சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

2014–2015: Results and prospects

2014-2015: விளைவுகளும் வாய்ப்புகளும்

David North and Joseph Kishore
5 January 2015

Use this version to printSend feedback

இருபத்தியோராம் நூற்றாண்டு இனியும் ஒரு புதுமையாக இருக்க போவதில்லை. நாம் புத்தாண்டை தொடங்கியுள்ள அதேவேளையில், 2015 மற்றும் அதற்கடுத்து வரவிருக்கும் ஆண்டுகளது சம்பவங்களின் இயல்பையும் திசையையும் தீர்மானிக்கவிருக்கும் பிரதான பொருளாதார, புவிசார் அரசியல் மற்றும் சமூக நிகழ்முறைகள் மற்றும் போக்குகளை நாம் அடையாளம் காணும் பொருட்டு, கடந்த பதினைந்து ஆண்டுகள் போதுமான அளவில் நமக்கு புள்ளிவிபரங்களை வழங்கியுள்ளன.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், முதலாளித்துவமும், முதலாளித்துவ ஜனநாயகமும் மனித சாதனைகளின் விஞ்சமுடியாத உச்சநிலையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக "வரலாறு முடிந்துவிட்டது" என்ற வெற்றி ஆரவாரவாதிகளின் கூற்றை, இருபத்தியோராம் நூற்றாண்டு இந்த பதினைந்து ஆண்டு காலயளவுக்குள்ளேயே மிகவும் தோல்விகரமான விதத்தில் மறுத்தளித்துள்ளது என்பதை முதலில் கூறியே ஆக வேண்டும். 2014 இன் முடிவில் தற்போதுள்ள பொருளாதார, அரசியல் கட்டமைப்புகள் மிகவேகமாக படுகுழிக்குள் மூழ்கிக்கொண்டிக்கின்றது

கடந்த ஆண்டின் போக்கினுள்முதலாம் உலக போர் வெடித்து ஒரு நூற்றாண்டு நிறைவு கண்ட அந்த ஆண்டில்முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகள் ஒரு திட்டவட்டமான குணாம்சத்தை பெற்றன. பெரும் நெருக்கடிகள்புவிசார் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள்வெடிப்பதற்கு இடைப்பட்ட "சமாதான" காலங்கள் மிகவும் இடைவெளி குறைந்து போயிருந்தன, அவற்றை இடைவெளிகளாகவே கூட அரிதாகவே கூற முடியும். மறுபுறம், நெருக்கடிகள் தனித்தனி "காலகட்டங்களாக" தென்படவில்லை, மாறாக கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சமகாலத்திய யதார்த்தத்தின் நிரந்தர அம்சங்களாக காணப்பட்டன. 2014 குணாம்சப்படுத்திய இடையறாத நெருக்கடியின் வடிவமைப்பு பூகோளமயப்பட்ட முதலாளித்துவ சமநிலை உடைவின் ஒரு உயர்மட்டத்தை குறித்துக் காட்டும் ஒரு இன்றியமையாத அறிகுறியாக விளங்கிய அது 2015இல் இன்னும் மேலதிக தீவிரத்துடன் தொடரும்.

சமகாலத்திய நெருக்கடியின் பிரதான அம்சங்களை நாம் மீளாய்வுக்கு உட்படுத்துவோம்.

1. 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுடன் தூண்டிவிடப்பட்ட பூகோளமயப்பட்ட பொருளாதார நெருக்கடி நீடித்து கொண்டிருக்கிறது. ஒரு பொருளாதார மீட்சிக்கு எந்த அறிகுறியும் இன்றி, உலகில்அனைத்தினும் மேலாக, அமெரிக்காவில்பங்கு விலை-நிர்ணய சந்தைகளில் பங்கு மதிப்புகள் தொடர்ந்தும் அதிகளவிலும் கட்டுப்பாடு மீறி உயர்ந்து வருவதன் குணாம்சம், முதலாவதாக பொருளாதார ஒட்டுண்ணித்தனத்தின் வெற்றியை மெய்பிக்கிறது. பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டிடம் தனிநபர் செல்வ வளமை திரள்வது, வரலாற்றுரீதியில் முன்பில்லாத அளவில், உற்பத்தி மதிப்பை உருவாக்கும் நிகழ்முறையிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. வோல் ஸ்ட்ரீட்டோ வெளிப்படையாகவே பெடரல் ரிசர்வ்விடமிருந்து முடிவில்லாமல் பணத்தைப் பெறும் பழக்கத்திற்கு வந்துள்ளது.

