சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Syriza’s electoral success and the pseudo-left

சிரிசாவின் தேர்தல் வெற்றியும், போலி-இடதும்

By Peter Schwarz
28 January 2015

Use this version to printSend feedback

அலெக்சிஸ் சிப்ராஸின் புதிய கிரேக்க அரசாங்கமானது, அதற்குள்ளேயே இருக்கும் அல்லது சிரிசாவின் மற்றும் அதன் சர்வதேச சகோதரத்துவ அமைப்புகளின் சுற்றுவட்டத்தில் உள்ள எண்ணற்ற போலி-இடது அமைப்புகளுக்குள் உற்சாக அலையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அவை "ஐரோப்பிய அரசியலில் மிகப்பெரிய மாற்றம்" குறித்தும் மற்றும் "புரட்சிகர சோசலிஸ்டுகளுக்கான புதிய சாத்தியக்கூறுகள்" குறித்தும் பலத்த உற்சாகத்தில் உள்ளன.

பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது: “சிரிசாவினது தேர்தல் வெற்றி மிக நல்லதான செய்தியாகும். ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக போராடி வரும் ஒவ்வொருவருக்கும் அது நம்பிக்கை தருகிறது.”

ஜேர்மனியின் இடது கட்சியின் செயற்குழு ஒரு பத்திரிகை செய்தியில் அறிவித்தது: “கிரீஸ் தேர்தல் கிரீஸிற்கு மட்டுமல்ல ஐரோப்பா முழுவதற்குமே ஒரு திருப்புமுனையாகும். அது ஒரு ஜனநாயக புதுப்பிப்புக்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் திசையில் ஒரு அடிப்படை மாற்றத்திற்கும் வாய்ப்புகளை திறந்துவிடுகிறது.”

பேனொஸ் கமெனொஸின் வலதுசாரி சுதந்திர கிரேக்கர்கள் கட்சியுடன் சிரிசா ஒரு கூட்டணிக்குள் நுழைந்திருக்கும் உண்மையோ, அல்லது பிரான்சின் தேசிய முன்னணி, இத்தாலியின் வடக்கு முன்னணி (Northern League), மற்றும் இங்கிலாந்தின் சுதந்திர கட்சி போன்ற வலதுசாரி கட்சிகளால் அதன் தேர்தல் வெற்றி வரவேற்கப்பட்டிருக்கும் உண்மையோ கூட, அவர்களது உற்சாகத்தைக் குறைத்துவிடவில்லை.

"வாக்குச்சீட்டில் இடதுசாரி சிரிசாவிற்கு அவர்களின் முத்திரையைக் குத்திய பெருந்திரளான மக்களைப் பொறுத்த வரையில்", சுதந்திர கிரேக்கர்கள் கட்சியின் வெளிநாட்டவர் விரோத போக்கு மற்றும் பேரினவாத கண்ணோட்டங்கள் எல்லாம் "இரண்டாம்பட்ச முக்கியத்துவம்" பெறுகின்றன என்ற வாதத்துடன், ஜேர்மன் இடது கட்சிக்கு நெருக்கமான Junge Welt பத்திரிகை, "சற்றே விசித்திரமான" இந்த கூட்டணியை நியாயப்படுத்துகிறது.

சிக்கன நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்கள் அவர்களது சமூக நிலைமையில் ஒரு முன்னேற்றத்தைக் குறித்து அதிகமாக கவலை கொண்டுள்ளனர்,” என்று Junge Welt அறிவிக்கிறது. “மேலும் இங்கே தான், சிப்ராஸ் மற்றும் கமெனொஸின் கருத்துக்கள் பெரிதும் பொருந்தி வருகின்றன.”

