சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

Pentagon chief outlines war preparations against Russia

பெண்டகன் தலைவர் ரஷ்யாவிற்கு எதிரான போர் தயாரிப்புகளை கோடிட்டு காட்டுகிறார்

Niles Willamson
24 June 2015

Use this version to printSend feedback

ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள கிழக்கு ஐரோப்பா மற்றும் பால்டிக் நாடுகளில் கனரக இராணுவ தளவாடங்கள் மற்றும் சிப்பாய்களை அமெரிக்கா நிலைநிறுத்தும் என்று இவ்வார நேட்டோ பாதுகாப்பு மந்திரிகள் கூட்டத்திற்கு முன்னதாக அமெரிக்க பாதுகாப்பு செயலர் அஷ்டன் கார்ட்டரின் அறிவிப்பு, உலகின் பிரதான அணுஆயுத சக்திகளுக்கு இடையே போர் அபாயத்தை உயர்த்துகிறது.

செவ்வாயன்று எஸ்தோனிய தலைநகர் தாலினில் பேசுகையில், கார்ட்டர், அப்ராம்ஸ் டாங்கிகள், பிராட்லி குண்டுதுளைக்காத வாகனங்கள், கனரக பீரங்கிப்படை மற்றும் ஏனைய இராணுவ தளவாடங்களை —5,000 துருப்புகளுக்குப் போதுமானளவிற்கு— போலாந்து, பல்கேரியா, ரோமானியா, எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியாவில் நிலைநிறுத்துமென அறிவித்தார். “குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து வரும், இணையவழி சவால்களுக்காக நாம் நேட்டோ மற்றும் நமது கூட்டாளிகளைத் தயார் செய்தாக வேண்டும்,” என்று கூறி, நேட்டோவின் இணையவழி போர்முறை தகைமைகளைக் கட்டமைப்பது குறித்தும் அவர் அறிவித்தார்.  

ஒருநாளுக்கு முன்னதாக, பேர்லினில் ஓர் இராணுவ-பாதுகாப்பு சிந்தனைக்கூடத்தில் கார்ட்டர் உரையாற்றுகையில், ரஷ்யாவுடன் ஒரு நீண்டகால மோதலுக்காக, நேட்டோ அதன் மூலோபாய நோக்குநிலையை மாற்றியமைத்து வருவதாக தெரிவித்தார். உக்ரேனில் ரஷ்ய "ஆக்ரமிப்பு" என்றவர் எதை அழைத்தாரோ அதைக் கொண்டு குற்றஞ்சாட்டி, அவர் ஒரு "புதிய திட்டத்தை" குறித்து பேசியதுடன், “சோவியத்-சகாப்த செல்வாக்கு எல்லையை மீள்ஸ்தாபிதம் செய்யும் ரஷ்யாவின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் முயற்சிகளுக்கு ஏற்ப நாங்கள் எதிர்நிற்போம்,” என்றவர் அறிவித்தார்.

மிகத்துரித தயார்நிலை கூட்டுப்படைக்கு (VJTF) அமெரிக்கா குண்டுவீசிகள், போர் விமானங்கள், கண்காணிப்பு டிரோன்கள், சிறப்பு நடவடிக்கை துருப்புகள் மற்றும் ஏனைய இராணுவ ஆதாரவளங்களை வழங்குமென அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு நேட்டோவினால் அறிவிக்கப்பட்ட VJTF,  அறிவிப்பு கிடைத்த உடனேயே, ஒருசில நாட்களில், ரஷ்யாவிற்கு எதிராக இராணுவரீதியில் தலையீடு செய்ய பணிக்கப்படக்கூடியது.

ரஷ்யா இடைத்தூர அணுஆயுத படை உடன்படிக்கையை மீறியிருப்பதாகவும் கார்ட்டர் அறிவித்தார். குற்றஞ்சாட்டப்படும் ரஷ்ய மீறலுக்கு, இதை அது மறுக்கின்ற நிலையில், ரஷ்யாவிற்குள் உள்ள அணுஆயுத ஏவுகணைகளுக்கு எதிராக ஒரு சாத்தியமான முதல் தாக்குதல் உட்பட, பல்வேறுவிதமான இராணுவ விடையிறுப்புகளை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

உண்மையில், வாஷிங்டனும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் தான் வெளிப்படையாக சர்வதேச உடன்படிக்கைகளை மீறுகின்றன, குறிப்பாக 1997 நேட்டோ ரஷ்யா ஸ்தாபக உடன்படிக்கையை மீறுகின்றன, இது இராணுவரீதியில் ரஷ்யாவை அச்சுறுத்துவதற்கு கூட்டணியின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தைப் பிரயோகிப்பதற்கு எதிராக மாஸ்கோவிற்கு உத்தரவாதங்களை வழங்கியது. 

