சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Opposition presidential candidate to implement austerity

இலங்கை: எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சிக்கனத் திட்டங்களை செயல்படுத்தவுள்ளார்

By K. Ratnayake
4 December 2014

Use this version to printSend feedback

சுமார் 36 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களும் திங்களன்று எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஜனவரி 8 நடக்கவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான இந்த கூட்டணியானது சிறிசேன வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு முடிவுகட்டுவார் என்று நம்ப வைத்து வாக்காளர்களை ஏமாற்றுவதை இலக்காகக் கொண்ட ஒரு வஞ்சத்தனமான முயற்சியாகும்.

"நியாயம், ஜனநாயகம் மற்றும் மக்கள்-நட்பு அரசாங்கத்துக்கான ஒரு பொது மக்கள் நிகழ்ச்சி நிரல்", என்ற அடிப்படையிலான இந்த கூட்டணி, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கட்டளைப்படி ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ இரக்கமற்று முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைகளை தொடர்வதற்கு உறுதிபூண்டுள்ளது. அதே சமயம், அது அமெரிக்காவுடனும் சீனாவிற்கு எதிரான அதன் ஆக்கிரோஷமான "ஆசியாவில் முன்னிலை" கொள்கையுடனும் நெருக்கமாக அணிசேர்ந்துள்ளது.

புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட கட்சிகளில் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ) மற்றும் 2010 தேர்தலில் இராஜபக்ஷவுக்கு எதிராக பொது வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும் அடங்கும். ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீலசுக) ஒரு முக்கிய புள்ளியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இந்த கூட்டணியை ஏற்பாடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டதோடு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டுள்ளார்.

யூஎன்பீ தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் உதவியுடன் குமாரதுங்கவால் தூண்டிவிடப்பட்ட அரசியல் சதியில், பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து நவம்பர் 21 சுகாதார அமைச்சர் பதவியை விட்டு வெளியேறிய சிறிசேன, தான் இராஜபக்ஷவுக்கு எதிராக பொது வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தார். சீனாவுடனான இராஜபக்ஷவின் உறவுகளை எதிர்க்கும் அமெரிக்கா, நிச்சயமாக இதைப்பற்றி தெரிந்து வைத்திருந்திதருக்கும் மற்றும் ஒரு புது ஜனாதிபதியை கொண்டுவர இந்த சூழ்ச்சியை அங்கீகரித்திருக்கும் (பார்க்க: "இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான வாஷிங்டனின் சூழ்ச்சி").

தொழிலாளர்களின் மற்றும் ஏழைகளின் அரசாங்க எதிர்ப்பு சீற்றத்தை சுரண்டிக் கொள்ளும் நோக்கத்தோடு, எதிர்க்கட்சி கூட்டணியானது தனது முக்கிய நோக்கம் "சட்டத்தின் ஆட்சி முறிவு", "ஜனநாயக உரிமைகள் பறிப்பு," "சமூக ஏற்றத்தாழ்வுகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் அகலப்படுத்துதல்" போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும் என்று அறிவிக்கிறது. வேறுபட்ட இன மற்றும் மங்களுக்கு இடையில் அதிகரித்து வரும் விரோதம் மற்றும் அவநம்பிக்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்" என்றும் அது கூறுகின்றது.

ஜனதிபதிக்கு பரந்த அதிகாரங்களை கொடுக்கும் நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையையும், மற்றும் இராஜபக்ஷவின் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக்கொள்ளவும் மற்றும் மூன்றாவது முறையாகவும் பதவியில் இருக்க அருக்கு வசதியளிக்கும் 18வது அரசியலமைப்பு திருத்தத்தையும் அகற்றுவதாக இந்தக் கூட்டணி சபதம் பூண்டுள்ளது. முன்னதாக, ஜனாதிபதிக்கு இரண்டு பதவிக் காலங்கள் மட்டுமே இருந்தன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வாக்குறுதிகள் அடங்கிய நீண்ட பட்டியலும் அடங்கியுள்ளது: "ஒடுக்குமுறையான வாழ்க்கைச் செலவு சுமையை குறைக்க பொது மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு,” “வருமானம் குறைந்தவர்கள் மற்றும் வறியவர்களுக்கும் மற்றும் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள், முதியவர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஊனமுற்ற நபர்களுக்கும் ஒரு சிறந்த சமூக பாதுகாப்பு வலையமைப்பை ஏற்படுத்துவதன் மூலம்"பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் வலுப்படுத்தவும் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை மீண்டும் உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு புதிய அரசாங்கமானது "ஒரு நாகரீக மற்றும் தார்மீக சமூகத்தை உருவாக்குவதோடு, குறிப்பாக முன்னெப்போதும் இல்லாத ஆழத்தில் மூழ்கிவிட்டுள்ள நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை சீர்திருத்தம் செய்யும் " என்றும் ஆவணம் கூறுகின்றது.

