சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greece defaults on debt as Syriza offers alternative austerity package

சிரிசா மாற்று சிக்கன திட்டத்தை வழங்குகையில், கடன்கள் செலுத்தவியலாநிலையை கிரீஸ் அடைகிறது

By Chris Marsden
1 July 2015

Use this version to printSend feedback

ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 30 பில்லியன் யூரோ புதிய பிணையெடுப்புக்கு பிரதியீடாக சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க, கிரீஸில் சிரிசா தலைமையிலான அரசாங்கத்திடமிருந்து அளிக்கப்பட்ட மற்றொரு பரிந்துரையை ஐரோப்பிய மண்டல நிதி மந்திரிமார்கள் செவ்வாயன்று நிராகரித்தனர்.

எந்தவித கூடுதல் நிதியுதவியும் கிடைக்காமல், கிரீஸ் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்ற அதன் கடன்களுக்கான சமீபத்திய நிலுவைத்தொகையை திரும்பசெலுத்த தவறியது.

ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (“முக்கூட்டு") கோரிக்கைகளை, அது முன்னதாக நிராகரித்திருந்த அவற்றையே, எல்லா எதிர்ப்பையும் புறக்கணித்து, முழுமையாக அவற்றை ஏற்றுக்கொள்ள அவரது அரசாங்கம் விவாதித்து வருவதாக காலையில் வதந்திகள் வெளியாக தொடங்கியதும், கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸின் புதிய தந்திரம் வெளியானது.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கரிடமிருந்து வந்த புதிய பரிந்துரையை விவாதிக்க சிப்ராஸ் புருசெல்ஸிற்கு பறக்க தயாராக இருப்பதாக கிரேக்க நாளிதழ் Kathimerini குறிப்பிட்டது. ஜூங்கர், ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் மரியோ திராஹி மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்டின் ஸ்ஹல்ட்ஜ் ஆகியோருடன் அவர் தொலைபேசியில் பேசியதாகவும், அதேவேளையில் சிரிசாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கப்பட்ட எந்தவொரு உடன்படிக்கையையும் ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்த அவரது அலுவலகத்திற்கு தொலைபேசியில் அழைத்ததாகவும் செய்திகள் வெளியாயின.

முக்கூட்டின் கோரிக்கைகள் மீது நடக்கவிருக்கின்ற வெகுஜன வாக்கெடுப்பில் "ஆம்" என்று வாக்களிக்க சிப்ராஸ் பிரச்சாரம் செய்தால் மற்றும் முதன்முதலில் நவம்பர் 2012 உடன்படிக்கையில் அமைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அவர் ஒப்புக்கொண்டால் ஒழிய, கடன் நிவாரணம் கிடைப்பதற்குரிய சாத்தியக்கூறை ஜூங்கர் வெளிப்படையாக நிராகரித்திருந்தார்.

அதற்குப் பின்னர் குறுகிய நேரத்திலேயே, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் கூறுகையில், சிப்ராஸை ஜூலை 5 அன்று ஒரு வெகுஜன வாக்கெடுப்பை அறிவிக்க இட்டுச்சென்ற, வெள்ளிக்கிழமை இறுதி எச்சரிக்கைக்குப் பின்னர், வேறெந்தவித மாற்றத்தையும் அவர் செவியுறவில்லை என்றார்.வாரயிறுதியில் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கை மீது ஒரு வெகுஜன வாக்கெடுப்புக்கு அவர் அழைப்புவிடுத்தமையும், அதேபோல வெகுஜன வாக்கெடுப்பில் "வேண்டாமென" வாக்கிடுமாறு செவ்வாயன்று அழைப்புவிடுத்தமையும் ஒரு எரிச்சலூட்டும் அரசியல் தந்திரம் என்பதையே சிப்ராஸின் பரிந்துரை எடுத்துக்காட்டுகிறது. “வேண்டாமென்ற" வாக்குகள் வென்றாலுமே கூட, அதை அவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்து பேரம்பேசுவதற்கு பயன்படுத்த இருப்பதாக சிப்ராஸ் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அறைகூவல் என்று கருதத்தக்க ஒன்றை வெளியிட்டு 24 மணி நேரத்திற்கும் குறைவான மணித்தியாலங்களுக்கு பின்னர், அவர் நேற்றும் திருவோடு ஏந்தி, கிரேக்க மக்களால் எதிர்க்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு பிரதியீடாக ஐரோப்பிய ஒன்றிய கடன்களைப் பேரம்பேச முயன்றார்.

