சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan opposition candidate issues pro-US, pro-business manifesto

இலங்கை எதிர்க்கட்சி வேட்பாளர் அமெரிக்க-சார்பு, வணிக சார்பு விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார்

By W.A. Sunil
31 December 2014

Use this version to printSend feedback

எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனவரி 8 தேர்தலுக்காக 64 பக்க தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது
அமெரிக்க-சார்பு கொள்கையை பின்பற்றுவதாகவும் பெருவணிக நலன்களை பாதுகாப்பதாகவும்
உறுதிமொழி அளிக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தேர்தலை அறிவித்த உடன், சிறிசேன அமைச்சரவையை விட்டு வெளியேறி, தான் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். அவருக்கு வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பி), ஜனநாயகக் கட்சி (DP) மற்றும் சிங்கள அதிதீவிரவாத ஜாதிக ஹெல உறுமய (JHU) உட்பட எதிர்க் கட்சிகளின் கூட்டணி ஆதரவளித்தது.

இராஜபக்ஷவுக்கு எதிராக ஒரு ஆக்கிரோசமான "மனித உரிமைகள்" பிரச்சாரத்தை முன்னெடுத்த அமெரிக்கா, திட்டமிடப்பட்டு வந்த சதி பற்றி நன்கு உணர்ந்திருந்தது. எதிர்க்கட்சி கூட்டணி தலைமை சிற்பியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, கிளின்டன் மன்றத்தில் தனது ஈடுபாட்டின் வழியாக வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்து வந்துள்ளார்.

எதிர்க்கட்சி பிரச்சாரமானது மோசடியான முறையில் இராஜபக்ஷவின் "தனி குடும்ப சர்வாதிகாரத்திற்கான" ஜனநாயக மாற்றீடாக சிறிசேனவை ஊக்குவித்து வருகிறது. எனினும், சிறிசேன, ஜனநாயக உரிமை மீறல்களுக்கு காரணமாக இருந்த அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும், சிறிசேனவுக்கு ஆதரவு கொடுக்கும் அனைத்து எதிர்க் கட்சிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட இனவாத யுத்தத்தை ஆதரித்தன.

சிறிசேன விஞ்ஞாபனத்தில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட, கால் நூற்றாண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச இயந்திரத்தை கலைக்கும் எண்ணம் இருக்கவில்லை. மாறாக, அது பாராளுமன்ற ஜனநாயகம் மீதான மாயைக்கு உயிரூட்டும் முயற்சியில், ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் குறைப்பதற்காக அரச கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்ய முன்மொழிகிறது. குறிப்பாக, நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையாளர் பதவி உட்பட உயர்மட்ட பதவிகளை நியமிக்கும் அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கி இராஜபக்ஷ இயற்றிய 18வது அரசியலமைப்பு திருத்தத்தை அவர் ரத்து செய்ய முயற்சிக்கின்றார்.

சிறிசேனவின் நிகழ்ச்சி நிரலுக்கு ரசனையூட்டுவதற்காக, பொதுக் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு பெரும் ஒதுக்கீடு, அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் விவசாய மானியங்கள் அதிகரிப்பு போன்ற ஒரு தொகை வாக்குறுதிகள் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், தலைநகரை "அழகுபடுத்த" இராஜபக்ஷ முன்னெடுத்த திட்டங்களின் பகுதியாக, கொழும்பில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவதாக சிறிசேன உறுதியளித்துள்ளார். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் வாக்காளர்கள் ஏமாற்றுவதற்கு மட்டுமே ஆகும்.

சிறிசேன, நாட்டின் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்துவதில் இராஜபக்ஷவை விட எந்தவிதத்திலும் குறைந்தவர் அல்ல. உண்மையில், இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது பற்றிய அவரது அழைப்பானது, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கோரி வரும் சிக்கன நடவடிக்கைக்கு தொழிலாள வர்க்கத்தின் பெருகிய எதிர்ப்பையிட்டு ஆளும் வட்டாரங்களில் நிலவும் பீதியையே வெளிப்படுத்துகிறது.

