சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Political instability and global slump intensify financial turmoil

அரசியல் ஸ்திரமின்மையும் உலகளாவிய மந்தநிலையும் நிதியியல் கொந்தளிப்பைத் தீவிரப்படுத்துகின்றன

By Nick Beams
7 January 2015

Use this version to printSend feedback

ஆழமடைந்துவரும் மந்தநிலை, உயர்ந்திருக்கும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் தோற்றப்பாட்டளவில் அதிகரித்து வரும் அரசியல் ஸ்திரமின்மை இவற்றிற்கு இடையிலான தொடர்பை பிரதிபலித்துக் கொண்டு உலக நிதியியல் சந்தைகளின் கொந்தளிப்புடன் இந்த ஆண்டு ஆரம்பித்துள்ளது.

உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையில் அதிகரித்து வருகின்ற பிரச்சினைகள் வோல் ஸ்ட்ரீட்டிலும், அதன் உயர்மட்டங்களிலும் மிக நேரடியாக வெளிப்படுகின்றன. அமெரிக்க பங்கு விலை-நிர்ணய சந்தைகள் 2008க்குப் பின்னர் இந்த ஆண்டில் தான் அவற்றின் மிக மோசமான தொடக்கத்துடன் அவற்றின் போக்கை எடுத்துள்ளன. அந்த ஆண்டு, செப்டம்பரில் லெஹ்மென் பிரதர்ஸ் பொறிவால் தொடங்கி வைக்கப்பட்ட உலகளாவிய நிதியியல் நெருக்கடியுடன் உச்சத்தை அடைந்தது.

டோவ் குறியீடு திங்களன்று 331 புள்ளி சரிந்ததைத் தொடர்ந்து, நேற்று 130 புள்ளிகள் சரிந்ததுஇது 0.8 சதவீத வீழ்ச்சியாகும். மிக பரந்தரீதியில் அமைந்த எஸ்&பி 500 குறியீடும் அதேபோல கடந்த இரண்டு நாட்களில் வீழ்ச்சி அடைந்துள்ளது, அத்துடன் ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் கூர்மையாக சரிந்துள்ளன. அமெரிக்க பத்தாண்டு கால கருவூல பத்திரங்கள் மீதான இலாபம் 2 சதவீதத்திற்கு குறைவாக இறங்கும் அளவுக்கு தேவைப்பாடு அதிகரித்ததுடன் சேர்ந்து, செவ்வாய்கிழமை முதலீடுகள் "பாதுகாப்பு இடந்தேடி பறப்பதைக்" கண்டது.

மேற்கு டெக்சாஸில் பேரலுக்கு 50 டாலருக்கும் குறைவாக ஏற்பட்ட இடைப்பட்ட சரிவும், உலகளாவிய அளவுகோலான பிரென்ட் (Brent) அந்த மட்டத்தை அணுகி வந்ததும் சேர்ந்து, எண்ணெய் விலையில் ஏற்பட்ட கூடுதல் வீழ்ச்சி, வோல் ஸ்ட்ரீட் சரிவுக்குப் பின்னால் இருந்த மிக உடனடி காரணியாக இருந்தது. ஜூனில் இருந்து, எண்ணெய் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

எண்ணெய் விலை வீழ்ச்சியே கூட இரண்டு நிகழ்ச்சிபோக்குகளின் விளைபொருளாகும்: ஒன்று அமெரிக்கா மாஸ்கோவை நிதியியல் சந்தைகளில் இருந்து வெட்டுகின்ற தடைகளை திணித்து, வீழ்ச்சி அடைந்துவரும் எண்ணெய் விலைகளை ஒரு கருவியாக பயன்படுத்த முனைந்துள்ள நிலையில், ரஷ்யா மீது பொருளாதார இழப்பைச் சுமத்தும் அதன் முயற்சிகள், மற்றது உலக பொருளாதாரத்தில் ஆழமடைந்துவரும் பின்னடைவு போக்குகள்.

பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் ஜோன் பிளென்டர் நிலைமையை இவ்வாறு தொகுத்து எழுதினார்: "அதிகரித்துவரும் குறைந்த தேவைப்பாடு பிரச்சினை, பணச்சுருக்கத்திற்கு இட்டுச் சென்று" உலகை "இரையாக்குகிறது,” அதேவேளையில் அமெரிக்கா உலகளாவிய வளர்ச்சிக்கு ஓர் அடித்தளத்தை வழங்குவதில் மிகவும் மெதுவாக வளர்ந்து வருகிறது.

இதுவொரு அச்சமூட்டும் உலகமாக உள்ளது இதில் புவிசார் அரசியல் அபாயம், போட்டிகேற்ப செலாவணி மதிப்பைக் குறைத்தல் (devaluation) மற்றும் பாதுகாப்புவாத அழுத்தம் ஆகியவை ஆரோக்கியமான கொள்கையின்மையால் கையாள முடியாத பணச்சுருக்கத்தையும் மற்றும் நீண்டகால அழுத்தத்திற்குட்பட்ட இலாபங்களின் வீழ்ச்சியையும் கொண்டு வரக்கூடும்,” என்று அவர் எச்சரித்தார்.

