சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The collapse of the Greek government

கிரேக்க அரசாங்கத்தின் பொறிவு

Alex Lantier
31 December 2014

Use this version to printSend feedback

திங்களன்று பிரதம மந்திரி அன்டோனிஸ் சமரஸினது கூட்டணி அரசாங்கத்தின் பொறிவு, கிரீஸில் ஆளும் வர்க்க நெருக்கடியில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.

நாடாளுமன்றம், சமரஸின் ஜனாதிபதி வேட்பாளர் ஸ்டாவ்ரோஸ் டிமாஸை (Stavros Dimas) அங்கீகரிக்க மறுத்தமை, அரசாங்கம் வீழ்ந்ததோடு ஒரு புதிய பொதுத் தேர்தலுக்கும் நிர்பந்திக்கப்பட்டது. ஆளும் வர்க்கம் கிரீஸிலும் ஐரோப்பாவெங்கிலும் சிக்கன நடவடிக்கையை தொடர்வதை அனுமதிக்க, ஒரு புதிய அரசியல் அமைப்பை ஜோடிக்கும் முயற்சியுடன் பிணைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய இந்த "முக்கூட்டால்" (troika) கோரப்பட்ட மூர்க்கமான சிக்கன நடவடிக்கைகளின் ஆண்டுகள், கிரேக்க தொழிலாளர்களை வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மைக்குள் தூக்கி வீசியுள்ளன, அதேவேளையில் அந்நாட்டை நாசகரமாக சீரழித்துள்ள பொருளாதார நெருக்கடியை ஆழப்படுத்தி உள்ளன. அதன் பொருளாதாரம் 25 சதவீதம் சுருங்கி உள்ளது; மில்லியன் கணக்கானவர்கள் சுகாதார பாதுகாப்பை இழந்துள்ளனர்; ஊதியங்கள் 30 சதவீதம் அல்லது கூடுதலாக வெட்டப்பட்டுள்ளன; வீடற்ற நிலைமையும் தடுக்கக்கூடிய நோய்களும் வேகமாக பரவி வருகின்றன; மேலும் பத்தில் ஆறு இளம் கிரேக்கர்கள் வேலையின்றி உள்ளனர்.

தொழிலாளர்களும் இளைஞர்களும் அவர்களது வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலை எதிர்ப்பதற்காக செய்த ஒவ்வொரு முயற்சியும் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன அல்லது ஒடுக்கப்பட்டுள்ளன. முதலாளித்துவ ஆட்சியின் பாரம்பரிய கட்சிகள் ஆழமாக செல்வாக்கிழந்துள்ளன. சமரஸினது புதிய ஜனநாயகம் மற்றும் சமூக ஜனநாயக PASOK கட்சிகள் பெரும் பெரும்பான்மை மக்களின் பார்வையில் மதிப்பிழந்து போயுள்ளன.

இத்தகைய நிலைமைகளின் கீழ் தான் ஆளும் வர்க்கம், ஒரு புரட்சிகர நெருக்கடியைத் திசைதிருப்பும் முயற்சியில், “தீவிர இடதின் கூட்டணி" எனும் சிரிசாவின் (SYRIZA) பக்கம் திரும்பி வருகிறது.

"சிக்கன நடவடிக்கைக்கு விரோதமானதாக" பிரபலப்படுத்தப்பட்டு வருகின்ற மற்றும் தன்னைத்தானே பிரபலப்படுத்திக் கொள்கின்ற இந்த சிரிசா, வெளியேறுவதற்கு ஏதேனும் பாதை வழங்குமென அங்கே கிரீஸின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஐயத்திற்கிடமின்றி நம்பிக்கை நிலவுகிறது. மே மாதம் ஐரோப்பிய தேர்தல்களில் வெற்றி பெற்ற அக்கட்சி, தற்போது அடுத்த மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் இருக்கிறது. “ஒருசில நாட்களில், சிக்கன நடவடிக்கை மூலமாக செய்யப்படும் பிணையெடுப்புகள் ஒரு கடந்தகால விடயமாகிவிடும்,” என்று வாக்குறுதி அளித்து அரசாங்கத்தின் பொறிவுக்கு சிப்ரஸ் விடையிறுப்புக் காட்டினார்.

