சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : அயர்லாந்து

Socialist Equality Group in Ireland holds first public meeting

அயர்லாந்தில் சோசலிச சமத்துவக் குழு முதல் பொதுக்கூட்டம் நடத்துகிறது

By Paul Mitchell
7 February 2015

Use this version to printSend feedback

புதிதாக உருவாக்கப்பட்ட சோசலிச சமத்துவக் குழு (SEG), பெப்ரவரி 3 அன்று டப்ளினில் "அயர்லாந்தில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டம்" எனும் அதன் முதல் பொதுக்கூட்டத்தை நடத்தியது.

இங்கிலாந்து சோசலிச சமத்துவ கட்சி தேசிய செயலாளர் கிறிஸ் மார்ஸ்டனுக்கு அருகில் டெர்மொட் ப்ரெர்ன் (இடதுபுறம் இருப்பவர்) உரையாற்றுகிறார்

அவர்களது வேலையின் மையத்தில் "சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலை முன்வைக்க, அயர்லாந்தில் மார்க்சிஸ்டுகளின் ஒரு குழு ஒன்றிணைவதை டப்ளின் கண்ணுற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன" என்பதைப் புரிந்துகொள்வது எந்தளவுக்கு முக்கியமென்பதைக் கூறி, கூட்டத்தின் தலைவர் டெர்மொட் ப்ரெர்ன் அக்கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். SEG உருவாக்கப்பட்ட பின்னர், அயர்லாந்தில் ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியைக் கட்டியெழுப்புவதன் மீது ஒரு விவாதத்தைத் தொடங்க அது எவ்வாறு நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைத் தொடர்பு கொண்டது என்பதை அவர் விவரித்தார்.

இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன், செல்டிக் புலியென பாராட்டு பெற்றிருந்ததும் மற்றும் அதன் உயர் வளர்ச்சி விகிதங்களினால் "ஐரோப்பிய நிதியத்தின் பிரமாண்ட மேற்காக" இருந்ததுமான அயர்லாந்து மீது, 2008 உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் குறித்து தொகுத்துரைத்து அவரது அறிக்கையைத் தொடங்கினார்.

அந்த பொறிவு வந்தபோது அது பேரழிவுகரமானதாக இருந்தது,” என்று கூறிய மார்ஸ்டன், அந்த பொருளாதாரம் எவ்வாறு சுருங்கியது, வேலைவாய்ப்பின்மை எவ்வாறு அதிகரித்தது மற்றும் சொத்து விலைகள் எவ்வாறு பாதியாக குறைந்தன என்பதை விவரித்தார். வங்கிகள் ஒரு "மலைப்பூட்டும்" 150 பில்லியன் யூரோவைக் கொண்டு பிணையெடுக்கப்பட்டன, அதற்கு "ஊதிய குறைப்புகள், வரி உயர்வுகளைக் கொண்டு மற்றும் கடும் வெறுப்புக்கு உள்ளான தண்ணீர் கட்டணங்கள் உள்ளடங்கிய வரிவிதிப்புகளைக் கொண்டு" தொழிலாள வர்க்கத்தின் "இரத்தம் உறிஞ்சப்பட்டது.” சமத்துவமின்மை "படுமோசமான விகிதத்தை அடைந்திருந்தன" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஒரு சோசலிசத்தை" பிரதிநிதித்துவம் செய்வதாக "அல்லது எப்போதேனும் புரட்சிகரமானதாக, ஏன் ட்ரொட்ஸ்கிச மாற்றீடு என்றும் கூட" கூறிக் கொண்ட அயர்லாந்தில் உள்ள இரண்டு பிரதான அமைப்புகளான சோசலிஸ்ட் கட்சி (SP) மற்றும் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (SWP) ஆகியவற்றின் பாத்திரத்தை மார்ஸ்டன் பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தினார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத உடன்படிக்கைகளுக்கு அடுத்தடுத்து பேரம்பேசியிருந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன், தொழிலாளர் "இடதுகள்", சின் பெய்னெர்ஸ் மற்றும் "சுதந்திரமானவர்கள்" என்றழைத்து கொண்டவர்களின் வெளியில் தெரியாத சிறிய குழுவுடன், அவை எவ்வாறு தங்களைத்தாங்களே ஒன்றிணைத்துக் கொண்டன என்பதை அவர் விவரித்தார்.

அவர்களது படிநிலையின் உச்சத்தில், [SPஇன்] ஜோ ஹிக்கின்ஸ் மற்றும் [SWPஇன்] ரிச்சார்ட் போய்ட்-பாரெட் போன்ற சிலர், ஊடகங்களால் எதிர்ப்பின் உத்தியோகபூர்வ குரலாக முடிவில்லாமல் குறிப்பிடப்பட்டு வரும் இவர்கள், நாடாளுமன்றத்தில் அவர்களின் இடத்தைக் கொண்டுள்ளனர்.

