சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK uses Charlie Hebdo attack to justify repressive powers

ஒடுக்குமுறை அதிகாரங்களை நியாயப்படுத்த பிரிட்டன் சார்லி ஹெப்டோ தாக்குதலை பயன்படுத்துகிறது

By Chris Marsden
13 January 2015

Use this version to printSend feedback

பாரிசில் சார்லி ஹெப்டோ மீதான தாக்குதலானது, பிரதம மந்திரி டேவிட் கேமரூன் அரசாங்கம் பிரிட்டனின் பாதுகாப்பு சேவைகளான MI5, MI6  மற்றும் அரசாங்க தகவல் தொடர்பு தலைமையகங்கள் (GCHQ) இவற்றுக்கான மேலும் ஒடுக்குமுறை அதிகாரங்களுக்கான திட்டங்களை இறுகப் பற்றிக்கொள்ள புத்தம்புதிய கொக்கியை வழங்கியுள்ளது.

நேற்று கேமரூன் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தலைவர்களுடன்நிகழ்வுக்கு முன் வழங்கப்படும் முழு தகவல் குறிப்புக்கள்கொண்ட ஒரு கூட்டத்தை நடத்தினார். அவரது செய்தி தொடர்பாளர், பிரதமர் போலீசையும் இராணுவத்தையும் தொடர்ந்து நெருக்கமாக ஒத்துழைத்து வேலை செய்யும்படியும், “சுடும் ஆயுதங்களால் முன்வைக்கப்படும் ஆபத்தைப் பற்றி விவாதிக்குமாறும்எல்லைகளின் குறுக்காக சட்டவிரோத ஆயுதங்கள் கடத்தலை முறியடிப்பதற்கு ஏனைய நாடுகளுடன் சேர்ந்து எமது முயற்சிகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டதாக கூறினார்.

கூட்டத்தை தொடர்ந்து கடந்தவாரம் MI5 இன் தலைவரான ஆண்ட்ரூ பார்க்கரால் அதிகமான கண்காணிப்பு அதிகாரங்களுக்கான கோரிக்கை வைக்கப்பட்டது. “எமது வேலையை நாம் செய்ய வேண்டுமானால், நாம் எப்போதும் செய்வதுபோல் அவர்களது தகவல் தொடர்புகளை MI5 ஊடுருவக்கூடியதாக இருப்பது தொடர்ந்து தேவைப்படுகிறதுஎன அவர் கூறினார். “அதன் அர்த்தம் சரியான கருவிகளை, சட்ட ரீதியான அதிகாரங்களைக் கொண்டிருத்தலும் மற்றும் சம்பந்தப்பட்ட தரவுகளை வைத்திருக்கும்  நிறுவனங்களின் உதவியைப் பெறலும் ஆகும்

மே 7 பொதுத் தேர்தலில் வென்றால் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களின் செய்தித்தொடர்புகளை இடைமறித்துக் கேட்பதற்கு பாதுகாப்பு சேவைகளுக்கு அதிக அதிகாரங்கள் அளிப்பதாக கேமரூன் அவரது உறுதிப்படுத்தலை வலியுறுத்தினார். அவரது குறிப்புஇரகசிய வேவுபார்த்தல் சாசனம்என நன்கு அறியப்படும் வரைவு, செய்தித்தொடர்பு தரவு மசோதாக்கான குறிப்பாகும். முன்னர் கன்சர்வேட்டிவ்களின் கூட்டணிப் பங்காளரான மிதவாத ஜனநாயகக் கட்சியினரால் இது சட்டமாவதிலிருந்து தடுக்கப்பட்டது.

ITV செய்திகள் தொலைக்காட்சி சேவைக்கு பேசுகையில், தாம் கருதுகின்ற கண்காணிப்பின் தன்மை பற்றிய பரந்த தன்மையை கேமரூன் வலியுறுத்தினார்:

இந்த விடயம் தொடர்பாக நான் எளிய அணுகுமுறையைக் கொண்டுள்ளேன், இந்த பயங்கரவாத அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொண்ட வேளையிலிருந்து மாறாது இன்றுவரை, தீவிரநிலையில், பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் இருந்தால், உள்துறை செயலரின் பிடி ஆணை அனுமதியுடன் உங்களது செய்தித்தொடர்புகளை எனது செய்தித்தொடர்புகளை அல்லது வேறு எவருடைய செய்தித்தொடர்புகளையும் இடைமறித்துக்கேட்பது என்பது எப்பொழுதும் சாத்தியமாகவே இருந்து வந்திருக்கிறது. நீங்கள் கடிதம் அனுப்பினாலும் தொலைபேசியில் அழைத்தாலும், நீங்கள்  கைபேசியைப் பயன்படுத்தினாலும் இணையத்தை பயன்படுத்தினாலும் அது நடைமுறைப்பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல் இருக்கிறது.”