ஐரோப்பிய வங்கிகளின் சிக்கன கோரிக்கைகளுக்கு இருந்த மக்கள் விரோதத்தின் அடிப்படையில் இவ்வாண்டு தொடக்கத்தில் பதவிக்கு வந்த பின்னரிலிருந்து, சிரிசா மீண்டும் மீண்டும் பிணையெடுப்புகளின் கட்டமைப்பை பாதுகாக்கும் ஓர் உடன்படிக்கையை எட்டுவதற்கு முயன்றுள்ளது. கிரேக்க முதலாளித்துவ வர்க்க மற்றும் குட்டி முதலாளித்துவ வர்க்க பிரிவுகளின் நலன்களைப் பிரதிபலிக்கும் இந்த மூலோபாயம், இந்தவொரு வெகுஜன வாக்கெடுப்புக்கான அழைப்பிலும் தொடர்கிறது.

வெகுஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானம் முடிவல்ல, மாறாக கிரேக்க மக்களுக்குரிய சிறந்த நிபந்தனைகளை பேரம்பேசுவதை தொடர்வதற்குரியதாகும் என்பதை ஆரம்ப தருணத்திலிருந்தே, நாங்கள் தெளிவுபடுத்தி உள்ளோம்,” என சிரிசா அரசாங்கம் ஓர் அறிக்கையில் அறிவித்தது. “இறுதி வரையில் யூரோவிற்குள் நிலைத்திருக்கக்கூடிய ஓர் உடன்பாட்டை கிரேக்க அரசாங்கம் கோரும்,” என்றது அறிவித்தது.

சிப்ராஸின் ஒரு கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட, ஒரு புதிய பிணையெடுப்புக்கான பரிந்துரைகள், கிரீஸின் கடன்வழங்குனர்கள் உடன்படக்கூடிய ஒரு மூர்க்கமான சிக்கன திட்டத்தை வரைந்தளிக்கும் சிரிசாவின் முயற்சியாக இருந்தன என்றாலும், அது கிரேக்க முதலாளித்துவத்தின் நீண்டகால நிலைப்புத்தன்மையை உறுதிப்படுத்துவதற்குரிய கடன் நிவாரணத்தின் ஒரு முறைமையை உள்ளடக்கி இருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தைப் புறக்கணித்துவிட்டு, யூரோ மண்டலத்தின் 500 பில்லியன் யூரோ ஐரோப்பிய ஸ்திரப்பாட்டு நிதியத்திலிருந்து, இரண்டாண்டு காலங்களில், கூடுதலாக 30 பில்லியன் யூரோ கடன்பெறுவது மற்றும் ஓரளவிற்கு கடன் நிவாரணத்தை அனுமதிப்பது ஆகியவற்றை அது உள்ளடக்குகிறது. அதில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஐரோப்பிய ஒன்றியத்தால் கோரப்பட்ட பாரிய சிக்கன நடவடிக்கைகளின் தொகுப்பை ஏற்றுக் கொள்வதையே அந்த பரிந்துரை அர்த்தப்படுத்தும். கிரேக்க பரிந்துரைகள், ஐரோப்பிய ஒன்றியத்தால் கோரப்பட்டு வந்தவைகளுக்கு "நெருக்கமாக" இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய ஆதாரநபர் ஒருவர் ராய்டர்ஸிற்குத் தெரிவித்தார்.

மால்டாவின் பிரதம மந்திரி ஜோசப் மஸ்கட் பின்னர் கூறுகையில் ஓர் உடன்படிக்கை எட்டப்பட்டுவிட்டால், திட்டமிடப்பட்ட வெகுஜன வாக்கெடுப்பை தற்காலிகமாக நிறுத்துவதற்கு கிரீஸ் விருப்பப்படுவதாகவும், அல்லது "மக்களை, 'வேண்டாம்' என்பதற்கு மாறாக 'வேண்டும்' என்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ள" அது விருப்பமுறுவதாகவும் தெரிவித்தார்.

