சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Tsipras’s surrender rejected as Berlin pushes for regime-change in Greece

சிப்ராஸின் அடிபணிவை நிராகரித்த பின்னர் கிரீஸில் ஆட்சி மாற்றத்திற்கு பேர்லின் அழுத்தமளிக்கிறது 

By Chris Marsden
2 July 2015

Use this version to printSend feedback

ஒரு கிரேக்க பிணையெடுப்புக்குரிய நிபந்தனைகளை ஏற்பதா வேண்டாமா என்பதன் மீது ஞாயிறன்று வெகுஜன வாக்கெடுப்பு நடக்கும் என்றும், அவர் இன்னமும் "வேண்டாமென" வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்து வருவதாகவும் அறிவித்து, நேற்று மாலை 5.30 மணிக்கு கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

முக்கூட்டின் கோரிக்கைகள் மீது "வேண்டாமென" வாக்களிக்குமாறு அவரது அரசாங்கத்தின் அழைப்பு, சிக்கன திட்டத்தின் மீதான விவாதங்களில் பேரம்பேசுவதற்குரிய ஒரு தந்திரோபாயம் என்பதை அவர் தெளிவுபடுத்தினார். அடிபணிவதற்குரிய நிபந்தனைகளாக இருந்த முந்தைய அவரது பரிந்துரைகளின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியுடன் ஒரு புதிய உடன்பாட்டை விரும்புவதாக அவர் வலியுறுத்தினார்.

வெகுஜன வாக்கெடுப்புக்குப் பின்னர், வரவிருக்கிற திங்களன்று, கிரேக்க மக்களுக்குகந்த சிறந்த நிபந்தனைகளுடன் கிரேக்க அரசாங்கம் பேரம்பேசும் மேசையில் அமர்ந்திருக்கும்" என்றவர் அறிவித்தார்.

சிப்ராஸ் எந்தளவிற்கு செல்ல தயாராகி இருக்கிறார் என்பதை ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்களுக்கு செவ்வாயன்று அனுப்பிய ஒரு கடிதம் தெளிவுபடுத்தியது. ஐரோப்பிய ஸ்திரப்பாட்டு இயங்குமுறையிலிருந்து 30 பில்லியன் யூரோ கடனுக்கு பிரதியீடாக, அவர் அந்த அமைப்புகளின் எல்லா அடிப்படை கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டார். கிரேக்க தீவுகளுக்கான மதிப்பு கூட்டு வரியில் (விற்பனை வரி) 30 சதவீத தள்ளுபடி, ஓய்வூதிய வயதை 67 ஆக ஆக்குவதற்கு ஒரு மூன்று மாதகால அவகாசம் மற்றும் வறிய ஓய்வூதியதாரர்களுக்கான ஒரு சிறப்பு "பொதுநல மானியத்தை" (solidarity grant) படிப்படியாக குறைப்பதற்கான விதிவிலக்கினை மட்டுமே அதிலிருந்து அவர் கோரியிருந்தார்.   

இக்கடிதம் பைனான்சியல் டைம்ஸில் வெளியானதும், சிப்ராஸ் ஓர் உடன்படிக்கையை எட்ட இருப்பதாகவும், வெகுஜன வாக்கெடுப்பை இரத்து செய்யவிருப்பதாகவும் ஊகங்கள் வெளியாயின. சிப்ராஸின் பகிரங்க உரையைத் தொடர்ந்து, நிதி அமைச்சக கட்டிடத்தில் தொங்கவிடப்பட்டிருந்த "மிரட்டல் மற்றும் சிக்கன நடவடிக்கை வேண்டாம்" என்று கிரேக்கம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு மிகப்பெரிய பதாகையை நீக்குமாறு பாதுகாவலருக்கு உத்தரவிடப்பட்டது.

நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ் எரிச்சலூட்டும் விதத்தில், ஈராக் போர் எதிர்ப்பு முழக்கமான "எனது பெயரில் வேண்டாம்" என்று கூறி, அந்த பதாகைக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதாக ட்விட்டரில் எழுதியதுடன், அது "அமைச்சகத்தின் அனுமதியைக் கோராமலேயே" தொழிற்சங்கவாதிகளால் செய்யப்பட்ட வேலை என்று விவரித்தார்.

