சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Europe’s terror attacks: The blowback from Western intervention

ஐரோப்பிய பயங்கரவாதத் தாக்குதல்கள்: மேற்கத்திய தலையீட்டின் பின்னோக்கியதாக்கம்

Bill Van Auken
17 January 2015

Use this version to printSend feedback

பாரிஸில் ஜனவரி 7 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, ஐரோப்பாவெங்கிலும் போலிஸ் அலைஅலையான கைதுகளைத் தொடக்கி, இஸ்லாமிய போராளிகள் எனக்கூறப்படும் ஏராளமானோரை சுற்றி வளைத்தது. இவர்களில் பலரும், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஒரு குருதிகொட்டும் உள்நாட்டுப் போரை உருவமைத்த நாடான சிரியாவிற்கு சென்று வந்தவர்கள் என்பதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் காலத்தில் நடக்கவிருந்த சதித்திட்டங்கள் முறியடிக்கப்படுவதாக வரும் பத்திரிகைச் செய்திகளுக்கு இடையே, இந்த சதிகாரர்களாய் சொல்லப்படுபவர்கள் யார் என்பதை ஐரோப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் நன்கறிந்திருந்தனர் என்பதும் அவர்களது நகர்வுகளையும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்திருந்தனர் என்பதும் தெளிவாகியிருக்கிறது.

மக்களுக்கு அச்சமூட்டுவதற்கான அரசு-ஆதரவுடனான பிரச்சாரத்தில் தன்னையும் நுழைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஊடகங்கள் மிகவெளிப்படையான கேள்விகளையும் கேட்கத் தவறுகின்றன. உதாரணமாக, எந்தக் கேள்விகளும் இல்லாமல் இந்த நபர்கள் ஒரு வெளிநாட்டுப் போர் வலயத்திற்கு சுதந்திரமாக சென்று, சண்டையில் பங்குபற்றி, பின் திரும்பவும் முடிந்தது எப்படி?

அரசுக்குள்ளான பிரிவுகளது, நேரடியான ஆதரவாக இல்லையென்றாலும், மவுனமான அனுமதியையேனும் அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பதே மிக வெளிப்படையான பதிலாக இருக்க முடியும். அவர்கள் இப்போது வரை விட்டு வைக்கப்பட்டிருந்தார்கள் என்றால் அதன் காரணம் அவர்களால் பயன்கிடைக்கவேண்டியிருந்தது என்று கருதப்பட்டதால் தான்.

ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக, சிரியாவில் ஆட்சியை மாற்றுவதற்காய் அமெரிக்காவும் அதன் மேற்கு ஐரோப்பியக் கூட்டாளிகளும்  - இதில் பிரான்ஸ் தான் முதலாவது - ஒரு போரை ஏற்பாடு செய்து, அதற்கு நிதியாதாரமும் ஆயுதங்களும் கிடைக்க உதவி செய்து கொண்டிருக்கின்ற அந்தப் போரில், சார்லி ஹெப்டோ பிரெஞ்சு இதழின் அலுவலகங்கள் மீதான பாரியப் படுகொலைகளை அரங்கேற்றிய நபர்கள் போன்ற, இஸ்லாமியப் போராளிகள் தான் பிரதான தரைப்படை துருப்புகளாய் சேவை செய்திருக்கின்றனர்.

சிரியாவுக்குள்ளே ஆயுதங்களும், வெளிநாட்டுப் போராளிகளும் மற்றும் பணமும்  பெரும்பாலும் துருக்கி வழியாகவே அனுப்பப்பட்டிருந்தன. அங்கு இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக சிஐஏ ஒரு இரகசிய நிலையத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஏகாதிபத்திய ஆதரவுடனான கிளர்ச்சியாளர்களுக்காய் கிடைத்த ஆயுதங்கள் மற்றும் உதவிகளின் பெரும்பகுதி அமெரிக்காவின் முக்கியமான அரபுக் கூட்டாளிகளாகிய சவுதி அரேபியா மற்றும் கட்டாரிடம் இருந்து வந்திருந்தவை ஆகும்.

சிரிய ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத்திற்கு பெயர்பெற்ற ஆயுதம்தரித்த எதிரிகளாக எழுந்திருப்பவை இரண்டு அமைப்புகள்: அல் நுஸ்ரா முன்னணி, இது சிரியாவிலான அல் கெய்தாவுடன் இணைந்த அணி, மற்றும் ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு (ISIS), இது அதீத மிருகத்தனத்திற்காய் அல்கெய்தாவாலேயே கண்டனம் செய்யப்பட்டு அதிலிருந்து பிரிந்த ஒரு அமைப்பாகும்.

