சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

A Potemkin gathering of world leaders in Paris

பாரீஸில் உலக தலைவர்களின் ஓர் ஏமாற்று பொய்பிரச்சார ஒன்றுகூடல்

By Bill Van Auken
14 January 2015

Use this version to printSend feedback

சார்லி ஹெப்டோ அலுவலகங்கள் மீதான தாக்குதலுக்குப் பின்னர் ஜனவரி 11இல் பாரீஸ் அணிவகுப்பில் தலைமை வகித்து நடத்தியதாக கூறப்படும் "உலக தலைவர்கள்", உண்மையில் அவர்கள் புகைப்படமெடுப்பதற்காகவே நன்கு தயார்செய்யப்பட்டு   ஒன்றுகூடியிருதனர்.


பாரீஸ் சார்லி ஹெப்டோ ஆர்ப்பாட்டத்தில் உலகத் தலைவர்களின் போலியான பங்களிப்பை எடுத்துக்காட்டும் புகைப்படம்

ஊடகங்களில் தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஏறத்தாழ ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களின் நிழலில் பாரிய கூட்டம் இருப்பதைப் போன்ற தோற்றத்தை அளிக்கும் கோணத்திலிருந்து காட்டப்பட்ட போதினும், மேலே இருந்து எடுக்கப்பட்ட ஒரு காட்சியானது, ஒரு பலமான பாதுகாப்பு வளையத்தால் அணிவகுப்பாளர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு,  அண்ணளவாக ஒரு டஜன் வரிசை அவர்களில் இருந்து முன்தள்ளி காலியாக இருக்கும் வீதியில் நெருக்கமாக குழுமி நிற்பதை எடுத்துக்காட்டுகிறது.

அரசு தலைவர்களின் இந்த ஒன்றுகூடலின் இந்த பிற்போக்குத்தனமான குணாம்சத்தை மற்றும் மனிதகுல விடுதலையின் பாதுகாவலர்களாக காட்டிக்கொள்ளும் அவர்களது முயற்சியின் மோசடியை, வேறெதுவும் இந்தளவிற்குத் துல்லியமாக குறித்துக் காட்ட முடியாது.

அந்த புகைப்படத்தில் பங்கெடுத்திருப்பவர்களில் நடுவில் இருப்பது பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட், அவரது செல்வாக்கு விகிதம் சமீபத்திய மாதங்களில் புதிய ஆழத்திற்குஅதாவது கடந்த ஆண்டின் முடிவில் சுமார் 15 சதவீதமாக சரிந்து போயுள்ளது. அவரது அரசாங்கம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மக்கள் விரும்பாத கொள்கைகளைப் பின்தொடர்ந்து வருகின்ற நிலையில் சார்லி ஹெப்டோ தாக்குதலைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் அவரது அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுக்குமென அந்த ஜனாதிபதி நம்புகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஹோலாண்ட் மற்றும் அவரது சக ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசு தலைவர்களுக்கு அப்பாற்பட்டு, மத்திய கிழக்கிலிருந்து ஆபிரிக்கா வரையில் உக்ரேன் வரையில் இரத்தத்தில் நனைந்த அவர்களது கரங்களுடன், அந்த அணிவகுப்பாளர்களில் துருக்கிய பிரதம மந்திரி அஹ்மெட் தாவ்டோக், இவரது அரசாங்கம் இந்த பூமியில் வேறெதையும் விட அதிகமாக இதழாளர்களைச் சிறையில் அடைத்துள்ளது, அடுத்து எகிப்திய வெளியுறவு மந்திரி சமெஹ் சௌக்ரி, இவரது ஆட்சி ஆயிரக் கணக்கானவர்களை படுகொலை செய்துள்ளது; பத்து ஆயிரக் கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்களை சிறையில் அடைத்துள்ளது, இத்தகையவர்களும் உள்ளடங்கி இருந்தனர்.

புகைப்படத்திற்கு முன்னிப்பவர்களில் இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தெனியாகுவும் இருந்தார் (இதில் ஒரு காட்சியில் அவர் அங்கே இல்லாத ஒரு கூட்டத்தைப் பார்த்து பாவனையாக கையசைக்கிறார்), இவரது ஆட்சி பாலஸ்தீன ஊடங்களை இரக்கமே இல்லாமல் ஒடுக்கியதோடு, ஆயிரக் கணக்கான பாலஸ்தீனியர்களையும் பலி கொடுத்துள்ளது.

அங்கிருக்கும் ஏனைய ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களில் ஜோர்டன் அரசரும் இருந்தார், அவர் சமீபத்தில் தான் அவரது முடியாட்சியை விமர்சித்த குற்றத்திற்காக ஒரு எழுத்தாளரை 15 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பி இருந்தார். பிரான்சுக்கான சவூதி அரேபிய தூதர் மொஹம்மது இஸ்மாயில் அல்-ஷேக்கும் இருந்தார், அரசு-உதவிபெறும் வாஹ்ஹாபி இஸ்லாம் பள்ளியை அவமதித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு வலைப்பதிவர் ரஃபி பதாவிக்கு 1,000 கசையடி தண்டனையும்அதில் 50 வெள்ளிக்கிழமை அன்று தான் வழங்கப்பட்டதுமற்றும் 10 ஆண்டுகால சிறை தண்டனை விதித்த ஒரு சர்வாதிகார முடியாட்சியை அவர் பிரதிநிதித்துவம் செய்கிறார்.