எவ்வாறிருப்பினும், அதுபோன்றவொரு கொள்கை எங்கேனும் அடிவானத்தில் தோன்றுவதற்கான எந்தவொரு ஆதாரமும் அங்கே காணப்படவில்லை.

யூரோ மண்டலம் 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னரில் இருந்து அதன் மூன்றாவது பின்னடைவின் விளிம்பில் உள்ளது, இதற்கிடையே பணச்சுருக்க அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இன்றைக்கு மாலையில் வெளியிடப்பட உள்ள புள்ளிவிபரங்கள், ஏறத்தாழ பூஜ்ஜிய பணவீக்கத்தை எடுத்துக்காட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது, அந்த எண்ணிக்கை எதிர்மறையாக இருக்கக்கூடுமென்றும் சிலர் அனுமானிக்கின்றனர்.

பணச்சுருக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக, அரசாங்க கடன் பத்திரங்கள் உள்ளடங்கலாக, விரிவாக்கப்பட்ட பணத்தைப் புழக்கத்தில் விடும் கொள்கையை மத்திய வங்கி மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையில், நிதியியல் சந்தைகளின் கண்கள் ஜனவரி 22இல் நடைபெற உள்ள ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) நிர்வாக கவுன்சில் கூட்டத்தை நோக்கி திரும்பி உள்ளன.

ஆனால் பைனான்சியல் டைம்ஸால் நடத்தப்பட்ட 32 யூரோ பொருளாதார வல்லுனர்களின் ஒரு ஆய்வானது, ECB அதன் தலையீட்டை அதிகரிக்குமென பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்தார்கள் என்றாலும் கூட, அந்நகர்வு யூரோ மண்டல பொருளாதாரத்தை மீட்டுயிர்பிக்கும் என்பதில் சிலருக்கே நம்பிக்கை இருந்ததாக கண்டது.

2008 நிதியியல் நெருக்கடியை அடுத்து, சீன அரசாங்கம் ஒரு மிகப்பெரிய செலவு திட்டத்தை மேற்கொண்டு, கடன்களை விரிவாக்கியதை அடுத்து உலகளாவிய வளர்ச்சிக்கு ஒரு ஊக்கப்பொதியை அது வழங்கியது. ஆனால் 2009 பின்னடைவுக்குப் பின்னர் முதல்முறையாக இப்போது 7 சதவீத மட்டத்திற்கு கீழே (இந்த அளவிலான வளர்ச்சி வேலைவாய்ப்புகளைத் தக்க வைக்க அவசியமென்று கருதப்படுகிறது) அதன் வளர்ச்சி விகிதம் குறையக்கூடிய சாத்தியக்கூறை சீனா முகங்கொடுக்கிறது.

வேகக்குறைவைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் விதத்தில் சீன அரசாங்கம் மற்றொரு மிகப்பெரிய ஊக்கப்பொதியைப் பரிசீலித்து வருவதாகவும், ஆனால் அதுபோன்ற முறைமைகள் சீனக் கடன் அளவுகளைக் குறித்த கவலைகளுக்கு இன்னும் கூடுதல் கவலைகளை மட்டுமே சேர்க்கும் என்றும் கூறப்படுகிறது.

எண்ணெய் விலை வீழ்ச்சியில் பிரதிபலித்த பின்னடைவு அழுத்தங்களுக்கு கூடுதலாகஇரும்பு எஃகு உட்பட ஒரு பரந்த தொழில்துறை பண்டங்கள் முழுவதும் ஒரு மந்தநிலை பிரதிபலித்துள்ள நிலையில்நிதியியல் சந்தைகளைப் பாதிப்படைய செய்துவரும் மற்றொரு பிரதான காரணி என்னவென்றால் ஜனவரி 25இல் கிரேக்க தேர்தல்களைத் தொடர்ந்து ஐரோப்பாவில் நிதியியல் மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது என்பதாகும்.

கிரேக்க கடன் பிணையெடுப்பு தொகுப்பை "மறுபேரம்" செய்ய அழைப்புவிடுத்துள்ள சிரிசா (தீவிர இடதின் கூட்டணி) பெரும்பான்மை வாக்குகளைப் பெறுமென்றும், அடுத்த அரசாங்கத்தை அமைக்க அதற்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் கருத்துக்கணிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.

