சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Leading German newspaper says Russia should be threatened with nuclear war

ரஷ்யாவை அணுஆயுத போர் கொண்டு அச்சுறுத்த வேண்டுமென முன்னணி ஜேர்மன் பத்திரிகை கூறுகிறது

By Peter Schwarz
12 February 2015

Use this version to printSend feedback

உக்ரேன் குறித்து மின்ஸ்க்கில் நடக்கும் அவசர கூட்டத்திற்கு ஒருநாள் முன்னதாக, ஒரு முன்னணி ஜேர்மன் பத்திரிகை Frankfurter Allgemeine Zeitung (FAZ), ஓர் அணுஆயுத தாக்குதல் புள்ளி வரைக்கும் ரஷ்யாவுடன் இராணுவரீதியில் மோதலைத் தீவிரப்படுத்துமாறு நேட்டோவிற்கு அழைப்புவிடுத்து ஒரு தலையங்கம் வெளியிட்டது.

ரஷ்யாவிற்கு எதிராக "மிக உயர்ந்த மட்டத்திலான" "தடுப்புமுறை" கொள்கைக்கு அழைப்புவிடுத்து, அந்த பழமைவாத பத்திரிகையின் இணை-ஆசிரியர் பெர்த்ஹோல்ட் கோலெரின் ஒரு முதல்பக்க கருத்துரை செவ்வாயன்று வெளியானது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் "அந்த மோதலை, ஓர் அணுஆயுத மோதலின் விளிம்பிற்கு தீவிரப்படுத்த" தயாராகிவிட்ட போதினும் கூட, “கியேவிற்கு ஆயுதங்கள் வழங்குவது மேற்கை ஒரு பினாமி போரில் சிக்க வைக்கக்கூடும் என்பதற்காக அதிலிருந்து" பின்வாங்குவதாக ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலை கோலெர் குற்றஞ்சாட்டினார்.

அந்த மேதலை 'இராணுவரீதியில் தீர்க்க முடியாது' என்ற அதன் கண்ணோட்டத்தை மேற்கு கொண்டிருந்தால்,” “பின், மிகவும் மோசமான விடயமாக, கிரெம்ளின் அதன் 'பிரிவினைவாதிகளை' கியேவை நோக்கி அணிவகுக்க அனுமதிக்கும்" என்று கோலெர் எச்சரித்தார்.

பின்னர் அவர் இந்த வீராவேச கேள்வியை முன்னிறுத்தினார்: “ஐரோப்பாவில் அடிப்படை சமாதான கோட்பாடுகளை மதிக்காத ஓர் ஆக்கிரமிக்கும் மற்றும் விரிவாக்கும் சக்தியை ஒருவர் எவ்வாறு கையாள முடியும்?” அதற்கான பதில் "விரும்பத்தகாதது தான், ஆனால் தவிர்க்கவியலாதது. தடுப்பு முறை, அதன் வழியில் அனைத்தையும் விட உயர்ந்த மட்டத்தில் இருக்க வேண்டும்" என்றார்.

உக்ரேனும் அணுஆயுதங்களைக் கொண்டிருந்தால், புட்டின் கிரிமியாவை ஆக்கிரமிக்க துணிந்திருப்பாரா?” என்று எழுதுகையில், கோலெர் மிகத் தெளிவாக அணுஆயுதங்களை அவர் மனதில் கொண்டிருந்தார்.

அத்தகைய ஆயுதங்களைப் பிரயோகிக்கும் அவரது விருப்பத்தைக் குறித்து அவர் எந்த சந்தேகத்தையும் விட்டுவைக்கவில்லை. “எந்தவொரு எல்லைமீறலும் ஓர் இராணுவ விடையிறுப்புடன் எதிர்கொள்ளப்படும் என்பதையும், மிகவும் மோசமான சமயத்தில், ரஷ்யர்களையும் விட வேகமாக தீவிரப்படுத்தும் ஏணியில் மேற்கு ஏற விரும்பும் என்பதையும்" நேட்டோ கிரெம்ளினுக்கு தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது என்றவர் எழுதினார்.

யுத்தவெடிப்பின் மாற்றமுடியா கோட்பாட்டுடன் அவர்கள் முரண்படுகிறார்கள் என்றாலும்கூட, இத்தகைய சூழலில்மேற்கில் நிச்சயமாக யாருமே வெளிப்படையாக பேசுவதில்லை" என்று கோலெர் குறை கூறினார்.

