சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Victimised Sri Lankan plantation workers speak to the WSWS

பழிவாங்கப்பட்ட இலங்கை தோட்டத்தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினர்

By our correspondents 
3 July 2015

Use this version to printSend feedback

இலங்கை மத்திய மலையக மாவட்டமான மஸ்கேலியாவின் கிளனியூஜி தோட்டத்தில் வேலைநிறுத்தம் செய்யப்பட்ட வீ. வில்பிரட், என். நெஸ்துரியன், எஃப். பிராங்கிளின் ஆகிய மூன்று தொழிலாளர்களும் இந்த வாரம் உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடினர். வேலை நிறுத்தம் செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்களும், கிளினியூஜி முகமைத்துவத்தால் வேலை இடைநீக்கம் செய்யப்பட்ட எனைய நான்கு தொழிலாளர்களும் பழிவாங்கப்பட்டதற்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி ஒரு பாதுகாப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது.

http://www.wsws.org/asset/2bc59fda-450a-42fe-899f-7ae707bca6cE/SEP+members+campaigning+at+Deeside+estate.jpg?rendition=image480
சோ..கட்சி உறுப்பினர்கள் பிரச்சாரத்தில்

மேலதிக கொடுப்பனவு ஏதும் இன்றி ஒரு தொழிலாளி நாள் ஒன்றுக்கு தேயிலை கொழுந்து பறிக்கும் இலக்கை 16 கிலோவில் இருந்து 18 கிலோ வரை பெப்ரவரியில் அதிகரித்தமைக்காக டிசைட் தொழிலாளர்கள் மேற்கொண்ட 3 நாள் வேலைநிறுத்தத்தில் இவர்கள் ஆற்றிய முக்கிய பாத்திரத்தினாலேயே இவர்களுக்கெதிரான பழிவாங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தம், அதிகரிக்கப்பட்ட உற்பத்தி இலக்கை கைவிடுவதற்கு நிர்வாகத்தை நிர்பந்தித்த அதேவேளை, அது தொழிலாளர்களை மிரட்ட ஆரம்பித்தது. தோட்ட நிர்வாகம், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதேச தலைவரை இந்த தொழிலாளர்கள் தாக்கியதாக கூறி போலிஸ் நிலையத்தில் போலி முறைப்பாடு செய்யுமாறு தூண்டிவிட்டனர். பின்னர் தனது சொந்தப் போலி உள்ளக விசாரணையை நடத்திய நிர்வாகம், 7 தொழிலாளர்களுக்கு தண்டனை வழங்கியது. இந்த போலி குற்றச்சாட்டுக்களை விலக்கிக் கொள்வதற்கான தனது விருப்பத்தை மேற்பார்வையாளர் வெளிப்படுத்தியபோதும் நிர்வாகம் அதை எதிர்த்ததோடு நவம்பர் 8 அன்று ஒரு நீதிபதி விசாரணையை நடாத்த உள்ளது.

http://www.wsws.org/asset/73a8cb89-4544-43fb-9f90-ea9ca7ef594J/G.+Wilfred.jpg?rendition=image240
ஜி.வில்பிரட்

சோ..கக்கு ஆதரவான 35 வயதான ஜி.வில்பிரட் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவர். அவர் தோட்டத்தில் 15 வருடங்களாக வேலை செய்கின்றார். அவரது பெற்றோர்களும் தோட்ட தொழிலாளர்களாக இருந்தபோதும், தற்போது ஓய்வு பெற்றுவிட்டனர். “டிசைட் தோட்டத்திலான எமது போராட்டம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்கும் ஒரு படிப்பினை ஆகும். நான் உட்பட 7 தொழிலாளர்கள் வேலைச்சுமை அதிகரிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் முன்னியில் நின்றமைக்காக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டுள்ளோம். இது பெருந்தோட்டக் கம்பனி மற்றும் தொழிற்சங்கமும் சேர்ந்து திட்டமிட்ட தாக்குதலாகும்”.

.தொ. உள்ளுர் தலைவர்கள் இந்த தாக்குதலில் நேரடியாக சம்மந்தப்பட்டுள்ளனர். அண்மையில் தொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் பெருந்தோட்ட கம்பனிக்கு எந்த ஒரு சம்பள அதிகரிப்பையும் நிராகரித்து விட்டதாக வில்பிரட் விளக்கினார். ”பெருந்தோட்ட உரிமையாளரின் சங்கத்தின் தலைவரான ராஜதுரை, கம்பனிகள் தமது இலாபத்தை தக்கவைத்துக் கொள்வதன் பெயரில் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 23 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். எனது போராட்டம் இத்திட்டத்துக்கு நேர் எதிரானது அதனாலேயே நாம் பழிவாங்கப்பட்டுள்ளோம். இது முதலாளிமார்களால் ஏனைய தொழிலாளர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையுமாகும். தோட்டத் தொழிலாளர்களும் ஏனைய தொழிலாளர்களும் தமது உரிமையை பாதுகாக்க முன்வர வேண்டும் என்பதையே இது அர்த்தப்படுத்துகின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபக் தொழிலாளர்களின் உரிமையை தாக்குவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை பயன்படுத்திக் கொண்டார் என வில்பிரட் சுட்டிக்காட்டினார். “தேர்தல் பிரச்சாரத்தின் போது மைத்திரிபால சிறிசேன பல வாக்குறுதிகளைக் கொடுத்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் எதுவும் செய்யவில்லைஎன அவர் மேலும் தெரிவித்தார்.