பங்கு மதிப்புகளின் உயர்வு என்பது தேக்கமடைந்து வரும் ஒரு "நிஜமான" பொருளாதாரத்திற்கு மேலே நடந்து வருகிறது. பொருளாதார வல்லுனர் பேரி ஐசன்கிரீன் Current Historyஇன் ஜனவரி 2015 பதிப்பில் பிரசுரமான ஒரு கட்டுரையில் குறிப்பிடுகையில்: "புத்தாண்டு உலக பொருளாதாரத்திற்கு மற்றொரு ஏமாற்றமளிக்கும் ஆண்டாக வடிவமெடுத்து வருகிறது," என்கிறார். அவர் குறிப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டீன் லகார்ட் சோர்வான உலக வளர்ச்சி விகிதங்களை "புதிய நடுத்தரமானவை" (new mediocre) என்று எடுத்துரைப்பதாக தெரிவிப்பதுடன், உலக பொருளாதாரம் பற்றிய இந்த விவரிப்பு அனேகமாக பெரிதும் அதீத நம்பிக்கையின் அடிப்படையில் உள்ளதாக எச்சரிக்கிறார். அங்கே உலக பொருளாதாரத்தில் வேகமான வளர்ச்சியை அனுபவித்து வரும் எந்தவொரு தேசிய அல்லது பிராந்திய துறையும் இல்லை.

ஐரோப்பாவில் 2014இன் பொருளாதார வளர்ச்சி மிகவும் அற்பமாக இருந்தது, அதன் மிகப்பெரிய பொருளாதாரமான ஜேர்மனி, ஒரு உத்தியோகப்பூர்வ பின்னடைவை இம்மியளவில் தவிர்த்திருந்தது. ரஷ்யா ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது, ரூபிள் தடையற்ற சரிவில் சென்றுள்ளது. ஆசியாவில் ஜப்பான் கடந்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் பின்னடைவுக்குள் வீழ்ந்தது, அதேவேளையில் சீனப் பொருளாதாரமோ கணிசமான அளவிற்கு மெதுவாகி வருகிறது.

அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகத்தால் தம்பட்டம் அடிக்கப்பட்ட "மீட்சி" என்பது, வீழ்ச்சி அடைந்துவரும் ஊதியங்கள் மற்றும் தொடர்ந்து கொண்டிருந்த பாரிய வேலைவாய்ப்பின்மைக்கு இடையே, நடைமுறையில் பாரிய பெரும்பான்மை மக்களுக்கு உரியதல்லாத ஒன்றாக உள்ளது. பூஜ்ஜியத்திற்கு அண்மித்த வட்டி விகிதங்கள் எந்தவிதமான குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் தூண்டிவிடுவதில் தோல்வி அடைந்துள்ளன. இலத்தீன் அமெரிக்க பொருளாதாரமும், "அபிவிருத்தி அடைந்துவரும்" நாடுகளின் பொருளாதாரமும் ஸ்திரமற்ற நிதியியல் மற்றும் மூலதன சந்தைகளால் கடுமையாக பாதிப்படையக் கூடியவையாய் உள்ளன.

2014இன் இறுதியில் எண்ணெய் விலைகளின் கூர்மையான வீழ்ச்சி, பகுதியாக, அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகளால் ரஷ்யாவைப் பலவீனப்படுத்த செய்யப்பட்ட திட்டமிட்ட முயற்சியின் ஒரு விளைவாகும். இருப்பினும் உலகெங்கிலும் பண்டங்களது ஒரு பொதுவான விலை வீழ்ச்சிக்கு அதுவொரு உட்கூறாக இருப்பதுடன், வீழ்ச்சி அடைந்துவரும் தேவை மற்றும் குறைந்த வளர்ச்சி மட்டங்களுடன் சம்பந்தப்பட்ட பணச்சுருக்க அழுத்தங்களைப் பிரதிபலிக்கின்றன. பூகோளமயப்பட்ட முதலாளித்துவம் "நீடித்த மந்தநிலைமையின்" பிரசவவேதனையில் உள்ளதென நம்புவதற்கு அங்கே போதிய காரணங்கள் இருக்கின்றன என்றும், அது "உலகின் பல மிகப்பெரிய பொருளாதாரங்களில் மாறுதல்கால பிரச்சினைகளின் ஒரு துரதிருஷ்டவசமான சங்கமத்தை அல்ல, மாறாக ஆழ்ந்துவேரூன்றிய கட்டமைப்பு காரணிகளினால் ஒரு நிரந்தர வேகக்குறைவைப் பிரதிபலிக்கிறது என்றும் ஐசன்கிரீன் குறிப்பிடுகிறார்.