"அவர்களது உரையில் பெரும் பகுதியில் அவர்கள் சோசலிசம் என்பதற்கு பதிலாக, "மக்கள் அதிகாரம்", வெளிநடப்புகள் மற்றும் "தொழில்நுட்ப குழுக்கள்" என்று பேசுகின்றனர். சிக்கன நடவடிக்கையின் மிக மோசமான தாக்கத்தை மேற்கொண்டும் உயர்த்த மட்டுமே சூளுரைத்துள்ள, கிரீஸின் சிரிசாவை முன்மாதிரியாக கொண்டு அதிகாரத்தைப் பெறுவதை விட மேலதிகமாக ஒன்றையும் அவர்கள் விரும்புவதில்லை.”

அயர்லாந்தில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டம்"—இது தான் அந்த மாலைபொழுது கூட்டத்தின் தலைப்பாக இருந்ததுஎன்பது இலாபகர அமைப்புமுறையைச் சீர்திருத்த அல்லது காப்பாற்றுவதற்காக தங்களைத்தாங்களே அர்பணித்துள்ள போலி-இடது போக்குகள் அனைத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தைக் குறிக்கிறது என்று மார்ஸ்டன் தெரிவித்தார்.

SEG அது எழுதியுள்ள அதன் நோக்கம் குறித்த அறிக்கையில் இதை புரிந்து கொண்டிருந்தது.

சோசலிச நனவின் அபிவிருத்தி என்பது மிகவும் முற்போக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடைய வர்க்க போராட்டம் மற்றும் சோசலிச புரட்சியின் சர்வதேச குணாம்சம் குறித்த ஒரு புரிதலை உட்புகுத்துவதைக் குறிக்கிறது. அதற்கு, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று மற்றும் தத்துவார்த்த மரபியத்தில் உள்ளடங்கி உள்ளஅனைத்தினும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் மீது குட்டி-முதலாளித்துவத்தின் மேலாளுமைக்கு எதிரான அதன் தசாப்தகால நீண்ட போராட்டத்தில் உள்ளடங்கி உள்ள20ஆம் நூற்றாண்டின் தொழிலாள வர்க்க மூலோபாய அனுபவங்களை உள்ளீர்த்துக் கொள்வது அவசியமாகும்.

“1950களில் மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேலினால் சர்வதேச அளவிலும், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் டோனி க்ளிஃப் மற்றும் டெட் கிராண்ட் ஆகியோராலும் தலைமை கொடுக்கப்பட்டு வந்த அத்தகைய சக்திகளுக்கு எதிரான ஒரு சமரசமற்ற போராட்டத்திலிருந்து ICFI எழுந்தது.

இன்று, அதிலிருந்து வந்த பப்லோவாதிகளின் மற்றும் அரசு முதலாளித்துவவாதிகளின் (state capitalists) அமைப்புகள் தொழிலாள வர்க்கத்தை முடமாக்கும் நோக்கில் ஒரு வகையான போலி-இடது அரசியலை பிரகடனம் செய்கின்றன. கிரீஸில் சிரிசா, அயர்லாந்தில் சோசலிச தொழிலாளர் கட்சி/ People Before Profit மற்றும் சோசலிஸ்ட் கட்சி, மற்றும் பிரான்சில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற அமைப்புகள் தொழிலாளர்களை குழப்புவதற்காக மட்டும் இடது-மொழியை ஒலிக்கும் சொல்லாட்சியை பிரயோகிக்கவில்லை, மாறாக அவை முதலாளித்துவ அமைப்புமுறையின் மிகவும் தீர்க்கமான பாதுகாவலர்களாகவும் உள்ளன ...

இத்தகைய அமைப்புகளுடன் அரசியல்ரீதியாக உடைத்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே அயர்லாந்திலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்த முடியும்.”

இது இன்றிரவு இங்கே இருப்பவர்களால் இதுவரையில் முழுமையாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதோ இல்லையோ" “ஒரு சிறிய எண்ணிக்கையிலான தொழிலாளர்-கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் கூட இந்த போராட்டத்தின் மையக்கரு அவர்களால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்ற உண்மையானது, ஒட்டுமொத்த அயர்லாந்து தொழிலாள வர்க்கத்திற்கும் முட்டுச்சந்திலிருந்து வெளியேறுவதற்கு (அவர்கள் தற்போது பிழையாக வழிநடத்தும் தலைவர்களால் இந்த முட்டுச்சந்திற்குள் தான் உந்தப்பட்டுள்ளனர் என்ற நிலையில்) ஒரு முன்னோக்கிய பாதையைக் கொண்டுள்ளது என்பதையே அர்த்தப்படுத்துகிறது.”

