சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: SEP election campaign reveals widespread disillusionment with main political parties

இலங்கை: சோசக தேர்தல் பிரச்சாரமானது பிரதான அரசியல் கட்சிகள் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துகிறது

By our correspondents
22 December2014

Use this version to printSend feedback

 சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும், கடந்த இரண்டு வாரங்களாக நாடு முழுவதும் பல பகுதிகளில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவுக்காக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டர். கொழும்பு, கண்டி, சிலாபம், கம்பஹா மற்றும் ஹட்டனிலும் பிரச்சாரங்களுடன் பொதுக் கூட்டங்களும் நடைபெற்றன. பிரச்சாரகர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஆயிரக்கணக்கான பிரதிகளையும் கட்சி இலக்கியங்களையும் வினியோகித்தனர்.

தேர்தல் ஜனவரி 8 இடம்பெறவுள்ளது. விஜேசிறிவர்தன தவிர, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சிகளின் "பொது வேட்பாளர்" மைத்திரிபால சிறிசேன உட்பட 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஒரு பிரபலமான சிங்கள சேவையான தெரண தொலைக்காட்சி, டிசம்பர் 10 அன்று விவாத மேடையில் பங்கேற்க விஜேசிறிவர்தனவுக்கு சந்தர்ப்பம் அளித்திருந்தது. அவரால் சுமார் 10 நிமிடங்கள் கட்சி கொள்கையை விளக்க முடிந்தது. தங்கள் கொள்கைகளை ஒளிபரப்புவதற்கு வேட்பாளர்களுக்கு உள்ள உரிமையை பயன்படுத்தி, விஜேசிறிவர்தன சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய தொலைக்காட்சியில் சோசக பிரச்சாரம் பற்றி சுமார் 30 நிமிடங்கள் உரையாற்றினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் அவருக்கு 15 நிமிடங்கள் வழங்கியது.

சிலாபத்தில் பிரச்சாரம்

மக்கள் நுகர்வுப் பொருட்களின், குறிப்பாக எரிபொருள்களின் விலை அதிகரிப்பு தொடர்பாக இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த விலை அதிகரிப்புகள் சிலாபம் பகுதியில் படகுகளின் இயக்க செலவை அதிகரித்ததன் மூலம் பல மீனவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.

http://www.wsws.org/asset/506a10c5-c8bb-40d5-8de3-d3d64cb1245B/Speaking+to+Chilaw+fishermen.jpg?rendition=image480
சிலாபத்தில் மீனவர்களுடன் கலந்துரையாடுகின்றனர்

"இது முந்தைய தேர்தல் போலல்ல. யார் ஜனாதிபதியானாலும் சாதாரண மக்களுக்கு எந்த நல்லதும் நடக்காது. நிலமை இன்னும் மோசமாகிவிடும்," என ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கூறினார். அவர் இப்போது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு சிறிய கடையை வைத்துள்ளார்.

"அபிவிருத்தி திட்டங்களை பற்றியே அரச தொலைக்காட்சி பேசுகிறது. ஆனால் எங்களால் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியவில்லை. எங்களால் பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்க முடியவில்லை. எங்களால் சுகயீனத்துக்கு மருந்து வாங்க முடியவில்லை. கடந்த காலத்தில் போலல்லாமல், தேர்தல் பிரச்சாரத்துக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களால் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களால் கூட பெருந்தொகையான பணம் செலவிடப்படுகின்றது. "

சோசலிச சமத்துவக் கட்சி தவிர வேறு எந்த கட்சியும் மூன்றாம் உலகப் போர் ஆபத்தைப் பற்றி பேசவில்லை என்று அவர் கூறினார். "ஆனால் நாம் டீவியில் வெளிநாட்டுச் செய்திகளைப் பார்க்கும்போது, குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் உக்ரேன் யுத்த நிலைமைகளைப் பார்க்கும்போது, நடப்பவை பற்றி எங்களுக்கு கொஞ்சமாவது விளங்குகிறது. இந்த நாட்டில் உள்ள ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் இதில் கவனம் செலுத்துவதே இல்லை. ஏழை மக்களுக்கு யுத்தம் தேவையில்லை, அது முதலாளிகளுக்கே வேண்டும். "

சிலாபம் அருகே அலுத்வத்தையில் ஒரு சிறிய படகு ஓட்டுபவர், அரசாங்கம் 2012ல் எரிபொருள் விலைகளை 50 சதவீதம் வரை அதிகரித்த பின்னர் மீனவர்கள் முகம் கொடுக்கும் நிலைமையை விளக்கினார். விலை அதிகரிப்புக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்திய போது போலீஸ் அவர்களை சுட்டதை அவர் நினைவுபடுத்தினார். அவரது சக ஊழியர்களில் ஒருவரான அந்தோணி பெர்னாண்டோ கொலை செய்யப்பட்டார். "இப்போது தேர்தல் நெருங்குவதால் அவர்கள் எரிபொருள் விலைகளை குறைக்கின்றனர்," என அவர் இகழ்ச்சியுடன் கூறினார்.