2. ஒருபுறம் முதலாளித்துவ நிதியியல், உற்பத்தி மற்றும் சந்தைகளின் பூகோளமயப்பட்ட குணாம்சத்திற்கும், மறுபுறம், முதலாளித்துவம் வரலாற்றுரீதியிலும் அரசியல்ரீதியிலும் வேரூன்றியுள்ள தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான தீர்க்கவியலாத முரண்பாட்டில் வேரூன்றியுள்ள புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நெருக்கடி திடமாக நீடித்து வருவதால் தீவிரமடைந்துள்ளன. 1914 மற்றும் 1939 போலவே, ஏகாதிபத்திய சக்திகள், அவற்றின் போட்டியாளர்களை விலையாக கொடுத்து, உலக அரங்கில் "அவற்றின்" தேசிய அந்தஸ்தைப் பலப்படுத்த செய்துவரும் கடும் முயற்சிகளினூடாக, இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கு ஒரு வழியைக் காண முனைந்துள்ளன. இந்த மூர்க்கமான மற்றும் அபாயகரமான நிகழ்வுபோக்கிற்குள்ளே, அமெரிக்கா முதன்மை பாத்திரம் வகித்து வருகிறது. முடிவில்லாத "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பது, கடந்த ஒன்றரை தசாப்தத்தில், ஒரு வழிவகையாக மாறியுள்ளது அதைக் கொண்டு அமெரிக்கா அதன் எதிரிகளாகக்கூடியவர்களை திருப்பிதாக்கவும், உலகளாவிய மேலாதிக்கமாக அதன் அந்தஸ்தைத் தக்க வைக்கவும் முயன்று வருகிறது.

அமெரிக்காவின் பூகோள நடவடிக்கைகள் ஒரு மூர்க்கமான குணாம்சத்தை ஏற்றுள்ளன, அவை நாஜி ஜேர்மனி நடவடிக்கைகளுக்குடன் ஒப்பிடக் கூடியதாக உள்ளன. நாஜி ஜேர்மனி ஐரோப்பாவை "மட்டுமே" ஆள விருப்பமுற்றிருந்தது. அமெரிக்க ஆளும் வர்க்கமோ உலகையே ஆள விருப்பமுறுகிறது. 2014இன் போக்கில் ஒபாமா நிர்வாகம் இடையறாது, தோற்றப்பாட்டளவில் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் போரில் ஈடுபட்டிருந்தது அல்லது போருக்கான தயாரிப்புகளைச் செய்து வந்தது. ஆசியா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு, அவ்விதத்தில், உலகளாவிய மேலாதிக்க சக்தியாக அது பாத்திரம் வகிப்பதற்கு, சீனா ஓர் ஏற்க முடியாத தடையாக உள்ளது என்ற குற்றசாட்டே, வெர்ஜீனியாவின் லான்ங்லேயில் உள்ள பெண்டகன் மற்றும் சிஐஏ தலைமையகத்தின் நடவடிக்கைகளை வழிநடத்திச் செல்கிறது.

உக்ரேன் விவகாரத்தில் 2014இல் ரஷ்யா உடன் வெடித்த மோதல், இந்த உலகளாவிய மோதலில் வெறும் ஒரு காட்சி மட்டுமே ஆகும். யுரேஷிய பெருநிலப்பகுதியின் மீது அது கட்டுப்பாட்டைப் பெற்றால் ஒழிய, அதனால் ஆசியாவில் சீனாவுடன் கணக்குத் தீர்க்கவியலாது என்று அமெரிக்க ஆளும் வர்க்கம் நம்புகிறது. கியேவில் அமெரிக்க-ஆதரவு கைப்பாவை ஆட்சி நிறுவப்பட்டமை ரஷ்யாவுக்கு ஒரு தீர்க்கமான புவிசார்-அரசியல் பின்னடைவைச் சுமத்தவும், மற்றும் புட்டின் ஆட்சியை அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்குமாறு நிர்பந்தப்படுத்த அல்லது அதை மாற்றநோக்கமாக கொண்டதாகும்.

