சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

UK joins US, Poland in sending military trainers to Ukraine

உக்ரேனுக்கு இராணுவ பயிற்சியாளர்களை அனுப்புவதில் அமெரிக்கா, போலாந்துடன் இங்கிலாந்தும் சேர்கிறது

By Jean Shaoul
26 February 2015

Use this version to printSend feedback

பிரிட்டன் இராணுவ "ஆலோசகர்களையும்" மற்றும் "உயிர்பறிக்காத சாதனங்களின் உதவிகளையும்" உக்ரேனுக்கு அனுப்ப இருப்பதாக பிரதம மந்திரி டேவிட் கேமரூன் அறிவித்தார். பாதுகாப்புதுறை வட்டாரங்களின் தகவல்படி, உக்ரேனின் கிழக்கில் உள்ள பிரிவினைவாத படைகளிடம் அடிவாங்கிய உக்ரேனிய துருப்புகளின் "உயிர்பிழைப்பு ஆற்றலை அதிகரிக்கப்பதே" அதன் நோக்கமாக உள்ளது.

பிரிட்டன் சர்வதேச அரங்கில் தோற்றப்பாட்டளவில் மறைந்து போய்விட்டதென்ற இராணுவம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்திடமிருந்து வரும் விமர்சனத்திற்கு, மே மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, கேமரூனால் எடுக்கப்பட்ட எதிர் முயற்சியாக இந்நகர்வு பரவலாக பார்க்கப்படுகிறது. உக்ரேனிய நிலைமையை கையாள்வதில் அரசாங்கம் "போதுமான அளவுக்கு செயலூக்கத்துடனோ அல்லது கண்களுக்குப் புலனாகும் விதத்திலோ" இல்லை என்று ஒரு நாடாளுமன்ற கமிட்டி குற்றஞ்சாட்டி இருந்தது.

மிக முக்கியமாக, வாஷிங்டனும் இலண்டனும், ரஷ்யாவிற்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டு, உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்க தீர்மானகரமாக உள்ளன என்பதையும், இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் உக்ரேனிய ஆட்சிக்கு இடையே எட்டப்பட்ட போர்நிறுத்தத்திற்கு மேற்கொண்டு குழிபறிக்கிறது என்பதையுமே இது அர்த்தப்படுத்துகிறது.

ஒரு பயிற்சி படையை பிரிட்டன் அனுப்புவதென்பது, உக்ரேனிய படைப்பிரிவுகளுக்கு பயிற்சியளிக்க ஓர் அமெரிக்க படைப்பிரிவை அனுப்புவதுடனும், மற்றும் ஏனைய நேட்டோ நாடுகளும் அதே நடைமுறையை பின்தொடரும் என்ற எதிர்பார்ப்புகளுடனும் பொருந்தி உள்ளது.

இம்மாதத்தின் தொடக்கத்தில் கியேவின் வலதுசாரி ஆட்சிக்கு அமெரிக்கா நேரடியாக ஆயுதம் வழங்கும் என்ற அதன் அறிவிப்புக்கு பின்னர், முன்னணி ஐரோப்பிய அதிகாரிகள், பகிரங்கமாகவே, உலகம் நேட்டோ மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான ஒரு "முழு" போரின் விளிம்பில் இருப்பதாக ஒப்புக் கொண்டார்கள். உக்ரேனுக்கு ஆக்ரோஷமாக ஆயுதம் வழங்குவதிலும் மற்றும் உலகப் போரின் அபாயத்தை தூண்டுவதிலும் அமெரிக்கா மற்றும் போலாந்து அரசாங்கத்துடன் இலண்டனும் இணைந்து வருகிறது.

பதவியில் அல்லாத உக்ரேனிய அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குவதில் உதவ வார்சோ இராணுவ ஆலோசகர்களை அனுப்புமென நேற்று போலாந்து பாதுகாப்பு அமைச்சக அதிகாரி போகொஸ்லோ பாசெக் அறிவித்தார்.

உக்ரேனிய அரசாங்கம் மத்திய கிழக்கில் ஒரு முக்கிய அமெரிக்க கூட்டாளியான ஐக்கிய அரபு எமிரேட்ஸிடமிருந்தும் இராணுவ ஆதரவைப் பெற முயற்சித்து வருகிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி அங்கே சண்டையில் ஒரு தணிவு இருப்பதை ஒப்புக்கொண்ட போதினும், ரஷ்யா மின்ஸ்க் போர்நிறுத்தத்திற்கு கீழ்படிய தவறி, பிரிவினைவாதிகளை ஆதரித்து வருவதாக குற்றஞ்சாட்டினார். “இன்றைய நாள் வரையில், ரஷ்யாவோ அல்லது அது ஆதரித்து வரும் படைகளோ அவர்களின் கடமைப்பாடுகளுடன் இணைந்திருப்பதற்கு நெருக்கத்தில் கூட வரவில்லை,” என்று கூறி, கூடுதல் தடைகளை மாஸ்கோ முகங்கொடுக்குமென்ற எச்சரிக்கைகளை புதுப்பித்தார்.