இந்நடவடிக்கைகள் பொதுத்தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட முடியாது, ஆனால் கேமரூன் வலியுறுத்திக்கூறினார், “சமீபத்திய சட்டத்தை நிறைவேற்றும்பொழுது நாம் செய்தது என்னவெனில், இச்சட்டமானது 2016ல் தானாகவே இல்லாது போகும், எனவே ஒரு எதிர்கால அரசாங்கம், எனது தலைமையிலானதாக இருந்தாலும் சரி அல்லது வேறு எவரது தலைமையிலானதாக இருந்தாலும் சரி, இந்த விஷயத்தையும் இதனை சட்டபூர்வமாக்குதலையும் எதிர்கொள்ளும்என்று கூறினோம்.

அவர் கடந்த ஆண்டு ஜூலை 17 இல் நிறைவேற்றப்பட்ட, தரவுகளை தேக்கிவைத்தல் மற்றும் புலனாய்வு அதிகாரங்கள் சட்டம் பற்றிக் குறிப்பிடுகிறார். இச்சட்டம் ஏற்கனவே இணையம் மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட செய்தித்தொடர்பு தரவுகளை 12 மாதங்களுக்கு சேகரித்து வைக்கவும் அவற்றை போலீஸ் பயன்படுத்துவதற்கும் உரிமை வழங்குகிறது. பயங்கரவாத எதிர்ப்பு மசோதா பற்றிய ஒரு சுயாதீன மதிப்புரையாளரான David Anderson QC ஆல் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் தொழிற் கட்சியானது இந்த மசோதாவுக்கு ஆதரவளித்தது. இந்த மசோதா 2016ல் காலாவதி ஆகிறது.

டோரி தலைமையிலான அரசாங்கம் சந்தேகத்திற்கிடமில்லாமல் இம்மசோதாவை நிறைவேற்றும். லண்டனின் கன்சர்வேட்டிவ் மேயரும், கேமரூனிற்குப் பின்னர் அவரது வாரிசாக வர இருக்கும் சாத்தியமுள்ளவர் என செய்தி கசிந்துள்ள போரிஸ் ஜோன்சன் பின்வருமாறு கூறினார்: “இந்த மக்கள் உரிமைகள் பற்றிய விடயங்களில், அது இம்மக்களின்  மின் அஞ்சல் மற்றும் கைபேசி உரையாடல்கள் என வரும்பொழுது குறிப்பாக எனக்கு அக்கறை எதுவும் இல்லை. அவை சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தால் மட்டுமே அப்பொழுது அவை கவனமாக கவனிக்கப்பட வேண்டும் என விரும்புவேன்.”

தொழிற் கட்சியை பொறுத்தவரை, அதன் தலைவர் மில்லிபான்ட், இரகசிய வேவு பார்த்தல் சாசனம் பற்றிய மசோதாவை தான் ஆதரிப்பதில்லை என உத்தியோகபூர்வமாக கூறி இருக்கிறார்ஆனால் அனுபவமானது, உண்மை ஆதாரம் இல்லாமல் கண்காணிப்பு அதிகாரத்தை அதிகரிப்பதற்கான அழைப்புகளுக்கான, அவரதுஎச்சரிக்கையுடனும் கவனத்தில் கருதிப்பார்க்கத்தக்கதும்ஆன அணுகுமுறையை உறுதிப்படுத்துகிறது.

அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு மசோதா இன்று பிரபுக்கள் சபையில் அதன் இரண்டாவது பார்வைக்காக வரவிருக்கிறது.

இது முதலில் கடந்த ஆண்டு நவம்பரில் உள்துறை செயலர் தெரெசா மேயினால் முன்வைக்கப்பட்டது, தீவிரமயமாதலை எதிர்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுப்பதற்கு அதற்கு பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்ளூர் அதிகார அமைப்புக்கள் தேவைப்படுகின்றன. உள்துறை அலுவலக கலந்தாலோசிப்பு அறிக்கையானது, பல்கலைக்கழகங்கள்பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அல்லது அதற்கு சாதகமாக இருக்கும் தீவிரவாதக் கருத்துக்களை முன்னிலைப்படுத்துபவர்களை அகற்றுவதற்கு தங்களின் பொறுப்பைக் கவனமாக எடுத்தாக வேண்டும்என விளக்குகிறது.