எவ்வாறிருப்பினும் உலக ஏகாதிபத்திய அரசியலில் அமெரிக்கா மட்டுமே ஒரேயொரு கதாபாத்திரம் கிடையாது. உள்நாட்டு நெருக்கடியால் பிளவுபட்டுள்ள போதினும் கூட, பிரிட்டன் அதன் பழைய ஏகாதிபத்திய மகிமையில் சில பகுதியையாவது திரும்ப பெற அமெரிக்காவுடனான "சிறப்பு உறவுமுறை" அதற்கு உதவுமென நம்புகிறது. பிரான்ஸ் வெறும் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் தான் குறிப்பாக ஈராக் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு ஒரு கடுமையான விமர்சகராக இருந்ததுஅது வாஷிங்டனின் பற்றுறுதியான கூட்டாளியாக மாறியுள்ளது. அது, பிரதி உபகார அடிப்படையில், வடக்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் பிரெஞ்சு சூறையாடல்களுக்கு அமெரிக்க ஆதரவைப் பெற முனைந்துள்ளது. நேட்டோவின் அனைத்து உறுப்பு நாடுகளுமே பசியெடுத்த ஓநாய்களின் கூட்டத்திற்கு ஒத்திருக்கின்றன, அவை ஏதாவதொரு இரையை வேட்டையாட பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பாவிலிருந்து ஆயிரக் கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கமோ, உற்சாகத்தோடு வாஷிங்டனின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்" கையெழுத்திட்டுள்ளது.

குறிப்பாக 2014இல் ஒரு குறிப்பிடத்தக்க அபிவிருத்தி, ஜேர்மனி மற்றும் ஜப்பானின் இலிருந்து மீள்எழுச்சி கண்டிருக்கும் ஏகாதிபத்திய அபிலாஷைகளாகும். அவை இரண்டுமே அவற்றின் இராணுவ படைகளை சர்வதேச அளவில் நிலைநிறுத்தவும் மற்றும் விரிவாக்குவதற்கும் திட்டங்களை உருவாக்கும் நிகழ்முறையில் உள்ளன. அவ்விரு நாடுகளும் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா உடன் தங்களைத்தாங்களே அணி சேர்த்துக் கொண்டிருக்கின்ற போதினும், அவற்றின் ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரல்களின் அபிவிருத்தி போக்கில், பேர்லின் மற்றும் டோக்கியோவில் கொள்கை முடிவெடுப்பவர்கள் தங்களைத் தாங்களே வாஷிங்டனுடன் மோதலில் காண்பார்கள் என்பதற்கு முற்றிலும் சாத்தியக்கூறு உள்ளதுஉண்மையில், பெரிதும் சாத்தியமாகக் கூடும்.

இந்த ஆண்டானது, பத்து மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையை அழித்த ஏகாதிபத்திய மோதலான இரண்டாம் உலக போர் முடிந்த எழுபதாவது நினைவாண்டைக் குறிக்கிறது. 1939 மற்றும் 1945க்கு இடையே, எதிரெதிர் ஏகாதிபத்திய சக்திகளின்பாசிச மற்றும் "ஜனநாயக" இரண்டினதுஆளும் மேற்தட்டுக்களும் முதலாளித்துவ ஒழுங்குமுறை எதற்கு தகைமை கொண்டதோ அந்த காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்திக் காட்டின. அது மட்டுமின்றி, உக்ரேனிய நெருக்கடியின் போக்கினூடாக, ஒரு மூன்றாம் உலக போரின் சாத்தியக்கூறு அது, அனைத்து சாத்தியங்களுடனும் அணு ஆயுதங்களின் பிரயோகத்துடன் தொடங்கக்கூடும் என்ற நிலையில் பகிரங்கமாகவே விவாதிக்கப்பட்டது.