அவரது அழுகிப்போன உடன்படிக்கையைப் பாதுகாப்பதே சிப்ராஸிற்கு உள்ள பிரச்சினையாகும். அதில் உள்ளடங்கியிருப்பது என்னவென்றால், ஐரோப்பாவில் முன்னணி ஏகாதிபத்திய சக்தியான ஜேர்மனி, தொழிலாள வர்க்கத்தின் மீது அது என்னவெல்லாம் தாக்குதல்களைக் கோருகிறதோ அவற்றை, அவசியமானால் ஆயுத படைகளைக் கொண்டே கூட திணிப்பதற்குப் போதியளவில் பலமான ஓர் அரசாங்கத்தை நிறுவ, கிரீஸில் ஆட்சி மாற்றத்தினை தவிர வேறு எதையும் அது கோரவில்லை என்பது தான்.

சிப்ராஸ் உரையாற்றுவதற்கு முன்னதாக, சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், ஞாயிறன்று வெகுஜன வாக்கெடுப்பின் முடிவுகளுக்காக ஜேர்மன் காத்திருக்கும் என்றும், "ஒரு ஜேர்மன் ஆணை இல்லாமல்" ஒரு புதிய உடன்படிக்கை "சாத்தியமே இல்லை" என்பதையும் மீண்டுமொருமுறை அறிவித்தார்.

நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிள கூறுகையில், “இதுபோன்ற சூழலில் அவர்களுடன்  பேசுவோமென நீங்கள் எங்களிடம் முழு நேர்மையுடன்எதிர்பார்க்க முடியாது. கிரீஸில் என்ன நடக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது,” என்றார்.

யூரோவிலிருந்து கிரீஸ் வெளியேறுவதன்" அல்லது யூரோ மண்டலத்திலிருந்தே கிரீஸ் வெளியேறுவதன் பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகள் பற்றிய கவலைகள் காரணமாக, அங்கே பேர்லினின் கடுமையான நிலைப்பாடு மீது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே உடன்பாடின்மைகள் உள்ளன. எல்லோரும் இல்லையென்றாலும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் ஜேர்மன் நிலைப்பாடு குறித்து பகிரங்கமாக கண்டனம் தெரிவித்தார்: “ஓர் ஐரோப்பியராக, யூரோ மண்டலம் உடைவதை நான் விரும்பவில்லை, சமரசத்திற்கு சிறிதும் இணங்காத கருத்துக்களையோ, மூர்க்கமான பிளவுகளையோ நான் விரும்பவில்லை,” என்றார்.

ஆனால் பேர்லின் தான் கட்டுப்பாட்டைக் கையில் வைத்துள்ளது.

யூரோ குழுமத்தின் ஓர் கலந்துரையாடலுக்கு அழைப்புவிடுத்த பின்னர், அதன் தலைவர் ஜெரோன் திஜிஸ்செல்ப்லோம் ஒரு கடுமையான சிறிய அறிவிப்பை வெளியிட்டார், நடப்பிலிருக்கும் பிணையெடுப்பில் "நீட்சிக்கு அங்கே எந்த அடித்தளமும் இல்லை" என்றார். அதற்கும் அதிகமாக, “அந்த அமைப்புகளின் பரிந்துரைகளில் மேற்கொண்டு திருத்தம் செய்யுமாறு கிரேக்க அதிகாரிகளிடமிருந்து வரும் பரிந்துரைகளைப்" பொறுத்த வரையில், “… நிலவும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, முக்கிய முடிவு என்னவென்றால், முந்தைய பரிந்துரைகளையும், ஞாயிறன்று நடக்க உள்ள வெகுஜன வாக்கெடுப்பையும், வேண்டாமென வாக்கிடுமாறு கிரேக்க அரசாங்கத்தின் முறையீட்டையும் நிராகரிப்பதாகும், இந்நிலையில் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளுக்கு எந்த அடித்தளமும் இல்லையென நாங்கள் பார்க்கிறோம்,” என்றார்.

நேற்று ரூபேர்ட் முர்டோச்சின் டைம்ஸ் நாளிதழ், “ஐரோப்பாவின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல்வாதிகளில் ஒருவர்" என்று வர்ணித்து, பெயரிட விரும்பாத "மூத்த ஜேர்மன் பழமைவாதி" ஒருவருடனான ஒரு பிரத்தியேகபேட்டியை வெளியிட்டது.

