சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

European powers implement police state measures in wake of Charlie Hebdo attack

சார்லி ஹெப்டோ தாக்குதலை அடுத்து ஐரோப்பிய சக்திகள் பொலிஸ் அரச நடவடிக்கைகளை அமுல்படுத்துகின்றன

By Ulrich Rippert
14 January 2015

Use this version to printSend feedback

பிரான்சில் சார்லி ஹெப்டோ மீதான தாக்குதல்களுக்கு ஐரோப்பா முழுவதிலும் அரசாங்கங்கள் பெருமளவிலான ஜனநாயக-விரோத நடவடிக்கைகளை திணிக்க வேகமாக நகர்ந்து வருவதன் மூலமாக விடையிறுப்பு காட்டியுள்ளன. பாரீஸில் நடந்த அந்த சம்பவத்தால் உண்டான அதிர்ச்சி மற்றும் குழப்பத்தை, நீண்டகாலமாக தயாரிக்கப்பட்டு ஆனால் இதுவரையில் எதிர்ப்பை முகங்கொடுத்து வந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அவை சுரண்டி வருகின்றன.

அந்த தாக்குதல்களுக்குப் பின்னர் உடனடியாக, ஆயிரக் கணக்கான பாதுகாப்பு படைகளைக் கொண்டு ஐரோப்பிய தலைநகரங்கள் மற்றும் பிரதான நகரங்களின் விமான நிலையங்கள், அரசு கட்டிடங்கள், பத்திரிகை அலுவலகங்கள், தூதரகங்களின் முன்புறத்தில் மற்றும் பொதுவிடங்களில் பொலிஸ் பிரசன்னம் பலப்படுத்தப்பட்டது.

கனரக ஆயுதமேந்திய மற்றும் உருமறைத்த இராணுவ துருப்புகள் பாரீஸ் முழுவதிலும், ஈபிள் கோபுரம் மற்றும் அனைத்து பொதுவிடங்கள் உட்பட பிரான்சின் ஏனைய இடங்களிலும் நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர். அந்நகரத்தின் பகுதிகள் ஒரு போர் மண்டலத்திற்கு ஒத்திருக்கிறது.

அமைதி மற்றும் ஒழுங்கு பேணுவதற்கும் பொது கட்டிடங்களைப் பாதுகாப்பதற்கும் பாரீஸில் 10,000 துருப்புகளை நிலைநிறுத்துவதாக திங்களன்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. அதற்கும் கூடுதலாக குறிப்பாக பாதிப்புக்குரியவை என்று கருதப்படும் யூத பாடசாலைகள் மற்றும் யூத வழிபாட்டுத்தலங்களைப் பாதுகாக்க அரசாங்கம் 4,700 பொலிஸ் அதிகாரிகளையும் மற்றும் ஆயுதந்தாங்கிய காவல்படையையும் வழங்கியுள்ளது.

திங்களன்று மந்திரிசபை கூட்டத்திற்கு பின்னர் பாதுகாப்பு மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோன் ஒரு நிரந்தர அச்சுறுத்தல் குறித்து பேசினார். பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் இரகசிய சேவைகள் மற்றும் கூடுதல் துல்லியத்துடனான கண்காணிப்புக்கு கூடுதல் பணம் வழங்குவதற்கு வாக்குறுதி அளித்தார்.

புருசெல்ஸில் கடந்த வாரயிறுதி பாதுகாப்பு உச்சிமாநாட்டில் ஐரோப்பிய சக்திகள், ஐரோப்பா எங்கிலும் பயணிகள் தரவமைப்பு முறையைச் சாத்தியமான அளவில் விரைவாக கொண்டு வர உடன்பட்டன. விமான சேவைகள் அவற்றின் பயணிகள் குறித்த விபரங்களை ஐந்து ஆண்டுகள் வரை வைத்திருந்து உதவி செய்ய உள்ளன. முன்னாள் சிஐஏ இயக்குனரும் மற்றும் என்எஸ்ஏ இன் தலைவருமான அமெரிக்க தளபதி மைக்கேல் ஹேடனும் அந்த கூட்டத்தில் பங்கெடுத்தார். அமெரிக்காவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பெரும்பாலான சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமான உளவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் விரிவாக்குவதற்கும் ஹேடன் பொறுப்பு வகித்தவராவார்.

ஐரோப்பா எங்கிலும் ஒவ்வொரு நாடுகளும் அதனதன் சொந்த நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகின்றன. ஜேர்மனியில் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம், CDU) சர்வதேச உளவுவேலை ஒத்துழைப்பை மேம்படுத்த அழைப்பு விடுத்துள்ளார்.

ஜேர்மனியின் மிக முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று, இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களைக் கண்காணிக்கும் கூடுதல் உளவுவேலை பணியாளர்களின் நியமனமாகும் என்று திங்களன்று உள்துறை மந்திரி தோமஸ் டி மெய்ஸியர் வலியுறுத்தினார். இதற்கான நிதி ஒதுக்கீடுகளும் கணிசமான அளவில் உயர்த்தப்படும் என்றவர் தெரிவித்தார்.

