சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

US and Ukrainian officials seek to torpedo Minsk cease-fire agreement

அமெரிக்க மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் மின்ஸ்க் போர்நிறுத்த உடன்படிக்கையை தகர்க்க முனைகின்றனர்

By Niles Williamson
14 February 2015

Use this version to printSend feedback

ஜேர்மன், பிரெஞ்சு, ரஷ்ய மற்றும் உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர்கள் மின்ஸ்க் தலைநகர் பெலோரஷ்யனில் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ஒரு போர்-நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டு 48 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் அமெரிக்க மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் ரஷ்யாவிற்கு எதிராக ஆத்திரமூட்டும் அச்சுறுத்தல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை வெளியிட்டனர்.

ஒபாமா நிர்வாக அதிகாரிகள் மற்றும் உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோவின் அறிக்கைகள், போர்நிறுத்த உடன்படிக்கையைக் கைவிடுவதற்கும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக இராஜாங்க, பொருளாதார மற்றும் இராணுவ பிரச்சாரத்துடன் சேர்ந்து, அதேவேளையில் அதற்கான பழியை ரஷ்யாவின் மீது சுமத்தும் முயற்சியோடு, கிழக்கு உக்ரேனில் ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாத சக்திகள் மீது தாக்குதலைத் தீவிரப்படுத்துவதற்கு ஒரு போலிக்காரணத்தை உருவாக்க வடிவமைக்கப்பட்டு இருந்தன.

ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பு என்று புதிய குற்றச்சாட்டுக்களை செய்வதற்கு, அவற்றில் எதுவுமே ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை என்ற நிலையில், வாஷிங்டனும் கியேவும் அந்த உடன்படிக்கை ஞாயிறன்று நடைமுறைக்கு வரும் வரையில் கூட காத்திருக்கவில்லை. இதற்கிடையே, ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாதிகளுக்கும் மற்றும் அரசாங்கப் படைகளுக்கும் இடையே கிழக்கு உக்ரேனில் சண்டை தீவிரமடைந்தது.

தற்போது ரஷ்யாவை ஆதரிக்கும் படைகளின் முற்றுகையில் இருக்கும் உக்ரேனிய வசமிருக்கும் திபோல்த்செவ் நகரைச் சுற்றி இராணுவ சாதனங்களைக் குவித்து வருவதன் மூலமாக ரஷ்யா போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி வருகிறதென அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜேன் சாகி குற்றஞ்சாட்டினார். “ரஷ்ய இராணுவம் குண்டுவீசி வரும் உக்ரேனிய நிலைகள் உள்ள திபோல்த்செவைச் சுற்றி, அது பெரும் எண்ணிக்கையிலான பீரங்கிப்படைகள் மற்றும் பன்முக ராக்கெட் குண்டுவீசி உபகரணங்களை நிலைநிறுத்தி உள்ளது,” என்று அப்பெண்மணி செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார், அவர் தொடர்ந்து கூறுகையில், “இவை பிரிவினைவாதிகளது உபகரணங்கள் அல்ல, ரஷ்ய இராணுவத்தினது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்றார்.

ரஷ்யாவை ஆதரிக்கும் படைகளுக்கு பெருமளவில் ஆயுதங்கள் அனுப்புவதற்கு ரஷ்யா தயாரிப்பு செய்து வருவதாகவும் சாகி குற்றஞ்சாட்டினார். ஆனால் அவரது குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக எந்தவித ஆதாரமும் வழங்கவில்லை.

புதிய உடன்படிக்கையின்படியே கூட, அங்கே "சமாதானத்தை எட்டுவதற்கும், உக்ரேனிய இறையாண்மையை முழுமையாக மீட்டமைப்பதற்கும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கலாம்,” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். “நாங்கள் ரஷ்யாவின் மற்றும் பிரிவினைவாதிகளின் கடமைப்பாட்டை அவர்களது வார்த்தைகளில் இருந்தல்ல, அவர்களது நடவடிக்கைகளைக் கொண்டு மதிப்பிடுவோம்" என்றார்.