அவர்களது அரசியல் நோக்கங்கள் மற்றும் அவர்கள் பாதுகாக்கும் சமூக நலன்கள் இரண்டையும் பொறுத்த வரையில், ஞாயிறன்று அந்த புகைப்படத்திற்காக களத்தில் கூடியிருந்த அந்த அதிகாரிகள் அனைவரும் பிரான்சிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள பாரிய உழைக்கும் மக்களுக்கு நேரடியாக எதிராக நிற்கின்றனர். இதனால் தான் புகைப்படமெடுக்கும் நிகழ்வில், தீவிர பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பாரீஸ் அணிவகுப்பாளர்களிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் ஒன்றுதிரண்டு இருக்கவேண்டியிருந்தது.

அந்த வாரயிறுதியில் பிரான்ஸ் எங்கிலும் பேரணி நடத்திய மில்லியன் கணக்கானவர்களில் பலர், சார்லி ஹெப்டோ அலுவலகங்களில் 12 பேர் கொல்லப்பட்டதன் மீது கவலையுடனும் பய உணர்வுடனும் நகர்ந்து சென்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அதேவேளையில் அந்த அரசு தலைவர்களும் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளும் அங்கே மிகவும் வேறுபட்ட காரணங்களுக்காக ஒன்று கூடியிருந்தனர். அவர்கள் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பதை மேற்கொண்டு எடுத்துச் செல்வதற்காக அந்த தாக்குதலினால் உண்டான அதிர்ச்சி மற்றும் குழப்பைத்தைச் சுரண்டுவதற்கான ஒரு பொதுவான விருப்பத்தால் ஒன்றுகூடி இருந்தனர். இந்த "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பதே வெளிநாட்டில் முடிவில்லா போரை ஊக்குவிப்பதற்கும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீது பொலிஸ் அரசு ஒடுக்குமுறைக்கும் ஒரு அரசு சூழ்ச்சியாகும்.

குறிப்பிடத்தக்க வகையில் அந்த புகைப்படத்தில் இல்லாதிருப்பது ஜனாதிபதி பராக் ஒபாமாவும் மற்றும் அமெரிக்காவின் எந்தவொரு உயர்மட்ட அரசு தலைவரும் ஆவர், இந்த உண்மை அமெரிக்க அரசு எந்திரத்திற்குள் ஓர் அரசியல் சர்ச்சையில் கவனத்திற்குரிய புள்ளியாக மாறியுள்ளது. பிரான்சிற்கான அமெரிக்க தூதர் ஜேன் ஹார்ட்லிக்கு பதிலாக அமெரிக்காவால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட அரச வழக்குத்தொடுனர் எரிக் ஹோல்டர், அப்போது பாரீஸில் இருந்த அவர், அதில் கலந்து கொள்ளவில்லை. அப்பெண்மணி ஒபாமாவிற்கு தேர்தல் பிரச்சார பணத்தை திரட்டிய  அவரது சேவைக்காக சமீபத்தில் நியமிக்கப்பட்டு இருந்தார்.

அங்கு ஒருவரை அனுப்பவதற்கு ஒரு பாரியளவிலான அமெரிக்க பாதுகாப்புப் பிரிவை நிலைநிறுத்த வேண்டி இருந்திருக்கலாம், அதனால் நடைமுறையில் அந்த அணிவகுப்பே இயங்காது செய்துவிடும் என்பதே கடந்த ஞாயிறன்று பாரீஸிற்கு எவரொருவரையும் அனுப்பாததற்கு வெள்ளை மாளிகை அளித்த விளக்கமாக இருந்தது. அந்த "பேரணியின்" நிஜமான சூழலைக் கொண்டு பார்த்தால், அங்கே கூடிய அரசாங்க தலைவர்கள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களையும் உடல்சோதனை செய்வதற்கு இரகசிய சேவை வலியுறுத்தி இருந்தாலும் ஒருவர் ஆச்சரியமடைய வேண்டியிருக்காது.

ஒபாமா கலந்து கொள்ளாததற்கு காரணங்கள் என்னவாக இருந்தாலும், அவர் கலந்து கொண்டிருந்தால் கூட, அது, அந்த எரிச்சலூட்டும் போலிநாடகத்தில் ஒரு மிகச் சிறிய அலங்காரமாக தான் இருந்திருக்கும். ஒபாமாவோ அல்லது அமெரிக்க நிர்வாகத்தின் வேறெந்தவொரு மூத்த பிரதிநிதியோ கலந்துகொண்டிருந்திருந்தால் அது, பாரீஸில் பலமாக பாதுகாக்கப்பட்ட வீதிகளில் உலக தலைவர்கள் என்று அழைப்படுபவர்களால் காட்டப்பட்ட கோமாளித்தனமான "சுயபுகைப்படம் எடுக்கும்" பாசாங்குத்தனத்தில், இந்த பூமியின் மீது அரச கொடூரத்தை முதலிடத்தில் நடத்துபவரையும் வெறுமனே சேர்த்துக் கொண்டிருக்கும்.