சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan plantation companies prepare to confront workers

இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களை எதிர்கொள்ள தயாராகின்றன

By our correspondents
16 July 2015

Use this version to printSend feedback

(இக்கட்டுரை எழுதி முடிக்கப்பட்ட சில மணித்தியாலங்களுக்குள் தொழிற்சங்கங்கள் மெதுவாக வேலை செய்யும் பிரச்சாரத்தை கைவிட்டு தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பியுள்ளதுடன் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையையும் ஒத்தி வைத்துள்ளன. இது பற்றிய முழு விபரங்களுடன் விரைவில் இன்னொரு கட்டுரையை வாசகர்கள் எதிர்பாருங்கள்)

தோட்டத் தொழிலாளர்களின் மெதுவாக வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை திங்களன்று இரண்டாவது வாரத்தை அடைந்துள்ள நிலையில், பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களை எதிர்கொள்ளத் தயாராவதோடு அவர்கள் மீது அதிக வேலைச்சுமையை சுமத்த தயாராக உள்ளன. முதலாளிமார், உலக சந்தையில் தேயிலை விலை குறைந்து வருவதன் காரணமாக சம்பள அதிகரிப்பு சாத்தியம் இல்லை என்று வலியுறுத்தியதால் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள், தோட்டத் நிறுவனங்கள் மற்றும் அரசாங்க தொழில் ஆணையாளருக்கும் இடையே மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை கடந்த வெள்ளியன்று முறிந்தது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) உட்பட தொழிற்சங்கங்கள், மட்டுப்படுத்தப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்தவும் கம்பனிகளின் கோரிக்கைக்கு ஏற்ப ஒரு புதிய உடன்பாட்டை திணிப்பதற்கும் மூடிய கதவுகளுக்குள் சூழ்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

தொழிலாளர்கள் மற்றும் கம்பனிகளுக்கும் இடையேயான கூட்டு ஒப்பந்தம் ஏப்ரலில் காலாவதியாகிவிட்டது. இலங்கை முதலாளிமார் சம்மேளனம் மற்றும் 23 பிராந்திய தோட்ட கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கமும் (பிஏசி) புதிய ஒப்பந்தத்துக்கா தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. ஆரம்பத்தில் இருந்தே புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத கம்பனிகள், தற்போது நாளாந்த கொழுந்து பறிக்கும் இலக்கான 16 கிலோவை 25 கிலோ வரை அதிகரிக்குகமாறு வலியுறுத்தின. சில தோட்டங்களில் எதேச்சதிகாரமான முறையில் இந்த இலக்கு 18 கிலோ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துவந்த நிலையில், மிகப் பெரிய தோட்டத் தொழிற்சங்கமான இ.தொ.கா., அன்றாட ஊதியத்தை 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி இந்த மெதுவாக வேலை செய்யும் பிரச்சாரத்துக்கு அழைத்தது. தற்போது, ஒரு தொழிலாளி 450 ரூபாவை மட்டுமே அடிப்படை சம்பளமாகவும் தேயிலை விலை மற்றும் இலக்குக்கு அதிகமாக பறிக்கும் கொழுந்துடன் பிணைக்கப்பட்ட கொடுப்பவாக 230 ரூபாவும் பெறுகின்றார். தொழிலாளர்கள் மீதான அனுதாபத்தினால் இ.தொ.கா. இந்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கவில்லை. மாறாக வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பாக தொழிலாளர்கள் மத்தியிலான எதிர்ப்பை சிதைக்கும் முயற்சியாகவே இதற்கு அழைப்புவிடுத்தது. இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மஹிந்த இராஜபக்ஷவின் முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்தார். இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் (ஐ.ம.சு.மு.) வேட்பாளராக, வரும் பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றார்.