சுதந்திர கிரேக்கர்களின் ஆக்ரோஷமான பேரினவாதத்தை சிரிசா வாக்காளர்கள் முற்றிலும் பொருட்படுத்தவில்லை என்ற வாதத்தை இதுவே அக்கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களை பிரகாசமாக அம்பலப்படுத்திக் காட்டுகிறது என்ற நிலையில் ஒருவர் ஒரு கணம் ஏற்றுக் கொண்டார் என்றாலும் கூட, அவர்களுடனான அந்த கூட்டணி அர்த்தமில்லாதது இல்லை.. கப்பல்துறை அதிபர்கள் மத்தியில் உள்ள செல்வந்தர்கள், பாரம்பரிய தேவாலயங்கள் மற்றும் இராணுவம் ஆகிய பிற்போக்குத்தனமான அந்நாட்டின் தூண்களுடன், கமெனொஸ் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளார். சிரிசா செயற்குழு உறுப்பினர் ஸ்டாதிஸ் குவெலாகிஸ் ஒப்புக் கொள்வதைப் போல, சுதந்திர கிரேக்கர்கள் கட்சி ஒரு "வலதின் கட்சியாகும், அது குறிப்பாக அரசு எந்திரத்தின் 'மிகமைய அச்சை' பாதுகாக்க அக்கறை கொண்டுள்ளது."

சுதந்திர கிரேக்கர்கள் கட்சியுடன் சிரிசாவின் கூட்டணியானது, சிப்ராஸிற்கு தேவையான நாடாளுமன்ற பெரும்பான்மையை வழங்கும் வேலையை மட்டும் கொண்டிருக்கவில்லை, அது அரசு எந்திரத்தின் மிகமைய அச்சு, பொலிஸ் மற்றும் இராணுவத்தில் உள்ள இழிபெயரெடுத்த வலதுசாரி சக்திகளுடன் ஒரு இணைப்பையும் வழங்குகிறது. தொழிலாளர்கள் சமூக போராட்டங்களை மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சிகளை நடத்துகையில், சிப்ராஸ் அவற்றை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்த தயங்கமாட்டார்.

அதே நேரத்தில் ஒரு அதிதீவிர தேசியவாத கட்சியுடனான கூட்டணியானது, பேர்லின் மற்றும் புருசெல்ஸின் "சிக்கன கொள்கைகளுக்கு" சிரிசாவின் எதிர்ப்பினது வர்க்க அடித்தளத்தை அம்பலப்படுத்துகிறது.

சிரிசா பிரதிநிதித்துவம் செய்வது, கிரீஸில் மட்டுமல்ல, ஜேர்மனி உட்பட ஐரோப்பா முழுவதிலும் உள்ள நிதியியல் மேற்தட்டுக்கள் மற்றும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளின் தாக்குதலின் கீழ் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அல்ல. பேர்லினால் ஓரங்கட்டப்பட்டதாக உணரும் மற்றும், வெவ்வேறு முதலாளித்துவ நிதியியல் நலன்களுடன் மிகவும் இறுக்கமாக தொடர்புபட்ட கொள்கைகளை பரிந்துரைக்கும், கிரேக்க மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளுக்காக அது பேசுகிறது.

சிப்ராஸின் எல்லா உரைகளும் இந்த வழியில் தான் செல்கின்றன. அவர் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரதிநிதியாக பேசுகிறார். அவர் தொழிலாளர்களின் வர்க்க நனவுக்காக அல்ல மாறாக தேச ஒற்றுமை மற்றும் கிரேக்க கௌரவத்திற்காக முறையிடுகிறார். அவர் பேர்லினுக்கு எதிரான ஒரு கூட்டணிக்காக பாரீஸ் மற்றும் ரோமின் ஆதரவை வென்றெடுக்க முயன்று வருகிறார், இந்த நாடுகளின் அரசாங்கங்களே அவற்றின் சொந்த தொழிலாள வர்க்கத்தின் மீது பாரிய தாக்குதல்களை நடத்தி வருகின்றன என்ற உண்மை குறித்தெல்லாம் அவருக்கு அக்கறை இல்லை.

இத்தாலிய பத்திரிகை Il Messaggero உடனான ஒரு கலந்துரையாடலில், சிப்ராஸ் தொழிலாள வர்க்க விரோத கொள்கைக்காக வெறுக்கப்படுகிற பிரதம மந்திரி மரியோ ரென்சியை புகழ் பாடினார். “நானும் ரென்சியைப் போன்று தான்" என்றுரைத்தார். “நான் ஐரோப்பாவை மாற்ற விரும்புகிறேன். நாங்கள் நிறைய பேச வேண்டி இருப்பதால், விரைவில் நாங்கள் சந்திப்போம். வளர்ச்சியைக் குறித்தும் மற்றும் ஐரோப்பாவின் மொத்த பிரஜைகளையும் பாதித்து வருகின்ற ஜேர்மனியின் கடுமையான கொள்கைகளை கைவிடுவது குறித்தும் நாங்கள் ஒரே விதத்தில் சிந்திக்கிறோம்,” என்று தெரிவித்தார்.

