சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka SEP calls public meeting to defend victimised plantation workers

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி பழிவாங்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்க பொதுக் கூட்டத்துக்கு அழைக்கிறது

30 June 2015

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ...) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும், கிளனியூஜி தேயிலை தோட்டத்தின் டீசைட் பிரிவில் பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை பாதுகாக்க, ஜூலை 5 அன்று மஸ்கெலியாவின் சாமிமலையில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்துகின்றன.

மே 22, கிளனியூஜி தோட்ட நிர்வாகமானது சோ... ஆதரவாளரான ஜீ. வில்பிரட், எம். நெஸ்தூரியன் மற்றும் எஃப். பிராங்க்ளின் ஆகிய மூன்று தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ததோடு எஸ். டக்ளஸ்நியுமன், எஃப். அன்டன் ஜூலியன், எஸ். பெனடிக்ட் மற்றும் எஸ். ஜனரட்னம் ஆகிய நான்கு தொழிலாளர்களை ஒரு மாதத்துக்கு வேலை இடைநீக்கம் செய்தது. தோட்ட மேற்பார்வையாளரை தாக்கியதோடு ஏனைய தொழிலாளர்கள் பணிகளை சீர்குலைக்கும் வகையில் ஒரு குளவி கூட்டை கலைத்துவிட்டதாக அவர்களுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதேச்சதிகாரமான முறையில் வேலைச்சுமையை அதிகரித்தமைக்கு எதிராக பெப்பிரவரியில் நடந்த மூன்று நாள் வேலை நிறுத்தத்தில் முக்கிய பங்கு வகித்ததாலேயே இந்த தொழிலாளர்கள் தண்டிக்கப்பட்டார்கள். டீசைட் தொழிலாளர்கள் மீதான வேட்டையாடல், உலக முதலாளித்துவத்தின் தீவிரமடையும் நெருக்கடியின் சுமைகளை திணிப்பதன் பேரில், இலங்கை அரசாங்கம் மற்றும் தனியார் கம்பனிகளும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவினர் மீதும் முன்னெடுக்கும் ஆழமடைந்து வரும் தாக்குதல்களை பிரதிபலிக்கின்றது.

உலக சந்தைகளில் அளவுகடந்த போட்டியினால் தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி வருமானம் குறைந்து வருகின்ற நிலையில், இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சம்பளத்தை முடக்குவது, தொழிலாளர்களின் நலன்களை வெட்டுவது மற்றும் வேலைச்சுமையை அதிகரிப்பதன் மூலம் இலாபத்தைப் பாதுகாக்க ஏங்குகின்றன. தொழிலாளர்களின் நிலைமைகள் மீதான இந்த தாக்குதல்களை அமுல்படுத்தும் தமது வழியின்படி டீசைட் தோட்டத்தில் நடக்கும் இந்த வேட்டையாடலுக்கு தோட்டத் தொழிற்சங்கங்களும் ஒத்துழைத்து வருகின்றன.

இந்த பழிவாங்கலை தொழிலாளர்கள் முழு தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐவைஎஸ்எஸ்இ கூட்டத்தில் கலந்துகொண்டு, டீசைட் தொழிலாளர்களின் வேலை மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் எமது பிரச்சாரத்தில் இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.


தினேஷ் விழா மண்டபம் (ஜனசத்ய கொலனி)

சாமிமலை, மஸ்கெலியா

ஜூலை 5, பிற்பகல் 2 மணிக்கு