திங்களன்று, தோட்ட உரிமையாளர்கள் சங்கமானது 11 வீத அற்ப ஊதிய அதிகரிப்புக்காக 67 சதவீதம் வேலைச் சுமையை அதிகரிக்குமாறு முன்மொழிந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையின் படி, முன்மொழிந்துள்ள 11 சதவீத அதிகரிப்பு தினசரி சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்தும் என பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் கூறுகின்றன. தற்போதைய கொழுந்து பறிக்கும் இலக்கான 15ல் இருந்து 25 கிலோ வரை 10 கிலோவால் அதிகரிக்கப்பட்டால் இந்த சம்பள உயர்வு கிடைக்கும். கூடுதலாக பறிக்கப்படும் 10 கிலோவுக்கு தற்போது ஒரு கிலோவுக்கு கொடுக்கப்படும் 23 ரூபாய் 40 ரூபாவாக அதிகரிக்கப்படும். "தேயிலை, இறப்பர் ஆகிய இரண்டு துறையிலும் உள்ள தற்போதைய நெருக்கடியை மட்டுப்படுத்த சாத்தியமான ஒரே மாற்றீட்டை" இது வழங்குவதால் இந்த பிரேரணை பற்றி "தீவிரமாக கருத்தில்கொள்ளுமாறு" தொழிற்சங்கங்களிடம் பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், இந்த மொத்த வருமானமும் 8 சதவீதமாக உள்ள ஊழியர் சேமலாப நிதியத்துக்கான (ஒரு ஓய்வூதிய திட்டம்) தொழிலாளர்களின் பங்களிப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கிய மறு நாள், 23 தோட்ட நிறுவனங்களும் தமது தொழிற்சாலைகளை மூடியதோடு,னது அலுவலக ஊழியர்களுக்கு விடுமுறை கொடுத்தன. எனவே, கம்பனிகள் கொழுந்துகளை சேகரிப்பதையும் நிறுப்பதையும் நிறுத்திவிட்டன. இதன் விளைவாக தொழிலாளர்களின் நாள் சம்பளம் மறுக்கப்பட்டது. இது அறிவித்தல் இன்றி விளைவுகளுடன் தொழிலாளர்களுக்கு கதவடைப்பு செய்வதாகும். கொடூரமான முறையில், தோட்டக் கம்பனிகள், அன்றாட ஊதியம் ஈட்டும் தொழிலாளர்களை பட்டினி போட்டு தமது ஈவிரக்கமற்ற சுரண்டல் திட்டங்களுக்கு அவர்களை அடிபணிய வைக்க முயற்சிக்கின்றன. தனியார் துறை தொழிலாளர்களின் ஊதியங்களை அதிகரிக்க அரசாங்கம் மறுப்பதன் மூலம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியாலும் இந்த கம்பனிகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.

இ.தொ.கா. மெதுவாக வேலை செய்யும் பிரச்சாரத்தை நிறுத்த எதாவதொரு சாக்குப் போக்கைப் பெற முயற்சிக்கும் அதேவேளை, ஏனைய தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நடவடிக்கையை தகர்க்க முயல்கின்றன. தொழிலாளர் தேசிய சங்கத்தின் (NUW) தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பி. திகாம்பரம், திங்களன்று, வழக்கம் போல் வேலை செய்து "தங்களின் வாழ்க்கையை முன்னெடுக்க" தயாராக இருக்கும் தொழிலாளர்களை அனுமதிக்குமாறு கம்பனிகளுக்கு கோரிக்கை விடுத்தார். தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அனுப்பி அவர்களது நடவடிக்கைக்கு குழி பறிப்பதே அவரது இலக்காகும். அவருடன், இந்த நடவடிக்கையை நிறுத்தும் பிரச்சாரத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) தலைவர் மனோ கணேசன், மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஆளும் யூ.என்.பீ.யின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கத் தலைவர் கே. வேலாயுதமும் இணைந்துகொண்டனர்.

தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பத்தில் ஒரு கூட்டுக் கோரிக்கை விடுத்த திகாம்பரமும் வேலாயுதமும், தோட்டத் தொழிலாளர்கள் சம்பந்தமான அரசாங்கத்தின் நல்லெண்ணம் பாதிக்கப்படுவதோடு அது தொழிலாளர்களையே பாதிக்கும் என்று கூறினர். அவர்கள் சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி போன்ற தொழிலாளர்களின் பிரச்சினைகளை "தீர்க்க" அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனக் கூறிக்கொண்டனர். வை தொழிலாளர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கேட்ட வெற்று வாக்குறுதிகளாகும்.