அயர்லாந்தின் நவீன அரசியல் வரலாறு, பேரழிவுகரான விலையில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்விழைவுகளை தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு அடிபணிய செய்த முயற்சிகளால் குணாம்சபட்டுள்ளது. “ICFI, அயர்லாந்து தேசியவாதத்திற்கு ஆதரவளிக்கவில்லை. அயர்லாந்து குடியரசின் பிரிவினை மற்றும் உருவாக்கம் என்பது எல்லா காலத்திலும் அயர்லாந்து முதலாளித்துவம் ஓர் ஏகாதிபத்திய-எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கிறது என்ற பாசாங்குத்தனத்தில் போய் முடிந்தது,” என்று அவர் தெரிவித்தார். அயர்லாந்தின் அடுத்தடுத்த வரலாறு, வர்க்க ஒடுக்குமுறை தான் அடிப்படை பிரச்சினை, அதைக் கடந்து வர வேண்டும் என்பதை நிரூபிக்கிறது. தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்க போராட்டத்திற்குள் உட்பட்டுள்ளது.

அயர்லாந்து தொழிலாள வர்க்கம் பெருமைமிக்க அதன் சொந்த சோசலிச பாரம்பரியங்களைக் கொண்டுள்ளது. ஆனால் அவை மட்டுமே ஒரு புதிய புரட்சிகர தலைமையின் அபிவிருத்தியில் அடித்தளமாக இருக்காது மற்றும் அவையே அடித்தளமும் ஆகாது,” என்றார்.

இதற்கு அன்றாடம் சர்வதேச சக-சிந்தனையாளர்களுடன் ஒருங்கிணைந்து வேலை செய்வதும், உலக தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களை ஒருங்கிணைந்து ஆராய்வதும் மற்றும் மிக முன்னேறிய புரட்சிகர தத்துவத்தை உள்ளீர்த்துக் கொள்வதும் அவசியமாகும். பணிகளிலேயே மிகவும் சிக்கலான பணியான சோசலிச புரட்சியை தன்னிச்சையாக நடத்திவிட முடியாது. அதற்கு நனவுபூர்வமாக தயாரிப்பு செய்யப்பட வேண்டும், அத்துடன் அவர்களது சொந்த சர்வதேச கட்சியால் மார்க்சிஸ்டுகளாக பயிற்றுவிக்கப்பட்ட மிகவும் முன்னேறிய மற்றும் சுய-அர்பணிப்பு கொண்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் தலைமை கொடுக்கப்பட வேண்டும். அதைத் தான் சோசலிச சமத்துவ குழு கட்டமைக்க விழைகிறது,” என்றார்.

ஊடங்களின் சக்தி குறித்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், போலி-இடது வகிக்கும் பாத்திரத்தைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும் என்பதை மார்ஸ்டன் விவரித்தார். தண்ணீர் கட்டணங்களுக்கு எதிரான மக்களின் கோபத்தை, “மக்கள் அதிகாரம்" என்ற போர்வையில் "அரசியலும் வேண்டாம், தலைவர்களும் வேண்டாம்" என்ற அவர்களின் முழக்கத்தால் திட்டமிட்டு அவர்கள் தான் கலைத்தனர், ஊடங்கள் அல்ல என்றார்.

கிரீஸில் புதிய சிரிசா அரசாங்கம் "நவ-தாராளவாத சிந்தனையிலிருந்து தொழிலாள வர்க்கத்தின் ஒரு குறிப்பிட்ட நனவுபூர்வமான உடைவை" பிரதிநிதித்துவம் செய்கிறது, அதை ஆதரிக்க வேண்டாமா என்ற SWPஇன் ஓர் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மார்ஸ்டன் பதிலளிக்கையில், இது மிகவும் அபாயகரமானது என்று வலியுறுத்தினார். “தொழிலாளர் வர்க்கம் கடந்து சென்றே ஆக வேண்டிய ஒரு அனுபவம்" சிரிசா என்பதில் அவர் உடன்படவில்லை. சிரிசா பகிரங்கமாகவே அது முதலாளித்துவத்தை ஆதரிப்பதை அறிவித்துள்ளதுடன், உடனடியாக வலதுசாரி தேசியவாத சுதந்திர கிரேக்கர் கட்சியுடன் ஒரு கூட்டணியையும் உருவாக்கியது. “அது அதன் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் குப்பையில் போடும்,” என்று மார்ஸ்டன் தெரிவித்தார். “போலி-இடது கட்சிகள் அனைத்திற்கும் இது தெரியும். சிரிசா அரசாங்கத்தின் கீழ் கிரீஸில் நடக்கும் ஒவ்வொன்றுக்கும் அவை அரசியல்ரீதியாக பொறுப்பாகின்றன,” என்றார்.