சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

As EU Denounces No Vote, Tsipras Moves to the Right

வேண்டாமென்ற வாக்களிப்பை ஐரோப்பிய ஒன்றியம் கண்டிக்கையில், சிப்ராஸ் வலதிற்கு நகர்கிறார்

Chris Marsden
7 July 2015

Use this version to printSend feedback

ஐரோப்பிய ஒன்றியத்தால் கோரப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மீது "வேண்டாமென்று" அளிக்கப்பட்ட பிரமாண்டமான வாக்குகளுக்கு, கிரீஸில் சிரிசா தலைமையிலான அரசாங்கமும் மற்றும் ஐரோப்பிய சக்திகளும் காட்டும் விடையிறுப்பு, தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள அடிப்படை அரசியல் பிரச்சினைகளை முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளது.   

ஐரோப்பிய வங்கிகளின் கொள்கையை பாரியளவிலான மக்கள் மறுத்தளித்திருப்பது, ஐரோப்பாவில் உள்ள ஆளும் உயரடுக்குகளையும் மற்றும் சிரிசாவையுமே உள்ளடக்கிய கிரீஸில் உள்ள அவர்களது கூட்டாளிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பொருளாதார மிரட்டல், ஊடக பிரச்சாரங்கள் மற்றும் இராணுவத்தின் பிரிவுகளிடமிருந்து வந்த அச்சுறுத்தல்கள் உட்பட ஒரு சளைக்காத அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு முன்னால், கிரேக்க தொழிலாளர்களும் மற்றும் இளைஞர்களும் வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதலுக்கு மிகப்பெரியளவில் அவர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பிரதான ஐரோப்பிய சக்திகளின் தலைநகரங்களிலும் மற்றும் அமெரிக்காவிலும், இதற்கு எவ்வாறு விடையிறுப்பது என்பதன் மீது ஒரு விவாதம் நடந்து வருகிறது. அதிகளவிலான கண்டனங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் இறுதி எச்சரிக்கைகளைக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்புக்கு தனது பிரதிபலிப்பை காட்டியதன் மூலம், அதன் கோரிக்கைகள் கிரேக்க தொழிலாள வர்க்கத்தால் நிராகரிக்கப்பட்டதன் மீது வெறுப்புகளைக் குவிப்பதில் ஜேர்மனி தலைமை வகிக்கின்றது.   

ஜேர்மன் சமூக ஜனநாயகவாதியும் துணை சான்சிலருமான சிக்மார் காப்ரியேல் கூறுகையில், வெகுஜன வாக்கெடுப்பை நடத்தியதன் மூலம், “ஐரோப்பாவும் கிரீஸூம் ஒரு சமரசத்தை நோக்கி செல்வதற்குரிய கடைசி இணைப்பு பாதைகளையும்" சிரிசா "உடைத்துவிட்டதாக" தெரிவித்தார். கிரீஸ் யூரோ மண்டலத்தில் இருக்க விரும்பினால், “அது இதுவரையில் முன்வைக்கப்பட்டவை எல்லாவற்றிற்கும் மேலதிகமான" முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டியிருக்குமென அவர் அறிவித்தார்.

திங்கட்கிழமைக்கு பின்னர், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் உடன் இணைந்து ஒரு கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தினார், அதில் அவர் வலியுறுத்துகையில், “இப்போது விடயங்கள் இருக்கும் நிலையில், ஐரோப்பிய ஸ்திரப்பாட்டுக்குரிய நடைமுறையின் (European Stability Mechanism) கீழ் ஒரு புதிய திட்டம் குறித்து பேசுவதற்கு அங்கே எந்த அடித்தளமும் இல்லை,” என்றார். கிரீஸிற்கான முந்தைய சலுகைகள் "தாராளத்தன்மையுடன்" இருந்தன என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சிலர், கிரீஸை யூரோ மண்டலத்திற்குள் வைத்திருக்கவும், அதன் கடன்களைத் திரும்ப செலுத்த அதை அனுமதிப்பதற்கும் மற்றும் கோபமாக உள்ள கிரேக்க மக்களுக்கு ஏதோவொன்றை சிரிசா வெற்றியாக காட்டிக்கொள்ள கிரீஸின் கடன் சுமையில் சிறிய மாற்றங்களை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலைப்பாட்டிற்கு இணங்கிய எந்தவொரு பரிந்துரையிலும், ஞாயிறன்று வெகுஜன வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்ட நடவடிக்கைகளின் 98 சதவீதம் உள்ளடங்கி இருக்கும்.