பல்கலைக்கழக மாணவர்கள்

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள், இலங்கையின் அரசியல் விவகாரங்களில் அமெரிக்க தலையீடு தீவிரமடைவதில் கவனத்தை செலுத்தினர்.

மத்திய மலையகப் பகுதியில் பதுளையைச் சேர்ந்த இரண்டாவது ஆண்டு மாணவனான தனுஷ்க, விவசாயிகளான தனது பெற்றோர் தொடர்ந்தும் நட்டத்தை எதிர்கொண்டதனால், அவர் மாத செலவுகளை 6,000 ரூபாய் (45 அமெரிக்க டொலர்) வரை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக விளக்கினார். "பட்டம் பெற்ற பிறகும் எங்களுக்கு நல்ல வேலை கிடைக்காது. நான் சிறந்த வாய்ப்புக்கள் பெற்றுக்கொள்வதற்கு பட்டய கணக்காளர்கள் போன்ற பரீட்சைகளை மேலதிகமாக செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது," என்று அவர் கூறினார்.

தேர்தல் பற்றி பேசும் போது, தனுஷ்க கூறியதாவது: அரசாங்கம் [பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான] யுத்தத்தின் வெற்றியை பயன்படுத்திக்கொள்கின்றது. அது நாட்டில் ஜனநாயகத்தை நசுக்கி வருகிறது. மக்கள் எதிர்ப்புக்காக பொது வேட்பாளருக்கு வாக்களிக்கலாம், ஆனால் அவர்கள் அதிகாரத்திற்கு யார் வந்தாலும் இழக்க நேரிடும். எல்லா அரசாங்கங்களும் மக்களை ஏமாற்றுகின்றன. நான் அரசியலில் அதிருப்தியடைந்துள்ளேன்."

ஏகாதிபத்திய தலைவர்களின் அதிகார வெறியின் விளைவே போர் உந்துதல் என்று தனுஷ்க கூறினார். தனியார் சொத்துடைமைக்கும் சமூகமயப்படுத்தப்பட்ட உற்பத்தி முறைக்கும், மற்றும் உலகப் பொருளாதாரத்துக்கும் தேசிய அரசுகளுக்கும் இடையேயான முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் இருந்தே போர் அச்சுறுத்தல் எழுகிறது என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் விளக்கத்தால் அவர் ஈர்க்கப்பட்டார்.

ஐவைஎஸ்எஸ்இ ஆதரவாளர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் பேரில் திணிக்கப்பட்ட சமூகநலத் திட்ட வெட்டுக்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களையும் சந்தித்தனர். எவ்வாறெனினும், அவர்கள் வலதுசாரி எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ), மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் நவசமசமாஜக் கட்சி  போன்ற போலி இடது அமைப்புக்களால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரத்தின் மூலம் "எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர்" சிறிசேனவுக்கு ஆதரவு கொடுப்பதன் பக்கம் திருப்பிவிடப்பட்டுள்ளனர்.

முன்னாள் இராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரான சிறிசேன, வாஷிங்டனின் மறைமுகமான ஆதரவுடன், எதிர்க்கட்சியான யூஎன்பீ தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினதும் தூண்டுதலின் மூலம் ஆளும் கட்சியில் இருந்து வெளியேறினர். அவர் வேட்பாளரானது, சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் பாதையில் பயணிக்கும் ஒரு அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் இலக்கிலேயே ஆகும்.