எந்தவொரு நாட்டின் ஆளும் மேற்தட்டின் மூலோபாயங்கள் மற்றும் கொள்கைகளை ஆராய்கையிலும், அவர்களது ஈவிரக்கமின்மையைக் குறைமதிப்பீடு செய்வதும் சரி அல்லது அவர்களது புத்திசாலித்தனத்தை மிகைமதிப்பீடு செய்வதும் சரி ஒரு பிழை ஆகிவிடும். ஆனால் மூன்றாம் உலக போர் எனும் பூதம் இந்த அல்லது அந்த முதலாளித்துவ தலைவரின் அபிலாஷைகளில் இருந்தோ அல்லது வெறுமனே இந்த அல்லது அந்த சக்தியின் புவிசார் அரசியல் தப்பு கணக்கீடுகளில் இருந்தோ எழவில்லை. அதற்கு மாறாக போர் என்பது புறநிலை அரசியல் தர்க்கத்திலிருந்தும், ஒரு பெரும் அனுகூலத்திற்கும் மற்றும் அமெரிக்காவினது விடயத்தைப் போல உலக முதலாளித்துவ அமைப்புமுறையில் மேலாதிக்க இடத்திற்காகவுமே கூட ஏகாதிபத்திய சக்திகளின் நில்லாத போராட்டத்தின் விளைவுகளில் இருந்தும் ஊற்றெடுக்கிறது. தேசிய அரசு அமைப்புமுறையைத் தூக்கியெறிவதன் மூலமாக மட்டுமே போரைத் தடுக்க முடியும். இதற்கு தொழிலாள வர்க்கம் புரட்சிகரமாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் மற்றும் ஒரு சர்வதேச சோசலிச அமைப்புமுறையை ஸ்தாபிப்பதும் அவசியமாகும்.

அது மட்டுமே முற்போக்கானது என்பதுடன், ஒருவர் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும், அதுவே ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு யதார்த்தமான மாற்றீடாகவும் உள்ளது. உலக சோசலிச புரட்சியின் வேலைத்திட்டத்திற்கு அங்கே எந்த முற்போக்கான தேசியவாத மாற்றீடும் கிடையாது. ஜார்-சகாப்த மாபெரும் ரஷ்ய பேரினவாதத்தை அருவருப்பாக மீட்டுயிர்பிக்கும் அடிப்படையில் சோவியத்திற்குப் பிந்தைய ரஷ்யாவைப் "பாதுகாக்க" முயலும் புட்டினின் முயற்சிகள், பேரழிவுகளுக்கு மட்டுமே இட்டுச் செல்லும். 1917 அக்டோபர் புரட்சி ஜார் எதேச்சதிகாரத்தின் குற்றங்களுக்கு மட்டுமல்ல, அனைத்தினும் மேலாக, உலக ஏகாதிபத்திய அமைப்புமுறை மற்றும் அதன் தேசிய-அரசு அடித்தளத்திற்கும் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணிப்படையாக செயல்பட்டரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் விடையிறுப்பாக இருந்தது.

உக்ரேன் ஒரு முக்கிய உட்கூறாக இருந்த சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் (USSR) 1922இல் உருவாக்கப்பட்டமை பிற்போக்குத்தனமான மற்றும் வரலாற்றுரீதியில் காலங்கடந்த தேசிய அரசு அமைப்புமுறையைக் கடந்து செல்ல போல்ஷிவிக் ஆட்சியின் ஓர் ஆரம்ப முயற்சியைப் பிரதிநிதித்துவம் செய்தது. தனியொரு நாட்டில் சோசலிசம் எனும் தேசியவாத வேலைத்திட்டத்தின் அடித்தளத்தில் அதற்கடுத்து வந்த ஸ்ராலினிச காட்டிக்கொடுப்புகள், அக்டோபர் புரட்சியின் சாதனைகளையும் சோவியத் ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் மங்க செய்துவிடவில்லை. முதலாளித்துவ ரஷ்யாவின் ஓரளவிலான அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை முதலாளித்துவ உக்ரேனுக்குள் தக்க வைக்க விரும்பு புட்டினின் தேசியவாத வேலைத்திட்டமானது, சோவியத் ஒன்றியத்தை உருவாக்க அடித்தளமாக இருந்த வேலைத்திட்டம் மற்றும் கோட்பாடுகள் உடன் நிச்சயமாக எதையும் பொதுவாக கொண்டிருக்கவில்லை, இன்னும் சொல்லப்போனால், அவற்றிற்கு முற்றிலும் விரோதமாக உள்ளது.