சிப்ராஸின் அன்பு பிரகடனங்களை ரென்சி இன்னும் திருப்பிக் காட்டவில்லை, ஆனால் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் அவரை எலிசே மாளிகைக்கு அழைத்துள்ளார். ஓர் உத்தியோகபூர்வ அறிக்கையில், பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி "கிரீஸில் இடது சக்திகளின் வெற்றியை" வரவேற்றது, அத்துடன் இது "சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான" அவர்களது சொந்த போக்கைப் பலப்படுத்தி இருப்பதாக அது தெரிவித்தது.

வலது சாரி தேசிய முன்னணி தொடங்கி, ஆளும் சோசலிஸ்ட் கட்சி, இடது கட்சி மற்றும் NPA வரையில், நடைமுறையில் பிரான்சில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பிரான்ஸே பொருளாதாரரீதியில் பலமான அதன் அண்டை நாடான ஜேர்மனியின் அழுத்தத்தின் கீழ் உள்ள நிலையில், சிப்ராஸின் தேர்தல் வெற்றியை வரவேற்றுள்ளன.

இந்த கொள்கையின் தர்க்கம் பேரழிவுகரமானதாகும். இது ஐரோப்பாவில் தேசிய மோதல்களை தீவிரப்படுத்தும் என்பதுடன், ஆளும் மேற்தட்டுக்களின் தேசிய நலன்களுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணிய செய்யும் மற்றும் இறுதி ஆய்வில் அது போருக்கு இட்டுச் செல்லும். அது முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் ஐரோப்பா மற்றும் சர்வதேசரீதியில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த போராடும் ஒரு சோசலிஸ்ட் கொள்கைக்கு எதிர்தரப்பில் உள்ளது.

சிப்ராஸ் முன்பினும் கூடுதலாக அவரது வலதுசாரி கொள்கைகளைப் பகிரங்கமாக காட்டி வருகின்ற போதினும், போலி-இடது குழுக்கள் இதை மூடிமறைக்க முயன்று வருகின்றன. அவரது சில கூடுதலான வலதுசாரி மிகைப்பாடுகளை அவற்றால் விமர்சிக்காமல் இருக்க முடியாது என்ற போதினும், அவை சிப்ராஸ் மற்றும் சிரிசாவிற்கு தொடர்ந்து அவற்றின் ஆதரவை நியாயப்படுத்தவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை நிலைகுலைய செய்வதற்கும் உரிய வாதங்களைப் பெரும் பிரயத்தனத்தோடு உருவாக்குகின்றன.

சிப்ராஸ் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், அது தொழிலாளர் நலன்களுக்குரிய ஒரு கொள்கையை பின்பற்றும் என்பது அவர்களது வாதங்களில் ஒன்றாக உள்ளது.

ஜேர்மன் இடது கட்சிக்குள் செயலூக்கத்துடன் இருப்பதும் மற்றும் சிரிசா தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அழைப்புவிட்டதுமான Socialist Alternative (SAV) இந்த தொனியில் எழுதுகிறது, “இந்த தேர்தல் முடிவு கிரீஸின் தொழிலாளர்கள், வேலையற்றோர் மற்றும் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடுவதற்குத் தைரியத்தை அளிக்கும். இதுதான் மத்திய புள்ளி, ஏனென்றால் அவரது அரசாங்கத்தின் முதல் நாளிலிருந்து, சிப்ராஸை அழுத்தத்தின் கீழ் கொண்டு வர முடியும்.”    

இந்த அழுத்தத்திற்கு சிப்ராஸ் அரசாங்கம் அடிபணிவார் என்பதாக SAV மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது. ஆனால் கடந்த 170 ஆண்டுகால சர்வதேச அனுபவங்கள் அதற்கு எதிர்விதமானதையே நிரூபித்துள்ளன. தொழிலாள வர்க்கத்தின் அழுத்தத்தின் கீழ், முதலாளித்துவ வர்க்கம் இடதிற்கு அல்ல, மாறாக வலதிற்கே செல்கின்றனமேலும் சிரிசாவே ஒரு முதலாளித்துவ கட்சியாகும்.