தொழிலாள வர்க்கத்துக்கு அரசியல் முன்னோக்கை வழங்குவதன் காரனமாகத்தான் சோ.. வேலைத்திட்டத்துடன் உடன்படுவதாக வில்பிரட் கூறினார். தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து தமது உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும் என கட்சி தொழிலாளர்களுக்கு விடுக்கும் அழைப்பை அவர் வலியுறுத்தினார்.

ஒரு சோசலிச அரசாங்கத்தின் கீழேயே தொழிலாளர்கள் கெளரவமான ஒரு வாழ்க்கையை பெற்றுக் கொள்ள முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்என்றும் அவர் கூறினார்.

http://www.wsws.org/asset/890dbcd1-f651-43a0-8698-7a0c01ff7cfL/N.+Nesturiyan.jpg?rendition=image240
என்.நெஸ்தூரியன்

என்.நெஸ்தூரியன் 24, ஐந்து வருடங்களாக தோட்டத்தில் வேலை செய்கின்றார். வேலை நிறுத்தம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டது எனக் கூறினார். அதை நிருபிக்க தன்னிடம் போதுமான ஆதாரம் உள்ளதாகக் கூறினார். போலிக் கூற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் என்னை வேலை நிறுத்தம் செய்தார்கள். தோட்டக்கம்பனியின் உள்ளக விசாரனையின் போது இந்தக் குற்றச்சாட்டை அம்பலப்படுத்துவதற்கு எமது சக தொழிலாளர்கள் பலர் உத்வேகத்துடன் முன்வந்தனர். இது கம்பனியின் திட்டமிடப்பட்ட பழிவாங்கல் என்பதால் அந்த சாட்சிகளை அலட்சியம் செய்தனர்என அவர் கூறினர்.

நாங்கள் தாங்க முடியாத வாழ்க்கை நிலமையை எதிர் கொண்டதனாலேயே வேலை நிறுத்தத்திற்கு சென்றோம். எங்கள் ஊதியம் சாப்பாட்டிற்கே போதாது. அனேகமான தொழிலாளர்களுக்கு மலசலகூட வசதி, தண்ணீர் வசதி கூட கிடையாது. தொழிலாளர்களுக்கு போதுமான இருப்பிடம் இல்லாததால் ஒரு வீட்டில் 2 அல்லது 3 குடும்பங்கள் வாழ்கின்றன. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடவில்லை மாறாக நிர்வாகத்துடன் ஒத்துழைக்கின்றன”.

http://www.wsws.org/asset/2a1002bc-20b6-4a13-bdfc-b56431931b6F/F.+Franklin.jpg?rendition=image240
எஃப். பிராங்ளின்

27 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான எஃப். பிராங்ளின், 5 வருடங்களாக தோட்டத்தில் வேலை செய்கின்றார். “நாங்கள் தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கமலேயே வேலை நிறுத்தத்திற்குச் சென்றோம். தொழிற்சங்கங்கள் போலி வாக்குறுதிகளை கொடுத்து உறுப்பினர்களை இணைத்துக் கொண்டபோதும் பின்னர் அவை தொழிலாளர்களுக்கு எதிராக தோட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து கொண்டன. எமது போராட்டத்தினூடாக நான் தொழிற்சங்கம் பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். எமது தோட்டத்தில் .தோ. தலைமைத்துவம் தொழிலாளர்களுக்கு எதிராக வெளிப்படையாகச் செயற்படுகிறது.

தமது தொழிற்சங்கத்தில் இணைந்து கொண்டால் எமது தொழிலை மீண்டும் பெறுவதற்கு ஒழுங்குகள் செய்வதாக .தோ. தலைவர்கள் எம்மிடம் கூறினர். எமது போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக ஏனைய சங்கங்கள் கூறிக்கொண்டன. ஆனால் அவர்கள் எம்மை ஏமாற்றி விட்டார்கள்.

அனைத்து சோடிக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களையும் வாபஸ் பெறும்படியும், பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவும் முன்னெடுக்கப்படும் பிரச்சாரத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அனைத்து தொழிலாளர்களுக்கும் பிராங்கிளின் அழைப்பு விடுத்தார்.

தோட்டத் தொழிலாளரை பாதுகாப்பதற்காக ஞாயிற்றுக் கிழமை சோசலிச சமத்துவக் கட்சி ஒரு பொதுக் கூட்டத்தினை நடத்துகின்றது. இந்தக் கூட்டம் சாமிமலை தினேஸ் விழா மண்டபத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெறும்.