மனிதகுலத்தின் பூகோளமயப்பட்ட அபிவிருத்தியின் புறநிலை தேவைகளுக்கு முரண்பட்ட விதத்தில், முதலாளித்துவத்தின் அடிப்படையிலான தேசிய-அரசு அமைப்புமுறை தொடர்ந்து நீடிப்பதென்பது, சர்வதேச போருக்கு மட்டும் தோற்றுவாயாக இராது மாறாக காலத்திற்கு ஒவ்வாத இந்த தேசிய எல்லைகளுக்குள் வாழும் மக்கள் மத்தியில் இரத்தக்களரியான சகோதரத்துவ மோதல்கள் ஏற்படுவதற்கும் தோற்றுவாயாக உள்ளது. 1709இல் ஒருங்கிணைந்து கொள்வதற்கான சட்டத்தால் (Act of Union) உருவாக்கப்பட்ட பெரிய பிரித்தானியா, ஒரு சுதந்திர முதலாளித்துவ ஸ்காட்லாந்தை உருவாக்குவதற்காக முற்றிலும் ஒரு பிற்போக்குத்தனமான தேசியவாத பிரச்சாரத்தின் மேலெழுச்சியால் உடைத்துக் கொள்ள அச்சுறுத்தி உள்ளது. அந்த நடவடிக்கையின் விளைவு, அது வெற்றி அடைந்திருந்தால், எல்லையின் வடக்கு மற்றும் தெற்கு இருதரப்பிலும் இருக்கும் தொழிலாளர் வர்க்கத்தைப் பலவீனப்படுத்தி இருந்திருக்கும். தேசியவாதத்தின் அருவருப்பூட்டும் உள்நோக்கங்களுக்கு மேற்கொண்டும் ஆதாரம் வேண்டுமென்றால், ஒருவர் இஸ்ரேலின் பரிணாமத்தைப் பார்த்தாலே போதுமானது. பிற்போக்குத்தனமான சியோனிச (Zeonism) வேலைத்திட்டம் மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டதும், பாசிசவாதிகள் தூண்டிவிட்ட இனப்படுகொலைக்கு ஒரு விடையிறுப்பாக கொண்டு வரப்படுவதாக நியாயப்படுத்தப்பட்டதுமான அந்த யூத அரசு, அதன் இரக்கமற்ற படுகொலை மற்றும் பாலஸ்தீன மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதை நியாயப்படுத்துவதற்கு கொடூரமாக இனவாதத்தைப் பயன்படுத்துகிறது.

3. "அதன் அனைத்து போக்கிலும் அரசியல் பிற்போக்குத்தனமே ஏகாதிபத்தியத்தின் சிறப்பியல்பான அம்சமாகும்," இது 1916இல் லெனின் எழுதியதாகும். "ஜனநாயக-குடியரசுக்கும் பிற்போக்குத்தனமான-முடியாட்சி முதலாளித்துவத்திற்கும் இடையிலான வேறுபாடு துல்லியமாக துடைத்தழிக்கப்பட்டு உள்ளது ஏனென்றால் இரண்டுமே உயிருடன் அழுகிப் போயுள்ளன..."

ஜனநாயக ஆட்சியின் அடிப்படை நெறிமுறைகள் முறிக்கப்பட்டமை, இது அமெரிக்க அரசில் உயர்மட்ட பதவிகளை வகித்துவரும் தனிநபர்களால் உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டமீறல்கள் அம்பலப்பட்டத்தில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ள இது, லெனினின் பகுப்பாய்வை நிரூபிக்கிறது. சித்திரவதை பற்றிய செனட் உளவுத்துறை தேர்வு கமிட்டி அறிக்கையானது, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பாதுகாப்புத்துறை செயலர், சிஐஏ இயக்குனர், மற்றும் புஷ் நிர்வாகத்தில் இருந்த ஏனைய முக்கிய அரசு அதிகாரிகளும் குற்றகர நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகிறார்கள் என்பதை மறுப்பதற்கு இடமின்றி ஸ்தாபித்து காட்டியுள்ளது. ஆனால் ஒபாமா நிர்வாகத்தின் விடையிறுப்பு தெளிவாக தெளிவுபடுத்துவதைப் போல, அமெரிக்க சித்திரவதைத் திட்டத்தை அங்கீகரித்த, வடிவமைத்த மற்றும் நடைமுறைப்படுத்தியவர்கள் சட்டரீதியில் குற்றம்சாட்டப்பட மாட்டார்கள்.