வாரயிறுதியில் Der Spiegel செய்தியிதழில் பிரசுரமான ஒரு செய்தி, அங்கேலா மேர்க்கெல்லின் ஜேர்மன் அரசாங்கம் கிரேக்க கடனின் எந்தவொரு மறுபேரத்தையும் சகித்துக் கொள்ளாது என்பதுடன், யூரோ மண்டலத்திலிருந்து கிரேக்கத்தின் வெளியேற்றத்திற்கு தயாராகி வருகிறது என்பதைத் தெளிவுபடுத்தியது. கிரேக்கம் வெளியேறுவதை ஜேர்மனியால் "கையாள" முடியுமென தெரிவித்த அரசாங்க ஆதாரநபர்களை Spiegel மேற்கோளிட்டுக் காட்டி இருந்த போதினும், விளைவுகள் என்னவாக இருக்குமென்பது யாருக்கும் தெரியவில்லை.

ஐரோப்பா எங்கிலும் அதிகரித்துவரும் ஸ்திரமின்மைக்கு கிரேக்க தேர்தல் வெறுமனே ஒரேயொரு வெளிப்பாடாக உள்ளது, அது பொது செலாவணியின் முறிவுக்கே கூட இட்டுச் செல்லக்கூடும். இது பெரும் அரசியல் விளைவுகளைக் கொண்டிருக்கும் ஏனென்றால் பின்னோக்கி 1950களின் தொடக்கத்திலிருந்து பொது செலாவணி ஏற்பட்டது வரையில், ஐரோப்பிய ஐக்கியத்திற்கு முட்டுகொடுக்க எடுக்கப்பட்ட முறைமைகள் ஒருபோதும் வெறுமனே பொருளாதாரங்கள் சம்பந்தப்பட்டதாக மட்டும் இருக்கவில்லை, மாறாக அவை ஒரு தலைமுறையின் காலத்திற்குள் இரண்டு உலக போர்களுக்கு இட்டுச் சென்ற, பிரதான சக்திகளுக்கு இடையிலான பதட்டங்கள் வெடிப்பதைத் தவிர்க்கும் நோக்கில் இருந்தன.

அத்தகைய பதட்டங்கள் மீண்டுமொருமுறை தெளிவாக புலனாகி வருகின்றன. ECBஇன் நிர்வாக குழு ஆழ்ந்த பிளவுகளால் உடைந்து போயுள்ளது, அத்துடன் ஜேர்மன் பிரதிநிதிகளோ பணத்தைப் புழக்கத்தில் விடுவதை மேற்கொண்டு நீடிப்பதற்கும், அனைத்திற்கும் மேலாக, இறையாண்மை கடன்களைப் பெறுவதை எதிர்க்கின்றனர்.

கிரேக்க தேர்தலைத் தொடர்ந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலின் தேர்தல்கள் வரவிருக்கின்றன, அங்கே அரசாங்க சிக்கன திட்டங்களுக்கு ஆழ்ந்த விரோதம் நிலவுகின்றது, அவை 1930களின் பெருமந்தநிலையில் இருந்து பார்த்திராத நிலைமைகளை உருவாக்கி உள்ளன.

ஆழமடைந்துவரும் அரசியல் திருப்தியற்ற நிலை, வெளியுறவு கொள்கை குறித்து எழுதும் கிடோன் ராச்மேனால் நேற்று பைனான்சியல் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் பிரதிபலித்தது. அதில் அவர் சந்தைகள், ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவினது பலம் ஆகிய மூன்று அம்சங்கள் மீது பனிப்போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பு கட்டப்பட்டு இருந்தது [கட்டப்பட்டு உள்ளது]," இவற்றின் பலத்தில் நம்பிக்கை குறைந்திருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

சுதந்திர சந்தைகள் மீதான நம்பிக்கை 2008 சம்பவங்களால் மற்றும் அதற்குப் பிந்தைய பெரும் பின்னடைவால் தகர்ந்து போயுள்ளது, மேலும் அதேவேளையில் அமெரிக்காவினது பலம் ஆட்சிகளை அழிக்கும் அதன் தகைமையை எடுத்துக்காட்டி உள்ள போதினும், அது ஸ்திரப்பாட்டை வழங்க தவறி உள்ளது.

ராச்மேன் எழுதினார், “தகுதி வாய்ந்த அரசாங்கத்தை அளிக்க ஸ்தாபக ஜனநாயகங்களின் தகைமையில் நம்பிக்கை இழப்பு மேலெழுந்து வருவது தான் கவலைக்குரியதாக உள்ளது. அமெரிக்காவில், காங்கிரஸின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவில் மிகக் குறைவாக உள்ளது,” அதேவேளை ஐரோப்பிய அரசுகளோ "அரசியல் அமைப்புமுறை சீர்திருத்தத்தை அல்லது வளர்ச்சியை வழங்க தகைமையற்றதாக தெரிகின்றனமேலும் வாக்காளர்கள் அதிதீவிர கட்சிகளின் பின்னால் செல்ல தொடங்கி உள்ளனர்,” என்று எழுதினார்.