சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Maithripala Sirisena sworn in as Sri Lankan president

மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்பு

By Deepal Jayasekera
10 January 2015

Use this version to printSend feedback

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, வியாழக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் அதிகாரத்தில் இருந்த இராஜபக்ஷவை தோற்கடித்த பின்னர், நேற்று இரவு இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்றார். சிறிசேன இராஜபக்ஷவை விட நான்கு சதவிகிதம் அதிகமாக 51,28 சதவீதம் வாக்குகளைப் பெற்றார். சிறிசேன விரைவில் புதிய பிரதமராக அமெரிக்க-சார்பு ஐக்கிய தேசிய கட்சி (UNP) தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்தார்.

சிறிசேன ஆட்சிக்கு வந்தமை, ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவில் முன்னிலைக்கு" கொழும்பின் முழுமையான ஆதரவை உறுதிப்படுத்துவதற்காக அமெரிக்காவால் திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்றத்தின் ஒரு பகுதியாகும். இது சீனாவை இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தி இராணுவ ரீதியில் சுற்றிவளைப்பதை இலக்காகக் கொண்டதாகும். இராஜபக்ஷவின் நிர்வாகம் பெய்ஜிங்குடன் நெருங்கிய பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை வளர்த்துக்கொண்டதன் காரணமாக அவர் அகற்றப்படுவதை வாஷிங்டன் விரும்பியது. சிறிசேனவின் வளர்ச்சியானது, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் அரசாங்கங்களை அமெரிக்கவின் செயற்பாடுகளின் வழியில் அதன் "முன்னிலையை" தழுவிக்கொள்ளும் வகையில் வடிவமைப்பதுடன் சேர்ந்ததாகும்.

வெகுவிரைவிலேயே சிறிசேனவை பாராட்டிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அமெரிக்கா "இலங்கை மக்கள் மற்றும் அரசாங்கத்துடன் கைகோர்த்து பங்காண்மையை ஆழப்படுத்த எதிர்பார்கிக்ன்றது," என்று தெரிவித்தார். அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரியும் இதே போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டார். தேர்தலுக்கு முன்னதாக, இராஜபக்ஷவை உள்ளர்த்தத்துடன் அச்சுறுத்துவதற்காக அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட கெர்ரி அவர் "சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை" நடத்த வேண்டும் மற்றும் சிறிசேன தேர்தலில் வென்றால், அதிகாரத்தை "அமைதியாக" ஒப்படைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த செய்திகள் வழக்கமான பெயரளவிலான அதிர்வைக் கொண்டிருந்தாலும், அவை இலங்கை தேர்தலை தமது சொந்தத் தேவைகளுக்காகக் கையாள ஒபாமா நிர்வாகம் எடுக்கும் ஒருமுனைப்பான முயற்சியின் மற்றொரு அடையாளம் ஆகும். கடந்த நவம்பரில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், இராஜபக்ஷ அரசாங்கத்தின் மூத்த அமைச்சராக இருந்த சிறிசேன, மறுநாளே வெளியேறி தான் "எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக" ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்குவதாக அறிவித்தார். உடனடியாக, வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஏற்பாடு செய்த அரசியல் அணியில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு அவருக்கு கிடைத்தது.

இராஜபக்ஷ அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு அறிக்கை, வாஷிங்டன் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை தீர்மானிக்கவும் மேலும் சீனாவை தனிமைப்படுத்தவும் எந்தளவுக்கு நெருக்கமாக முயற்சிக்கின்றது, என்பதை சமிக்ஞை செய்கின்றது.

செய்தித்தாள் அறிவித்ததாவது: "புதிய துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் கட்டுமான வேலைகளுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை கடனாகக் கொடுத்து, திரு. இராஜபக்ஷவின் கீழ் பெரும் நட்பு நாடாக ஆகியிருந்த சீனாவிடம் இருந்து இலங்கை தூர விலகத் தொடங்குமா என்பதே முக்கிய கேள்வி ஆகிறது. இந்த போக்கு, இந்தியாவுக்கு கவலையளித்துள்ளது. அது சீன இராணுவ நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்த பின்னர் சமீபத்திய மாதங்களில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது."

யூஎன்பீ பொருளாதார விவகார பேச்சாளர் ஹர்ஷ டி சில்வா, செய்தித்தாளுடன் பேசுகையில், புதிய அரசாங்கமானது "அனைத்து முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களையும் பரிசீலனை செய்யும்... சீனாவுடனான அதன் நெருக்கத்தால் இந்தியவை பகைத்துக் கொண்ட தற்போதைய ஆட்சி போலல்லாமல், நாங்கள் இந்தியா மற்றும் சீனா இடையே சீரான அணுகுமுறையை பின்பற்றுவோம்," என்றார்.