அதன் எல்லைகளுக்கு வெளியே நடத்தப்பட்ட வன்முறையும் அதாவது சித்திரவதையைப் பயன்படுத்தியமை, டிரோன் படுகொலை திட்டம், இதர பிறவைமற்றும் அமெரிக்காவிற்குள் ஜனநாயக உரிமைகளை வேகமாக அழித்தமையும் ஒரே பிற்போக்குத்தன நிகழ்வுபோக்கின் ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட உட்கூறுகளாகும். அமெரிக்கா மேலும் மேலும் ஒரு பொலிஸ் அரசின் குணாம்சத்தை ஏற்று வருகிறது. புதிய இராணுவ கோட்பாட்டுக்கு இணங்கிய விதத்திலும், முலாக்க ஆணையத்தின் (Posse Comitatus) சட்டரீதியான கோட்பாட்டை வெளிப்படையாக மீறுவதிலும், உள்ளூர் பொலிஸ் படைகள் "மொத்த இராணுவம்" (the total army) என்று கூறப்படுவதற்குள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பதில் கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை எந்திரத்தை, உள்நாட்டு எதிர்ப்புக்கு எதிராக நேரடியாக பிரயோகிக்கப்பட்டதை 2014ஆம் ஆண்டு கண்டது. இராணுவ தளவாடங்களுடன் ஆயுதபாணியாக்கப்பட்ட பொலிஸ், 18 வயது மைக்கேல் பிரௌன் கொல்லப்பட்டதன் மீது எழுந்த போராட்டங்களைத் தொடர்ந்து, மிசோரி ஃபேர்க்குஷன் நகரை நடைமுறையில் இராணுவ சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது.

இதே எதேச்சாதிகாரம் நோக்கிய போக்கு ஒவ்வொரு நாட்டிலும் நிலவுகிறது, ஏனெனில் ஆளும் வர்க்கம் உள்நாட்டு சமூக பதட்டங்களுக்கு விடையிறுப்பாக ஒடுக்குமுறை எந்திரத்தைக் கட்டமைத்துள்ளது. 2014இல் நிதியியல் முதலீட்டாளர்களை பெரிதும் ஈர்த்த நாடுகளில் ஒன்று எகிப்தாக இருந்தது என்பது மிக மிக முக்கியமானதாகும், அங்கே ஒரு மூர்க்கமான இராணுவ ஆட்சி ஜனநாயக உரிமைகளைக் கலைத்துவிட்டு, அனைத்து எதிர்ப்புகளுக்கு எதிராகவும் பாரிய தாக்குதலை நடத்தி உள்ளது. சர்வதேச அளவில் ஆளும் வர்க்கம், அதன் செல்வ வளமை மற்றும் நலன்கள் எங்கெல்லாம் பணயத்தில் இருக்கிறதோ அங்கே அத்தகைய முறைமைகளை நடைமுறைப்படுத்த, அதுபோன்ற உத்திகளை ஒரு முன்மாதிரியாக பார்க்கிறது.

4. ஜனநாயக மேல்பூச்சைப் பிய்த்தெறிவது என்பது அடிப்படையில் சமூக சமத்துவமின்மையின் முடிவில்லா மற்றும் வெடிப்பார்ந்த வளர்ச்சியின் ஒரு வெளிப்பாடாகும். 2008க்குப் பின்னர், ஆளும் வர்க்கத்தின் ஒரே நோக்கம்கொண்ட கொள்கை, தொழிலாள வர்க்கத்தின் வேலைகள் மற்றும் வாழ்விட நிலைமைகள் மீதான ஓர் இரக்கமற்ற தாக்குதலுடன் சேர்ந்து, பங்குச்சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சுவதன் மூலமாக அதன் செல்வ வளத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் மற்றும் அதிகரித்துக் கொள்ளவதற்கும் உரியதாக இருந்துள்ளது.

இத்தகைய கொள்கைகளின் ஒரு நேரடி விளைவாக, 2014இல் 400 செல்வசெழிப்பான தனிநபர்களது மொத்த நிகர சொத்து மதிப்பு 92 பில்லியன் டாலரில் இருந்து 4.1 ட்ரில்லியன் டாலராக அதிகரித்தது. பில்லியனர்களின் மொத்த எண்ணிக்கை கடந்த ஆண்டு சாதனையளவாக 2,325ஆக உயர்ந்தது, இது அதற்கு முந்தைய ஆண்டை விட 7 சதவீதத்திற்கும் கூடுதலான உயர்வாகும். உலக மக்கள்தொகையில் இந்த சிறிய பகுதியின் மொத்த மதிப்பு 12 சதவீதம் அளவில், 7.3 ட்ரில்லியன் டாலராக உயர்ந்தது.