அவர் இப்போதைய சிரிசா அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்க ஒரு திட்டத்தை வரைந்தளித்தார். “அலெக்சிஸ் சிப்ராஸ் மற்றும் யானிஸ் வாரௌஃபாகிஸ் அதிகாரத்தில் இருக்கும் வரையில் கிரீஸிற்கு யூரோ மண்டல புதிய பிணெயெடுப்பு கடன்களில் ஒரு சென்ட் கூட கிடைக்காது, ஏனென்றால் அதுபோன்ற எந்தவொரு உடன்பாட்டையும் ஜேர்மனி தடுக்கும்,” என அந்த அரசியல்வாதி புரூனோ வாட்டர்பீல்டுக்கு தெரிவித்தார். “ஜூலை 5 ஆம் தேதி வாக்கெடுப்பின் முடிவு என்னவாக இருந்தாலும் திரு சிப்ராஸின் இடதுசாரி சிரிசாவை அதிகாரத்திலிருந்து இறக்க ஐரோப்பிய ஒன்றிய முயற்சியை மூடியிருந்த திரையையும் அவர் நீக்கினார்.”

அந்த திட்டத்தைத் தொகுத்தளித்து வாட்டர்பீல்டு எழுதினார், “அந்த மூத்த ஜேர்மன் பழமைவாதி கூறுகையில், அங்கேலா மேர்க்கெலின் ஆளும் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU) மற்றும் அதன் பவேரிய கூட்டாளியான கிறிஸ்துவ சமூக யூனியன் (CSU) ஆகியவை, 'கம்யூனிஸ்டுகள்' என்று வர்ணிக்கப்படும் இருவரும் அதிகாரத்தில் இருக்கும் வரையில் எந்தவொரு முறையீட்டையும் தடுக்குமென அவர் தெரிவித்தார்… "ஆம்" என்பதைப் பெற நாங்கள் அனைத்தையும் செய்வோம். பின்னர் எங்களுக்கு ஒரு புதிய அரசாங்கம் தேவைப்படும், அதன் பின்னர் நாங்கள் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும்,” என்றவர் தெரிவித்தார்.”

அந்த பெயரிடவிரும்பாத அரசியல்வாதி ஐரோப்பிய ஒன்றிய மூலோபாயத்தின் மற்றொரு கூறுபாட்டையும் வெளிப்படுத்தினார். "ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்ட்டின் சூல்ஸ், 'சிரிசா இயக்கத்தை உடைக்க அவர் ஒரு மிதவாதியாக கருதுகின்ற திரு சிப்ராஸையும் உள்ளடக்கிய இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததாக" அவர் தெரிவித்தார்.

புதிய தேர்தல்களை தவிர்க்க சிரிசாவில் உள்ள மிதவாத நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி, ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்புக்கு முன்நிபந்தனையாக ஒரு 'தொழில்வல்லுனர் அரசாங்கத்தை' உருவாக்குவதே நோக்கமாக இருந்தது. 'வேண்டாமென' வாக்குகள் வந்து, சிரிசா தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்பட்சத்தில், 'எல்லாம் முடிந்துவிடும்' மற்றும் கிரீஸ் யூரோவிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும்என்று அந்த ஜேர்மன் பழமைவாதி கூறினார்.”

கிரீஸில் ஆட்சி மாற்றத்திற்கான திட்டங்கள் மற்றும் சிரிசாவில் ஓர் உடைவை ஏற்படுத்துவதை நோக்கிய காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் வேலை ஆகியவை இதற்கு முன்னரே வாரக்கணக்கில் பேசப்பட்டுள்ளன ஐரோப்பிய ஒன்றியம் சார்பான To Potami (ஆறு) கட்சி உள்ளடங்கலாக மிகவும் மத்தியவாத கூட்டணி ஒன்றுக்காக, திரு சிப்ராஸின் கடும்போக்கு அரசாங்கத்தை உலுக்குவது" என்று அதை Daily Telegraph வர்ணித்ததும் அதில் உள்ளடங்கும்.

ஆனால் தற்போது வரையப்பட்டு வருகின்ற திட்டங்களில் தற்போதைய அரசாங்கத்தை மாற்றியமைப்பது என்பதற்கும் அதிகமானவை சம்பந்தப்பட்டுள்ளன. யூரோவிலிருந்து கிரேக்கம் வெளியேறுவது குறித்த விவாதங்களுக்கு இடையே, மக்கள் எதிர்ப்பை ஒடுக்குவதற்கு, ஐயத்திற்கிடமின்றி இராணுவம் உட்பட பாதுகாப்பு படைகளை ஒன்றுதிரட்டுவதற்கான தயாரிப்புகளும் வெகுவாக முன்னெடுக்கப்படுகின்றன., உண்மையில் ஜூன் 15 அன்று ஜேர்மனியின் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் Guenther Oettinger கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியம் கிரீஸின் சமூக கிளர்ச்சியை சமாளிக்கவும் மற்றும் எரிசக்தி வினியோகங்கள் மற்றும் மருந்துகள் இல்லாமல் போவதைச் சமாளிக்கவும் அவசரகதியில் திட்டங்களை வகுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

சிரிசாவின் அரசியல் திவால்நிலை இதைவிட அப்பட்டமாக இருக்க முடியாது, அல்லது அதன் நடவடிக்கைகள் இதை விட அபாயகரமாகவும் இருக்க முடியாது.

மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கை சீரழிவை விலையாக கொடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்க அங்கத்துவத்தைப் பேணுவதற்கு ஓர் உடன்பாட்டை எட்டும் நோக்கில், சிப்ராஸின் கொள்கை தொடர்ச்சியாக முன்னேற்பாடற்ற அனுதாப நடவடிக்கைகளாக இருக்கின்றன.

வெகுஜன வாக்கெடுப்பில் "ஆம்" என்ற வாக்குகள் வென்றால், அது கடந்த ஐந்து மாதகாலத்தின் சிரிசா ஐரோப்பிய ஒன்றியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நிகழ்ச்சிநிரலுக்கு மக்கள் எதிர்ப்பை ஒடுக்குவதற்காக மற்றும் கலைப்பதற்காக செய்த வேலையின் விளைவாகவே இருக்கும். பின்னர் சிப்ராஸால் அது, அடுத்த சுற்று தாக்குதல்களை ஏற்றுகொண்டதற்கான பழியை கிரேக்க மக்கள் மீது சுமத்துவதற்கு பயன்படுத்தப்படும்.

சிக்கன நடவடிக்கைக்கு எதிரான மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான பெருந்திரளான மக்களின் எதிர்ப்பானது, "வேண்டாம்" என்ற வாக்காக விளைந்தால், சிப்ராஸ் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தோற்றப்பாட்டளவில் எல்லா கட்டளைகளையும் ஏற்றுக் கொண்டு, சிக்கன நடவடிக்கைகளின் அவரது சொந்த பட்டியலின் அடிப்படையில், கிரீஸின் கடன்வழங்குனர்களுடனான புதிய விவாதங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பாக அதை அறிவிப்பார்.

கிரீஸில் தொழிலாளர்கள் மத்தியில், முக்கூட்டின் கோரிக்கைகளுக்கு விரோதம் பரந்தளவில் உள்ளது. கிரேக்க முதலாளித்துவம் மற்றும் உயர்மட்ட மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகள் மேலோங்கிய வகையில் ஐரோப்பிய ஒன்றிய சார்பாக மற்றும் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவாக உள்ளன. ஏதேனும் விதத்தில் நல்லதொரு உடன்படிக்கை ஏற்படுவதை விரும்பும் பிரிவுகளும் அங்கே உள்ளன, அவற்றைத்தான் சிரிசா பிரதிநிதித்துவம் செய்கிறது. ஆனால் அவர்களால் ஐரோப்பிய வங்கிகளின் கோரிக்கைகளை தீவிரமாக எதிர்க்க முடியவில்லை ஏனென்றால் அவர்கள் முதலாளித்துவத்தை ஆதரிக்கின்றனர் என்பதுடன் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான ஒன்றுதிரள்வுக்கு எதிராக உள்ளனர்.

ஞாயிறுக்கிழமை வெகுஜன வாக்கெடுப்பில் தொழிலாளர்கள் "வேண்டாம்" என்று வாக்களித்தாலும், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு சிரிசாவிடமிருந்து அரசியல்ரீதியில் உடைத்துக் கொள்வதும் மற்றும் ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றுதிரள்வதும் தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமாகும். அதுபோன்றவொரு இயக்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் வங்கிகள் மற்றும் பெரும் தொழில்துறைகளைத் தேசியமயமாக்குவதன் மூலமாக, கிரீஸிற்குள் ஐரோப்பிய ஒன்றிய கொள்கைக்கான ஆதரவின் சமூக அடித்தளத்தைத் தோற்கடிக்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய சக்திகளிடமிருந்து அது சந்திக்கக்கூடிய எதிர்ப்பைத் தோற்கடிக்க, முதலாளித்துவவாதிகள் மற்றும் வங்கிகள் மற்றும் அவர்களின் எல்லா அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்திற்காக மற்றும் ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகளை ஸ்தாபிக்க கிரேக்க தொழிலாளர்கள், ஐரோப்பா முழுவதிலும் உள்ள அவர்களின் சகோதர மற்றும் சகோதரிகளுக்கு அழைப்புவிட வேண்டும்.