சிரிசாவின் சர்வதேச கூட்டாளிகளின் பத்திரிகைகளை வாசித்து ஒருவர் தீர்மானத்திற்கு வருவாரேயானால், சிப்ரஸ் பிரதம மந்திரியாக ஆவதற்கான சாத்தியக்கூறு இரண்டாவது முறையாக லெனின் பதவிக்கு வருவதற்கு ஒப்பானதாக தெரியும். பிரான்சின் ஸ்ராலினிச தினசரி L’Humanité ஆர்மூட்டும் வகையில், “கிரேக்க வாக்காளர்கள் சிக்கன நடவடிக்கையின் ஒரு திருப்பத்திற்கு மிக நெருக்கத்தில் உள்ளனர்,” என்று எழுதியது, ஜேர்மனியின் Junge Welt எழுதுகையில், “இப்போது முதல்முறையாக, கிரேக்கர்கள் 'அரசியல்ரீதியில் இடது' என்று முத்திரை இடுவதற்கு உண்மையிலேயே தகுதியுடைய ஒரு கட்சியை அரசின் உச்சிக்கு தேர்ந்தெடுக்க முடியும்,” என்று எழுதியது.

இதைவிட உண்மைக்குப் புறம்பானது வேறொன்றும் இருக்காது. சிரிசாவும் சிப்ரஸூம் சர்வதேச மூலதனத்தின் ஆணைகளை முன்னெடுத்து செல்வதை உறுதிப்படுத்துவதுடன், ஐரோப்பா எங்கிலும் பரவுமென அச்சுறுத்துகின்ற வெகுஜன எதிர்ப்பலையை எதிர்கொள்ளும் வகையிலும், கிரீஸில் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதில் முன்னணி பாத்திரம் எடுப்பதை மிகவும் கவனமாக மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

யூரோ நெருக்கடி வெடித்திலிருந்து ஐந்து ஆண்டுகளில், சிரிசாவை கட்டுப்படுத்துகின்ற செல்வாக்குமிகுந்த மத்தியதர வர்க்க சக்திகள் கிரேக்க முதலாளித்துவ அரசியலுக்குள் ஒருங்கிணைந்துள்ளன, அவற்றின் சில பிரதிநிதிகள் அரசின் முக்கிய பதவிகளிலும் நியமிக்கப்பட்டனர். அக்கட்சி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தொடர்ச்சியாக அதன் பொறுப்புறுதியை வலியுறுத்தி உள்ளது, அது அதன் "வணிகத்திற்கு நேசமான" மற்றும் முதலாளித்துவ-சார்பிலான வேலைத்திட்டத்திற்கு அழுத்தமளிக்க முனைந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சிப்ரஸ் "தீவிர இடது" கட்சியுடன் ஒரு "செயல்பாட்டுக்குரிய நிறுவனமயப்பட்ட நட்புறவை" அபிவிருத்தி செய்யுமாறு நிறுவனங்களின் ஹெல்லினிக் கூட்டமைப்பை வலியுறுத்தினார். டிசம்பரில் ராய்டருடனான ஒரு நேர்காணலில் அவர் சிரிசாவின் தீவிர நிகழ்ச்சிநிரல் குறித்து "பீதியைப் பரப்புவதைக்" கண்டித்தார். அவர் கூறுகையில், “சிரிசாவின் ஒரு வெற்றி மோசமான பிழைகளை அகற்றி, சந்தைகளை விடுவிக்கும். அது பாதுகாப்பு உணர்வை உருவாக்கும்,” என்றார்.

சர்வதேச கொள்கையைப் பொறுத்த வரையில், அமெரிக்காவில் ஜனாதிபதி பராக் ஒபாமாவால் மேற்பார்வையிடப்பட்ட வங்கி பிணையெடுப்புகளை பாராட்டியவரான சிப்ரஸ், புரூக்ஸ் பயிலக சிந்தனைக்கூடத்தின் கூட்டத்தில் பங்கெடுக்க ஜூன் 2013இல் வாஷிங்டனுக்கு பயணம் செய்திருந்தார். அவர் பேர்லின், இலண்டன் மற்றும் பாரீஸில் உள்ள அரசியல் மற்றும் நிதியியல் பிரபலங்களுடன் ஆலோசனை நடத்தவும் பயணங்கள் மேற்கோண்டிருந்தார்.