சிரியாவின் ஆசாத் ஆட்சியைத் தூக்கியெறிவதற்காக சண்டையிட்டுக் கொண்டிருப்போரில் முழுமையாக 70 சதவீதம் பேர் வெளிநாட்டுப் போராளிகள் என்றும், இவர்கள் மத்திய கிழக்கு, செசன்யா, மேற்கு ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா மற்றும் பிறவெங்கிலும் இருந்து நாட்டிற்குள்ளாக உள்கொண்டுவரப்பட்டவர்கள் என்றும் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கத் தலைமையிலான சமீபத்திய போர் உருவானது முதலான காலத்தில் சிரியாவில் ISIS வசம் இருக்கும் பிராந்தியங்களூடாக பயணம் செய்த முதல் மேற்கத்திய பத்திரிகையாளரான, ஜேர்மன் பத்திரிகையாளர் Jürgen Todenhöfer அளிக்கும் செய்தி கூறுகிறது. சமீபத்து அமெரிக்க அரசாங்க மதிப்பீடு ஒன்றின் படி, ஏறக்குறைய 1,000 போராளிகள் ஒவ்வொரு மாதமும் இந்த ஆயுதக்குழுக்குளுடன் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

சிரியாவில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 200,000 நெருங்கிக் கொண்டிருக்கிறது. பாரிஸ் படுகொலைகளை நிகழ்த்திய அதே பிரிவுகள் இங்கே பல ஆண்டுகளாக பயங்கரவாதத் தாக்குதல்களையும், பாரிய கொலைகளையும் மற்றும் பிற குற்றங்களையும் நிகழ்த்தி வருகின்றன, இப்போதுநான் தான் சார்லி பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் உத்தியோகபூர்வ வட்டாரங்களில் இருந்து ஒரேயொரு எதிர்ப்பு வார்த்தையும் கூட அதற்கு உதிர்க்கப்படவில்லை. மேற்கின் இழிவு வேலையையே அவர்கள் அங்கு செய்து கொண்டிருந்தார்கள்.

இருப்பினும், சென்ற கோடையில் ஈராக்கிற்குள் ISIS நுழைந்ததை அடுத்து, ஏகாதிபத்தியத்தின் இன்றைய குற்றங்கள் நேற்றைய குற்றங்களோடு மோதியதில், ஒரு தீவிரமான நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. ISIS இன் கரங்களில் ஈராக்கிய இராணுவம் பெற்ற படுதோல்வியானது, அந்நாட்டை நாசப்படுத்தி நூறாயிரக்கணக்கில் ஈராக்கியர்களது உயிர்களைக் காவு வாங்கி மில்லியன்கணக்கான மக்களை அகதிகளாக்கி ஒரு தீவிரமான ஷியா-சுன்னி குறுங்குழுவாத மோதலைத் தூண்டி விட்டிருக்கக் கூடிய சுமார் ஒன்பதாண்டு கால அமெரிக்கப் போர் மற்றும் ஆக்கிரமிப்பின் விளைபொருள் ஆகும்.

இந்த நெருக்கடியைச் சுரண்டிக் கொள்ள அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் துரித கதியில் செயல்பட்டு, ஈராக் மற்றும் சிரியா இரண்டு நாடுகளிலுமே ஒரு குண்டுவீச்சுப் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதோடு, ஆயிரக்கணக்கிலான அமெரிக்கத் துருப்புகளை மீண்டும் ஈராக்கிற்குள் அனுப்பியிருக்கின்றன. சிரியாவில் ஆட்சியை மாற்றுவதற்கான போரில் நேற்றைய ஆதரவு பினாமி சக்திகளாக இருந்தவை இன்றைய புதுப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்தின் மீதான போரில் எதிரிகளாக மாற்றப்பட்டன. இதுவே பாரிஸிலான தாக்குதல் மற்றும் பிறவெங்கிலுமான தாக்குதல் அச்சுறுத்தல்கள் குறித்த எச்சரிக்கைகளின் அரசியல் உள்ளடக்கமாகும்.

இது ஒரு புதிய கதையல்ல. பிராந்தியத்தின் எண்ணெய் வளங்கள் மீதான கட்டுப்பாட்டை நிலைநிறுத்திக் கொள்வதிலோ அல்லது சோவியத் ஒன்றியத்துடன் நெருங்கிய உறவுகளுக்கு உறுதிப்படுத்திக்கொள்வதற்கு முனைந்த மதச்சார்பற்ற தேசியவாத இயக்கங்களுக்கும் மற்றும் ஆட்சிகளுக்கும் எதிராக சண்டையிடும் நோக்கத்துடன், அமெரிக்க ஏகாதிபத்தியமானது, அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலமாய் தனது ஆதரவை இஸ்லாமிய சக்திகளுக்கு வழங்கி வந்திருக்கிறது.

