சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

No agreement reached between EU finance ministers and Greece

ஐரோப்பிய நிதி மந்திரிகள் மற்றும் கிரீஸிற்கு இடையே எந்த உடன்படிக்கையும் எட்டப்படவில்லை

By Robert Stevens and Barry Grey
17 February 2015

Use this version to printSend feedback

சிரிசா தலைமையிலான கிரேக்க அரசாங்கத்தின் கடன் நெருக்கடியை விவாதிக்க திங்களன்று புரூசெல்ஸில் கூடிய யூரோ மண்டல நிதி மந்திரிகளின் ஒரு கூட்டம், மனக்கசப்புடன் முறிந்து போனது.

ஜேர்மனியால் வழிநடத்தப்பட்டு, நெதர்லாந்தின் ஜெரொன் திஜிஸ்செல்ப்லோம் (Jeroen Dijsselbloem) தலைமையிலான நிதி மந்திரிகள், குழப்பத்திற்கிடமின்றி கடனைத் திரும்ப செலுத்தும் தற்போதைய திட்டத்தையே தாங்கியிருந்த ஓர் அறிக்கையில் கையெழுத்திட, அதை கிரேக்க நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ் இன் முன்வைத்தனர். அது மேலும் சிக்கன நடவடிக்கைகளைக் கோரியதுடன், ஐரோப்பிய ஒன்றியம் (EU), சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் வங்கிகளின் கட்டளைகளுக்கு கிரேக்க அரசாங்கம் முழுவதுமாக அடிபணிய வலியுறுத்தியது.

ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிள, சிரிசாவையும் (தீவிர இடதின் கூட்டணி) மற்றும் அதன் தலைவரும், புதிய பிரதம மந்திரியுமான அலெக்சிஸ் சிப்ராஸை அவமானப்படுத்த அவர் வழியில் செல்ல தொடங்கியதாக தெரிந்தது. புரூசெல்ஸ் கூட்டத்திற்கு முன்னதாக திங்களன்று ஒரு ஜேர்மன் வானொலி பேட்டியில் சொய்பிள கூறுகையில், அந்த கூட்டத்தில் ஒரு உடன்படிக்கை எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர் "மிகவும் ஐயப்படுவதாக" தெரிவித்தார். சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரேக்க அரசாங்கம்நேர்த்தியாக பொறுப்பின்றி" நடந்து கொள்வதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

கடந்த சில ஆண்டுகளில் கிரீஸிற்கு உதவியுள்ளவர்களை அவமானப்படுத்துவதாக" சிப்ராஸை சொய்பிள குற்றஞ்சாட்டினார்.

வாரௌஃபாகிஸ் கூறுகையில், ஐரோப்பிய கமிஷனின் பொருளாதார தலைவர் பியர் மோஸ்கோவிச்சி அவரிடம் முன்னதாக ஒரு திட்டத்தை வழங்கி இருந்ததாகவும், அதில் அவர் கையெழுத்திட தயாராக இருந்ததாகவும் குறைகூறி, வாரௌஃபாகிஸ் அந்த அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டார். அந்த கூட்டம் விரைவிலேயே கலைந்தது; வெவ்வேறு கட்சிகள் தனித்தனியான பத்திரிகையாளர் கூட்டங்களை நடத்தின.

குறிப்பாக வாரௌஃபாகிஸ், கடனைத் திரும்ப செலுத்துவதற்கான "நடப்பு திட்டத்திற்கு" சிரிசாவின் சம்மதத்தை நிர்ணயிக்கும் அந்த ஐரோப்பிய ஒன்றிய வரைவில் பிரயோகிக்கப்பட்ட மொழியை ஆட்சேபித்தார். அவரது எதிர்ப்பு, அவ்விதத்தில் ஒட்டுமொத்தமாக சிரிசாவின் எதிர்ப்பானது, மில்லியன் கணக்கான கிரேக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஏற்கனவே வறுமையில் தள்ளியுள்ள கடுமையான சிக்கன நிகழ்ச்சி நிரலிலும் மற்றும் நடப்பு "பிணையெடுப்பு" திட்டத்திலும் உள்ள சாராம்சத்திற்கு சிரிசா தலைமையிலான அரசாங்கம் மண்டியிடுவதை மூடிமறைப்பதற்கு போர்வையாக, வார்த்தை பிரயோகத்திற்காக இறைஞ்சுவதாக உள்ளது.