இப்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் என்ன நடந்துள்ளதோ அது ஏற்க முடியாதது என்ற சேதியை புட்டினுக்கும் ரஷ்யாவுக்கும் சாத்தியமான அளவுக்கு பலமாக வழங்க வேண்டும். இந்த போர்நிறுத்தங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும், அவ்வாறு இல்லையென்றால், அங்கே இன்னும் கூடுதல் விளைவுகளும், கூடுதல் தடையாணைகளும், கூடுதல் நடவடிக்கைகளும் இருக்கும்,” என்று கேமரூன் வாக்குறுதி அளித்தார்.

கார்ன்வால் கடற்கரையை ஒட்டி தென்பட்ட இரண்டு ரஷ்ய இராணுவ போர் விமானங்கள் பிரிட்டன் வான்வழி பகுதிக்குள் நுழைந்திருக்கவில்லை என்பதை பிரதம மந்திரியும் பாதுகாப்பு செயலர் மைக்கேல் ஃபாலொனும் ஒப்புக் கொண்டிருந்த போதினும் கூட, அதன்பின்னர் மிக விரைவிலேயே, ராயல் விமானப்படை போர் விமானங்கள் அவற்றை முன்னால் சென்று வளைத்து பிடிக்க முயன்றன.

கட்டளை வழிமுறைகள், தந்திரோபாய உளவுவேலைகள், போர்க்கள முதலுதவிகள், ஆயுத தளவாடங்கள் கையாளுதல் மற்றும் நகர்புற செயல்பாடுகளை திட்டமிடுதலும் செயல்படுத்துதலும் ஆகியவற்றின் மீது தகவல்களை வழங்குவதற்காக, அடுத்த சில வாரங்களில் பிரிட்டன் மேற்கு உக்ரேனுக்கு 75 பயிற்சியாளர்களை அனுப்பும். அவர்கள் இராணுவ தரைப்படைக்கு தேவையான பயிற்சிகளையும் மதிப்பீடு செய்வார்கள்.

உக்ரேனில் நேட்டோ இராணுவ நடவடிக்கைகளின் பாகமாக பிரிட்டன் துருப்புகளை அனுப்புகிறது என்றபோதினும், இதுவே அங்கே பிரிட்டனின் வெளிப்படையான முதல் நடவடிக்கையாகும்.

பரந்தளவில் துருப்புகளை அனுப்புவதற்கு இது முதல் தொடக்கமாகும் என்பதை மறுத்துரைத்த ஃபாலொன், அங்கே படிப்படியான நடவடிக்கை இருக்காது என்று தெரிவித்தார். “நாங்கள் உக்ரேனில் போர்படை துருப்புகளை அனுப்பவில்லை, அவ்வாறு செய்யவும் மாட்டோம்,” என்று தெரிவித்த அவர், “நாங்கள் உதவி தேவைப்படும் ஒரு நண்பருக்கு உதவ வந்துள்ளோம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஆனால் அடுத்த மூச்சிலேயே அவர், செவ்வாயன்று அறிவிக்கப்பட்டதற்கு கூடுதலாக ஏனைய என்ன பயிற்சிகள் தேவைப்படும் என்பதை அவரது அதிகாரிகள் பார்த்து வருவதாக ஒப்புக் கொண்டார்.

உக்ரேனிய அரசாங்கம் அனைத்து விதமான இராணுவ சாதனங்களையும் கோரி உள்ளது என்பதையும் தெரிவித்த அவர், ஆனால் "இந்த கட்டத்தில்" எந்தவொரு பிரிட்டிஷ் இராணுவ வழங்கீடுகளும் "உயிர்பறிக்காத" சாதனங்களாகவே இருக்கும் என்று வலியுறுத்தினார். இது உண்மையில் "உயிர்பறிக்காத" வழங்கீடுகளுடன் கனரக ஆயுதங்களும் ஆக்கபூர்வமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்பதற்கு ஒரு அறிகுறியாகும்.

எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்கனவே நிலைகுலைந்து போயுள்ள ரஷ்ய பொருளாதாரம் மீது பரந்த தடைகளை விதிப்பது குறித்து ஆராய கேமரூன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்புவிடுத்தார்.

நிழல் பாதுகாப்பு மந்திரி (Shadow Defence Minister) கெவன் ஜோன்ஸின் கருத்துப்படி, உக்ரேனுக்கு பிரிட்டிஷ் துருப்புகளை அனுப்பும் அவரது நடவடிக்கையை தொழிற் கட்சி ஆதரிக்கிறது. தலையீட்டை கூடுதலாக அதிகரிப்பதற்கு ஓர் அழைப்பாக இருக்கக்கூடிய ஒன்றில், அவர், உக்ரேன் மீதான "பரந்த நேட்டோ மூலோபாயத்துடன்" அந்த திட்டம் எவ்வாறு பொருந்துகிறது என்றும், “அந்த அனுப்புதலின் ஒட்டுமொத்த நோக்கம் என்ன மற்றும் எவ்வளவு காலத்திற்கு அது திட்டமிடப்பட்டுள்ளது" என்றும் கேள்வி எழுப்பினார்.

செவ்வாயன்று உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோ அபு தாபியில் IDEX இராணுவ வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்ட போது, ஐக்கிய அரபு எமிரேட்டுடன் இராணுவம் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவிற்கான ஓர் உடன்படிக்கையிலும் கையெழுத்திட்டார்.

ஓராண்டுக்கு முன்னர் பேர்லின் மற்றும் வாஷிங்டன் ஆதரவில் பாசிச-தலைமையிலான ஆட்சிகவிழ்ப்பு சதிக்குப் பின்னர் அந்நாட்டின் கிழக்கு உற்பத்தி பகுதி தோற்றப்பாட்டளவில் பிரிந்து போனதை அடுத்து, உக்ரேன் அதன் இராணுவ படைகளுக்கு புதிய வினியோகஸ்தர்களை காண நிர்பந்திக்கப்பட்டுள்ளது. அதன் இராணுவ படைகளை நவீனப்படுத்துவதை தீவிரப்படுத்த பத்து மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களில் உக்ரேனிய நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளதாக பொறோஷென்கோ தெரிவித்தார்.

உலகின் நான்காவது மிகப்பெரிய ஆயுதங்கள் வாங்கும் நாடாக விளங்கும் UAE, பிரதானமாக அமெரிக்காவிடமிருந்தும் மற்றும் அதற்கு சற்று குறைந்து பிரான்சிடமிருந்தும் ஆயுதங்கள் வாங்கி வருகிறது. இவ்விதத்தில் உக்ரேன் மற்றும் UAEக்கு இடையிலான எந்தவித இராணுவ உடன்படிக்கையும் அமெரிக்காவின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டி உள்ளது.

அடிமை-போன்ற நிலைமைகளில் வாழ நிர்பந்திக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர் சக்தியை சார்ந்திருக்கும் அந்த அரை-நிலபிரபுத்துவ வளைகுடா முடியாட்சி, தலா ஒருவருக்கான ஆயுதம் என்ற வரையறைகளில், இந்த பூமியிலேயே மிகவும் கனரக ஆயுதமேந்திய நாடாகும். அது அதன் சொந்த பாதுகாப்பு உற்பத்தி தகைமையைக் கட்டமைக்க முயன்றுள்ளதுடன், அது கொசோவோ மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்பியும், லிபியா, ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழி தாக்குதல்கள் நடத்தியும் பகிரங்கமாகவே அதிகளவில் இராணுவ பாத்திரம் வகித்துள்ளது.

IDEX வர்த்தக கண்காட்சியில் பொறோஷென்கோ செய்தியாளர்களிடம் பேசுகையில், வாஷிங்டன் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்க ஒப்புக் கொள்ளுமென நம்புவதாக தெரிவித்தார். அவர் அந்த கண்காட்சியில் பெண்டகனின் ஆயுதங்கள் வாங்கும் துறையின் தலைவர் பிராங்க் கென்டாலைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வாஷிங்டன் உடனான அவரது பேச்சுவார்த்தைகள் குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் மிகவும் நடைமுறைரீதியிலான பேச்சுவார்த்தையில் உள்ளோம், அண்மித்த எதிர்காலத்தில் எங்களுக்கு பாதுகாப்பு ஆயுதங்கள் பெறுவதில் உதவ நாங்கள் முடிவெடுப்போம் என நம்புகிறோம்,” என்றார்.