சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Mass demonstrations in Greece follow vote against EU austerity

கிரீசில் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான வாக்களிப்பின் தொடர்ச்சியாக பாரிய ஆர்ப்பாட்டங்கள்

By Robert Stevens and Christoph Dreier
6 July 2015

Use this version to printSend feedback

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை ஆலோசனைகள் திட்டவட்டமாக  நிராகரிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, ஞாயிறன்று மாலை ஏதேன்ஸ் சிண்டாக்மா சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர்  கூடினர். வாக்கெடுப்பில் 61 சதவீதத்திற்கும் அதிகமானோர்வேண்டாம்என்று வாக்களித்திருந்தனர்.


ஞாயிறன்று சிண்டாக்மா சதுக்க ஆர்ப்பாட்டத்தில் ஒரு பிரிவினர்

வாக்கெடுப்புக்கு முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று, இங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோர், வாக்கெடுப்பில்வேண்டாம்” (Oxi) என்று வாக்களிக்கவிருப்பதாக அறிவித்திருந்தனர்.


ஞாயிறன்று சிண்டாக்மா சதுக்கத்தில் கொண்டாட்டம்

ஆலோசனைகளை மூவரில் இருவர் என்ற விகிதத்தில் திட்டவட்டமாக நிராகரித்த இந்தவேண்டாம்வாக்குகளின் வெற்றியில், அமைதிக்காலங்களில் ஐரோப்பிய மக்கட்பிரிவு ஒன்றின் மீது இதுவரை நடத்தப்பட்டிருக்கக் கூடியவற்றிலேயே மிகவும் மோசமான சிக்கன நடவடிக்கைகளில் சிலவற்றின் பாதிப்புக்கு முகம்கொடுத்திருக்கக் கூடியவர்களான இளைஞர்கள், அதிமுக்கிய பங்களிப்பாளர்களாய் இருந்தனர். ஐந்து ஆண்டுகள் தாண்டிய சிக்கன நடவடிக்கைகளுக்கு பின்னரும், கிரீஸின் இளைஞர்களில் 50 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்றி, எந்த எதிர்கால நம்பிக்கையுமற்று இருக்கின்றனர்.

வேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்!” [“Oxi!, Oxi! Oxi!”] என்ற முழக்கங்கள் ஞாயிறன்று இரவு ஏதென்ஸ் எங்கும் ஒலித்தன. அதினா என்ற ஏதென்ஸின் 20 வயது  மாணவி நாடாளுமன்றத்திற்கு இட்டுச்செல்லும் படிக்கட்டுகளில் அமர்ந்தபடி கூறினார், “இதுவே நாம் பெறத்தக்க மிகச்சிறந்த முடிவு என்று நினைக்கிறேன். இப்போது மற்ற நாடுகளும் கிரேக்க மக்களை பார்த்து அவர்களைப் போலவே இதற்கு மேலும் இதனை ஏற்க முடியாதுஎன்று கூற முடியும்.”


அதினா, சேய்சன், அஃப்ரோடிற்றி, பிரான்செய்ஸ்கா (இடமிருந்து)

அதினா அவரது பள்ளி நண்பர்கள் மூவர் சூழ அமர்ந்திருந்தார். இளைஞர்களின் அவலமான நிலையை விவரித்த அவர் கூறினார், “மாணவர்களாக எங்களுக்கு மிகவும் கடினமான நிலை இருக்கிறது. எந்நேரமும் வேலை பார்த்தாக வேண்டியிருக்கிறது.” அவரது தோழி அஃப்ரோதிதி குறுக்கிட்டு, “எங்களுக்கு மணி நேரத்துக்கு நான்கு யூரோக்கள் கொடுக்கிறார்கள்!” என்றார்.

அதினா மேலும் தொடர்ந்தார், “இப்போது எங்களுக்கு 20 வயதாகிறது. நாங்கள் பெற்றோருடன் வசிக்கிறோம், அவர்களிடம் சுத்தமாக பணம் என்பதே இல்லை. அவர்கள் வாழ முடியவில்லை, பிழைக்க முடியவில்லை. அந்த நேரத்தில் தான் இது நடந்திருக்கிறது. தெளிவான முடிவு. 60 சதவீதம். வேண்டாம்!”