சிரிசா மட்டுமே கிரீஸைக் காப்பாற்ற முடியுமென" அப்போது நியூ யோர்க் டைம்ஸ் கருத்து வெளியிட்டது. அது எழுதியது, சிரிசா பதவியேற்றால், “முக்கியமாக அமெரிக்காவிற்கு எதுவும் மாறாது. சிரிசா நேட்டோவிலிருந்து வெளியேறவோ அல்லது அமெரிக்க இராணுவ தளங்களை மூடவோ நோக்கம் கொண்டதல்ல.”

கிரேக்க கடனை மறுசீரமைக்கும் சிரிசாவின் பரிந்துரை வங்கிகளுக்கு நல்லதாகவே இருக்குமென டைம்ஸ் இறுதியில் தொகுத்தளித்தது: “பெரும்பாலான கிரேக்க கடன் ஐரோப்பிய வரிசெலுத்துவோரது மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் வசத்தில் உள்ளது என்பதை வங்கிகளும் தனியார் முதலீட்டு நிதியங்களும் அறிந்துள்ளன, மிஞ்சியிருப்பவை முதலீட்டாளர்களால் முறித்துக் கொள்ளப்பட்டு வருகிறது ஏனென்றால் அது செலுத்தப்பட்டுவிடுமென்பது அவர்களுக்குத் தெரியும்.”

ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்துவரும் பிரதான சவால் என்னவென்றால் அது முகங்கொடுக்கும் அரசியல் வேலைகளின் முக்கியத்துவத்தை அது புரிந்துகொள்ள வேண்டி உள்ளது. அங்கே வெடிப்பார்ந்த சமூக அதிருப்தி நிலவுகின்ற போதினும், ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் தலைமையைக் கட்டியெழுப்ப வேண்டியதே அதிஅவசர தேவையாக உள்ளது.

ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வெறித்தனமான கொள்கையையும், பழைய அரசியல் சமநிலையின் பொறிவையும் எது உந்திச் செல்கிறதென்றால், ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வரலாற்று தோல்வியாகும். ஆளும் வர்க்கம் செல்வவளத்தை தொழிலாள வர்க்கத்திடமிருந்து பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டுக்குப் பாரிய மறுபகிர்வு செய்வதன் மூலமாக இந்த நெருக்கடியை தீர்க்க தீர்மானகரமாக உள்ளது.

கிரீஸே ஐரோப்பா தழுவிய சமூக எதிர்புரட்சிக்கு முன்னிலையில் உள்ளது. ஸ்பெயினில் இருந்து அயர்லாந்து வரையில் இதேபோன்ற முறைமைகள் திணிக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஆளும் வர்க்கத்தின் அரசியல் அமைப்புகள், அரசாங்க கொள்கைகளை மாற்றும் முயற்சிகளுக்கு முற்றிலும் தடையாக இருப்பதை நிரூபித்துள்ளன.

ஒவ்வொரு முடிவும் மற்றும் ஒவ்வொரு அரசாங்கமும் மிகப்பெரிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் நலன்களுக்கு அடிபணிந்துள்ள இந்த உலகளாவிய பொருளாதார அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள்ளேஅதாவது புதிய ஜனநாயகம் மற்றும் PASOKக்கு குறைவில்லாமல் சிரிசாவும் நிபந்தனையின்றி பாதுகாக்கும் ஒரு அமைப்புமுறைக்கு உள்ளேயேஎதையும் தீர்க்க முடியாது.

ஐரோப்பிய ஒன்றியம் உட்பட தற்போதிருக்கும் அரசியல் பயிலகங்களை ஒரு தொழிலாளர்களது அரசு கூட்டமைப்பைக் கொண்டு, அதாவது ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளைக் கொண்டு பிரதியீடு செய்யும் ஒரு வேலைத்திட்டத்தைக் கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற ஐரோப்பா எங்கிலும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு போராட்டம் தான் முன்னோக்கிய பாதையாக உள்ளது. இந்த முன்னோக்கு அனைத்து முதலாளித்துவ பாதுகாவலர்களுக்கு எதிராகவும் கொண்டு செல்லப்பட வேண்டும்.

அதுபோன்றவொரு போராட்டத்தை நடத்துவதென்பது, கிரீஸிலும் ஐரோப்பா எங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பாகங்களைக் கட்டமைப்பதிலிருந்து பிரிக்கவியலாததாகும்.