பாரிய பெரும்பான்மை கிரேக்கர்களால் வெறுக்கப்படும் கடனைத் திரும்பி செலுத்தும் தற்போதைய செயல்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்துள்ள சிரிசாவிற்கு, அதுபோன்றவொரு மூடிமறைப்பு பெரிதும் தேவைப்படுகிறது. ஐந்திற்கும் கூடுதலான ஆண்டுகளில் நடத்தப்பட்ட கடுமையான வெட்டுக்களுக்கு எதிராக அதிகரித்த எதிர்ப்பின் விளைவாகவே சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜனவரி 25இல் அந்த புதிய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து, கிரீஸில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பல போராட்டங்கள் இந்த உணர்வை வெளிப்படுத்தி உள்ளன. பெப்ரவரி 11இல், ஏதென்ஸ் மற்றும் திஸ்சாலோனிகியில் ஆயிரக் கணக்கானவர்கள் பங்கெடுத்த போராட்டங்களுடன், கிரீஸில் குறைந்தபட்சம் அன்று 13 ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஞாயிறன்று அதையும் விட பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆனால் கிரீஸிற்கு ஒரு விட்டுக்கொடுப்பு வழங்கப்படும் என்னும் தோற்றமே கூட, சிக்கன நடவடிக்கைக்கு எதிரான ஐரோப்பாவெங்கிலுமான மக்கள் எதிர்ப்பிற்கு எரியூட்டுமென ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் அஞ்சுகின்றன. இதுவரையில், அவை பேர்லினின் கடுமையான நிலைப்பாட்டுக்குப் பின்னால் ஒன்றிணைந்திருந்தன.

வாரௌஃபாகிஸூம் சிப்ராஸூம் கிரீஸின் கடன் கடமைப்பாடுகளை அவர்கள் பூர்த்தி செய்ய விருப்புவதையும் மற்றும் உலகளாவிய மூலதனத்தால் கோரப்பட்ட "கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு" —அதாவது ஓய்வூதியங்கள், வேலைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் மீது மேற்கொண்டு தாக்குதல் நடத்துவதற்கு அவர்கள் பொறுப்பேற்று இருப்பதையும், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நிதியியல் சந்தைகளுக்கு மறுஉத்தரவாதம் அளிப்பதில் பின்னோக்கி வளைந்துள்ளனர்.

திங்களன்று நியூ யோர்க் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்ட ஒரு தலையங்கத்தில் வாரௌஃபாகிஸ், "ஏதோவித தீவிர-இடது நிகழ்ச்சி நிரலைப்" பின்தொடர்வது குறித்து மறுத்துரைத்தார். அவர் அறிவித்தார்: “எமது அரசாங்கம் எங்களின் கடன்களைத் திரும்ப செலுத்துவதற்கு எங்களின் பங்காளிகளிடம் ஒரு வழியை கேட்கவில்லை. நாங்கள் பரந்த கிரேக்க மக்களால் தாங்கக்கூடிய மற்றும் ஆதரிக்கக்கூடிய சீர்திருத்த வேலைகளைத் தொடங்க எங்களை அனுமதிக்கும் வகையில் நிதியியல் ஸ்திரத்தன்மைக்கு சில மாதங்கள் அவகாசமளிக்குமாறு கேட்டு வருகிறோம், அதனைக் கொண்டு எங்களால் வளர்ச்சியைத் திரும்ப கொண்டு வர முடியும் என்பதோடு, எங்களின் நிலுவைகளைச் செலுத்துவதற்கான எங்களின் இயலாமையை முடிவுக்குக் கொண்டு வர முடியும்,” என்றார். (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

கடந்த வாரம் அவர் Guardianக்கு அளித்த ஒரு நேர்காணலில் சமரசத்திற்காக யாசித்தார். அவர் மன்றாடுகையில், “நாங்கள் இடது கட்சி தான், ஆனால் நாங்கள் இலண்டன் நகரிலிருந்து ஒரு திவால்நிலைமைக்கான சீர்திருத்தவாத வழக்கறிஞரின் நிகழ்ச்சி நிரலை தான் இன்றியமையாது முன்வைக்கிறோம்,” என்றார்.