இது முன்னதாக முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றில் செவியுற்ற, கலப்படமற்ற ஜேர்மன் ஏகாதிபத்திய மொழியாகும். FAZ பதிப்பாளர், பில்லியன் கணக்கான மக்களின் வாழ்வை விலையாக பறிக்கக்கூடியதும் மற்றும் மனித நாகரீகத்தையே அனேகமாக முடிவுக்குக் கொண்டு வரக்கூடியதுமான ஓர் அணுஆயுத போரைக் கருத்தில் எடுக்கவும் மற்றும் அதைக் கொண்டு அச்சுறுத்தவும் விரும்புகிறார்.

அதுபோன்றவொரு மூலோபாயத்தை ஆதரிப்பது பரந்த தாக்கங்களைக் கொண்டுள்ளது. ரஷ்யாவின் எல்லைகளை ஒட்டியுள்ள கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ போர் விரிவாக்கத்திற்கு இடையே, தொடர்ந்து அரசியல் மற்றும் இராணுவ பதட்டங்களைத் தூண்டுவதென்பது, முன்பினும் அதிக சாதகமாக ஓர் அணுஆயுத மோதலாக தீவிரப்படக்கூடிய ஒரு வெடிப்பார்ந்த மோதலை உருவாக்குகிறது.

இது எது வரைக்கும்? இவ்விடத்தில் கூறுவதற்கு கோலெரிடம் பெரிதாக ஒன்றும் இல்லை. அதற்கு பதிலாக அவர், ஹிட்லரின் பிரச்சார தலைவர் கோயபல்ஸால் முன்னெடுக்கப்பட்டதைப் போல, யதார்த்தத்தை தலைகீழாக திருப்புகிறார்.

ரஷ்யா "ஓர் ஆக்கிரமிப்பு மற்றும் விரிவாக்க சக்தியாகும்" என்ற அவரது வலியுறுத்தல், சூழ்நிலையைக் குறித்த ஒரு நகைப்புக்கிடமான திரித்தல் ஆகும். 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னரில் இருந்தே, நேட்டோ ரஷ்யாவை திட்டமிட்டு சுற்றி வளைத்துள்ளது. சோவியத் ஒன்றியம் மற்றும் முன்னாள் சோவியத் பால்டிக் குடியரசுகளுடன் ஒருகாலத்தில் கூட்டு சேர்ந்திருந்த ஏறத்தாழ எல்லா கிழக்கு ஐரோப்பிய நாடுகளுமே மேற்கத்திய இராணுவ கூட்டணியின் உறுப்புநாடுகளாக மாறியுள்ளன. ஜோர்ஜியா, மோல்டோவா மற்றும் உக்ரேன் பட்டியலில் அடுத்து உள்ளன.

பால்கன்கள், மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் அமெரிக்கா மற்றும் நேட்டோவினால் முன்னெடுக்கப்பட்ட போர்களின் காரணமாக ரஷ்யாவும் பல சர்வதேச கூட்டாளிகளை இழந்துள்ளது.

யுத்தவெடிப்பின் மாற்றமுடியா கோட்பாட்டை மேற்கு பேணுகிறது என்ற கோலெரின் வலியுறுத்தல் மிக கூடுதலாக இயல்புக்கு மீறிய புதுமையாகும். 1991இல் முதல் ஈராக்கிய போருக்குப் பின்னரில் இருந்து, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் யூகோஸ்லாவியா மீது குண்டுவீசி உள்ளன; ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தன; ஈராக் மற்றும் லிபியாவை தாக்கி அழித்தன; சிரிசாவில் ஓர் உள்நாட்டு போரைத் தூண்டிவிட்டன; மற்றும் ஏனைய எண்ணிலடங்கா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நடத்தின.

உக்ரேனிய நெருக்கடி திட்டமிட்டு மேற்கத்திய அதிகாரங்களால் தூண்டிவிடப்பட்டதாகும். அமெரிக்க துணை வெளியுறவுத் துறை செயலர் விக்டோரியா நூலாந்தின் கூற்றுப்படி, உக்ரேனிய எதிர்ப்பு படைகளுக்கு நிதியளிக்க வாஷிங்டன் 5 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. ஸ்டீபன் பண்டெரா மற்றும் ஏனைய இரண்டாம் உலக போர் நாஜி ஒத்துழைப்பாளர்களைப் போற்றி மதிக்கும் உக்ரேனிய பிரதம மந்திரி அர்செனி யாட்சென்யுக்கின் Fatherland கட்சி மற்றும் ஸ்வோபோடா கட்சி போன்ற சக்திகளுடன் பேர்லின் நெருக்கமாக வேலை செய்துள்ளது.