கண்டம் முழுவதுமே சிக்கன நடவடிக்கைகள் தானே ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையாக இருக்கிறது என்பது குறித்து என்ன நினைக்கிறீர்களென்று கேட்டபோது அஃப்ரோடிற்றி கூறினார், “இந்த நிலைமையை அத்தனை நாடுகளுக்கும் கொண்டு வருபவர்கள் யாரோ, அவர்கள் தொகை செலுத்த வேண்டிய நேரமிது. பணக்கார சிறுபான்மையினருக்கு நாங்கள் உதவ முடியாது. அவர்கள் சிறுபான்மையினர். நாங்கள் தான் பெரும்பான்மையினர்.”

சிக்கன நடவடிக்கைகள் நிராகரிக்கப்பட்டதை கிரேக்க இளைஞர்கள் மட்டும் கொண்டாடவில்லை. பாலென்சியா என்ற ஸ்பெயினின் வடக்கு நகரத்தைச் சேர்ந்த டேவிட் மற்றும் இன்ஸ் இருவரும், கிரேக்க மக்களுடன் தாங்கள் ஒன்றுபட்டு நிற்பதை வெளிப்படுத்த இந்த சதுக்கத்திற்கு வந்திருப்பதாக தெரிவித்தனர். இவர்கள் இருவரும் கல்விப் பரிமாற்ற திட்டத்தில் ஏதென்ஸில் கட்டிடக் கலை படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றிரவான வாக்கு கிரீசுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கண்டத்திற்குமே மிக முக்கியமானதாகும்என்று டேவிட் நம்மிடம் கூறினார். “ஸ்பெயினிலும் எங்களுக்கு ஏறக்குறைய இதேபோன்றதொரு நிலையே உள்ளதுஎன்று இன்ஸ் மேலும் கூறினார். இதே பரிமாற்றத் திட்டத்தின் கீழ் பாரிஸில் இருந்து வந்து படிக்கும் இவர்களது தோழி அலெக்சியா கூறுகையில், “அரசாங்கமும் இந்த சமூகத்தின் மிக வசதிபடைத்த ஒரு சதவீதத்தினரும் செய்கின்ற தவறுகளுக்கு நாங்கள் விலை கொடுக்க வேண்டியதாய் இருக்கிறது”. பிரான்சில் அதிகரித்த அளவிலான சிக்கன நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

பொதுவாக கொண்டாட்ட மனோநிலை இருந்தாலும், சிலர் வருங்காலம் குறித்த கவலைகளையும் வெளிப்படுத்தினர். “நான்வேண்டாம்என்று வாக்களித்திருந்தாலும் கூட இச்சமயம் கொண்டாட்ட மனோநிலையில் இல்லை, ஏனென்றால் இந்த முடிவின் ஆபத்துகளை நான் அறிவேன்என்று ஒரு இளைஞர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார்.

கிரீசின் மில்லியன்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் உலக நிதிப் பிரபுத்துவத்தின் தாக்குதலுக்கு தாங்கள் கொண்டிருக்கும் குரோதத்தை தெளிவாக்கியிருக்கின்றனர். ”வேண்டாம்வாக்குகளில் பொதிந்திருக்கக் கூடிய தொழிலாள வர்க்க எதிர்ப்பு என்பது அரசியல்ரீதியாக அரும்பு நிலையிலேயே இருக்கிறது என்று கூற வேண்டும், ஏனென்றால் வாக்காளர்களில் பலரும் சிரிசா அரசாங்கத்தின் மீது பிரமை கொண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றனர். என்றாலும், இதே வகையான வெட்டுகளை சற்று தாமதமான கால அட்டவணையுடன் அமல்படுத்துவதன் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு சிரிசா செய்துவரக் கூடிய முயற்சிகளுக்கும்கூடாதுஎன்ற மறைமுக கருத்துக்கணிப்பாகவும் இந்த வாக்குகள் இருக்கின்றன.

