சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France’s Left Party applauds Syriza’s imposition of EU austerity

பிரான்சின் இடது கட்சி சிரிசாவின் ஐரோப்பி ஒன்றிய சிக்கன நடவடிக்கை திணிப்பை பாராட்டுகிறது

By Kumaran Ira
18 July 2015

Use this version to printSend feedback

பிரான்சின் ஜோன்-லூக் மெலென்சோனின் இடது கட்சி (Parti de Gauche, PG), கடந்த வாரயிறுதியில் ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைக்கான யூரோ மண்டல உச்சி மாநாட்டு கோரிக்கைக்களுக்கு கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸின் அடிபணிவை வரவேற்றுள்ளது. சிப்ராஸ் கொள்கைகளைக் குறித்து மௌனமாக திருப்திப்பட்டு கொண்டே, மெலென்சோன் ஐரோப்பிய ஒன்றிய கட்டளைகளுக்கு எதிரான எதிர்ப்பிற்கு சிரிசா ஒரு முன்னுதாரணமாக திகழ்வதாக பாராட்டுகிறார்.

திங்களன்று, பேர்லினால் கட்டளையிடப்பட்ட கடுமையான நடவடிக்கைகளுக்கு சிப்ராஸ் ஒப்புக்கொண்ட பின்னர், மெலென்சோன் "அதன் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி முனை" என்ற தலைப்பில் ஓர் அறிக்கை வெளியிட்டார். “அலெக்சிஸ் சிப்ராஸின் அரசாங்கம் ஐரோப்பாவில் வேறெதையும் போலில்லாமல் எதிர்த்தது. ஆகவே அது அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட போரில் ஒரு போரிடை ஓய்வையே ஏற்றுக்கொண்டுள்ளது. நாங்கள் இந்த போரையும், அதை நடத்துபவர்களையும், அவர்களது நோக்கங்களையும் கண்டிக்கிறோம். கிரேக்கர்களிடமிருந்து கோரப்பட்டு வருகிற தியாகங்களையும் மற்றும் அவர்கள் மீது திணிக்கப்பட்ட வன்முறையையும் நாங்கள் கண்டிக்கிறோம்,” என்று அந்த பத்திரிகை வெளியீடு கூறுகிறது.

சிப்ராஸ் சிக்கன திட்டத்தை எதிர்க்கிறார் என்ற மெலென்சோனின் கூற்று ஓர் அரசியல் பொய்யாகும். ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை ஆட்சேபிப்பதாக கூறிக்கொண்டே, சிப்ராஸ் அவற்றை கிரேக்க மக்கள் விரோதத்திற்கு இடையிலும் திணிந்து வருகிறார். இத்தகைய முறைமைகளில் ஓய்வூதியங்கள் மற்றும் கூலிகளை வெட்டுதல், தொழிலாளர் "சீர்திருத்தங்கள்" என்று கூறப்படுபவை, மதிப்புக்கூட்டு வரியை (விற்பனை வரிகளை) உயர்த்துவது மற்றும் அரசு சொத்துக்களை தனியார் நிதியம் ஒன்றுக்கு மாற்றுவது ஆகியவை உள்ளடங்கும், துல்லியமாக இவை கிரீஸைத் தீவிரமாக சுரண்டப்படும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்திருக்கும் ஓர் அரை-காலனித்துவ நாடாக மாற்றுகின்றன.

சிப்ராஸின் கொள்கை, ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதென்ற அதன் தேர்தல் வாக்குறுதிகளை மறுத்தளித்தும், அத்துடன் சிரிசாவினாலேயே அழைப்புவிடுக்கப்பட்டு, பிரமாண்டமாக 61 சதவீத "வேண்டாமெனும்" வாக்குகளைப் பெற்ற ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கை மீதான ஜூலை 5 வெகுஜன வாக்கெடுப்பின் முடிவையும் மறுத்தளித்து, அப்பட்டமாக தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக்கொடுக்கிறது.

மெலெசோன் கிரேக்க தலைவரை ஆதரிக்கவும், ஒத்துழைக்கவும் உறுதியளித்தார்: “கிரேக்க மக்களின் எதிர்ப்பை அனுமதிப்பதற்காக அலெக்சிஸ் சிப்ராஸையும் மற்றும் அவரது போராட்டத்தையும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஸ்பெயினில் பெடெமோஸ் இன் வெற்றியும் மற்றும் பிரான்சில் எங்களது வெற்றியும் கிரீஸிற்கு சிறந்த ஆயுதமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதற்காக வேலை செய்து வருகிறோம்!”

உண்மையில், மெலெசோன் சிரிசாவையும் மற்றும் அதன் சிக்கன கொள்கைகளையும் ஆதரிப்பதானது, தொழிலாள வர்க்கத்தைத் தாக்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் கருவிகளாக செயல்படுகின்ற இடது கட்சி உள்ளடங்கிய எல்லா போலி-இடது அமைப்புகளின் பிற்போக்குத்தனமான குணாம்சத்தை அம்பலப்படுத்துகிறது. அவரது கட்சி ஆட்சிக்கு வந்தால் அது பிரான்சிலும் அதுபோன்ற கொள்கைகளையே நடைமுறைப்படுத்தும் என்பதற்கு, சிரிசாவின் கொள்கைகளை ஆதரிப்பதன் மூலமாக, மெலென்சோன் சமிக்ஞை காட்டுகிறார்.