உண்மையில் சிரிசாவானது, கிரேக்க மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பிற்குள் ஒரு சிறந்த உடன்படிக்கையை விரும்பும் கிரேக்க உயர்மட்ட மத்தியதர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட அடுக்குகளுக்காக பேசுகிறது. முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமடைந்துவரும் உடைவை எதிர்கொள்ள, அது தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து, கிரேக்க மற்றும் சர்வதேச முதலாளித்துவத்தின் அடுக்குகளுக்கு சாதகமான கொள்கைகளை முன்னெடுக்கிறது. அது வெறிபிடித்த அதிதீவிர வலது தேசியவாத சுதந்திர கிரேக்கர்களுடன் கூட்டணி மேற்கொண்டு ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை உருவாக்கி உள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நிதி மந்திரிகளின் குறுகிய-நேர கூட்டத்திற்குப் பின்னர் திங்களன்று பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், திஜிஸ்செல்ப்லோம் முன்வைத்த வரைவு அறிக்கையில் உள்ளடங்கி இருந்தவற்றிலிருந்து வேறுபட்டு, மோஸ்கோவிச்சி முன்வைத்ததில் இருந்த நிபந்தனைகளின் அடிப்படையில் தற்போதிருக்கும் கடனைத் திரும்ப செலுத்தும் திட்டத்தை நீடிப்பதற்கு உடன்பட அவர் தயாராக இருப்பதாக வாரௌஃபாகிஸ் முதல்முறையாக பகிரங்கமாக அறிவித்தார். உண்மையில் மோஸ்கோவிச்சியினது கருத்துக்களுக்கும் திஜிஸ்செல்ப்லோம் கருத்துக்களுக்கும் இடையே அங்கே சாராம்சத்தில் எந்த வித்தியாசமும் இல்லை என யூரோ மண்டல அதிகாரிகள் அவருக்கு தெரிவித்ததாக பைனான்சியல் டைம்ஸ் இதழாளர் பீட்டர் ஸ்பெகல் எழுதினார். Der Spiegel செய்தியின்படி, கிரீஸ் தரப்பில் தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கையை விவாதிக்க நிதியியல் மந்திரிகளுக்கு ஒரு வாய்ப்பு இருந்தும் கூட அதற்கு முன்னதாகவே யூரோ குழு கூட்டம் முறித்துக் கொள்ளப்பட்டது.

எவ்வாறிருந்த போதினும், வாரௌஃபாகிஸ் அந்த கூட்டத்திற்குப் பின்னர் அறிவிக்கையில், “அங்கே முடிவில் ஓர் உடன்பாடு எட்டப்படும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,” என்றுரைத்தார்.

பத்திரிகைகளுக்கு கசியவிடப்பட்ட பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ஏனைய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட அந்த வரைவு அறிக்கையின் ஒரு பகுதி குறிப்பிட்டது: “கிரேக்க அதிகாரிகள் ஒருதலைபட்சமான நடவடிக்கையை தவிர்த்துக் கொள்ளவும் மற்றும், குறிப்பாக வரி கொள்கை, தனியார்மயமாக்கல், தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்கள், நிதித்துறை மற்றும் ஓய்வூதியங்கள் ஆகிய துறைகளில் அவர்களது ஐரோப்பிய மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் நெருக்கமான உடன்பாடு கொள்ள வேலை செய்வார்கள் என்பதற்கும் அவர்களின் உறுதியான பொறுப்புறுதியை அளித்தனர்.”

ஐரோப்பிய ஒன்றிய பகுதியிலிருந்து வரும் கிரீஸிற்கான கடன் திட்டம் பெப்ரவரி 28இல் முடிவுற உள்ளது. இது கிரீஸின் வங்கியியல் அமைப்புமுறை பொறிவதற்கான, அதாவது அந்நாட்டின் 320 பில்லியன் யூரோ இறையாண்மை கடன் திவாலாவதற்குரிய ஒரு சாத்தியக்கூறை, மற்றும் யூரோ செலாவணி மண்டலத்திலிருந்து கிரீஸ் பலவந்தமாக வெளியேற்றப்படுவதற்குரிய ஒரு சாத்தியக்கூறை உயர்த்துகிறது. இந்த மாத கடைசிக்கு முன்னதாகவே ஓர் உடன்படிக்கையில் வாக்களிப்பதற்கு பல தேசிய நாடாளுமன்றங்களுக்கும் அவகாசம் தேவைப்படுவதால், கிரீஸிற்கும் யூரோ குழுவிற்கும் இடையே ஓர் உடன்படிக்கை எட்டுவதற்கு திங்கட்கிழமை இறுதிகெடுவாக வைக்கப்பட்டுள்ளது.