வேண்டாம்வாக்குகள் மிகத் திட்டவட்டமாய் அமைந்திருந்த Evia தீவில் இருந்தான ஒரு படம் கார்டியனில் வெளியிடப்பட்டிருந்தது. நீண்டநாட்களாய் வேலைவாய்ப்பின்றி இருக்கும் தொழிலாளர்களில் ஒருவரும் இரண்டு பிள்ளைகளின் தாயுமான Athina Vlahogiorgou என்ற ஒரு பெண்மணியின் கருத்துக்களை அது மேற்கோளிட்டிருந்தது. அவர் கூறியிருந்தார், “கடந்த ஐந்து வருடங்களின் பின், எங்களுக்கு இழைக்கப்பட்டிருப்பதை உதாசீனம் செய்ய விரும்பும் எவருக்கும் தலையில் கோளாறு ஏதேனும் இருக்க வேண்டும். இது Drachma அல்லது யூரோ குறித்த விடயமல்ல, இது ஒரு வர்க்கப் பிரச்சினையாகும்.”

இந்த மனோநிலைகள் இந்த வாரம் முழுவதும் அதிகரித்துச் செல்லும் உத்வேகத்துடன் எதிரொலிப்பதை ஏதென்ஸில் உள்ள உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் குழு கண்டது.

கிரீசில் சிக்கன நடவடிக்கைகள் திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்ட செய்தி தெளிவானதும், ஐரோப்பிய நிதிப் பிரபுத்துவ பிரதிநிதிகளால் முடிவு குறித்த தங்களது அதிருப்தியையும் குரோதத்தையும் மறைக்க முடியவில்லை.

யூரோகுழுமத் தலைவரான Jeroen Dijsselbloem தனது விஷமத்தனத்தை மறைக்க முடியவில்லை. அவர் அறிவித்தார், “இந்த முடிவு கிரீசின் வருங்காலத்திற்கு மிகவும் வருந்தத்தக்கதாகும்....” யூரோகுழுமம் கோரிய நடவடிக்கைகளை கிரேக்க மக்கள் மறுதலித்திருப்பதை உதாசீனம் செய்து அவர் கூறினார், “கிரேக்க பொருளாதாரம் மீட்சியடைய கடினமான நடவடிக்கைகளும் சீர்திருத்தங்களும் தவிர்க்கமுடியாதவை ஆகும். இப்போது நாம் கிரேக்க அதிகாரிகளின் முன்முயற்சிகளுக்காய் காத்திருப்போம்.”

ஜேர்மனியின் பொருளாதாரத் துறை அமைச்சரும், சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான Sigmar Gabriel இந்த கருத்துக்கணிப்பு முடிவுயூரோ மண்டலத்தின் விதிகளை நிராகரிப்பதாகஇருக்கிறது என்றும்பில்லியன் கணக்கான தொகைகள் கொண்ட ஒரு வேலைத்திட்டத்தின் மீதான பேச்சுவார்த்தைகள் சிந்தித்துப் பார்க்க கடினமானதாக இருக்கிறதுஎன்றும் அறிவித்தார்.

ஸ்லோவேக்கியாவின் நிதி அமைச்சரான Peter Kažimír வெளிப்படையாகவே எச்சரித்தார், “நாங்கள் இதனை மென்மையாக விட்டு விடப் போவதில்லை”.

முடிவு வெளியானதை தொடர்ந்து, ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்கெலும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டும் தொலைபேசி வழி பேசி ஐரோப்பிய மண்டலத் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட ஒப்புக் கொண்டனர். இது செவ்வாய் மாலை நடைபெறவிருக்கிறது.

ஐரோப்பிய ஆணைய தலைவரான Jean-Claude Juncker இன்று ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் Mario Draghi, Dijsselbloem உடனும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் உடனும் தொலைபேசி வழிக் கூட்டு ஆலோசனையில் ஈடுபடவிருக்கிறார்.

ஆளும் உயரடுக்கு அதன் வெட்டுகள் வேலைத்திட்டம் திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டதற்குக் காட்டுகின்ற வர்க்க குரோதத்தை பிரிட்டனின் வலது-சாரி டெய்லி மெயில் பத்திரிகையின் பின்வரும் தலைப்புச் செய்தி சுருங்க வெளிப்படுத்தியது: “பொறிவு! கிரீஸ் வெட்டுகளுக்குஇல்லைசொல்வது, ஐரோப்பிய மண்டல வெளியேற்றத்தை நோக்கிச் செல்வதை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.”