1848இல், தொழிலாள வர்க்கம் பாரீஸில் ஜூனில் ஒரு சுதந்திர புரட்சிகர சக்தியாக எழுச்சி பெற்றதும், ஐரோப்பிய ஜனநாயக புரட்சிகள் அவற்றின் முதலாளித்துவ மற்றும் ஜனநாயக தலைவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டன. அவர்களது சொத்துக்கள் மற்றும் தனிச்சலுகைகளை அச்சுறுத்திய இந்த புதிய சமூக சக்திகளால் பீதியுற்று, முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ வர்க்க தலைவர்கள் ஐரோப்பா முழுவதும் நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனத்துடன் அவர்களை அவர்களே இணங்குவித்துக்கொள்ள ஓடினர்

இந்த அனுபவம், மிக கவனமாக மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸால் பகுத்தாராயப்பட்டதுடன், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கு மையமாக இருந்த மார்க்சிச இயக்கத்தின் மூலோபாய அபிவிருத்தியில் அதுவொரு தீர்க்கமான பாத்திரம் வகித்தது.

அப்போதிருந்து, இம்மாதிரியான பாங்கு பெரிதும் வேறுபட்ட வரலாற்று மற்றும் சமூக சூழ்நிலைகளின் கீழ் எண்ணற்ற தடவை மீண்டும் மீண்டும் நடந்துள்ளன. 1917 ரஷ்யாவில், அப்போது கெரென்ஸ்கி அரசாங்கம் அக்டோபர் புரட்சியில் தூக்கியெறியப்படுவதற்கு முன்னதாக பிற்போக்குத்தனமான இராணுவத்திற்கு நெருக்கமாக ஒத்துழைத்தது; 1927இல் சீனாவில், அங்கே சியாங் கேய் ஷேக் கம்யூனிஸ்ட் கட்சியின் அவரது கூட்டாளிகளையே படுகொலை செய்ய இட்டுச் சென்றது; 1930களில் ஸ்பெயினில், அங்கே மக்கள் முன்னணி தொழிலாள வர்க்கத்தை முடமாக்கியதுடன் பிரான்கோவின் வெற்றிக்கு உதவியது; அல்லது 1973இல் சிலியில், அலெண்டே அங்கே இராணுவத்தின் முன்னே தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணி ஆக்கியது.

அவர்களது வாதங்களில் மற்றொன்று என்னவென்றால் ஒருவர் சிரிசாவை ஆதரிக்க வேண்டும், அதனைக் கொண்டு தொழிலாள வர்க்கம் இந்த அனுபவங்களினூடாக சென்று, அவற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற முடியும் என்பது. இது முற்றிலும் எரிச்சலூட்டுவதாகும். ஒரு சிரிசா அரசாங்கத்தால் பெரும் அபாயங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், அதன் விளைவுகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை எச்சரித்து, ஒரு தெளிவான சோசலிச நிலைநோக்கை வழங்குவதற்கு, ஒரு மார்க்சிச கட்சியின் பணி, சிரிசாவால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் வர்க்க நலன்களை அம்பலப்படுத்திக் காட்டுவதேயாகும்.  

இவ்விதத்தில் தான் உலக சோசலிச வலைத் தளமும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் கிரீஸின் "அனுபவங்களில்" பங்கெடுக்கிறது. எண்ணற்ற போலி-இடது குழுக்கள் சிரிசாவைப் பற்றிக் கொண்டுள்ளன ஏனென்றால் இவை பிரதிநிதித்துவம் செய்யும் அதே வர்க்க நலன்களை இந்த கட்சியும் பிரதிநிதித்துவம் செய்கிறது. அவை தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தை குறித்து அஞ்சுவதுடன், மற்றும் முதலாளித்துவ ஒழுங்கமைப்பிற்குள் அவர்களது சொந்த சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்திக் கொள்ள அக்கறை கொண்டுள்ளதும் ஆன மத்தியதர செல்வந்த அடுக்குகளுக்காக பேசுகின்றன.