கிரேக்க வாக்குகள், ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் எதை ஊக்குவிக்கும் என்பதே ஆளும் வர்க்கத்தின் கவலைகளில் பிரதானமானதாக உள்ளது. திங்களன்று பிரசுரிக்கப்பட்ட ஒரு தலையங்கத்தில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிடுகையில், வாக்குகளுக்கு விடையிறுப்பதில் மேர்க்கெல் "தயக்கம்" காட்டினாலும், இறுதியில் சில விட்டுக்கொடுப்புகளை வழங்கக்கூடுமென கவலை வெளியிட்டது. இவ்வாறு நடந்தால், “ஐரோப்பாவில் உள்ள ஏனைய கடன்பெறும் நாடுகளும் வளர்ச்சி-சார்ந்த சீர்திருத்தங்களை தடுக்க அரசியல் அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடும் கடன்வழங்குனர்கள் கோரும் சீர்திருத்தங்களை நிராகரிக்க வாக்களித்தாலும், அது எவ்வகையிலும் கடன்வழங்குனர்கள் உங்களைக் கௌரவிப்பார்கள் என்பதே சேதியாக மாறிவிடும்,” என்று ஜேர்னல் எச்சரித்தது.

ஜேர்னல் தொடர்ந்து குறிப்பிடுகையில், “இந்த அரசியல் தொடர்கதை, ஒரு கிரேக்க நிதியியல் நெருக்கடி அல்லது செலாவணி அணியிலிருந்து அல்லது கிரேக்கம் வெளியேறுவதில் இருந்தே கூட ஏற்படக்கூடிய உடனடி விளைவுகளை விட யூரோ மண்டல ஒருமைப்பாட்டுக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்,” என்று எழுதியது.   

வோல் ஸ்ட்ரீட் இன் இந்த ஊதுகுழல் எதைக் குறித்து அஞ்சுகிறது? பெருந்திரளான மக்களின் ஜனநாயக விருப்பத்திற்கு அளிக்கப்படும் எந்தவொரு விட்டுக்கொடுப்பும், ஐரோப்பாவெங்கிலும் மற்றும் அத்துடன் அமெரிக்காவிற்குள்ளும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் என்பதற்காக அஞ்சுகிறது.

கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் இடதுநோக்கிய போக்கிற்கு ஒரு தெளிவான அறிகுறியாக உள்ள கிரீஸிற்குள் பெருந்திரளான மக்கள் எதிர்ப்பின் இந்த வெளிப்பாட்டுக்கு, சிரிசா அதன் பங்கிற்கு, கூர்மையாக வலதிற்கு நகர்ந்து வருவதன் மூலமாக விடையிறுத்துள்ளது. அது கிரேக்க முதலாளித்துவத்தின் ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் மிகப்பெரும்பான்மையாக மதிப்பிழந்துபோன ஐரோப்பிய அமைப்புகளின் கரங்களுக்குள்ளேயே விழுந்துள்ளது.

ஞாயிறன்று வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்த மில்லியன் கணக்கானவர்களுக்கு அளித்த அவரது உரையில் பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் அறிவித்தார், “இது ஐரோப்பாவுடன் முறித்துக் கொள்வதற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பல்ல, மாறாக ஒரு நிலைத்திருக்கக்கூடிய உடன்பாட்டை", அதாவது, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய "முக்கூட்டுக்கு" ஏற்புடைய ஓர் உடன்படிக்கையை, "எட்டுவதில் நமது பேரம்பேசம் பலத்தைத் தூக்கிநிறுத்தும் ஒரு தீர்ப்பாகும்,” என்றார்.

