பாக, தற்பாதுகாப்புக்கு சுடுதல், ஆற்றில் அல்லது குளத்தில் குதித்து சந்தேக நபர் தற்கொலை செய்துகொள்ளல், பொலிஸ் கூண்டில் இருக்கும்போது திடீர் சுகயீனத்தால் மரணித்தல் போன்ற காரணங்கள் பொலிசாரால் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அதுபற்றி எந்த நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படுவதில்லை. கஞ்சா அல்லது குடு போன்ற போதைப் பொருட்களை வைத்திருந்தார் என்று வழக்குகளை உருவாக்குவதில் பொலிஸ் பேர்போனதாகும்.

இவ்வாறு மரணிக்கும் நபர்கள், கொடூரமான குற்றவாளிகள், பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், போதைப் பொருள் விற்பவர்கள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்கள் என பொலிசார் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அப்படியே உச்சரித்து முதலாளித்துவ ஊடகங்களும் இத்தகைய சட்டவிரோத மற்றும் எதேச்சதிகாரமான பொலிஸ் கொலைகளை நியாயப்படுத்தி வந்துள்ளன.

தமிழ் மக்களுக்கு எதிரான 25 ஆண்டுகால இனவாத போரின் போது பொலிஸ் மற்றும் இராணுவத்துக்கு நினைத்த விதத்தில் செயற்படுவதற்கான நிலைமையை இராஜபக்ஷ அரசாங்கம் உருவாக்கிக் கொடுத்திருந்ததோடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் கீழும் அந்த பொலிஸ் அரச கொள்கைகள் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை மனோஜ்ஜின் மரணம் கூறுகின்றது. அதே போல், இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் இராணுவத்துக்கு அழைக்கும் சுற்று நிரூபம் சிறிசேனவாலும் பெப்பிரவரி 2 அன்று மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு முதலில் 22 மாவட்டங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த அழைப்பை, 25 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தினார். அதேபோல் பொது மக்களுக்கு எதிராக செயற்படுதல் மற்றும் கைது செய்தல் உட்பட பொலிஸ் அதிகாரங்கள் முன்னரைப் போலவை அனுமதிக்கப்பட்டுள்ளன.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு எதிரான பொலிஸ் அரச திட்டங்களை மேலும் மேலும் பலப்படுத்துவதற்காக சிறிசேனவின் அரசாங்கமும் செயற்பட்டுள்ளமையே இதன் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது. கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு எதிரான பொலிஸ் ஒடுக்குமுறையை எதிர்த்து அவர்களை பாதுகாப்பதற்கு முன்வருமாறு சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.