குழப்பத்திற்கிடமின்றி போரைக் குறிக்கும் நடவடிக்கைகளை விவரிக்கும் அதேவேளை, கார்ட்டர் ஆத்திரமூட்டும் வகையில், “ரஷ்யாவுடனான ஓர் ஆயுத போர் ஒருபுறமிருக்கட்டும், நாங்கள் ஒரு பனிப்போரைக் கூட விரும்பவில்லை. நாங்கள் ரஷ்யாவை ஓர் எதிரியாக்க முயலவில்லை,” என்றார்.   

சொல்லை விட செயல் வலிமையானது என்றவொரு பழமொழி உண்டு. இந்த வாரம் அறிவிக்கப்பட்ட நகர்வுகளோ இராணுவ மோதலுக்கு வெளிப்படையான ஆக்ரோஷ தயாரிப்புகளாக உள்ளன. அனைத்திற்கும் மேலாக, ஆயுதங்கள் நிறைந்த ஒரு பிராந்தியத்தில், அவை செய்யப்பட்டு வருவதானது, நேட்டோ மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையே ஒப்பீட்டளவில் சிறிய மோதல் கூட, ஒட்டுமொத்த உலகிற்கும் ஓர் அணுஆயுத பேரழிவாக அச்சுறுத்தும் வகையில், வேகமாக ஒரு முழு-அளவிலான போராக தீவிரமடையக்கூடும் என்ற அபாயத்தை உயர்த்துகிறது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ஏற்கனவே ரஷ்யாவின் மேற்கத்திய எல்லையை ஒட்டி, ஆர்டிக் பெருங்கடலில் இருந்து பால்டிக் மற்றும் கருங்கடல் வரையில் இராணுவ ஒத்திகைகளை நடத்தி வருகிறது. நேட்டோ மற்றும் ரஷ்ய விமானங்கள், கப்பல்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. இந்த வாரத்தில் மட்டும் அமெரிக்கா அப்பிராந்தியத்தில் 20 வெவ்வேறு இராணுவ ஒத்திகைகளில் ஈடுபட்டதாக ஜேர்மனியில் கார்ட்டர் பெருமையடித்துக் கொண்டார்.

பால்டிக் கடல் எல்லையோர பகுதியில் நிலம், கடல் மற்றும் விமான ஒத்திகைகளில் பங்குபற்றுவதற்கு 17 நாடுகளிலிருந்து 6,000 துருப்புகள் ஈடுபட்ட BALTOPS ஒத்திகைகளின் முடிவாக கார்ட்டர் விஜயம் வந்திருந்தது. ரஷ்ய எல்லையோர காலினின்கிராடிலிருந்து சுமார் 100 மைல்களில், போலாந்து உஸ்த்காவில் நீரிலும்-நிலத்திலுமான தாக்குதலைச் சிப்பாய்கள் பயிற்சி செய்தனர். அமெரிக்காவின் அணுஆயுத-தகைமை கொண்ட B-52 குண்டுவீசிகள், ரஷ்ய எல்லையிலிருந்து 200 மைல்களுக்கு குறைந்த தூர இலக்குகள் மீது போலி குண்டுகளை வீசி, லாட்வியாவின் இராணுவ ஒத்திகைகளில் பங்குபற்றின.

ரஷ்யாவிற்கு எதிராக ஆறு மாதங்களுக்கு பொருளாதார தடைகளை நீடிப்பது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் திங்களன்று முடிவுடன் கார்ட்டரின் அறிவிப்புகள் பொருந்தியிருந்தன. ஜூன் 22, 1941 இன் சோவியத் ஒன்றியம் மீதான நாஜி படையெடுப்பின் ஆண்டு நினைவுதினத்தன்று, நினைவாஞ்சலி தினம் என்று ரஷ்யாவில் அழைக்கப்படும் ஒரு தேசிய விடுமுறையான அந்நாளில், அந்த அறிவிப்பு வந்திருந்தது.