பல்கலைக்கழக பணியாளர்கள், பயங்கரவாதத்திற்குள் இழுக்கப்படும் ஆபத்துள்ள மாணவர்களை வெளிப்புறத்து தீவிரமயமாக்கல் எதிர்ப்பு வேலைத்திட்டங்களுக்கு பரிந்துரை செய்யுமாறு எதிர்பார்க்கப்படுகின்றனர் மற்றும்பயங்கரவாதத்திற்குள் இழுக்கப்படுவதிலிருந்து மக்களை தடுக்க பயங்கரவாதத்தை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும் வன்முறை இல்லா தீவிரவாதம் உள்பட தீவிரவாதக் கருத்துக்களை சவால் செய்யுமாறும் எதிர்பார்க்கப்படுகின்றனர். இதனைச் செய்யத்தவறும் நிறுவனங்கள் நீதிமன்ற ஆணையினால் விதிக்கப்படும் அமைச்சக வழிகாட்டலை எதிர்கொள்ளும் சாத்தியம் உள்ளது.

இணையம் வழங்குபவர்கள் தனிப்பட்ட பயனாளர்களை அடையாளம் காண்பதற்கு Internet Protocol address கட்டாயம் சேகரித்து வைக்க வேண்டும். இரகசிய வேவுபாத்தல் சாசனம் மேலும் சென்று 12 மாதங்களுக்கு மக்களின் நேரடி உரையாடல், சமூக ஊடக செயல்பாடு, அழைப்புக்கள் மற்றும் எழுத்துக்குறிப்புக்கள் ஆகியவை பற்றிய தரவுகளை சேகரித்து வைக்குமாறு நிறுவனங்களை நிர்பந்திக்கின்றது.

இம்மசோதா பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை நாட்டின் மற்றொரு பகுதிக்கு நகர்த்துவதற்கு (உள்நாட்டுப் புலம்பெயர்தலின் ஒரு வடிவம்) நிர்பந்திக்க அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் பயங்கரவாத தடுப்பு மற்றுப் பலனாய்வு நடவடிக்கைகளை (TPIMs) அமல்படுத்துவதற்கான சான்றாதாரத்தின் சுமையைஅறிவார்ந்த நம்பிக்கை என்பதிலிருந்துநிகழக்கூடிய சமநிலைஎன்பதற்கு கீழிறக்கவும், பயங்கரவாத தடுப்பு மற்றுப் பலனாய்வு நடவடிக்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது.

அதில் எல்லைப் பகுதிகளில் 30 நாட்கள் வரையில் கடவுச்சீட்டை இரத்து செய்வதற்கு வகைசெய்யும் நடவடிக்கைகளையும், பயங்கரவாத நடவடிக்கையின் பேரில் சந்தேகப்படும் பிரிட்டிஷ் குடிமக்கள் பிரிட்டனுக்கு திரும்புவதை கட்டுப்படுத்தும் சட்டரீதியான தற்காலிக தனிமைப்படுத்தும் ஆணைகளையும் கூட அது உள்ளடக்கி இருக்கிறது இந்நடவடிக்கைகள் ஒருவரை சக்திமிக்கவகையில் நாடற்றவரான நிலைக்கு உள்ளாக்குவதன் மூலம், அவருக்கு சட்டப்படி இல்லாவிட்டாலும் நடப்பில் குடி உரிமையை மறுக்கும் நடவடிக்கைகளாகும்.

விமான சேவைகள் பயணிகள் பற்றிய தரவுகளை மிக விரைவாகவும்  பயனுள்ள வகையிலும் வழங்குவதற்கு தேவைப்படும் நடவடிக்கைகளால் இது எளிதாக்கப்படும்.

மில்லிபாண்ட் இந்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதாக ஏற்கனவே உறுதி அளித்திருக்கிறார்.

இம்மசோதாவின் குறிப்பிடத்தக்க ஜனநாயக விரோத தன்மையானது, மனித உரிமைகளுக்கான பாரளுமன்ற கூட்டுக் குழுவினால் ஒரு வெற்று எதிர்ப்புக்கு இட்டுச் சென்றது. அதன் தலைவர், தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஹவெல் பிரான்சிஸ், இது கல்விப்புலம் சார்ந்த பேச்சுரிமையைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் என்பதால் பயங்கரவாத எதிர்ப்புக் கடமையிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு விலக்கு அளிக்குமாறு வற்புறுத்தினார். அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான வரைவு வழிகாட்டலில் குறிக்கப்பட்டதீவிரவாதம்போன்ற பதங்களுக்கான வரையறை மீதாக சட்டரீதியான உறுதித்தன்மை இல்லாமை, பல்கலைக்கழகங்கள் அவை புதிய கடமையை மீறும் ஆபத்தில் உள்ளனவா என்ற போதுமான உறுதிப்பாட்டை அறியாத வண்ணம் உள்ளதை அர்த்தப்படுத்துகிறதுஎன்று அக்குழு கூறியது, இதுநம்பகத்தன்மையான கல்வியியல் விவாதத்தின் மீது கடுமையான தர்மசங்கடமான பாதிப்பை கொண்டிருக்கும்என்றது.