மிகப்பெரிய 400 அமெரிக்கர்களின் நிகர மதிப்பு 2014இல் 2.29 ட்ரில்லியன் டாலராக உயர்ந்தது, இது 2009இல் இருந்ததை விடவும் சுமார் இரண்டு மடங்கு அதிகமாகும். 2010க்குப் பின்னர், அமெரிக்காவில் நடுத்தர குடும்பங்களின் வருமானம் ஐந்து சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதே நிகழ்முறைகள் தான் ஒவ்வொரு நாட்டிலும் நிலவுகிறது. கடந்த ஆண்டு அவர்களது செல்வ வளத்தில் மிக அதிக உயர்வை அனுபவித்த மூன்று பில்லியனர்களில் இருவர் சீனாவில் வாழ்கின்றனர். கிரெடிட் சுயஸ் நிறுவனத்தின் புள்ளிவிபரங்களின்படி, உலக செல்வ வளத்தில் உலக மக்கள்தொகையில் ஒரு சதவீத மிகப் பணக்காரர்களின் பங்கு, 2013இல் இருந்த 46 சதவீதத்திலிருந்து 48.2 சதவீதமாக உயர்ந்தது.

5. 2015 குறித்த ஆய்வு முடிவானது, பொருளாதார, புவிசார் அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் தீவிரப்பாட்டை முன்கணிக்கிறது. எவ்வாறிருந்த போதினும், முதலாளித்துவ அமைப்புமுறையின் புறநிலை முரண்பாடுகள் அபிவிருத்தி அடைவதுடன் சேர்ந்து, மக்கள் கோபமும் பெருந்திரளான மக்களின் அதிருப்தியும் பாரியளவில் ஒரு ஆழமான குணாம்சத்தை எடுக்கும். கடந்த பதினைந்து ஆண்டுகளின் சம்பவங்கள் மக்களின் நனவில் அவற்றின் சுவடுகளை விட்டுச் சென்றுள்ளன. முடிவில்லா போர்கள், நிதியியல் மேற்தட்டின் ஊழல்கள் அம்பலப்பட்டமை, நீதியின் மிக மிக அடிப்படை அர்த்தத்தை மீறிய குற்றகரமான மற்றும் சித்திரவதை நடைமுறைகள், ஒரு எதிர்காலமற்ற மற்றும் நம்பிக்கையற்ற உலகில் வாழ விடப்பட்டதாக உணரும் இளைஞர்களின் விரக்தி, பரந்து படர்ந்திருக்கும் வறுமைக்கு இடையிலும் விசித்திரமாக காட்டப்படும் செல்வசெழுமை, மற்றும் பெரும்பாலான மக்கள் அவர்களின் வாழ்வில் எதிர்கொள்ளும் அன்றாட சிரமங்கள்புறநிலை எதார்த்தத்தின் உட்கூறுகளாக உள்ள இவை, தொழிலாளர் வர்க்கத்தின் நனவிலும் மற்றும் அரசியல் நோக்குநிலையிலும் ஓர் ஆழ்ந்த மாற்றத்திற்கு இட்டுச் செல்கின்றன.

ஆனால் மக்கள் அதிருப்தியின் அதிகரிப்பும் மற்றும் பகிரங்கமான வர்க்க மோதல் உடைத்துக் கொண்டு வருவதும் மட்டுமே முதலாளித்துவ அமைப்புமுறை நெருக்கடியால் முன்வைக்கப்பட்ட மாபெரும் பிரச்சினைகளைத் தீர்க்க போதுமானதல்ல. தொழிலாளர் வர்க்கத்திற்குள் சோசலிச அரசியல் நனவை அபிவிருத்தி செய்வது முக்கிய பணியாகும்.

2014இன் போக்கில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் அதன் தேசிய பிரிவுகளும், நெருக்கடியால் தீவிரமயப்பட்டு வருகின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதன் வேலையை அபிவிருத்தி செய்ய கணிசமான முன்னெடுப்புகளைச் செய்தன. சம்பவங்கள் உலக சோசலிச வலைத் தளத்தின் பகுப்பாய்வை மெய்பிப்பதால், அதன் அரசியல் நன்மதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது.

ஆனால் அங்கே அகமகிழ்வு கொள்வதற்கு இடமில்லை. பெரும் சவால்கள் முன்நிற்கின்றன. 2015ஆம் ஆண்டு முதலாளித்துவ நெருக்கடி தீவிரப்படுவதையும் மக்கள் எதிர்ப்பின் குறிப்பிடத்தக்க மேலெழுச்சியையும் காணவிருக்கிறது. நாம் உலக சோசலிச வலைத் தளத்தின் பல வாசகர்களை எம்முடன் இணையுமாறும், நான்காம் அகிலத்தை சோசலிச புரட்சியின் உலக கட்சியாக கட்டி அமைக்க போராடுமாறும் அழைப்பு விடுக்கிறோம்.