வியாழனன்று ஓர் அறிக்கையில் வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் விவகாரத்துறை செயலர் ஜோஸ் ஏர்ன்ஸ்ட், கிழக்கு உக்ரேனில் இருந்து ரஷ்யா அதன் சிப்பாய்கள் மற்றும் இராணுவ தளவாடங்களை நீக்க வேண்டுமென்ற முறையீட்டுடன், அந்த போர்நிறுத்தத்தை "ஒரு சமாதான தீர்வை நோக்கிய குறிப்பிடத்தக்க முக்கிய படி" என்று சற்றே வெறுப்புடனான பாராட்டைச் சேர்த்துக் கொண்டார். உக்ரேனில் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியங்களில் அதன் எந்தவொரு செயலூக்கமான துருப்புகள் இருப்பதையும் மாஸ்கோ மறுக்கிறது.

ரஷ்ய துருப்புகள் நேரடியாக ரஷ்யாவை-ஆதரிக்கும் பிரிவினைவாதிகளுக்கு உதவி வருகின்றன என்பதன் மீதான ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் தொடர்ச்சியான வாதங்கள், ஒருபோதும் நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை. ரஷ்யா சம்பந்தப்பட்டிருப்பதற்கு ஆதாரமாக, குடியரசு கட்சி செனட்டர் ஜேம்ஸ் இன்ஹோபுக்கு உக்ரேனிய அரசியல்வாதிகளின் பிரதிநிதிகள் குழு ஒன்றால் சமர்பிக்கப்பட்ட சமீபத்திய புகைப்படங்கள், விரைவிலேயே போலியானவையாக அம்பலப்பட்டன. அவை 2008 ஜோர்ஜிய போரின் போது இருந்த ரஷ்ய இராணுவ உபகரணங்களின் புகைப்படங்களாக இருந்தன.

நீடித்த" சண்டை நிறுத்தம் மற்றும் ரஷ்யாவை ஒட்டியுள்ள உக்ரேனிய எல்லை மீது கியேவின் கட்டுப்பாடு உட்பட, அந்த உடன்படிக்கையை "முழுமையாக மற்றும் குழப்பத்திற்கு இடமின்றி" நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி ஏர்ன்ஸ்ட் அவரது கருத்துகளை நிறைவு செய்தார்.

கிழக்கு உக்ரேனில் ரஷ்ய இராணுவ ஈடுபாடு அதிகரிக்கப்பட்டதாக கூறும் இந்த பேச்சுக்கள், கிழக்கில் எதிர்ப்பு போராளிகள் குழுக்களால் நொருக்கப்பட்டுள்ள உக்ரேனிய படைகளுக்கு அனேகமாக ஒரு சிறிய இடைக்கால அவகாசத்தை அளிப்பதைத் தொடர்ந்து, ஒபாமா நிர்வாகம் நவீன அமெரிக்க ஆயுதங்களுடன் கியேவ் ஆட்சிக்கு நேரடியாக ஆயுதங்கள் வழங்கும் ஒரு முடிவை (இந்த நகர்வு ஐரோப்பிய அரசியல்வாதிகள் மற்றும் ஊடக அமைப்புகள் ரஷ்யா மீதான ஒரு போர் பிரகடனத்திற்கு ஒப்பானதாக வர்ணித்துள்ள நிலையில்) நியாயப்படுத்த, ரஷ்யா போர்நிறுத்தத்தை மீறுவதாக கூறப்படுவதை பயன்படுத்திக் கொள்ள திட்டமிடக்கூடும் என்பதை அறிவுறுத்துகிறது.

மின்ஸ்க் உடன்படிக்கை வாஷிங்டனால் பேரம்பேசப்படவில்லை, மாறாக ஜேர்மனி மற்றும் பிரான்ஸின் கவசத்தின் கீழ் நடந்தது. வாஷிங்டன் உக்ரேன் ஆட்சிக்கு ஆயுதங்கள் வழங்க பரிசீலித்து வருகிறது என்ற செய்திகள் கடந்த வாரம் வெளியான போது, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டும் அந்த சண்டையை நிறுத்தும் ஒரு இராஜாங்க முயற்சியைத் தொடங்கினர்.

ஏனைய அமெரிக்க அரசியல்வாதிகளும் நேரடியாக போர்நிறுத்தத்தைத் தாக்கினர். செனட் சபையின் ஆயுத சேவை கமிட்டி தலைவர் குடியரசு கட்சி செனட்டர் ஜோன் மெக்கெயின், அந்த உடன்படிக்கை ரஷ்யாவை-ஆதரிக்கும் பிரிவினைவாதிகள் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு விற்கப்பட்டு விட்டதாக கண்டனம் தெரிவித்து ஓர் அறிக்கை வெளியிட்டதுடன், உக்ரேனுக்கு ஆயுதம் வழங்க முன்னோக்கி நகருமாறு ஒபாமா நிர்வாகத்திற்கு அழைப்புவிடுத்தார்.