யூரோ குழு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே ஜேபி மோர்கனால் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, கிரீஸின் நிதியியல் ஆதாரவளங்கள் சில மாதங்களில் தீர்ந்து போகக்கூடுமென எடுத்துரைத்தது. கிரேக்க வங்கிகள் வாரத்திற்கு 2 பில்லியன் யூரோ வைப்புநிதிகளை இழந்து வருவதாக மதிப்பிட்டு, ஜேபி மோர்கன் குறிப்பிடுகையில், இதுபோன்ற வெளியேற்றங்கள் தொடர்ந்தால், அந்நாட்டின் வங்கிகள் வெறும் 14 வாரங்களில் புதிய கடன்களுக்கு ஈடுகொடுக்க வளமின்றி வறண்டு போகுமென அறிவித்தது.

அந்த கூட்டத்திற்குப் பின்னர் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், திஜிஸ்செல்ப்லோம் கூறுகையில், “அந்த திட்டத்திற்கு ஒரு நீடிப்பைக் கோருவதே கிரேக்க அரசாங்கத்திற்கான சிறந்த முன்னோக்கிய பாதையாக இருக்குமென்றும்", முன்னோக்கி எடுத்துச் செல்லப்படும் எந்தவொரு உடன்படிக்கையிலும், ஐரோப்பிய கமிஷன், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் IMFஇன் உடன்படிக்கை இல்லாமல் கிரீஸால் "எந்தவித குறைப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது என்பதையும் கிரீஸிற்கு யூரோ குழு தெரிவித்திருப்பதாக கூறினார்.

வெள்ளிக்கிழமை வாக்கில் கடனைத் திரும்ப செலுத்துவதற்கான திட்டத்தின் ஒரு நீடிப்புக்கு முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டி இருக்கும் என்று கூறிய அவர், “நாம் இந்த வாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் அது பற்றி மட்டும்தான் என்று அவர் எச்சரித்தார்.

ஒரு நீட்சி அல்லது, கிரேக்க அரசாங்கத்தின் வார்த்தைகளில் ஒரு "இணைப்பு" உடன்படிக்கையானது, தற்போதைய திட்டத்திலிருந்து மிகவும் வேறுபட்டிருக்குமா என்று கேட்கப்பட்ட போது திஜிஸ்செல்ப்லோம், “அவ்வாறிருக்குமென நான் நினைக்கவில்லை,” என்றார்.

ஐரோப்பிய ஸ்திரப்பாட்டு இயங்குமுறை [European Stability Mechanism – ESM] உடன்படிக்கை மற்றும் விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகள் கடுமையான நிபந்தனைகளை உரைக்கின்றன. அது இன்னமும் நிதியை நீடிப்பது மற்றும் அவ்விதத்தில் கடனை நீடிப்பது குறித்தே இருக்கிறது. அது இன்னமும் பொருளாதார போட்டித்தன்மையின்றியே உள்ளது... மேலும் ஒரு ஸ்திரமான நிதியியல் துறை, அனைத்தினும் மேலாக அடுத்தக்கட்ட அடிகளைக் கோருகின்றன, அதாவது மக்கள் ஆதரவுடனான சிலவற்றையும் மற்றும் சில வெளிப்படையாகவே மக்கள் ஆதரவில்லாத கூடுதல் நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்களையும் கோருகின்றன,” என்பதை அவர் சேர்த்துக் கொண்டார்.

2014 வரையில் பிரெஞ்சு நிதி மந்திரியாக இருந்த மோஸ்கோவிச்சி மற்றும் IMFஇன் தலைவர் கிறிஸ்டீன் லகார்ட் ஆகியோரும் திஜிஸ்செல்ப்லோம் கருத்தை ஒட்டியே பேசி வருகின்றனர்.

தற்போதைய திட்டத்தின் ஒரு நீடிப்புக்கு வேறேந்த மாற்றீடும் பரிசீலிப்பதற்கு இல்லையென மோஸ்கோவிச்சி தெரிவித்தார். கிரீஸ் உடனான IMFஇன் திட்டம் மார்ச் 2016இல் முடிவுக்கு வரும் என்று லகார்ட் தெரிவித்தார். கிரீஸ் தற்போதைய சிக்கன பொதியின் ஒரு நீட்சியை ஒப்புக் கொண்டால் மட்டுமே, IMF மேற்கொண்டு நிதிகளை வழங்குமென அப்பெண்மணி எச்சரித்தார்.