அமெரிக்கா மற்றும் நேட்டோவின் இத்தகைய புதிய ஆத்திரமூட்டல்களுக்கு விடையிறுப்பாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் நேட்டோ "எங்களின் எல்லையோரங்களில் வருகிறது" என்று குற்றஞ்சாட்டினார். ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் நிகோலைய் பட்ருஷெவ் கூறுகையில், “ரஷ்யா ஒரு தேசமாக இல்லாதிருப்பதைக் காண அவர்கள் பெரிதும் விரும்புவார்கள் போலும்,” என்றார்.

பால்டிக் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் துருப்புகளைப் பெற தொடங்கிய சோவியத்திற்குப் பிந்தைய எல்லா அரசாங்கங்களும் வலதுசாரி, ரஷ்ய-விரோதமானவையாக மற்றும் பெரிதும் ஸ்திரமற்றவையாக உள்ளன. அவை மக்கள் எதிர்ப்புக்கு முன்னால் மூர்க்கமான சிக்கன கொள்கைகளை நடத்தியதுடன், உள்ளூர் நெருக்கடிகளால் சூழப்பட்டிருந்தன. இது இத்தகைய அரசாங்கங்களில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டவையால் ரஷ்ய பழிவாங்கும் நடவடிக்கைகளை தூண்டிவிட மற்றும் போருக்கு ஒரு போலிக்காரணத்தை வழங்க களம் அமைக்கும் ஓர் ஆத்திரமூட்டலின் அபாயத்தை உயர்த்துகிறது.

இத்தகைய அரசாங்கங்களைப் பாதுகாப்பதற்காக என்று ரஷ்யாவிற்கு எதிராக இராணுவ தலையீட்டுக்கு சூளுரைப்பதன் மூலமாக, ஆயுதங்கள் மற்றும் துருப்புகளை நிலைநிறுத்துவதன் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் அமெரிக்க மற்றும் ஒட்டுமொத்த உலக மக்களின் தலைவிதியை ஆழ்ந்த அபாயத்தில் நிறுத்தி வருகிறது. அனைத்திற்கும் மேலாக, இது பொது விவாதங்களோ அல்லது கலந்துரையாடல்களோ இல்லாமல் மற்றும் காங்கிரஸின் சம்பிரதாயமான ஒப்புதல் கூட இல்லாமல் (ஆனால் இது இராணுவம் கோரும்பட்சதில் ஒப்புதலை வழங்கிவிடும்), முற்றிலுமாக மக்களின் முதுகுக்குப் பின்னால் நடந்து வருகிறது.

கடந்த வாரம் தான், Pew Foundation ஆல் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு போர் உந்துதலுக்கு இருக்கும் பரந்த எதிர்ப்பைக் கண்டறிந்தது. ஜேர்மனியர்களில் ஐந்பத்தி எட்டு சதவீதத்தினர், பிரெஞ்சு மக்களில் 53 சதவீதத்தினர் மற்றும் இத்தாலியர்களில் 51 சதவீதத்தினர் நேட்டோ கூட்டாளியின் பாதுகாப்பிற்காக ரஷ்யாவிற்கு எதிரான ஒரு போரில் சண்டையிடுவதை எதிர்த்தனர்.  

ஊடகங்களால் ஒரேபோல ஊக்குவிக்கப்பட்டுவரும் உத்தியோகபூர்வ அமெரிக்க போக்கு என்னவென்றால், இத்தகைய நகர்வுகள் அனைத்தும் ரஷ்யா வலிந்து சண்டைக்கு வருவதற்கு காட்டப்படும் தற்காப்பு விடையிறுப்புகள் என்பதாக உள்ளது. இந்த பொய் யதார்த்தத்தைத் தலைகீழாக திருப்புகிறது.

வலிந்து சண்டைக்கு போவது அமெரிக்கா மற்றும் நேட்டோவாகும். தற்போதைய நெருக்கடியானது விக்டொர் யானுகோவிச்சின் ரஷ்ய-ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்த பெப்ரவரி 2014 மைதான் ஆட்சிக்கவிழ்ப்பு சதியால் தூண்டிவிடப்பட்டது.