தனது நிர்வாகம் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுக்கும் என்று சிறிசேன சமிக்ஞை செய்துள்ளார். அவரது பதவியேற்பில் ஆற்றிய ஒரு சுருக்கமான உரையில், தனது அரசாங்கம் "உலகின் அனைத்து நாடுகளுடனும் நட்புறவை உருவாக்குவதற்காக வெளிநாட்டு கொள்கையை மாற்றியமைக்கும்" என்று கூறினார். சிறிசேனவின் தேர்தல் அறிக்கை, இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் மற்றும் ஜப்பானுடன் "சம உறவுகளை" நிறுவுவதாக வாக்குறுதி வழங்கியுள்ளது.

சீனாவுடனான இராஜபக்ஷவின் உறவுகள் பற்றிய தெளிவான குறிப்பில், அந்த விஞ்ஞாபனம் பிரகடனம் செய்ததாவது: "இராணுவ வலிமையை பயன்படுத்தி வெள்ளையர்கள் கைப்பற்றிய நிலம் [இலங்கை மீதான பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி பற்றிய ஒரு குறிப்பு], இப்போது ஒரு சில நபர்களுக்கு இலஞ்சம் கொடுத்து வெளிநாட்டவர்களால் பெறப்பட்டு வருகின்றதுடன், இந்த போக்கு மற்றொரு ஆறு ஆண்டுகளுக்கு நீடித்தால் எங்கள் நாடு ஒரு காலனி ஆகிவிடும் நாம் அடிமைகள் ஆக வேண்டும்."

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறிசேனவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருந்தார். மோடி அரசு தேர்தலின் போது எந்த அரசியல் விருப்பத்தையும் வெளிப்படுத்தாத அதேவேளை, கொழும்பு இருந்து செய்தி வழங்கிய இந்திய செய்தி ஊடகங்கள், சிறிசேன இலங்கையில் சீனாவின் செல்வாக்கு பற்றிய புது டில்லியின் கவலைகளை அணுகுவதோடு இந்தியாவுடன் நட்புறவுகளை உருவாக்குவார் என வலியுறுத்தின.

புதிய ஜனநாயக முன்னணியானது (புஜமு), யூஎன்பீ, சிங்கள அதிதீவிரவாத ஜாதிக ஹெல உறுமய மற்றும் 2010ல் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியையும் உள்ளடக்கியதாகும். அது தமிழ் உயரடுக்கின் கூட்டணி கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (SLMC), அகில இலங்கைத் முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஒரு தொகை தொழிற்சங்கங்களாலும் ஆதரிக்கப்பட்டது. சிங்கள இனவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி), புதிய ஜனநாயக முன்னணிக்கு வெளியில் இருந்து கொண்டு உச்சிவரை சிறிசேனவை ஆதரித்தது.

வாக்காளர்கள் மத்தியில், தேர்தல் முடிவானது சிறிசேன மற்றும் யூஎன்பீக்கான மக்களுடைய ஆதரவு என்பதை விட, மிக அதிகமாக இராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிரான வெறுப்பையே பிரதிபலித்தது. இராஜபக்ஷ தோற்கடிக்கப்படும் வரை, சிறிசேன அவரது அரசாங்கத்தின் மத்திய உறுப்பினராக இருந்ததோடு அதனால் திணிக்கப்பட்ட அனைத்து சமூக, அரசியல் தாக்குதல்களுக்கும் அவர் முழு உடந்தையாக இருந்துளார். யூஎன்பீ ஆட்சியில் இருந்த போது, அதன் ஈவிரக்கமற்ற தொழிலாள வர்க்க விரோத தாக்குதலால் பரவலாக தொழிலாளர்கள் ஏழைகள் மத்தியில் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது.

நவ சம சமாஜக் கட்சி (NSSP), ஐக்கிய சோசலிசக் கட்சி (USP), முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) போன்ற போலி-இடது அமைப்புக்கள், குறிப்பாக இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் எதிர்ப்பை, சிறிசேனவை ஆதரித்த வலதுசாரி அமெரிக்க-சார்பு கூட்டணிக்குப் பின்னால் திருப்பியமைக்குப் பொறுப்பேற்க வேண்டும். சிறிசேனவின் தேர்வானது இராஜபக்ஷவின் "சர்வாதிகாரத்திற்கு" ஒரு "ஜனநாயக" மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் அனைவரும் மோசடியாக வலியுறுத்தினர்.