இரத்மலானை புகையிரத தங்குமிடம்

கொழும்பு புறநகர் பகுதியில் இரத்மலானை இரயில் வேலைத் தளங்களுக்கு அருகில் இரயில் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்கு பிரச்சாரக் குழு சென்றிருந்தது. நூற்றுக்கணக்கான இரயில் தொழிலாளர்கள் இந்த வீடுகளில் வாழ்கின்றனர். இந்த கட்டிடங்கள் மிக மோசமாக சேதமடைந்து திருத்தப்படவேண்டி இருந்தாலும், அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

http://www.wsws.org/asset/fcf8b20d-89e4-47f3-9614-a2bfb2f0e13O/Campaigner+explain+SEP%27s+policies+to+young+railway+workers.jpg?rendition=image480
சோசலிச சமத்துவக் கட்சியினர் இளம் இரயில்வே தொழிலாளியுடன் கலந்துரையாடுகின்றனர்

இரயில் தொழிலாளர்கள் உண்மையான ஊதியங்கள் குறைந்துள்ளமை பற்றி தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். விலைவாசி அடிக்கடி அதிகரிக்கும் அதேவேளை, தனது சம்பளம் கடந்த பல ஆண்டுகளாக கிட்டத்தட்ட அதே நிலையிலேயே இருப்பது ஒரு தொழிலாளி சுட்டிக் காட்டினார். பல இரயில் ஊழியர்கள் அதிகம் சம்பாதிக்க இரவு பகலாக வேலை செய்கின்றனர்.

இராஜபக்ஷ, சிறிசேன ஆகிய இரண்டு பிரதான வேட்பாளர்களைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், இருவருக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்பது எமக்குத் தெரியும். ஆனால் நாம் என்ன செய்ய முடியும்? நான் என்ன நினைக்கிறேன் என்றால், இராஜபக்ஷ எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்வார், மற்றும் ஒடுக்குமுறையை தொடர்வார்.” “ஒரு தொழிலாள வர்க்க வேட்பாளரை நிறுத்தியதற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன்என அவர் சோசலிச சமத்துவக் கட்சியை மெச்சினார்.

இரயில் துறை வீட்டில் தனது சகோதரரின் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் டயலொக் (ஒரு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின்) நிறுவனத்தின் தொழிலாளி கூறியதாவது: "டயலொக் எங்களை போன்றவர்களை வேலைக்கு அமர்த்த ஒரு தனியான மனித வள நிறுவனம் ஒன்றை அமைத்துள்ளது. இப்போது இந்த நிறுவனம் மூலம் பல நூறு தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.." அவர் ஒரு ஒப்பந்த தொழிலாளியாக எட்டு ஆண்டுகளாக வேலை செய்திருக்கிறார் மற்றும் எந்த நேரத்திலும் அவர் அகற்றப்படலாம். சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்களின் கருத்தைக் கேட்ட பின்னர், "இராஜபக்ஷவோ அல்லது சிறிசேனவோ இந்த அடக்குமுறை நிலைமையை மாற்றுவார்கள் என்று நான் உணரவில்லை," என்றார். சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் நிதிக்கு பங்களிப்பு செய்த அவர், சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தை படித்துவிட்டு அதன் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதைப் பற்றி முடிவெடுப்பதாகக் கூறினார்.

இரயில் தொழிலாளியின் மனைவியான பிரசாதிகா, எமக்கு நிச்சயமாக ஒரு மாற்றம் வேண்டும் ஆனால் எவர் அதிகாரத்திற்கு வந்தாலும் ஒரு மாற்றம் வரும் என்று எந்த உத்திரவாதமும் இல்லை. எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர், அவர்களை படிக்க வைக்கவும் பிற செலவுகளுக்கும் குறைந்தபட்சம் 40,000 ரூபா தேவை. வாழ்க்கை ஒவ்வொரு நாளும் கடினமாகி வருகிறது," என்றார்.

உலக போர் ஏற்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், உள்நாட்டு நிலைமைகள் வெளியில் உலக நிலைமைகளோடு சேர்ந்தே தீர்மானிக்கப்படுகின்றன என்பதை ஒத்துக்கொள்கிறேன். என் கேள்வி, ஒரு உலக போரரை நிறுத்துவது எப்படி?" என்று கேட்டார். சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்கள், சோசலிசத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை விளக்கியபோது அவர் கவனத்துடன் கேட்டார்.

ஒரு இரயில் தொழிலாளியின் மகனான பாடசாலை மாணவன் கூறுகையில், நான் தொலைக்காட்சியில் அமெரிக்க படைகள் நடத்திய பேரழிவு குண்டுத் தாக்குதல்களை பார்த்தேன், நாம் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்த என்ன செய்ய முடியும் என்று திகைத்தேன். நீங்கள் சொல்வதை கேட்ட பின்னர், நாம் ஒன்றிணைய வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டேன்," என்றார். அவர் இணைய தளத்தை படிப்பதாகவும் சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டங்களில் பங்குபற்றுவதாகவும் கூறினார்.