கமிட்டியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரபுக்களும் கூட, இரண்டு ஆண்டுகளாக நடவடிக்கைகளில் இருக்கப்போகும் விலக்கு அளிக்கும் ஆணைகளை வழங்கும் உள்துறைச் செயலரின் புதிய அதிகாரத்தால்பிரிட்டிஷ் குடிமக்களின் மனித உரிமைகள் மீறப்படும் என்ற மிக உண்மையான ஆபத்துபற்றி எழுதினார். ஆனால் இது நிகழக்கூடிய எல்லா வாய்ப்பிலும் இன்னும் விளக்கப்படாத நீதித்துறை தொடர்பான கவனியாது விட்ட ஒரு பிழையாக ஒருவகை அடிப்படைரீதியான அர்த்தமற்ற வாக்குறுதியுடன் முடியும்.

MI5 இன் பார்க்கரது பேச்சு, ஒருவாரத்திற்கு முன்னர் ஏற்கனவே திட்டமிடப்பட்டு எழுதப்பட்டது என்று தெளிவுபடுத்தியது. இப்பொழுது விவாதத்தில் உள்ள இந்த மசோதா, பெரும் திரளாய் நிறைய தரவுகளை சேர்த்துவைப்பதை நிரந்தரமாய் சட்டரீதியாக்குவதற்கான நடவடிக்கைகளாய் இருந்தன போல், நீண்ட தயாரிப்பில் இருப்பதுபோல இருந்தது. ஆனால் பாரிஸ் கொலைகாரர்கள், சான்செலர் ஜோர்ஜ் ஒஸ்போன், பின்னர் கேமரூன் ஆகியோர்ஏற்கனவே கடந்த சிலவாரங்களாக மட்டும் வழங்கப்பட்ட 100 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேலாககூடுதல் அதிகாரங்களையும்  வளங்களையும் வழங்க அனுமதித்தனர்.

சேர்ந்து வரும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் புதிய பொதியானது, முஸ்லிம் மக்கள்தொகையை சிறப்பாக இலக்குவைக்கப்படுவதற்கான முயற்சிகள் ஆகும். முஸ்லிம் ஆன கலாச்சார செயலாளர் சஜித் ஜாவித் பிபிசி வானொலி 5 Live நேரடி நிகழ்ச்சியில்  பின்வருமாறு கூறினார்: ”நான் நினைக்கிறேன், அங்கிருந்த மக்களிடம் இருந்து வந்த ஊக்கம் குன்றிய பதிலானது, அது (பாரிஸ் தாக்குதல்) இஸ்லாமுடனும் முஸ்லிமுடனும் அறவே ஒன்றும் செய்வதற்கில்லை என்று கூறுவதாக இருக்கிறது மற்றும் அதுதான் விவாதத்தின் இந்தப் பகுதியின் முடிவாக இருக்க வேண்டும். அது ஊக்கம் குன்றியதாக இருக்கிறது மற்றும் அது தவறாக இருக்கும்.”

அவர் பின்னர் ஸ்கை செய்திகளிடம் (Sky News) கூறினார், “பயங்கரவாதிகளை கையாளுவதில் உதவுவதிலும் முயற்சி  செய்வதிலும், தேடிக் கண்டுபிடித்து முறியடிப்பதிலும் எல்லா  சமுதாயங்களும் முயற்சியும் உதவியும் செய்யமுடியும். ஆனால் முஸ்லிம் சமுதாயங்களின் மீது  சிறப்பு சுமை இருக்கிறது என்று கூறுவது முற்றிலும் நியாயமானது என்று நான் நினைக்கிறேன் ஏனெனில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சரி இந்த பயங்கரவாதிகள் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.”

ஜாவித், அரசாங்கத்தின் பயங்கரவாத எதிரிப்பு மசோதா பற்றி கூறினார், “முதலில், தீவிரமயப்படுத்தலைத் தடுக்கவும் தீவிரமயப்படாதிருக்கவும் எண்ணிறைந்த நடவடிக்கைகள் இருக்கின்றன, கேள்வி என்னவெனில், அது கடுமையாக இருப்பது தேவையா? என்பது தான். நான் நினைக்கிறேன் பதில் ஆம் என்பதாகும்.”

நேற்று, கேமரூனின் உத்தியோகபூர்வ பேச்சாளர், ஜாவித்தால் திறக்கப்பட்ட கதவு வழியாக நடந்து சென்று, அவர் கூறியது சரி மற்றும் பிரிட்டனில் உள்ள முஸ்லிம் குடும்பங்கள்தங்களின் உறவினர்களின் சிறிய எண்ணிக்கையினரைபார்க்க வெளிநாடுகளுக்கு செல்வதும் தீவிரப்போக்குடைய குழுக்களில் சேருவதும்....... ஏறுமாறாக ஆக்கிக் கொண்டிருக்கும் மதத்தைக் கொண்டிருக்கும் சமுதாயம் அதுதான்.”