டி மெய்ஸியரும் மற்றும் ஏனையவர்களும் தரவு சேகரிப்பு மையங்களை (warehousing) மீண்டும் கொண்டு வர அழைப்புவிடுத்துள்ளனர். எல்லா பயனர்களது தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் இணைய பரிவர்த்தனை தரவுகளை, எந்தவொரு சந்தேகத்தின் அடித்தளத்தில் இல்லையென்றாலும் கூட, பல மாதங்களுக்கு சேமிப்பது சட்டபூர்வமாக கேள்விக்குரியதாகும் என்று 2010இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடந்த ஆண்டு ஐரோப்பிய நீதிமன்றம் அதுபோன்று பிரத்யேக தகவல்களைக் கண்காணிப்பதும் சேகரிப்பதும் சட்டவிரோதமானது என்று தீர்ப்பு கூறியது. தகவல் பரிமாற்றத்தைச் சேமித்து வைப்பது இதழாளர்களது உட்பட தொழில்துறை இரகசியங்களை இல்லாமல் செய்து விடக்கூடுமென அது விவரித்தது. இப்போதோ, பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், ஜேர்மன் ஆளும் வர்க்கம் வேகமாக இத்தகைய ஜனநாயக-விரோத நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த அழுத்தம் அளித்து வருகிறது.

மேலும் திங்களன்று நீதித்துறை மந்திரி ஹெய்கோ மாஸ் (சமூக ஜனநாயக கட்சி, SPD) கூறுகையில் பயங்கரவாத நடவடிக்கையில் பங்கெடுக்க பயணித்ததாக குற்றஞ்சாட்டப்படுபவர்கள் இன்னும் கடுமையான தண்டனைகளை முகங்கொடுக்க வேண்டியதிருக்கும் என்றார். தாக்குதல் நடத்துவதற்கு தயாரிப்பு செய்வதற்காக பயங்கரவாத முகாமில் கலந்து கொள்பவர்கள் மட்டுமே, இப்போது வரையில், தண்டிக்கக் கூடியவர்களாக இருந்தனர். ஆனால் இனி எதிர்காலத்தில், தாக்குதல்களில் பங்கெடுக்கும் நோக்கத்துடன் வெளிநாட்டிற்கு பயணிப்பவரோ அல்லது ஒரு பயங்கரவாதிக்கு பயற்சியளிப்பவரோ கூட ஒரு குற்ற தண்டனைக்கு உள்ளாவார். குற்றஞ்சாட்டப்பட்டவர் நிஜத்தில் பயங்கரவாத முகாமிற்கு செல்கிறாரா என்பதெல்லாம் அங்கே ஒரு பொருட்டாக இல்லை.

அரசியல் வாரயிதழ் Die Zeit இன் செய்திப்படி, உள்நாட்டு அரசியல் விவகாரங்களின் செய்தி தொடர்பாளர் புர்க்ஹார்ட் லிஸ்ச்கா (SPD) கூறுகையில், யாரேனும் ஒருவர் ஒரு கடிதத்திலோ அல்லது சமூக வலைத் தளத்திலோ அவரது உள்நோக்கங்களை வெளியிடுபவர்களை வழக்கின் கீழ் கொண்டு வர முடியாத விடயங்களும் உள்ளன என்று புலம்பினார். எதிர்காலத்தில் இம்மாதிரியானவர்களும் ஜேர்மனியில் அல்லது வெளிநாடுகளில் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றார்.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை ஒரு குறிப்பிட்ட குற்றத் தண்டனையாக ஆக்க நீதித்துறை மந்திரியும் விருப்பம் தெரிவித்துள்ளார். பயங்கரவாத நடவடிக்கையை ஆதரிப்பதை நோக்கமாக கொண்டது என்று கருதப்படும் அனைத்து விதமான நன்கொடைகளும் தண்டிக்கப்படக் கூடியதாக ஆக வேண்டும். அமெரிக்காவில் அதுபோன்ற சட்டங்கள் பரந்தளவில் நடைமுறையில் உள்ளன, அவை எந்தவொரு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் நேரடியாக இணைப்பு பெறாத குழுக்களை இலக்கில் வைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன என்றவர் தெரிவித்தார்.

இந்த வாரயிறுதியில், ஜேர்மனி அரசாங்கம் ஒரு சட்டமசோதாவை பரிசீலிக்க உள்ளது, அது "தாக்குதல் நடத்தக்கூடிய சாத்தியமுள்ளவர்களிடம்" அடையாள அட்டைகளை திரும்பப் பெற வழிவகுக்கிறது. சில குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் சந்தேகத்திற்குரியவர்களின் கடவுச்சீட்டை திரும்ப பெறுவதற்கு ஏற்கனவே சாத்தியக்கூறுகள் உள்ளன.