இந்த வாக்குறுதிகள் அனைத்தும் போலியானவை. சிறிசேன, குமாரதுங்கவின் கீழும் பின்னர் இராஜபக்ஷவின் கீழும் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலம் அமைச்சராக பணியாற்றினார். அவர் உழைக்கும் மக்களின் சமூக உரிமைகள் மீதான அவற்றின் திட்டமிட்ட தாக்குதல்களை ஆதரித்ததோடு குறிப்பாக பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நச்சுத்தனமான இனவாத யுத்தத்தின் போது ஒவ்வொரு குற்றத்தையும் ஆதரித்தார்.

யூஎன்பீயும் தொழிலாள வர்க்க விரோத சாதனைகளைச் செய்துள்ளது. 1970களின் பிற்பகுதியில் சந்தை-சார்பு மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை அறிமுகப்படுத்திய அது, இனவாதத்தை ஊக்குவிக்கவும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் வேண்டுமென்றே நீண்டகால தமிழர் விரோத உள்நாட்டு யுத்தத்தை தூண்டிவிட்டது. எதிர்க்கட்சி கூட்டணியானது இராஜபக்ஷ அரசாங்கத்தை விட உழைக்கும் மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதில் இன்னும் ஈவிரக்கமற்றதாக இருக்கும்.

சிறிசேன "பொதுநல அரசை மீண்டும் நிலைநிறுத்துவதாக" வாக்குறுதியளித்தாலும், தனது பொருளாதார கொள்கைகளை விளக்கியிருக்கவில்லை. நவம்பர் 29, யூஎன்பீ தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறியதாவது: "நாங்கள் ஒரு அரசாங்கத்தை அமைக்கும் போதும் எமது பொருளாதார கொள்கை திறந்த பொருளாதாரமாக இருக்கும்.இது, அவர் ஆட்சியை கைப்பற்றினால், அவர் பெரும் வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இலாபங்களை தூக்கிநிறுத்தும் அதேவேளை, தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை கடுமையாக வெட்டிக் குறைப்பதை தொடர்வதாக பெருநிறுவன உயரடுக்கிற்கு முன்ன்றிவித்தல் கொடுப்பதாகும்.

நாட்டின் ஆட்டங்கண்டுள்ள பொருளாதாரத்தை தொடரும் உலகப் பொருளாதார வீழ்ச்சி பாதிக்கும்போது, இலங்கை ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினதும் நிகழ்ச்சி நிரல் இதுவே ஆகும். இராஜபக்ஷவின் குடும்ப ஆட்சி மற்றும் எதேச்சதிகார ஆட்சி முறைகளால் ஓரங்கட்டப்பட்டுள்ள அரசியல் மற்றும் வணிகத் தட்டினர் சார்பாகவே இந்த எதிரணி பேசுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், எதிரணிக்கும் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாட்டுக்கான கருப் பொருளா இருக்கும் வெளியுறவுக் கொள்கை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. 2006ல் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு முழுமையாக ஆதரவளித்த போதிலும், அமெரிக்க இலங்கை அரசாங்கத்தை சீனாவிடம் இருந்து தூர விலக்குவதற்கு நெருக்குவதன் பேரில் அதன் போர்க்குற்றங்களுக்கு அதன் பொறுப்பை பயன்படுத்திக்கொள்ள முயறசிக்கின்றது. பெய்ஜிங் உடனான இராஜபக்ஷவின் உறவு, பொருளாதார தடைகள் மற்றும் அமெரிக்க, ஐரோப்பாவில் உள்ள முக்கிய சந்தைகளில் ஏற்றுமதி இழப்பு உட்பட தண்டனை நடவடிக்கைகளை விளைவாக்கலாம் என்று அஞ்சும் இலங்கை ஆளும் உயரடுக்கின் ஒரு கணிசமான பகுதியையே எதிரணி பிரதிநிதித்துவம் செய்கின்றது.