வாஷிங்டன் மற்றும் பேர்லினால் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முடுக்கிவிடப்பட்டு, நாஜி ஆக்கிரமிப்பு மற்றும் இரண்டாம் உலக போரில் யூத-விரோத படுகொலையில் ஒத்துழைத்த பெருமதிப்புடன் போற்றப்பட்ட உக்ரேனிய தேசியவாத படைகளான பாசிச போராளிகள் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டது. ரஷ்ய-மொழி பேசும் உக்ரேனியர்கள் அந்நாட்டின் கிழக்கில் கியேவில் அதிதீவிர வலது ஆட்சிக்கு எதிராக எழுச்சி பெற்ற போது, அமெரிக்க கைப்பாவை அரசாங்கம் வாஷிங்டனின் முழு ஆதரவுடன் ஓர் இரந்தந்தோய்ந்த உள்நாட்டு போரைத் தொடங்கியது.

அந்த ஆட்சிக்கவிழ்ப்பே, 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு பிந்தைய அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையின் விளைபொருளாக இருந்தது. யுரேஷியாவின் பரந்த ஆதாரவளங்களை அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காக ரஷ்யாவைச் சுற்றி வளைக்க, தனிமைப்படுத்த மற்றும் பலவீனப்படுத்த ஓர் இரக்கமற்ற முனைவின் மையத்தில் அது இருந்துள்ளது.

முன்னாள் வார்சோ உடன்பாட்டு தேசங்கள் மற்றும் பால்டிக் அரசுகளைச் சுற்றி வளைப்பதற்கு நேட்டோவின் கிழக்குநோக்கிய விரிவாக்கம் இதில் உள்ளடங்கும். ஒரு தொடர்ச்சியான ஆக்ரோஷ நடவடிக்கைகளும், கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள ரஷ்ய கூட்டாளிகளுக்கு எதிரான போர்களும் இதில் உள்ளடங்கி உள்ளது. ஈராக்கிற்கு எதிரான முதல் வளைகுடா போர் (1991), யூகோஸ்லாவியா உடைப்பு மற்றும் சேர்பியாவிற்கு எதிரான போர் (1999), ஜோர்ஜியா மற்றும் உக்ரேனில் "வண்ண புரட்சிகள்" (2003-2004) என்றழைக்கப்பட்டவை, ரஷ்ய படைகள் மீதான ஜோர்ஜிய தாக்குதல் (2008), ஈரானுக்கு எதிரான தடையாணைகள் மற்றும் போர் அச்சுறுத்தல்கள், மற்றும் சிரிய ஆட்சிக்கு எதிராக அமெரிக்க ஆதரவிலான உள்நாட்டு போர் ஆகியவையும் அதில் உள்ளடங்கும்.  

அங்கே புட்டின் ஆட்சியின் விடையிறுப்பில் எந்த முற்போக்குத்தன்மையும் கிடையாது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் முதலாளித்துவத்தின் மீட்சியின் போது அரசு சொத்துக்களை சூறையாடியதன் மூலமாக தங்களைத்தாங்களே செழிப்பாக்கிக் கொண்ட செல்வந்த தட்டுக்களின் ஒரு கருவியாக ரஷ்ய அரசாங்கம், மேற்குடன் ஓர் உடன்படிக்கைக்கு முறையீடு செய்வதற்கும் மற்றும் இராணுவ வெற்று அறிக்கைகளுக்கும் இடையே தள்ளாடிக் கொண்டிருக்கிறது, அதேவேளையில் அது ரஷ்ய தொழிலாளர்களின் சமூக நிலைமைகள் மீதான அதன் தாக்குதல்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப உள்நாட்டில் தேசியவாதத்தைத் தூண்டிவிட முயல்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முறையீடு செய்ய இலாயகற்று, அதன் கொள்கைகள் வாஷிங்டன் மற்றும் நேட்டோவின் போர்வெறியூட்டல்களுக்கு துணை நிற்கின்றன.  

ஏகாதிபத்தியம் மனிதயினத்தை மூன்றாம் உலக போர் எனும் ஒரு படுபாதாளத்தை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. போருக்கும் மற்றும் அதை வளர்த்தெடுக்கும் அமைப்புமுறையான முதலாளித்துவத்திற்கும் எதிரான எதிர்ப்பில் சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் பலத்தை ஒன்றுதிரட்டுவதன் மூலமாக மட்டுமே அதை நிறுத்த முடியும்.