தோட்ட நிறுவனங்கள் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து இலக்கை 16 கிலோவில் இருந்து 18-20 கிலோ வரை அதிகரிக்க முயற்சி செய்த பல சந்தர்ப்பங்களில் நாளாந்த இலக்கு அதிகரிப்பை தொழிலாளர்கள் கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர். சென்ற பெப்ரவரியில், வேலைச் சுமையை Upcot 16 கிலோவில் இருந்து 18 கிலோ வரை அதிகரிக்க நிர்வாகம் முடிவு எடுத்தமைக்கு எதிராக, சாமிமலை கிளனியூஜி தோட்டத்தில் டீசைட் GDeeside பிரிவு தொழிலாளர்கள் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

நிர்வாகம் தனது முடிவை கைவிட்டாலும், அது வேலைநிறுத்தத்தில் முன்னிலையில் இருந்த தொழிலாளர்களை வேட்டையாடத் தொடங்கியது. மூன்று தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதோடு மேலும் நான்கு பேர் ஒரு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த அனைத்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும் போலிக் குற்றச்சாட்டுக்களின் பேரில் நிர்வாகத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்கொள்கின்றனர். இந்த தாக்குதலானது கம்பனிகள் தமது வேலை சுமைகளை திணிப்பதில் இரக்கமற்ற வழிமுறைகளைப் பயன்படுத்தும் என்பதை தெளிவாகக் காட்டியுள்ளது. பதுளை மாவட்டத்தில் திக்வெல்ல தோட்டத் தொழிலாளர்களும் இதே பிரச்சினைக்காக வேலைநிறுத்தம் செய்தனர்.

இந்த போராட்டங்களின் போது, இ.தொ.கா. மற்றும் NUW தொழிற்சங்க தலைவர்கள், போராட்டத்தில் இருந்த தொழிலாளர்களுக்கு எதிராக தோட்ட நிர்வாகத்துடனும் பொலிசுடனும் கூட்டாக செயற்பட்டனர்.

தோட்டக் கம்பனிகள், உற்பத்திப் பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்து வரும் சர்வதேச பொருளாதார நெருக்கடியைக் காட்டி சொற்ப சம்பளத்தை நியாயப்படுத்த முயல்கின்றன. உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் கென்யா, சீனா, வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற ஏனைய தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுடனான போட்டியினாலும், இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருவாய் 2015 முதல் ஐந்து மாதங்களில் 12 சதவீதம் அல்லது 74 பில்லியன் ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது. “இலங்கை தேயிலையை 70% வீதம் இறக்குமதி செய்யும் ரஷ்யா, மத்திய கிழக்கு மற்றும் உக்ரேன் போன்ற நாடுகள், குறிப்பாக அமெரிக்காவின் ஆத்திரமூட்டல்களால் ஏற்படுத்தப்பட்ட இராணுவ மோதல்கள், பொருளாதார தடைகள் மற்றும் ரஷ்ய ரூபிளின் வீழ்ச்சி போன்றவற்றால் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன, என தோட்ட உரிமையாளர் சங்கம் கூறுகின்றது.

உலகத் தேயிலை விலை ஜனவரியில் 510 ரூபாயில் இருந்து 380 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தோட்ட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை கூறுகின்றார். “தொழிற்சங்கங்கள் இந்த நெருக்கடியையும் தொழிற்துறையில் சாத்தியமான வீழ்ச்சியையும் புரிந்துகொள்ள வேண்டும்.

உலக முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு தொழிலாளர் பொறுப்பாளிகள் அல்ல மற்றும் வாழ்க்கைக்கேற்ற ஊதியம் ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். முதலாளித்துவ அமைப்பு முறையின் கீழ் வாழ்க்கைக்கேற்ற ஊதியம் மற்றும் கௌரவமான சமூக நிலைமைகள் பெறுவது சாத்தியம் இல்லை.