மேற்கத்திய தலையீடு மாஸ்கோவிலும் கிழக்கு உக்ரேனிலும் எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்தது. பெரும்பான்மை உள்ளூர் மக்கள் மற்றும் ரஷ்யாவை ஆதரித்த கிழக்கு உக்ரேனிய பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களின் ஆதரவுடன் கிரிமியா ரஷ்ய கூட்டமைப்புடன் இணைக்கப்பட்டமை, கியேவில் மேற்கத்திய அதிகாரங்களால் ஊக்குவிக்கப்பட்ட மற்றும் ஆதரிக்கப்பட்ட வன்முறையான ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு எதிர்நடவடிக்கைகளாக இருந்தன.

ஜேர்மன் உயரடுக்கினரை பொறுத்த வரையில், உக்ரேனிய ஆட்சிக்கவிழ்ப்பு சதி என்பது ஜனாதிபதி கௌவ்க் மற்றும் ஏனைய அரசாங்க அதிகாரிகளால் அதற்கு ஒருசில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட ஆக்ரோஷ வெளியுறவு கொள்கைக்கான முன்னோட்டமாக இருந்தது. அந்த கொள்கை முற்றிலுமாக ஜேர்மன் ஏகாதிபத்திய விரிவாக்கத்தின் பாரம்பரிய வேட்கைக்கு ஒத்தவிதத்தில் உள்ளது. கடந்த நூற்றாண்டின் இரண்டு உலக போர்களின் போதும் ஜேர்மன் துருப்புகள் உக்ரேனை ஆக்கிரமித்தன.

தொடக்கத்தில் இருந்தே, FAZ மற்றும் அதன் இணை-ஆசிரியர் கோலெர் போர்-ஆதரவு உணர்வைத் தூண்டிவிட சளைக்காமல் வேலை செய்து வந்ததுடன், இந்த ஆக்கிரமிப்பு கொள்கைக்கு மிகவும் அர்பணிப்பு கொண்ட ஆதரவாளர்களின் மத்தியிலும் இருந்தனர். மார்ச் மாத தொடக்கத்தில் கிரிமிய நாடாளுமன்றம் உக்ரேனிலிருந்து பிரிய அறைகூவல் விட்டபோது, கோலெர், நிதானத்துடன் இருக்க அறிவுறுத்திய "புறாக்கள்" என்றழைக்கப்பட்டவர்களையும் மற்றும், “நகங்கள் வெட்டப்பட்ட ரஷ்ய கரடிகளைக் காட்டியவர்களை" “கழுகுகள்" என்றும் விமர்சித்தார்.

அவர் இராணுவ படை பிரயோகத்திற்கு அழைப்பிட்டு எழுதினார்: “எல்லைகளைத் தெளிவுபடுத்துவதை விட மற்றும் தடுப்புமுறை கொண்டு அவற்றை பாதுகாப்பதை விட சுதந்திர உலகிற்கு வேறு வழியில்லை. இந்த மொழியை மட்டுந்தான் புட்டினால் புரிந்து கொள்ள முடியும்.”

கடந்த ஏப்ரலில் நேட்டோ, ஒரு பாரிய கிழக்கு ஐரோப்பிய மீள்ஆயுதபெருக்க திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய போது, கோலெர் அதிருப்தி அடைந்தார். “ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமல்ல, மாறாக நேட்டோவுமே கூட அது சுடுவதற்கு முன்னர் ஆயிரம் முறை பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது,” என்று மூர்க்கமாக விமர்சித்தார்.

அதே கோலெர் தான் இப்போது அந்த மோதலில் ஓர் அணுஆயுத போர் விரிவாக்கத்தை ஓர் எச்சரிக்கையாக கையெடுக்க வேண்டுமென சிந்திக்கிறார். ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளுக்கு அறிவு திரும்பும், அவர்கள் அணுஆயுதம் கொண்டு நிர்மூலமாக்க இட்டுச் செல்லும் ஒரு கொள்கையிலிருந்து பின்வாங்குவார்கள் என்ற பிரமைகள் அபாயகரமானரீதியில் பிழையாக நிறுத்துவதாகும். அவர்கள் அதிகரித்துவரும் சமூக பதட்டங்கள் மற்றும் வல்லரசுகளுக்கு இடையே பெருகிவரும் மோதல்களுக்கு, முன்பினும் கூடுதலான குற்றங்களுக்குத் தயாரிப்பு செய்வதன் மூலமாக விடையிறுப்பு காட்டிவருகிறார்கள்.