சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Capitalism and the global plutocracy

முதலாளித்துவமும் உலகளாவிய செல்வந்த மேற்தட்டுக்களும்

Andre Damon
21 January 2015

Use this version to printSend feedback

பெரும் பணக்காரர்களுக்கும் சமூகத்தின் பெரும்பான்மையினருக்கும் இடையிலான இடைவெளி சுருங்கி வரவில்லை என்பது மட்டுமல்லஅது இன்னும் அதிக வேகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை எடுத்துக்காட்டும், ஒரு புதிய சமூக சமத்துவமின்மை அறிக்கையை சர்வதேச அறக்கட்டளை ஆக்ஸ்ஃபாம் வெளியிட்டுள்ளது

புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, 2013இல், 92 மிகப்பெரிய பல கோடி-பில்லியனர்கள் சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள 50 சதவீதத்தினரின் செல்வ வளத்தின் அளவைக் கொண்டிருந்தனர். 2014இல், இந்த எண்ணிக்கை 80 பில்லியனர்களாக வீழ்ச்சி அடைந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு இரண்டு-அடுக்கு பேருந்திற்குள் நிரம்பக்கூடிய ஒரு குழு, சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கு சமமான 3.5 பில்லியன் மக்களின் செல்வவளத்தை விட அதிகமாக கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.

மிகப்பெரிய பணக்கார 1 சதவீதத்தினர் அடுத்த ஆண்டு வாக்கில் சமூகத்தின் அடியிலுள்ள 99 சதவீதத்தினரை விட அதிகமாக செல்வ வளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பார்கள் என்ற வேகத்தில் சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது. உண்மையில், உலகளாவிய அளவில், மனித வரலாற்றின் ஆயிரம் ஆண்டுகளில், இன்றிருப்பது போல சமூகம் இந்தளவிற்கு சமமின்றி ஒருபோதும் இருந்திருக்காது என்பதற்குமே கூட பெரிதும் சாத்தியமுள்ளது.

சுமார் 2,500 பில்லியனர்கள், பெருநிறுவன நிர்வாகிகள், அரசு தலைவர்கள் மற்றும் அவர்களது பல்வேறு பக்கவாத்தியங்கள் கலந்து கொள்ளவிருக்கும் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் தொடங்கும் உலக பொருளாதார மாநாட்டுடன் பொருந்தும் வகையில், ஆக்ஸ்ஃபாம் சரியான நேரத்தில் அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபாம் இயக்குனர் வின்னி பயான்யிமா (Winnie Byanyima) அந்த நிகழ்விற்கு இணை-தலைமையேற்க அழைக்கப்பட்டுள்ளார், அப்பெண்மணி "அதிகரித்துவரும் சமத்துவமின்மை காலத்தைக் கட்டுப்படுத்துவற்காக அவசர நடவடிக்கைக்கு அழைப்புவிடுக்க அவரது பதவியை பயன்படுத்துவார்" என்று அந்த அமைப்பு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

யாருடைய செல்வசெழிப்பை அந்த அறிக்கை இடித்துரைள்ளதோ அதே உலகளாவிய செல்வந்த மேற்தட்டுகளினது மிகப்பெரிய ஆண்டு கூட்டத்தில், போதுமான அளவுக்கு முற்றிலும் முரண்பாடாக, பயான்யிமா அவரது முறையீட்டைக் கொண்டு செல்லவிருக்கிறார். அங்கே கூடவிருக்கின்ற நூறு அல்லது அந்தளவிலான பில்லியனர்களில் மற்றும் எண்ணிலடங்கா நூற்றுக் கணக்கான பல கோடி மில்லியனர்களில் பலர் கடந்த ஐந்தாண்டுகளில் அவர்களது செல்வம் இரட்டிப்பானதைக் கண்டுள்ளனர். இதற்கிடையே, அந்த அறிக்கையே எடுத்துக்காட்டுவதைப் போல, உலக மக்கள்தொகையில் பாதி ஏழை மக்களின் செல்வம் 2009ஐ விட 2014இல் குறைந்து போயுள்ளது.

அமெரிக்க கருவூலத்துறை செலராக இருந்து பல மில்லினிய தனியார் முதலீட்டு நிதியத்தின் மேலாளராக மாறிய லாரன்ஸ் சம்மர்ஸில் இருந்து, சர்வதேச நாணய நிதிய (IMF) நிர்வாக இயக்குனர் கிறிஸ்டீன் லகார்ட் வரையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் உலகின் மிகப் பெரிய செல்வந்தரான பில் கேட்ஸ் வரையில், பல பொது பிரபலங்கள், கடந்த ஐந்தாண்டுகளில், சமத்துவமின்மை அதிகரிப்பதன் மீது அவர்களது கவலைகளைப் பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.