இதன் மிகப் பிரபலமான உதாரணம் ஆப்கானிஸ்தான். அங்கே சிஐஏ ஆனது பாகிஸ்தான் உளவுத்துறையுடன் நெருக்கமாக வேலைசெய்து, காபூலில் இருந்த சோவியத்-ஆதரவு அரசாங்கம் ஒன்றைத் தூக்கியெறிவதற்காய், இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளால் நடத்தப்பட்ட ஒரு போருக்கு பின்நின்றது. பின்னாளில் அல்கெய்தாவாகப் பரிணாமித்த இந்த சக்திகள் இந்த நடவடிக்கையில் ஒரு முக்கிய பாத்திரத்தை ஆற்றின.

அப்போது முதலாகவே, பயங்கரவாதத்தின் மீதான போரில் பிரதான இலக்குகளாகவும் சந்தேகத்திற்குரியவர்களாகவும் அடையாளமிடப்படுகின்ற ஏறக்குறைய அத்தனை பேருமே, சிஐஏ க்கும் மற்ற உளவு முகமைகளுக்கும் நன்கறிந்த நபர்களாகவே இருக்கின்றனர்.

9/11 தாக்குதல்களிலேயே, பிரதான விமானக் கடத்தல்காரர்கள் அரபு உலகத்தில் அமெரிக்காவின் முக்கியக் கூட்டாளியான சவுதி அரேபிய அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை அனுபவித்தவர்களாய் இருந்தனர். சம்பவம் நடந்து 13 ஆண்டுகளுக்கும் அதிகமாகி விட்ட நிலையிலும், செப்டம்பர் 11 தாக்குதல்கள் குறித்த தாக்குதல்களுக்கு சவுதி நிதியாதாரமளித்ததாக கூறப்பட்ட விவகாரத்தைக் கையாளுவது குறித்த காங்கிரஸ் விசாரணையின் அறிக்கையில் இருந்த 28 பக்கங்களை வெளிவிடுவதற்கு அமெரிக்க அரசு மறுத்துவிட்டது.  இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்கள் சிஐஏ இன் நேரடியான கண்காணிப்பின் கீழ் இருந்தவர்கள், அப்படியிருந்தும் அவர்கள் முறையான குடிவரவு அனுமதி இல்லாதிருந்த சமயத்திலும் கூட, அமெரிக்காவிற்குள் நுழைவதற்கும், அமெரிக்காவில் இருந்து வெளியேறுவதற்கும், பின் மீண்டும் அமெரிக்காவிற்குள் சுதந்திரமாக நுழைவதற்கும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஒரு சமயத்தில் அமெரிக்காவில் அவர்கள் வணிகரீதியான ஜெட் விமான ஓட்டிகளாகவும் பயிற்சி பெறவும் கூட அனுமதிக்கப்பட்டனர்.      

அதன்பின் அன்வர் அல்-அவ்லாக்கி விடயம். அமெரிக்காவில் பிறந்த முஸ்லீம் மதகுருவான இவர் 2011 இல் யேமனில் நடந்த ஒரு அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். பாரிஸ் துப்பாக்கிதாரிகளுக்கு வழிகாட்டியது உட்பட இப்போது வரிசையாய் பல்வேறு சதிகள் தொடர்பாகவும் குற்றம் சாட்டப்படும் அல்-அவ்லாகி அமெரிக்க அரசுடன் நெருக்கமாகத் தொடர்புபட்டிருந்தவராவார். 2002 இல் அமெரிக்க தலைநகரில் காங்கிரஸில் முஸ்லீம் ஊழியர்களுக்கான தொழுகை சேவையை நடத்திய முதல் இமாமாக அவர் ஆகியிருந்தார். 9/11 தாக்குதல்களுக்கு பிந்தைய மாதங்களில், முஸ்லீம்களுக்கும் அமெரிக்க இராணுவத்திற்கும் இடையிலான பதட்டங்களைத் தணிப்பது குறித்துப் பேசுவதற்காக இவர் பென்டகனுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