சிறிசேனவின் விஞ்ஞாபனத்தின் மத்திய நோக்கங்களில் ஒன்று, நாட்டின் வெளியுறவு கொள்கையை அவர் தீர்க்கமாக மேற்கு நோக்கி மாற்றுவார் என்று சர்வதேசத்துக்கு காட்டும் ஒரு தெளிவான சமிக்ஞையை அனுப்புகிறது. அதன் முன்னுரை, "[அரசாங்கத்தின்] தவறான வெளியுறவுக் கொள்கை மற்றும் உத்திகள் காரணமாக நாட்டின் நற்சான்று அழிந்துவிட்டது " என்று அறிவிக்கிறது. இதன் விளைவாக, "இலங்கையில் வேகமாக சர்வதேச சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆசியாவின் அதிசயமாக ஆவதற்கு மாறாக, இலங்கையில் உலக சக்திகளின் போர்க்களமாகி வருகிறது."

அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகள், புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக கணிசமான அழுத்தத்தை இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது திணித்தன. வாஷிங்டன் போருக்கு முழு ஆதரவையும் கொடுத்ததுடன் இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களைக் கண்டும் காணாமல் இருந்தது. அமெரிக்காவின் போலித்தனமான "மனித உரிமைகள்" பிரச்சாரத்தின் நோக்கம், சீனாவில் இருந்து தன்னை தூர விலக்கிக்கொண்டு, பெய்ஜிங்கிற்கு எதிரான ஒபாமாவின் "ஆசியாவில் முன்னிலை" கொள்கையின் வழியில் பயணிக்குமாறு இராஜபக்ஷ அரசாங்கத்தை நெருக்குவதே ஆகும்.

சிறிசேன சரியாக அதையே செய்ய விரும்புகிறார். அவரது விஞ்ஞாபனம் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் மற்றும் ஜப்பானுடன் "சம உறவுகளையும்" "தாய்லாந்து, இந்தோனேஷியா, கொரியா போன்ற வளர்ந்து வரும் ஆசிய நாடுகளுடன் வேறுபாடு இல்லாமல் இத்தகைய நட்பு உறவுகளை மேம்படுத்துவது," முன்மொழிகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிறிசேன, இராஜபக்ஷ பெருமளவில் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ உதவிக்கு சீனாவில் தங்கியிருந்தமைக்கு முடிவுகட்டி, குறிப்பாக பிராந்தியத்தில் ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தியாவில் உள்ள வாஷிங்டனின் முக்கிய நட்பு நாடுகள் அனைத்துடனும் "சம உறவுகளை" ஸ்தாபிப்பார்.

தேர்தல் விஞ்ஞாபனமானது இலங்கையில் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக "உள்நாட்டு விசாரணைக்கு" அழைப்பு விடுக்கின்றது. இது சிறிசேன அமெரிக்காவின் கோரிக்கைகளை இட்டு நிரப்புவார் என அதற்கு கொடுக்கும் மற்றொரு தெளிவான சமிக்ஞை ஆகும். சிறிசேன விரைவில் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையுடன் அணிசேருமளவுக்கு அமெரிக்கா தலைமையிலான "மனித உரிமைகள்" பிரச்சாரம் மங்கிப் போகும் என்பது அவருக்கு நன்கு தெரியும். அதே நேரம், "தமிழ் புலி பிரிவினைவாதிகளின் தோல்விக்கு பங்களிப்பு செய்த" அனைவரையும் தான் பாதுகாப்பதால் ஒரு விசாரணையைப் பற்றி பயப்பட எதுவும் இல்லை என்று சிறிசேன இராணுவத்துக்கு சுட்டிக் காட்டுகிறார்.

விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்னர், சிறிசேனவும் யூஎன்பீ தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கு தங்கள் கொள்கைகளை கூற வேண்டிய தேவையை உணர்ந்தனர். சிறிசேனவின் கீழ் பிரதமர் ஆகவிருந்த விக்கிரமசிங்க, அப்பட்டமாக அறிவித்தது: "வெளிநாட்டுக் கொள்கையில் இராஜபக்ஷவின் போக்கு இலங்கையின் பூகோள பொருளாதார நலன்களுக்கு நேரடி எதிராக இருந்தது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும், இலங்கையின் ஏற்றுமதியில் மூன்றில் இரண்டைப் பெறுகின்றன. இலங்கை இந்தியாவுடனான நெருக்கமான பொருளாதார உறவுகளில் இருந்து எல்லாவற்றையும் பெறலாம் ... "

இரண்டாம் உலக போரில் இலங்கையின் ஆளும் கும்பலின் பங்கு பற்றி விக்கிரமசிங்க குறிப்பிட்டதாவது: "மேற்கு உடனான எமது உறவு நீண்டது...  இரண்டாம் உலக போரின் போது, அமெரிக்கர்கள், பிரிட்டிஷ் போன்ற ஏனையவர்களான அதன் நேச நாடுகளின் பக்கமே அன்றி இலங்கை வேறுயாருடனும் நிற்கவில்லை என்பது மறக்கப்பட்டுவிட்டது என்பதைமக்கள் உணர்ந்துகொள்ளவில்லை."

அடுத்த அரசாங்கம், ஆசியாவில் புவிசார்-அரசியல் பதட்டங்களின் மத்தியில், இப்போது சீனாவுக்கு எதிராக குறிவைத்துள்ள, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் தனது கூட்டாளிகளுடன், போர்க்கால உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் விக்கிரமசிங்க தெளிவாக ஆலோசனை தெரிவிக்கின்றார். இரண்டாம் உலகப் போரின் போது, ஆசியாவில் இலங்கையே பிரிட்டிஷ் இராணுவ நடவடிக்கைகளுக்கான கட்டளை தளமாக இருந்தது. மூலோபாய இந்திய பெருங்கடலில் கப்பல் பாதைகள் அருகே அமைந்துள்ள தீவை, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து எரிசக்தி மற்றும் மூலப்பொருட்கறை சீனா இறக்குமதி செய்வதை துண்டிக்கும் அதன் திட்டங்களுக்கு முக்கிய இடமாகப் பென்டகன் கருதுகிறது.

விக்கிரமசிங்க, பெரும் வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமான நிலைமைகளை உருவாக்கவும் உறுதியளித்துள்ளார். இலங்கையானது 2013-2014 உலக போட்டித்திறன் குறியீட்டில் ருவாண்டாவுக்கு ஒரு புள்ளே மேலே உள்ளது என்பதையிட்டு வருத்தப்பட்டார். "உங்களுக்கு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டு பயனடைவுக்கான ஒரு வெளிநாட்டுக் கொள்கை வேண்டுமெனில், நீங்கள் சந்தைகளுக்கு ஏற்றவாறாக இருக்க வேண்டும்," என்று அவர் அறிவித்தார். "போட்டித்தன்மையை" உருவாக்குபவர் என்பதன் அர்த்தம், உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் தொழில் நிலைமைகளையும் இரக்கமற்ற முறையில் வெட்டிக்குறைப்பதாகும்.

ஜனாதிபதி தேர்தலில், சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் வேட்பாளர் பாணி விஜேசிரிவர்தனவும் மட்டுமே, முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகள் மற்றும் அவர்களுடைய பிரதிநிதிகளுக்கும் -இராஜபக்ஷ  மற்றும் சிறிசேன உட்பட- எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களுக்காகப் போராட ஒரு சோசலிச வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அமெரிக்க போர் உந்துதலுக்கு இரு வேட்பாளர்களிடமும் எந்த பதிலும் இல்லை. இராஜபக்ஷ, அமெரிக்கா மற்றும் சீனா இடையே சமநிலையில் செயற்படமுயற்சித்த அதே வேளை, சிறிசேன வாஷிங்டனுடன் முழுமையாக அணிசேருவதை பரிந்துரைக்கின்றார். இருவரும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை உழைக்கும் மக்கள் மீது திணிக்கவும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கும் அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சி, எங்களது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறும் அதில் பங்குபற்றுமாறும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. நாம் ஒரு சோசலிச மாற்றீடுக்காகப் போராடுகின்றோம்: அது, தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிச குடியரசு ஒன்றியங்களின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டமாகும்.