யூரோ குழு நிதி மந்திரிமார்களின் இன்றைய கூட்டத்தில் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதன் மீதான விவாதங்களுக்கு உதவும் வகையில், நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ் இன் இராஜினாமாவைப் பெற்றதே சிப்ராஸால் நகர்த்தப்பட்ட நேற்றைய முதல் நகர்வாக இருந்தது. இங்கிலாந்தில் படித்த பல சிரிசா பிரபலங்களில் ஒருவரும், பிரிட்டனின் பழமைவாத சான்சிலர் ஜோர்ஜ் ஓஸ்போர்ன் படித்த செயிண்ட் பால்ஸ் பொது பள்ளியில் முதலில் படித்து, பின்னர் ஆக்ஸ்போர்டில் படித்தவருமான ஏக்குளிட் சக்காலோட்டோஸ் ஐ கொண்டு வாரௌஃபாகிஸ் பிரதியீடு செய்யப்பட்டார். “அதிகளவில் விட்டுக்கொடுப்புக்களை பேரம்பேசும் குழுவை கொண்டு" வரும் பொருட்டு, ஒரு பரந்த மந்திரிசபை மாற்றம் வரவிருப்பதாக நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது. கிரேக்க தலைவர் Prokopis Pavlopoulos இன் தலைமையில், சிப்ராஸ் பின்னர் சிரிசாவின் கூட்டணி பங்காளிகள், வலதுசாரி சுதந்திர கிரேக்கர்கள் (Anel) மற்றும் மூன்று பிரதான சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான கட்சிகளான புதிய ஜனநாயகம், PASOK மற்றும் To Potami ஆகியவற்றின் தலைவர்களுடன் ஆறு மணிநேர பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த கூட்டம் Pavlopoulos இன் அலுவலத்திலிருந்து வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையை உருவாக்கியது. கடன்களை நிராகரிக்க வேண்டுமென்ற முந்தைய அழைப்புகளை அந்த அறிக்கை கைவிட்டிருந்ததுடன், "கிரேக்க பொது கடனைப் பேணும் தகைமை மீதான பிரச்சினையைக் கையாள்வதற்கு போதியளவிலான விவாதத்தைத் தொடங்குவதற்கு பொறுப்பேற்குமாறு மட்டுமே [ஐரோப்பிய ஒன்றியத்திடம்] அது மன்றாடியிருந்தது.

தேசிய ஐக்கியஅதாவது கிரேக்க முதலாளித்துவ கட்சிகளின் ஐக்கியஅரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு அந்த கூட்டம் அறிகுறி காட்டியதாக ஊகங்கள் வெளியாயின.

அந்த வெகுஜன வாக்கெடுப்புக்கு முன்னதான உலக சோசலிச வலைத் தளம் விளங்கப்படுத்தியதைப் போல, சிரிசா அந்த வாக்கெடுப்பை சிக்கன நடவடிக்கையை எதிர்ப்பதற்காக அல்ல, மாறாக கிரேக்க மற்றும் சர்வதேச ஆளும் உயரடுக்குகளுடன் தொடர்ந்துவரும் அதன் நயவஞ்சக கூட்டை நியாயப்படுத்திக் கொள்வதற்குரிய ஒரு எரிச்சலூட்டும் அரசியல் தந்திரமாக அழைத்தது. “வேண்டும்" என்ற வாக்குகள் பெரும்பான்மையாக வந்திருந்தால், அந்த அரசாங்கம் பதவியிலிருந்து இறங்கி, ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான கட்சிகள் உள்ளடங்கிய ஏதேனும் வடிவத்திலான கூட்டணிக்கு வழிவிட்டிருக்கும். இருப்பினும் வாக்களித்தவர்களில் அண்மித்தளவில் மூன்றில் இரண்டு பங்கினர்கள் இப்போது "வேண்டாம்" என்று வாக்களித்துள்ள நிலையிலும், சிரிசா இன்றியமையாவிதத்தில் அதே போக்கைப் பின்பற்றி வருகிறது.