யூரோஆசிய ஆபத்து ஆலோசனை நிறுவனத்தில் ஐரோப்பிய ஆய்வுப் பிரிவின் தலைவராக இருக்கும் முஸ்தபா ரஹ்மான் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறுகையில், “கிரீஸ் தனது சொந்த தற்கொலைக் குறிப்பில் கையெழுத்திட்டிருக்கிறதுஎன்றார்.

இந்த கருத்துக்கணிப்பை ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி, மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுடனான உடன்பாட்டை எட்டுவதற்கான - விளைவு என்னவாக இருப்பினும் - ஒரு கருவியாக பயன்படுத்துவதற்கான நம்பிக்கையுடன் ஒரு தந்திர நடவடிக்கை என்றே சிரிசா அரசாங்கம் அழைத்தது. ஆனாலும் அடுத்தடுத்த கிரேக்க அரசாங்கங்களினால் திணிக்கப்பட்டிருக்கும் வெறுப்பான சிக்கன நடவடிக்கை உடன்படிக்கைகளுக்கு மக்கள் காட்டும் எதிர்ப்பை கூர்மையடையச் செய்வதற்கே இந்த கருத்துக்கணிப்பு சேவை செய்திருக்கிறது.

கருத்துக்கணிப்பு முடிவுகள் கணிசமானவேண்டாம்ஆக இருக்க, சிரிசா தொழில் அமைச்சரான Panos Skourletis கூறினார், “தொடங்கவிருக்கும் பேச்சுவார்த்தைகள் வெகு விரைவாக முடிவுக்கு வந்தாக வேண்டும், அது 48 மணி நேரங்கள் கழித்து என்றாலும்”.

இந்த வாக்கெடுப்பை சிக்கன நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு வழிவகையாக அல்ல, மாறாக ஐரோப்பிய நிதிய உயரடுக்கின் ஸ்தாபனங்களுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான தமது முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கான ஒரு வழிவகையாக பயன்படுத்தவே நோக்கம் கொண்டிருந்ததாக சிப்ராசும் மற்றும் முன்னணி சிரிசா நிர்வாகிகளும் ஞாயிறன்றான வாக்கெடுப்புக்கான பதிலிறுப்பில் கூறியிருக்கின்றனர். “நீங்கள் எனக்கு கொடுத்திருக்கும் வாக்களிப்பானது ஐரோப்பாவுடனான ஒரு முறிவுக்கு அழைப்பதற்காக அல்ல, மாறாக பேச்சுவார்த்தையில் என்பக்கம் இன்னும் அதிகமான வலுச் சேர்ப்பதற்காகஎன்றும்அந்தக் கடினமான வேலை நாளை தொடங்குகிறதுஎன்றும் சிப்ராஸ் கூறினார்.

வேண்டாம்பிரச்சார வெற்றி உறுதிப்பட்ட நிலையில், சிப்ராஸ் உடனடியாக எந்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கடந்த ஐந்து மாத காலத்தில் சிரிசாவுக்கு ஒரேயொரு சலுகையும் கூட அளிக்க திரும்பத் திரும்ப மறுத்து வந்திருக்கிறார்களோ அதே தலைவர்களை நோக்கி நட்புக்கரம் நீட்டினார். முதலாவதாய் பிரான்சின் ஹாலண்ட் உடன் அவர் தொலைபேசியில் பேசினார்.

சிப்ராஸ் இன்று கிரீசின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து அவர்களது கருத்துகளை அறிந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. சிக்கன நடவடிக்கை ஆதரவு PASOK மற்றும் To Potami (The River) ஆகிய கட்சிகளின் தலைவர்களும் இதில் உண்டு. வாக்கெடுப்பு முடிவுகளை தொடர்ந்து, “வேண்டும்பிரச்சாரத்தின் அறிவிக்கப்படாத தலைவரான பழைமைவாத புதிய ஜனநாயகக் கட்சியின் Antonis Samaras தனது கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்.