வங்கிகள் கடன்களை பெறமுடியாதநிலை ஒருசில நாட்களில் ஏற்படுமென ஐரோப்பிய மத்திய வங்கி பிரமுகர்கள் அறிவுறுத்திய நிலைமைகளின் கீழ், வெகுஜன வாக்கெடுப்பு வரையில் மற்றும் அதற்கு சற்று அதிகமான காலத்தை உள்ளடக்குவதற்காக, சிப்ராஸ், இறுதியில் காலாவதியாகிப் போன நடப்பு மீட்சி திட்டத்திலேயே ஒரு சிறிய நீட்சியை கோரினார்.

நடப்பு பிணையெடுப்பை காலாவதியாக விடுவது, கடன் நிவாரணத்திற்கான சாத்தியக்கூறு உட்பட ஒரு புதிய திட்டத்தை கிரேக்க அரசாங்கம் பேரம்பேச அனுமதிக்குமென சில மாதங்களுக்கு முன்னதாக ஐரோப்பிய மண்டல அதிகாரிகள் தெரிவித்திருந்ததாக பைனான்சியல் டைம்ஸ் சுட்டிக்காட்டியது.

ஆனால் அதுபோன்ற ஒரு திட்டம் விவாதிக்கபட்ட போதினும், ஒரு புதிய திட்டத்தின் மீது தொடர்ச்சியான பேரம்பேசல்களை தொடங்குவதற்குள் ஏதென்ஸ் வேகமாக பணமில்லாமல் போய்விடுமென முடிவெடுக்கப்பட்டதுஅதுபோன்ற பேச்சுவார்த்தைகள் முடிவாக மாதக்கணக்கில் இல்லையென்றாலும் வழமையாக வாரக்கணக்கில் ஆகும்வரவிருக்கின்ற வாரங்களில் கிரேக்க வங்கிகள் பொறியக்கூடும், மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிக்கு 3.5 பில்லியன் பத்திரம் கொடுக்க வேண்டிய ஜூலை 20க்கு முன்னதாக ஒரு புதிய திட்டம் கொண்டு வருவது அவசியமாகும் என்பது குறித்து அதிகாரிகள் அதிகரித்தளவில் கவலையில் உள்ளனர்,” என்று அது எழுதியது.

சிப்ராஸ் நடைமுறையில் இந்த நிகழ்முறையை சுருக்கமாக கடந்து வருவதற்கு ஒரு வழிவகையை வழங்கியுள்ளார்.

ஐரோப்பிய அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது ஓர் ஆழ்ந்த தாக்குதல்களுக்கான கோரிக்கைகளை தீவிரப்படுத்தியதன் மூலமாக சிரிசாவின் முறையீடுகள் ஒவ்வொன்றுக்கும் விடையிறுத்துள்ளன. சிரிசா முதலாளித்துவ பாதுகாப்பிற்கு பொறுப்பேற்றுள்ளது என்பதும் மற்றும் சிக்கன நடவடிக்கை கோரிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்ட எந்தவொரு முயற்சியையும் எதிர்க்கிறது என்பதும் அவற்றிற்கு நன்றாக தெரியும்.

செவ்வாயன்று மேர்க்கெல் ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கையில் அந்த வெகுஜன வாக்கெடுப்பு முடியும் வரையில் அங்கே எந்த புதிய பேச்சுவார்த்தைகளும் கிடையாது என்றார். “இந்த திட்டம் இன்று மாலையோடு, துல்லியமாக நள்ளிரவோடு முடிவடைகிறது. [வேறு எதைக் குறித்தும்] வேறெந்த நம்பகமான தகவலும் என்னிடம் இல்லை,” என்று அப்பெண்மணி தெரிவித்தார்.

யூரோ குழுமத்தின் தலைவர் ஜெரொன் திஜிஸ்செல்ப்லோம், கிரேக்க பரிந்துரையைக் குறித்து விவாதிக்க அன்றைய மாலை நிதி மந்திரிமார்களின் ஒரு தொலைபேசிவழி கலந்துரையாடலை அறிவித்தார், அதேவேளையில் சிப்ராஸ், வாரௌஃபாகிஸ் மற்றும் கிரேக்க பேரம்பேசும் குழு ஏதென்ஸில் ஒன்றுகூடி இருந்தது.

வெறும் ஒரு மணிநேரத்திற்குப் பின்னர், ஐரோப்பிய மத்திய வங்கியிடமிருந்து கிரேக்க வங்கிகளுக்கான தற்போதைய நிதியுதவிகளை நீடிப்பதற்கான சிப்ராஸின் முறையீட்டை நிதி மந்திரிமார்கள் நிராகரித்தனர்.

