சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

UN delays war crimes report on Sri Lanka

ஐ.நா. இலங்கை மீதான போர்க் குற்ற அறிக்கையை தாமதப்படுத்துகிறது

By Manusha Fernando
23 February 2015

Use this version to printSend feedback

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை (UNHRC), மனித உரிமைகளுக்கான .நா உயர் ஸ்தானிகர் ஸெயிட் ராட் அல்-ஹுசைனின் பரிந்துரையின் பேரில், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த ஒரு சர்வதேச விசாரணையின் அறிக்கையை வெளியீடுவதை மார்ச்சில் இருந்து செப்டெம்பருக்கு ஒத்திவைக்க கடந்த வாரம் ஒப்புக் கொண்டது. இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவின் வேண்டுகோளை அடுத்தே இந்த ஒத்திவைப்பு முடிவு எடுக்கப்பட்டது.

இந்த தாமதமானது புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு தெளிவான சலுகையாகும். மற்றும் இது முந்தைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மீது அழுத்தம் கொடுக்க இந்தப் பிரச்சினையை சுரண்டிக்கொண்ட வாஷிங்டன், சிறிசேனவுக்கு பச்சைக் கொடி காட்டுவதுமாகும். சிறிசேன அரசாங்கம் அதன் வெளியுறவுக் கொள்கையை சீனாவில் இருந்து விலகி பெய்ஜிங்கிற்கு எதிராக அமெரிக்காவினதும் அதன் ஆக்கிரமிப்பு "ஆசியாவில் முன்னிலை" கொள்கையின் பக்கமும் திருப்பியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் யுஎன்எச்ஆர்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை அடுத்து, மனித உரிமைகள் ஆணையாளரால் நியமிக்கப்பட்ட ஒரு சர்வதேச விசாரணைக் குழுவினால் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டது. 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி மாதங்களில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணையைக் கோரி ஒபாமா நிர்வாகத்தினால் இந்த தீர்மானம் அனுசரணையளிக்கப்பட்டது.

இராஜபக்ஷ அரசாங்கம் கொடூரமான போர்க்குற்றங்களுக்கு பொறுப்பாளியாகும். ஒரு .நா. நிபுணர் குழு தந்துள்ள தகவலின்படி, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த, மருத்துவமனைகள் மற்றும் உதவி விநியோக மையங்கள் உட்பட பிரதேசத்தில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட கண்மூடித்தனமான குண்டுவீச்சில் 40,000 தமிழ் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அது நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் காணாமல் ஆக்குதல் உள்ளிட்ட ஏனைய ஜனநாயக உரிமை மீறல்களுக்கும் பொறுப்பாளியாகும்.

அமெரிக்கா, ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் முன்னெடுத்த இனவாத போரையும், இராஜபக்ஷ 2006ல் போரை புதுப்பித்ததற்கும் ஆதரிவளித்ததுடன் இராணுவத்தின் அட்டூழியங்களை கண்டும் காணாதது போல் இருந்தது. எனினும், புலிகளின் தோல்வி தவிர்க்க முடியாததானதுடன், கொழும்பில் பெய்ஜிங்கின் செல்வாக்கு வளர்ச்சியடைவது கண்டு கவலை கொண்ட வாஷிங்டன், சீனாவில் இருந்து தூர விலகுமாறு இராஜபக்ஷவை நெருக்க "மனித உரிமைகள்" பிரச்சினையை பயன்படுத்திக் கொண்டது.

இலங்கையில் உள்ளக விசாரணைகளைக் கோரிய முந்தைய இரண்டு தீர்மானங்களுக்கு ஆதரவளித்த பின்னர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா ஒரு சர்வதேச விசாரணையை கோரியதன் மூலம் அழுத்தத்தை உக்கிரமாக்கியது. இத்தகைய ஒரு விசாரணை, சிரேஷ்ட அரசாங்க மற்றும் இராணுவ புள்ளிகளுக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க அச்சுறுத்தியதோடு, அமெரிக்கா இராஜபக்ஷ சம்பந்தமாக பொறுமை இழந்து வருவதை சமிக்ஞை செய்தது.

இராஜபக்ஷ கடந்த நவம்பரில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலுக்கு அழைத்த போது, சிறிசேன, அரசாங்கத்தை விட்டு வெளியேறி எதிர்க் கட்சிகளுடன் இணைந்துகொண்டு தன்னை வேட்பாளராக அறிவித்துக் கொண்டார். இந்த அரசியல் திட்டமிடல்கள் தெளிவாக ஒபாமா நிர்வாகத்தின் தலையீட்டுடன் பல மாதங்களாக தயாரிக்கப்பட்ட சதியாகும். இராஜபக்ஷ கடந்த மாதம் தோல்வியடைந்த பின்னர், சிறிசேன அரசாங்கம் விரைவில் வாஷிங்டனுடன் உறவுகளை வலுப்படுத்த நகர்ந்தது.

யுஎன்எச்ஆர்சியில் அறிக்கை சமர்ப்பிப்பதை தாமதிக்க எடுத்த முடிவு, இலங்கையின் வெளியுறவு அமைச்சர் சமரவீரவின் வாஷிங்டன் விஜயத்தை அடுத்தே வந்தது. அவர் அங்கு தமக்கு ஆதரவு பெறுவதற்காக, அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜோன் கெர்ரி மற்றும் .நா பொதுச் செயலாளர் பான் கீ மூனையும் சந்தித்தார். அமெரிக்கா மற்றும் பிரிட்டனும் ஏற்கனவே இந்த தாமதத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. .நா. செயலாளர் நாயகத்தின் செய்தி தொடர்பாளர், அவர் "புதிய அரசாங்கத்தை சாதகமாக காயளுவதோடு அதன் முயற்சிகளையும் ஆதரிப்பார்", எனக் கூறினார்.