பெரும் பணக்காரர்களுக்கும் மற்றும் பரந்த பெரும்பான்மை மக்களுக்கும், அதாவது தொழிலாள வர்க்கத்திற்கும், இடையிலான பெரும் இடைவெளி, மறுக்கமுடியாத வாழ்வின் அம்சமாக உலகம் முழுவதிலும் உள்ளது. இந்த அரசு விவகாரங்களுக்கு பொறுப்பான சிலரிடையே, மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் குறிப்பிடுவதைப் போல, முதலாளித்துவம் பெரிதும் பொறுமையிழந்த மற்றும் சினம்கொண்ட தொழிலாள வர்க்கத்தின் வடிவத்தில், அதற்கு சவக்குழி வெட்டுவோரை அதுவே உருவாக்கி வருகிறது என்ற கவலை நிலவுகிறது.

இருந்தபோதினும், பணக்காரர்களுக்கும் சமூகத்தின் பெரும்பான்மையினருக்கும் இடையே அதிகரித்துவரும் இடைவெளியை அதிகரித்த, வர்க்க மற்றும் அரசியல் இயக்கவியல் குறித்த எந்த கவனிப்பும் தெளிவாக இத்தகைய எந்தவொரு அறிக்கையிலும் இல்லாமல் போய்விடுகிறது. இந்த விமர்சகர்கள் அனைவரும், சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியை ஏதோ வெறுமனே பாரபட்சமற்ற நிகழ்ச்சிப்போக்குகளின் விளைபொருளாகவும், அரசாங்கங்கள் மற்றும் சமூக வர்க்கங்களின் நடவடிக்கைக்கு வெளியே நடப்பதாகவும் முன்னெடுக்கின்றனர்.

உண்மையில், பெரும் பணக்காரர்களால் செல்வ வளம் முடிவில்லாமல் திரட்டப்படுவது என்பது 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னரில் இருந்து ஆளும் வர்க்கத்தின் ஒருமனதான கொள்கையின் விளைபொருளாகும். அந்த 2008 நெருக்கடியே நிதியியல் மேற்தட்டின் குற்றகர நடவடிக்கைகளின் விளைவாக உண்டானதாகும். நிதியியல் அமைப்புமுறைக்குள் அமெரிக்க அரசாங்கம் மட்டுமே 7 ட்ரில்லியன் டாலருக்கு அண்மித்தளவில் தொகையைப் பாய்ச்சி உள்ளது, அது 30 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியியல் சொத்துக்களுக்கு முட்டுக்கொடுக்க பயன்படுத்தப்பட்டது. உலகெங்கிலுமான மத்திய வங்கிகளும் அதே வழியைப் பின்தொடர்ந்தன.

பூகோளமயப்பட்ட பெருநிறுவனங்கள் அவற்றின் தொழிலாளர்கள் மீது ஊதியங்களை வெட்டவும், வேகப்படுத்தலைத் திணிக்கவும் பொருளாதார நிலைமுறிவிலிந்து எழுந்த பாரிய வேலைவாய்ப்பின்மையை பயன்படுத்தின, அதேவேளையில் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் இந்த பொருளாதார நெருக்கடியை ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தின.

லெஹ்மன் பிரதர்ஸ் பொறிந்து சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த முறிவுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட கொள்கைகள், உலகளாவிய நெருக்கடியில் ஒரு புதிய கட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளன. இந்த ஆண்டு டஜன் கணக்கான புதிய பில்லியனர்களுக்கு பாதையமைத்து அளித்த சீன பங்குச்சந்தை குமிழி, பொறிந்து வருவதாக தெரிகிறது. திங்களன்று அது 2008க்குப் பிந்தைய அதன் மிகப்பெரிய இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் பணச்சுருக்கம் நிலவுகிறது, ரஷ்ய பொருளாதாரமோ இந்த ஆண்டு ஐந்து சதவீதம் சுருக்கமடையுமென்று பகுப்பாய்வாளர்கள் கணிக்கின்றனர்.