கடன் சீரமைப்பும் சாத்தியமில்லாதது என்று சில மந்திரிமார்கள் அறிவுறுத்தினர். ஆனால் "நிதி மந்திரிகள் கிரேக்க அரசாங்கத்தின் பரிந்துரைகளை ஆய்வு செய்வதை அனுமதிக்கும் வகையில்" இன்று பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குமென கிரேக்க அரசின் ஆதாரநபர் ஒருவர் தெரிவித்தார்.

பிரிட்டனின் கார்டியனுக்கு நேற்று கசியவிடப்பட்ட முக்கூட்டின் அறிக்கை ஒன்று, கிரீஸ் "அதனிடம் கோரப்படும் வரி மற்றும் செலவின சீர்திருத்தங்களின் முழு பொதியில் கையெழுத்திட்டாலும் கூட 2030 வாக்கில் ஒரு தாங்கமுடியாத கடன் அளவை" முகங்கொடுக்கும் என்று எழுதி முடித்தது.

உத்தேசமாக 15 ஆண்டுகளுக்குநீடித்த பலமான வளர்ச்சிக்கான" நம்பிக்கையூட்டும் சூழல்கள் இருக்கும் என்று கருதினாலும் கூட, சர்வதேச நாணய நிதியத்தின் அடிப்படை மதிப்பீடு என்னவென்றால் கிரீஸின் கடன் 2030 இல் அப்போதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 118 சதவீதமாக இருக்கும். இத்தகைய சூழல்கள் எல்லாம்சிப்ராஸ் கோரியதை விடவும் 5 பில்லியன் யூரோ கூடுதலாக—35 பில்லியன் யூரோவின் ஒரு மூன்றாம் பிணையெடுப்பின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.

ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகள் நிதியியல்ரீதியில் செல்லுபடியாகாதவை என்ற கவலை ஏற்கனவே அமெரிக்காவின் தலையீட்டை கொண்டு வந்துள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக "ஓர் ஏற்புடைய" தீர்வைக் காணுமாறு, சிப்ராஸ், சர்வதேச நாணய நிதிய தலைவர் கிறிஸ்டீன் லகார்ட், சொய்பிள மற்றும் பிரான்சின் எமானுவேல் மாக்ரோன் ஆகியோரை அமெரிக்க கருவூலத்துறை செயலர் ஜாக் லெவ் வலியுறுத்தினார். அதேமாதிரியான கவலைகள் மேர்க்கெல் உடனான விவாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவால் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் பயிலகத்தின் Gary Hufbauer வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவிற்கு கூறுகையில், “கிரீஸில் நிலவும் குழப்பம் தொற்றிதொற்றி பரவி, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் மற்றும் இத்தாலி மீது சந்தேகங்களுக்கு இட்டுச் சென்று, தொந்தரவை ஏற்படுத்தும், அத்துடன் உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவைக் குறித்த ஐரோப்பாவின் தீர்மானத்தில் ஒற்றுமையைக் குலைக்கும்,” என்றார்.

அதற்கும் கூடுதலாக, பைனான்சியல் டைம்ஸ் ஜூன் 23 அன்று குறிப்பிட்டதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 175 சதவீத கிரீஸின் கடன் சுமை, "பத்திர முதலீட்டாளர்களுக்கு கிரீஸை அபாயகரமான கடன்பெறுநராக மாற்றாது". அது உக்ரேனை மிகவும் அபாயகரமான முதலீடாக மேற்கோளிட்டது, பின்னர் "உலகளாவிய கடன்பெறுவதற்கான தரவரிசை பட்டியல் நிறுவனம் Moodyஇன் தகவல்படி கடன் செலுத்தவியலாநிலையில் தற்போதும் மிகவும் அபாயகரமாக உள்ள" 11 நாடுகளின் ஒரு பட்டியலில் அவ்விரண்டு நாடுகளையும் அது உள்ளடக்கியது. அந்த பட்டியலில் வெனிசூலா, ஈக்வட்டார், அர்ஜென்டினா, கிரனாடா மற்றும் போர்த்தோ ரிக்கோ ஆகியவையும் உள்ளடங்கி உள்ளன.