கடந்த 24 மணிநேரங்கள் நல்லதொரு எச்சரிக்கையாகும். ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரையில், சிக்கன நடவடிக்கை தாக்குதலில் அங்கே எந்த விட்டுக்கொடுப்பும் இருக்காது. ஒன்று, அடுத்த சுற்று தாக்குதல்களைத் திணிக்க சிரிசாவின் திட்டத்தை சட்டபூர்வமாக்குதவற்குரிய சில அடையாள நடவடிக்கைகளுக்கு வேண்டுமானால் யூரோ மண்டல தலைவர்கள் ஒப்புக்கொள்வார்கள் அல்லது யூரோவிலிருந்து கிரீஸ் வெளியேற நிர்பந்திக்கப்படும் அல்லது கிரேக்க முதலாளித்துவ வர்க்கத்தின் சார்பாக பெரும்பாலும் ஏதேனும் அதே மாதிரியான நிகழ்ச்சிநிரல் நடைமுறைப்படுத்தப்படும்.

ஆனால் எந்தவொரு சம்பவத்திலும், சமூக அதிருப்தியை ஒடுக்க ஆளும் வர்க்கம் பொலிஸ் மற்றும் ஆயுத படைகளின் மீது முன்பினும் அதிக பலத்துடன் சார்ந்திருக்க நிர்பந்திக்கப்படும். “பரந்துபட்ட மற்றும் நீடித்த மக்கள் ஒழுங்கின்மை" போன்ற சம்பவத்தில் ஆயிரக் கணக்கான துருப்புகள் மற்றும் கலகம் ஒடுக்கும் பொலிஸை அது நிலைநிறுத்தும். அதுபோன்றவொரு திட்டமான நெமிசிஸ் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்ட திட்டமே, ஜூன் 26 அன்று, சிப்ராஸ் வெகுஜன வாக்கெடுப்பை அறிவிப்பதற்கு வெறும் சில மணிநேரங்களுக்கு முன்னர், சிரிசா தலைமையிலான அரசாங்கத்தால் விவாதிக்கப்பட்டது.

கிரேக்கம் தளபதிகளின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருந்ததில் இருந்து, வெறும் நான்கு தசாப்தங்கள் தான் ஆகியுள்ளன. இப்போது, ஒரு பொதுவான பொருளாதார மற்றும் சமூக உடைவுக்கு இடையே, கிரீஸைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள ஒருசில டஜன் கணக்கான குடும்பங்களான செல்வந்த அடுக்குகள், “ஒழுங்கை மீட்டமைப்பதற்காக" ஆயுதப் படைகளை அழைக்கும் சாத்தியக்கூறு மிகவும் யதார்த்தமாகி உள்ளது.

முக்கூட்டின்" கட்டளைகளை திணிக்க முயலும் கிரீஸிற்குள்ளேயே உள்ள அவர்கள் அனைவருக்கும் எதிராக கிரேக்க ஆளும் வர்க்கம், அதன் ஊடகங்கள், பொலிஸ் மற்றும் ஆயுதப் படைகள், உயர்வகுப்பு மத்தியத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை படைத்த பிரிவுகளைச் சார்ந்திருக்கும் ஒரு முதலாளித்துவ கட்சியான சிரிசா உட்பட அதன் எல்ல கட்சிகளுக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதிலேயே அனைத்தும் சார்ந்திருக்கிறது.

வங்கிகள் மற்றும் பிரதான தொழில்துறைகளை தேசியமயமாக்குவதன் மூலமாக முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வ வளம் பறிமுதல் செய்யப்பட்டு தொழிலாளர் அரசாங்கம் ஒன்றின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவேண்டும்.

இதுவொரு சர்வதேச போராட்டமாகும். ஐரோப்பாவில் உள்ள தொழிலாள வர்க்கம் அதன் கிரேக்க சகோதர மற்றும் சகோதரிகளுக்கு உதவ முன்வர வேண்டும். கிரேக்க தொழிலாளர்கள் மீது இன்று என்ன நடத்தப்படுகிறதோ அதேதான் நாளை ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலியில் உள்ள தொழிலாளர்கள் மீது நடத்தப்படும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதற்கு சேவை செய்கின்ற வங்கிகளுக்கு எதிராக, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச அளவிலான எதிர்தாக்குதலே, மூலதனத்தின் இந்த சர்வதேச தாக்குதலுக்கான ஒரே பதிலாகும்.