திங்களன்று, சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி மீதான அதன் மதிப்பீட்டைக் குறைத்தது. ஆளும் வர்க்கம் அதன் அமைப்புமுறையின் இந்த நெருக்கடிக்கும் அதன் ஒரே விடையிறுப்பாக வைத்திருப்பது, பணக்காரர்களின் கஜானாக்களுக்குள் இன்னும் மேலதிகமாக பணத்தைப் போடுவதாகவே இருக்க போகிறது. கொள்கை விகிதங்களை மேற்கொண்டு குறைக்க முடியவில்லை என்றால் ஏனைய வழிவகைகளை உள்ளடக்குவதன் மூலமாக" செலாவணி கொள்கை இணக்கமாக கொண்டு வரப்படும், என்று IMF அறிவித்தது. இது பணத்தைப் புழக்கத்தில் விடும் திட்டங்களைக் குறித்த ஒரு வெளிப்படையான சுட்டுரையாகும்.

உலகளாவிய செல்வந்த மேற்தட்டு, ஒட்டுண்ணித்தனம் எனும் சமூக உடையைப் போர்த்திக் கொண்டிருக்கிறது. அது அதன் செல்வ வளத்தை உற்பத்தியிலிருந்து உருவாக்கவில்லை, மாறாக மோசடி, ஊக வணிகம் மற்றும் சூறையாடல் மூலமாக உருவாக்கிறது. அரசியல் வாழ்வில் மேலாளுமை செலுத்துவதற்காக அவை அவற்றின் அளப்பரிய ஆதார வளங்களைப் பிரயோகிக்கின்றன என்பதுடன், மனிதகுலத்தின் பெருந்திரளான மக்களை விலையாக கொடுத்து அவற்றின் சொந்த செழிப்பு மற்றும் குவிப்புக்கான கொள்கைகளை பின்தொடர்வதை நோக்கமாக கொண்டுள்ளன.

உலகளாவிய செல்வந்த மேற்தட்டானது மனிதகுலத்தின் மீதிருக்கும் ஒரு புற்றுநோயாகும். அதன் சொந்த செல்வ வளத்தையும் மற்றும் இந்த செல்வங்கள் எதன் மீது தங்கியுள்ளதோ அந்த முதலாளித்துவ இலாப அமைப்புமுறையையும் தயவுதாட்சண்யமின்றி பாதுகாப்பதற்காக, உலகின் ஆளும் வர்க்கங்கள் மனிதகுலத்தையே அழிவின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளன. பிரதான ஏகாதிபத்திய சக்திகள் உலகை மறுபிளவு செய்வதில் ஈடுபட்டுள்ளன. முதலாம் உலக போருக்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த ஆண்டின் போது, உலக போர் அபாயம் ஒரு தெளிவான மற்றும் நடப்பு ஆபத்தாக உருவெடுத்தது.

சமூக பதட்டங்களின் அதிகரிப்புக்கு இந்த செல்வந்த மேற்தட்டுக்களின் விடையிறுப்பு சீர்திருத்தமாக இருக்கவில்லை, மாறாக ஒடுக்குமுறையாக இருக்கிறது. பாரிய உளவுவேலை, பொலிஸ் மற்றும் இராணுவ எந்திரங்கள் மிகவும் பகிரங்கமாக எழுப்பப்பட்டு, உள்நாட்டில் முன்பில்லாத அளவில் மக்களின் மீது திருப்பப்பட்டுள்ளன. செல்வ வளத்தின் மேலாளுமைக்கு எதிரான எந்தவொரு சவாலுக்கு எதிராகவும் திருப்பிவிடுவதற்காக, கடந்த நூற்றாண்டின் இழிவார்ந்த அரசியல் சித்தாந்தங்கள் பாசிசம், பேரினவாதம், சர்வாதிபத்தியம் ஆகியவை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

சமூகம் எதிர்கொண்டு வரும் எந்தவொரு மிகப்பெரிய பிரச்சினைகளும், நிதியியல் பிரபுத்துவத்தின் இறுக்கிப்பிடியை உடைக்காமல் தீர்த்துவிடலாம் என்று நம்புவதென்பது பயனற்ற சிறுபிள்ளைத்தனமாகும். மோசடியான வழியில் சேர்க்கப்பட்ட அவர்களது செல்வங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும்; அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பெருநிறுவனங்கள் தனியார் இலாபத்திற்காக அல்லாமல், சமூக தேவையின் நலன்களில் நடத்தப்பட, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும்.

இதற்கு, திவாலாகிபோன முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிந்து ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உலக மக்கள் தொகையில் பரந்த பெரும்பான்மையாக உள்ள சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதை நோக்கமாக கொண்ட ஓர் அரசியல் இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும். இதுவே சோசலிச சமத்துவ கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) பணியாகும். ஆகவே சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்காக நாம் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோசலிச சமத்துவ கட்சியில் இணைய முடிவெடுக்குமாறு அழைப்புவிடுக்கிறோம்.