மிகச் சமீபத்தில், 2013 போஸ்டன் நெடுந்தூர ஓட்டப்போட்டி குண்டுவெடிப்பை எடுத்துக் கொண்டால், தாக்குதலில் முக்கியமாக சந்தேகிக்கப்பட்ட, தமேர்லான் சர்னேயேவ், FBI இன் கண்காணிப்பின் கீழிருந்தவர் மட்டுமல்ல, முஸ்லீம் சமுதாயத்திற்கு எதிரான ஒரு உளவாளியாக பணியில் அமர்த்துவதற்காய் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்டவரும் ஆவார். குண்டுவெடிப்புக்கு நான்கு நாட்களின் பின் கொல்லப்பட்ட சர்னேயேவ், மாஸ்கோ அரசாங்கத்திற்கு எதிராகப் போராடி வந்த இஸ்லாமியவாதிகளை சந்தித்து வருவதற்காக தெற்கு ரஷ்யப் பகுதிக்கு சுதந்திரமாக போவதற்கும் வருவதற்குமாய் அனுமதிக்கப்பட்டிருந்தவராவார். அவரது நடவடிக்கைகள் குறித்து ரஷ்ய அரசாங்கமே கூட ஒருமுறை அல்ல இரண்டு முறை அமெரிக்க அதிகாரிகளை எச்சரித்திருந்தது.

பாரிஸில் சென்ற வாரத்தில் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரிகள் விடயத்தில், அவர்கள் பிரெஞ்சு உளவு முகமையால் மட்டுமல்ல, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உளவுத் துறையாலும் கூட கண்காணிக்கப்பட்டிருந்தவர்களாக இருந்தது ஒப்புக் கொள்ளப்படுகின்ற விடயமாகும்.

போலிஸ் மற்றும் உளவு முகமைகளின் கண்காணிப்பின் கீழ் இருப்பவர்களும் நேரடித் தொடர்பில் இருப்பவர்களுமே ஒன்றுக்கடுத்த ஒன்றாய் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியவர்களாக இருக்கிறார்களே அது எப்படி? திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டிருப்பதான சாத்தியத்தையும் கூட எந்த விதத்திலும் அகற்றிவிட முடியாது. அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்ட  அல்லது கண்டுகொண்டும் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளாலோ  நிகழ்வுகள் அரங்கேற அனுமதிக்கப்பட்டன. அரசுக்கு நன்கறியப்பட்ட நபர்களால் நடத்தப்பட்டன என்ற நிலையில், சிஐஏ இன் சதிவேலையின் ஏதோவொரு வடிவம் இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் சம்பந்தப்பட்டிருந்ததா என்பதை நிச்சயத்துடன் சொல்வது சாத்தியமில்லாதது.

இந்த பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்களை மர்ம நபர்களாகவும் முன்னர் அறிந்திராத நபர்களாகவும் சித்தரிக்க ஊடகங்கள் முனைவது மோசடியானதாகும். வெள்ளியன்று அவை, பாரிஸிலான பெருமளவிலான கைதுகளையும் சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு நிதியும் பயிற்சியுமளிப்பதற்கான புதிய அமெரிக்கத் திட்டங்கள் வெளியாவதையும் குறித்த செய்திகளை அடுத்தடுத்து வெளியிட்டன. இந்த நிகழ்வுகளுக்கு இடையிலான தொடர்பு குறித்த எந்த ஆராய்ச்சியும் இருக்கவில்லை.  

அல்கெய்தாவானது உயிர்வாழ்வுக்கான ஒரு அச்சுறுத்தலாக சித்தரிக்கப்பட்டிருந்த பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போரின் முதலாவது தசாப்தத்திற்கு பின்னர், அதே சக்திகள் மதச் சார்பற்ற அரபு அரசாங்கங்களுக்கு எதிரான ஆட்சியை-மாற்றுகின்ற நடவடிக்கைகளில் முதலில் லிபியாவிலும் பின்னர் சிரியாவிலும், மேற்கத்திய-ஆதரவுடனான போர்களில் பினாமிகளாக அமர்த்தப்பட்டன. இப்போது வெளிநாட்டில் போரை ஊக்குவிக்கவும் தாயகத்தில் ஒடுக்குமுறைக்காகவும் அவர்களது நடவடிக்கைகள் மறுபடியும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இறுதியாக, சார்லி ஹெப்டோ மீது நடத்தப்பட்டதைப் போன்ற தாக்குதல்கள் மத்திய கிழக்கில் தசாப்தக்கணக்கிலான ஏகாதிபத்திய தலையீட்டின் விளைபொருளாகும். ஒரு நாட்டிற்கு அடுத்து இன்னொரு நாடாய் தொடர்ச்சியாக நாசப்படுத்தி விட்டிருக்கும் இந்தப் போர்கள் அப்பிராந்தியத்தைத் தாண்டி விரிந்து செல்லக் கூடியதொரு வன்முறை அலையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன. இதற்கிடையே, இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட அதே சக்திகளை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஊக்குவித்து, அவற்றுடன் சேர்ந்து வேலைசெய்கின்றன.