.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அல்-ஹுசைன், “தைரியமாக விசாரணைக் குழுவுக்கு தகவல் வழங்க முன்வந்தவர்கள் உட்பட, இலங்கையில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட பலர், தங்க்ளால் பார்க்க முடியாது போகுமோ என்று பயந்த இந்த அறிக்கையை அலுமாரியில் தூக்கிப் போடுவதற்கான முதல் நடவடிக்கையாக, அல்லது பலவீனமாக்குவதாக காண்பர்" என்று கூறினார். “ஒருமுறை மட்டுமே ஒத்திப்போடப்படும் என அவர் ஒரு அற்ப உத்தரவாதம் அளித்ததோடு, கொழும்பு அரசாங்கத்திறக்கு அதிக நேரம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

எவ்வாறெனினும், சமரவீர, போரின்போது இழைக்கப்பட்டதாக அவர் ஒப்புக்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த, யுஎன்எச்ஆர்சி உடன் செயற்படுவதற்காக ஒரு "உள்நாட்டு பொறிமுறையை" பெற முயற்சிக்கின்றார். அவர், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வாக்குறுதி அளித்ததோடு மற்றும் தனது அரசாங்கம் "நல்லாட்சி" மற்றும் ஜனநாயக உரிமைகளை மீண்டும் நிறுவும் என்றும் கூறிக்கொண்டார்.

முன்னைய இராஜபக்ஷ அரசாங்கம் போலவே, சிறிசேன அல்லது அமெரிக்க-சார்பு ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பீ) உட்பட அவரது கூட்டாளிகளுக்கு ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக கொஞ்சமேனும் அக்கறை கிடையாது. சிறிசேன நவம்பர் வரை இராஜபக்ஷ அரசாங்கத்தில் ஒரு சிரேஷ்ட அமைச்சராக இருந்தார். வலதுசாரி யூஎன்பீ, 1983ல் யுத்தத்தை தொடங்கியதோடு ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு பேர்போன கட்சியாகும்.

வாஷிங்டனில் உள்ள சர்வதேச அமைதிக்கான கார்னிக் மானிய அமைப்பில் பேசிய சமரவீர, "மனித உரிமைகள் சமூகம் உட்பட சர்வதேச சமூகம்பொறுமையாக இருக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்ததோடு "இது [இலங்கையில்] ஒரு பலவீனமான மாற்றம் ஏற்படும் நேரம் என சுட்டிக் காட்டனார்.

"பலவீனமான மாற்றம்" என்னும் குறிப்பு சிறிசேன அரசாங்கத்தின் ஸ்திரமற்ற தன்மையையும், அத்துடன் கொழும்பில் உள்ள ஸ்திரமற்ற அரசியல் நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஜூன் மாதம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலின் போது, நாட்டுப்பற்று உணர்வை கிளறிவிட்டு அரசாங்கத்தை அச்சுறுத்தக்கூடிய வகையில் இராஜபக்ஷ மீண்டும் அரசாங்கத்துக்குள் நுழைவதற்கு யுஎன்எச்ஆர்சி அறிக்கையை சுரண்டிக்கொள்ளக் கூடும் என புதிய அரசாங்கம் பீதியடைந்துள்ளது. இராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் ஏற்கனவே "தாயகம் காப்போம்" என்ற பேரினவாத சுலோகத்தை கொண்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

அதே நேரத்தில், இராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளியாக இருந்து, அதன் போர் மற்றும் போர் குற்றங்களுக்கு முழுமையாக ஆதரவு கொடுத்த ஜாதிக ஹெல உறுமய (JHU) உட்பட ஒரு தொகை சிங்கள தீவிரவாத கட்சிகளின் தொகுப்பில் சிறிசேன தங்கியுள்ளார். தீவின் சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ கும்பல்களுக்கு இடையிலான அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்குக்கு அழுத்தம் கொடுக்க மனித உரிமைகள் பிரச்சினையை பயன்படுத்திக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பெறவும் அவர் முயற்சிக்கின்றார்.

கொழும்பு அரசாங்கம் அறிக்கையை ஒத்தி வைக்க கோரினாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கிலான வட மாகாண சபை யுஎன்எச்ஆர்சி அறிக்கையை வெளியீட கோரி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. கொழும்பு அரசாங்கம் மற்றும் அதன் பங்காளிகள் மத்தியிலான பதட்டங்கள் விரைவில் அல்லது பின்னர் ஒரு அரசியல் நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

யுஎன்எச்ஆர்சி அறிக்கையை தாமதிக்க சிறிசேன அரசாங்கம் விடுத்த வேண்டுகோள், போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களின் பொறுப்பாளிகள் மீது குற்றஞ்சாட்டும் எண்ணம் எதுவும் அதற்கு இல்லை என்பதற்கு மற்றொரு தெளிவான எடுத்துக்காட்டு ஆகும். "ஜனநாயகம்" பற்றிய அதன் அனைத்து தோரணைகளையும் பொறுத்தளவில், சிறிசேனவும், இராஜபக்ஷவை போலவே, சர்வதேச நிதி மூலதனம் கோரும் மற்றும் அவருடைய அரசாங்கம் அமுல்படுத்த கடமைப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் மீதான தொழிலாள வர்க்கத்தின் எந்த எதிர்ப்பையும் நசுக்குவதில் ஈவிரக்கமற்றவராக இருப்பார்.