மெக்கெயின் அறிவித்தார்: “பிரிவினைவாதிகள் வெற்றி முகப்பில் இருந்த ஒரு காலத்தில், மின்ஸ்கில் எட்டப்பட்ட உடன்படிக்கை அந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து பெறப்பட்ட வெற்றிகளை உறுதிப்படுத்தி, அறியப்படாத உள்ளடக்கத்துடன் தெளிவற்ற சாத்தியக்கூறுகளைக் கொண்ட ஒரு விளக்கமான அரசியல் தீர்வை முடிவு செய்யாமல், ரஷ்யாவை ஒட்டியுள்ள உக்ரேனிய எல்லைகளை மாஸ்கோவின் கட்டுப்பாட்டின் கீழ் விட்டுவிடுகின்றன.” அந்த போர்நிறுத்தம் "உக்ரேனுக்கு உயிர்பறிக்கும் பாதுகாப்பு உதவிகளை அனுப்புவதைத் தாமதப்படுத்துவதற்கு ஒரு சாக்காக" இருக்கக் கூடாது என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

வெள்ளியன்று கியேவிற்கு வெளியே ஓர் இராணுவ பயிற்சி மையத்திற்கு விஜயம் செய்த போது, உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோ முந்தைய நாள் கையெழுத்திட்ட அந்த உடன்படிக்கையை மறுத்தளிப்பதற்கு மிக நெருக்கத்தில் வந்தார். “யாருக்கும் எந்த பிரமையும் இருக்க வேண்டியதில்லை என்று நான் விரும்புகிறேன்,” என்று செய்தியாளர்களிடம் கூறிய அவர், “நாங்கள் இன்னமும் சமாதானத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறோம் என்பதுடன், மின்ஸ்கில் கையெழுத்திடப்பட்ட சமாதானத்திற்குரிய நிலைமைகள் உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் யாருக்கும் முழுமையாக உடன்பாடு இல்லை,” என்றார்.

கிழக்கு உக்ரேனிய பிரிவினைவாதிகள் மீது கியேவ் ஆட்சியின் தாக்குதலுக்கு இராணுவ தாக்குமுகப்பாக செயல்பட்டுள்ள உக்ரேனிய பாசிச படைகளும், அந்த உடன்படிக்கையை நிராகரித்தன. வெள்ளியன்று பாசிச Right Sectorஇன் தலைவரும், உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன டிமிட்ரோ யாரோஷ், அவரது தனிப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் பிரசுரித்த ஒரு அறிக்கையில் போர்நிறுத்தத்தைப் பகிரங்கமாக கண்டித்தார்.

ரஷ்யா ஆதரிக்கும் பிரிவினைவாதிகளை, பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு யாரோஷ் வலியுறுத்துகையில், அவர்களுடனான எந்தவொரு உடன்படிக்கையும் "சட்டரீதியாக நிலைக்கூடியதல்ல" என்றார். Right Sector போராளிகள் குழு "அதன் சொந்த செயல் திட்டங்களின் கீழ் தீவிர விரோதமான நடவடிக்கைகளை நீட்டிக்க உரிமையைக் கொண்டிருக்கிறது" என்று அறிவித்தார்.

ஞாயிறன்று நள்ளிரவு 12:01இல் நடைமுறைக்கு வருவதாக திட்டமிடப்பட்ட அந்த உடன்படிக்கை, தற்போது சண்டை நடந்துவரும் பகுதிகளை ஒட்டி ஒரு இடைத்தடை மண்டலத்தை உருவாக்கும் பொருட்டு, பீரங்கிப்படைகள் மற்றும் ஏனைய கனராக ஆயுதங்களைப் பின்னுக்கு எடுத்துக் கொள்ளுமாறு அழைப்புவிடுக்கிறது. கிழக்கு உக்ரேனில் இருந்து எல்லா வெளிநாட்டு போராளிகள் மற்றும் ஆயுதங்களை நீக்குவது மற்றும் எல்லா போர் கைதிகளையும் விடுவிப்பது ஆகியவை ஏனைய முக்கிய புள்ளிகளாகும். கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் பகுதிகளுக்கு கூடுதல் தன்னாட்சி வழங்குவதற்காக அரசியலைப்பு மாற்றங்களுக்கும் அது அழைப்பு விடுக்கும் அதேவேளையில், கிழக்கு உக்ரேன் மற்றும் ரஷ்யாவிற்கு இடைப்பட்ட எல்லை மீதான கட்டுப்பாட்டை பிரிவினைவாதிகள் கியேவ் ஆட்சிக்கு திரும்ப ஒப்படைக்கவும் அழைப்புவிடுக்கிறது.