கொழும்பிலும் அதன் சுற்றியுள்ள தொழிலாள வர்க்க பகுதிகளில், சிறிசேன இராஜபக்ஷவை விட அதிக வாக்குகளைப் பெற்றார். சிறிசேன பிரதானமாக தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பாலும் வாழும் நுவரெலியா மாவட்டத்தில் இராஜபக்ஷவை தீர்க்கமாக தோற்கடித்தார். இராஜபக்ஷவின் 34,06 சதவீத வாக்குகளுடன் ஒப்பிடும்போது அவர் 63,88 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் மக்கள் செறிவாக வாழும் வட மாகாணத்தில், எதிர்க்கட்சி வேட்பாளர் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். முஸ்லீம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில், சில பகுதிகளில் அவரது வாக்கு 80 சதவீதத்தையும் தாண்டியது. இரண்டு மாகாணங்களிலும் வசிப்பவர்கள், இராஜபக்ஷ அரசாங்கமும் இராணுவம் 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளை நசுக்கிய போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டது மட்டமன்றி, தற்போதைய இராணுவ ஒடுக்குமுறையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உழைக்கும் மக்கள் மற்றும் ஏழைகளுக்கான நிவாரணங்கள் பற்றிய அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள சிறிசேனவின் வெற்று வாக்குறுதிகளுக்கு அப்பால், அவரது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரியுள்ள சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை முன்னெடுக்கும். வளர்ந்து வரும் உலக பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ் உலக சந்தைகளில் கேள்வி குறைந்துள்ளதனால் இலங்கை ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மத்திய வங்கியின் படி, இலங்கையின் மொத்தக் கடன், 2005ல் இருந்த 2.2 டிரில்லியன் ரூபாய்களில் இருந்து, 7.4 டிரில்லியன் ரூபாய்களாக (56 பில்லியன் அமெரிக்க டாலர்) உயர்ந்துள்ளது. இதில் 43 சதவீதம் வெளிநாட்டு கடனாகும்.

இராஜபக்ஷ தற்போது சுமார் 7 சதவீதமாக உள்ள இலங்கை பொருளாதார வளர்ச்சியை பற்றி பெருமைபட்டுக்கொள்ளும் அதேவேளை, அவை முக்கியமாக வெளிநாட்டு கடன்களாக வரும் உள்கட்டமைப்பு முதலீடுகளின் விளைவு ஆகும். சர்வதேச நாணய நிதியம், கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8 சதவீதமாக இருந்த வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை, இந்த ஆண்டு 5.2 சதவீதமாக குறைக்கக் கோரியுள்ளது. 2016ல் இந்த இலக்கு 3.2 சதவீதம் ஆகும். இது இலங்கையின் சாதாரண மக்களின் சமூக உரிமைகள் மீதான சிறிசேன அரசாங்கத்தின் ஒரு பாரிய தாக்குதலைக் கோருகிறது.

அதே சமயம், வாஷிங்டனின் கட்டளைகளுக்கு ஏற்ப, அமெரிக்க "முன்னிலையின்" சீனாவிற்கு எதிரான இராணுவ அணிதிரள்வு வலையமைப்புக்குள் இலங்கையை சிறிசேன இணைப்பது, ஆசியா முழுவதும் புவிசார்-அரசியல் பதட்டங்களை அதிகரித்து போர் ஆபத்துக்களை உக்கிரமாக்கும். சிறிசேன விரைவில் "ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி" பற்றி அவரது வாய்சவடாலைக் கைவிடுவதோடு, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாத திட்டநிரல் மீதான தொழிலாளர்க்கள் மற்றும் கிராமப்புற வறியவர்கள் மத்தியில் இருந்து தவிர்க்க முடியாமல் எழும் விரோதத்தை அடக்குவதற்காக இராஜபக்ஷ உருவாக்கிய பொலிஸ்-அரச இயந்திரத்தை அவரும் கட்டவிழ்த்துவிடுவார்.
சோசலிச சமத்துவக் கட்சியானது (சோ...), இராஜபக்ஷ மற்றும் சிறிசேன மற்றும் அவரது போலி-இடது ஆதரவாளர்களுக்கும் எதிராக, ஜனாதிபதி தேர்தலில் தலையீடு செய்ததோடு, அதன் சொந்த வேட்பாளர் பாணி விஜேசிரிவர்தனவை களத்தில் இறக்கியது.

இராஜபக்ஷவின் பிற்போக்கு நிகழ்ச்சி நிரலை எதிர்த்ததோடு, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் மூலோபாய நகர்வுகளுக்கு ஏற்ப ஒரு அமெரிக்க ஆட்சி-மாற்றத்தின் பாகமே சிறிசேன முகாம் என எச்சரிக்கையும் விடுத்த ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள எமது சக சிந்தனையாளர்களுடன் இணைந்து, போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு இயக்கத்தை கட்டியெழுப்புவதே எங்கள் பிரச்சாரத்தின் முக்கிய உந்துதலாக இருந்தது.

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் பாணி விஜேசிரிவர்தன 4,277 வாக்குகளைப் பெற்றார். இந்த முதலாளித்துவ, போருக்கான அடிப்படைக் காரணம் அகற்றப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தில் சுயாதீனமாக தொழிலாளர்களை அணிதிரட்டவும், இளைஞர்கள் மத்தியில் முன்னெடுத்த கொள்கை ரீதியான போராட்டத்தின் தாக்கமான வாக்குகளாகும். இந்த வாக்குகள், சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்த கொள்கைப் பிடிப்பான போராட்டத்திற்கும், மற்றும் போரின் தோற்றுவாயான முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கிவீசுவதன் பேரில் சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காகவும் வழங்கப்பட்ட நனவுபூர்வமான வாக்குகளாகும்.