.நா. மனித உரிமைகள் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள சாத்தியமான போர் குற்றச்சாட்டுக்கள் மற்றும் இந்த ஆண்டு அமெரிக்காவின் தீர்மானத்தின் விளைவாக வரும் சர்வதேச விசாரணை பற்றி சிறிசேனவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அவர் "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரைகளை அமல்படுத்த" உறுதியளித்தார். இராஜபக்ஷ, இலங்கை இராணுவம் செய்த போர்க்குற்றங்களை மூடிமறைக்க மற்றும் சர்வதேச விமர்சனங்களை திசைதிருப்ப நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்திருந்தாலும், பின்னர் அதன் மட்டுப்படுத்தப்பட்ட பரிந்துரைகளையும் அலட்சியம் செய்தார்.

தான் பரிந்துரைகளை முன்னெடுப்பதாக பிரகடனம் செய்வதன் மூலம், சிறிசேன வெளியுறவுக் கொள்கையில் வாஷிங்டன் பக்கம் ஒரு மாற்றத்தை செய்துள்ளதோடு, அதனுடன் சேர்த்து நாட்டின் தமிழ் ஆளும் கும்பலுக்கும் அழைப்புவிடுத்துள்ளார். தமிழ் முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளுடன் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை ஏற்படுத்தும் ஒரு "அரசியல் தீர்வைக்" காண்பதும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்றாகும்.

அதே நேரத்தில், சிறிசேன, சமீபத்தில் இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறிய சிங்களம்-பெளத்த அதிதீவிரவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய உடனும் ஒரு தனி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அவர் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கும் மற்றும் சமஷ்டி முறை ஆட்சியை எதிர்க்கும் இலங்கை அரசியலமைப்பின் இனவாத பிரிவுகளை பேணுவதற்கும் உறுதியளித்தார் -- வேறுவிதமாகக் கூறினால் தமிழ் ஆளும் கும்பலுக்கு எந்த ஒரு சலுகையையும் கொடுக்க முடியாது  என்பதாகும். ஜாதிக ஹெல உறுமய இனவாதிகளுடன் தன்னை சேர்த்துக்கொள்வதன் மூலம், "பல்வேறு இன மற்றும் மத சமூகங்களுக்கு இடையே சகவாழ்வு மீதான கடுமையான அழுத்தத்துக்கு முடிவுகட்டும் எண்ணம் தனக்குகிடையாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

எதிர்க் கட்சிகளின் ஒப்பந்தமானது "அனைத்துக் கட்சி அரசாங்கமொன்றை" இரண்டு ஆண்டுகளுக்கு அமைக்க அழைக்கிறது. அனைத்து கட்சிகளுக்கும் - தற்போது இராஜபக்ஷவின் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் உட்பட- அழைப்பு விடுப்பதானது இலங்கையில் அரசியல் நெருக்கடியின் ஆழத்தை கூட்டணி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது கொடூரமான புதிய பொருளாதார சுமைகளை திணிப்பதானது, பரந்த எதிர்ப்புக்கள் மற்றும் சமூக அமைதியின்மையை ஏற்படுத்தும் என்று ஆளும் வட்டத்தில் பீதி  கிளம்பியுள்ளது. "தேசிய ஐக்கிய அரசாங்கமானது" தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க பொலிஸ்-அரச வழிமுறைகள் உட்பட எல்லாவற்றையும் பயன்படுத்துவதற்கு, கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் அனைவரையும் ஒன்றுசேர அழைப்புவிடுப்பதாகும்.