வியாழனன்று எட்டப்பட்ட இரண்டாம் மின்ஸ்க் உடன்பாடு கடந்த செப்டம்பரில் எட்டப்பட்ட மின்ஸ்க் போர்நிறுத்த நெறிமுறையைப் பிரதியீடு செய்கிறது. அந்த உடன்படிக்கை மீண்டும் மீண்டும் இருதரப்பினாலும் மீறப்பட்டு, ஜனவரியில் முற்றிலுமாக உதறிவிடப்பட்டது. கிழக்கு டொன்பாஸ் பிராந்தியத்தில் போராளிகள் வசமிருக்கும் நிலைகளுக்கு எதிராக கியேவ் அரசாங்கம் ஒரு தாக்குதல் தொடங்கிய பின்னர் கடந்த மாதம் சண்டை தீவிரமடைந்தது. ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாதிகள் ஒரு எதிர்தாக்குதல் தொடங்கி, கணிசமாள அளவில் பிராந்தியங்களைக் கைப்பற்றியும் மற்றும் டொனெட்ஸ்க் விமான நிலையத்தின் மீது கட்டுப்பாட்டை எடுத்த போது, கியேவ் படைகள் கடுமையாக பின்னோக்கி நகர தள்ளப்பட்டன.

புதிய உடன்படிக்கை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இருதரப்புகளும் திட்டமிட்டபடி போர்நிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக கடைசி நிமிட பிராந்திய வெற்றிகளைப் பெறும் ஒரு முயற்சியில் சண்டையை அதிகரித்தன. போராளிகள் வசமிருக்கும் டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்க் நகரங்களுக்கு இடையே ஒரு முக்கிய ரயில் சந்திப்பு தளமான திபோல்த்செவ், வெள்ளியன்று கடுமையான சண்டையைக் கண்டது. ஏறத்தாழ 8,000 உக்ரேனிய துருப்புகள் ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாத போராளிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

ஓர் உக்ரேனிய இராணுவ செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரி லிஸ்யென்கோ வெள்ளியன்று குறிப்பிடுகையில், அந்த உடன்படிக்கை கையெழுத்தானதற்குப் பின்னர் நடந்த சண்டையில், குறைந்தபட்சம் 11 உக்ரேனிய சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகவும், மேற்கொண்டு 40 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.

பீரங்கி குண்டுகள் உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள ஆர்டிமெவ்ஸ்க் நகரின் ஒரு பள்ளிக்கூடத்தைத் தாக்கியதில், ஒரு ஏழு வயது குழந்தை உட்பட இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். குண்டுவீச்சில் குறைந்தபட்சம் ஏனைய ஐந்து பொதுமக்கள் காயமடைந்தனர், அதில் மூவர் குழந்தைகளாவர்.

டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு பாதுகாப்பு அமைச்சக அதிகாரி எட்வார்ட் பசுரின் வெள்ளியன்று செய்தியாளர்களுக்குக் கூறுகையில், வியாழக்கிழமையிலிருந்து போராளிகள் வசமிருக்கும் ஹோர்லெவ்கா, டொனெட்ஸ்க் மற்றும் லாஹன்ஸ்க் நகரங்கள் மீதான குண்டுவீச்சில் பத்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், மூன்று குழந்தைகள் உட்பட ஏனைய பத்தொன்பது பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.

லூஹான்ஸ்க் மீதான வியாழக்கிழமை குண்டுவீச்சில் சட்டவிரோத கொத்துக் குண்டுகள் (cluster bomb munitions) பயன்படுத்தப்பட்டு இருந்ததாக ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைப்பு வெள்ளியன்று ஓர் அறிக்கை வெளியிட்டது.