பிரிட்டனில் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் இணைய கண்காணிப்பின் ஒரு கண்டிப்பான விஸ்தரிப்பை அறிவித்துள்ளார். அவர் மறை-குறியீடு செய்யப்பட்ட நிரல்களுக்கும் (encryption programmes), வாட்ஸ்-அப் போன்ற செய்தி சேவைகளுக்கும் தடை விதிக்க விரும்புகிறார்.

நம்மால் வாசிக்க முடியாத" எந்தவொரு "தகவல் தொடர்பு வழிவகையும்" இருக்க கூடாது என்று கேமரூன் தெரிவித்தார். கேமரூன் தெரிவிக்கையில், அதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதில் முந்தைய அரசாங்கங்கள் தயக்கம் காட்டின, ஆனால் அவை அவசியமானவை ஏனென்றால், "அதிதீவிரமானவற்றில்", எந்தவொரு தகவல் தொடர்பும் உள்துறை அமைச்சகத்தின் கையெழுத்திடப்பட்ட உத்தரவாணையுடன் பெறப்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

"தகவல் சேகரிப்பு சாசனம்" (Snoopers Charter) எனும் இத்தகைய முன்மொழிவுகள் முதலில் அறிமுகப்படுத்தபட்டு அறிய வந்ததும், 2012இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போனது. தகவல் தொடர்பு நிறுவனங்கள் பன்னிரெண்டு மாதங்களுக்கு அவற்றின் மொத்த தகவல் தொடர்புகளையும் தக்க வைத்திருக்குமாறு அவை கோரின. தரவு-குறியீடு பயன்படுத்தி எவரொருவரும் தகவல் தொடர்பு செய்தாலோ அல்லது தரவு-குறியீடு செய்யப்பட்ட கோப்புகளை அனுப்பினாலோ இரகசிய-குறியீட்டில் பாதுகாக்கப்பட்ட அவற்றை அரசாங்க அதிகாரிகள் அணுகுவதற்குரிய விபரங்களை வழங்க வேண்டி இருக்கும். அவர்களது கடவுச்சொல்லை வழங்க மறுப்பவர்கள் இரண்டாண்டுகள் சிறையில் இருக்க வேண்டி இருக்கலாம்.

பிரதம மந்திரி மரியோ ரென்சியின் (PD - ஜனநாயக கட்சி) கீழ் இத்தாலிய அரசாங்கமும் அரசு அதிகாரங்களில் குறிப்பிடத்தக்க விஸ்தரிப்பை அறிவித்துள்ளது. உள்துறை மந்திரி அங்கேலினோ ஆல்ஃபனோ, பயங்கரவாதத்துடன் சந்தேகத்திற்குரியவராக கருதப்படும் எவரொருவரின் கடவுச்சீட்டையும் திரும்ப பெற பொலிஸிற்கு அதிகாரம் அளிக்கும் ஒரு சட்டமசோதாவை அவர் மந்திரிசபையில் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதற்கும் கூடுதலாக இணைய கண்காணிப்பை அதிகரிக்க அனுமதிக்கும் வகையில் பொலிஸ் மற்றும் நீதித்துறைக்கு அசாதாரண அதிகாரங்களை ஆல்ஃபனோ அளிக்க உள்ளார். அந்த அரசாங்கம் சந்தேகத்திற்குரிய இணைய தளங்களையும் முடக்க திட்டமிட்டு வருகிறது. "தீவிரமயப்படுதலுக்கு பங்களிப்பு செய்யும் வலையமைப்புகளின் சேதிகளைப் பின்தொடர்வதற்கு", எதிர்காலத்தில் இணைய சேவை வழங்குனர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆல்ஃபனோ தெரிவித்தார். "பயங்கரவாத நடவடிக்கையைத் தூண்டிவிடும் வலைத் தளங்களை அனுமதிக்கும்" சேவை வழங்குனர்களுக்கு அரசாங்கம் தடை விதிக்கும் என்றார்.

ஐரோப்பிய அதிகாரங்களின் இந்த ஒருங்கிணைந்த தாக்குதலின் பிரதான நோக்கம் குற்றகரமானதாக கருதப்படும் "இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு" எதிராக போராடுவதல்ல. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வருவதால், ஆளும் மேற்தட்டுகள் அக்கண்டத்தை அதிகளவில் ஒரு பொலிஸ் அரசிற்குள் திருப்பி வருகின்றன. பாரீஸின் வீதிகளில் நிலைநிறுத்தப்பட்ட இராணுவம், உளவுவேலை எந்திரத்தைப் பலப்படுத்துதல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகியவை, அனைத்திற்கும் மேலாக, உள்நாட்டின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வெளிநாடுகளில் முடிவில்லா போர் ஆகியவற்றிற்கு ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திடைய அதிகரித்துவரும் எதிர்ப்பை நோக்கி திருப்பி விடப்பட்டவை ஆகும்.