ஜூலை 6 அன்று, “கிரேக்க வெற்றி விரிவடைகிறது" என்று தலைப்பிட்ட இடது கட்சி தலையங்கம் ஒன்று அறிவித்ததாவது, “ஐரோப்பிய சிக்கன நடவடிக்கைக்கு கிரேக்க மக்கள் பாரியளவில் வேண்டாம் என்று வாக்களித்ததன் மூலமாக, அலெக்சிஸ் சிப்ராஸ் ஐரோப்பாவில் உருவாக்கிய ஒத்துழையாமை இடத்தை பிரமாண்டமான அளவில் விரிவாக்கி உள்ளனர்மக்கள் விருப்பம் இவ்வாறு பரவலாவதும் மற்றும் வரலாற்றில் இது வேகப்படுவதும் ஏதென்ஸில் நிகழ்ந்துவரும் நிகழ்வுபோக்கின் புரட்சிகர குணாம்சத்தை எடுத்துக்காட்டுகிறது,” என்று குறிப்பிட்டது.

சிப்ராஸ் அந்த வெகுஜன வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுத்ததை "மொத்த ஐரோப்பாவிற்கான ஒரு ஜனநாயக படிப்பினையாக" இடது கட்சி வரவேற்றது. “மக்கள் இறையாண்மையை மதிப்பதற்கு அவர் அளித்த வாக்குறுதிகளை அவர் மதித்து வருகிறார்முந்தைய வலதுசாரி அரசாங்கத்தைப் போலில்லாமல், முக்கூட்டால் திணிக்கப்படும் சிக்கன நடவடிக்கை கட்டளைகளுக்கு எதிர்ப்பே இல்லாமல் அதை ஏற்றுக்கொள்வதற்கு அதொன்றும் வானில் எழுதப்பட்டதில்லை என்பதை அவர் எடுத்துக்காட்டி உள்ளார்,” என்று கூறி, அது சிப்ராஸை புகழ்ந்து தள்ளியது.

அந்த ஜூலை 5 வாக்கெடுப்புக்கு முன்னதாக உலக சோசலிச வலைத்தளத்தால் அளிக்கப்பட்ட எச்சரிக்கை சம்பவங்களில் முற்றிலுமாக வெளிப்பட்டது: "அந்த வெகுஜன வாக்கெடுப்பு, கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் மீது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற தாக்குதலுக்கு ஒரு போலி-ஜனநாயக போர்வையை வழங்கி, சிக்கன நடவடிக்கைக்கு வாக்குகளை வழங்கும் நிலைமைகளை உருவாக்குவதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூர்க்கமான சிக்கன நடவடிக்கைக்கு கடந்த ஆண்டுகளில் பரந்த வெறுப்பு நிலவிய போதினும், சிரிசாவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் மக்கள் எதிர்ப்பை குழப்பவும் மற்றும் குலைக்கவும் அவர்களால் ஆனமட்டும் அனைத்தும் செய்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய தாக்குதல்களை நடைமுறைப்படுத்துவதற்காக அதிகாரத்தை ஒரு புதிய அரசாங்கத்திடம் ஒப்படைக்க அவர்களை அனுமதிக்கும் வகையில், வெகுஜன வாக்கெடுப்பில் "வேண்டும்" என்ற வாக்குகள் அவர்களுக்குக் கிடைக்குமென சிரிசா தலைவர்கள் பலர் கருதியிருந்ததை அதற்குப் பின்னர் பத்திரிகைகள் உறுதிப்படுத்தி உள்ளன. ஆனால் பிரமாண்டமான "வேண்டாம்" எனும் வாக்குகளால் அதிர்ந்து போய், பெருந்திரளான மக்களின் சிக்கன நடவடிக்கைக்கான மறுப்புக்கு சிரிசா மேற்கொண்டும் வலதிற்கு நகர்ந்ததன் மூலமாக விடையிறுத்தது.

ஜூலை 5 அன்று இரவு, சிப்ராஸ் அறிவிக்கையில், “இது ஐரோப்பாவுடன் முறித்துக் கொள்வதற்கான தீர்ப்பல்ல, மாறாக ஒரு நம்பகமான உடன்படிக்கையை எட்டுவதற்கு நம்முடைய பேரம்பேசும் பலத்தைப் மேலும் பலப்படுத்துவற்குரிய ஒரு தீர்ப்பாகும்,” என்று அறிவித்தார். அந்த வெகுஜன வாக்கெடுப்புக்கு நான்கு நாட்களுக்குப் பின்னர், சிப்ராஸ் வெகுஜன வாக்கெடுப்பின் முடிவுகளை மதியாமல், ஐரோப்பிய ஒன்றியத்திடம் சரணடைந்து ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு நிதிகளுக்கு பிரதியீடாக 13 பில்லியன் யூரோ [14.1 பில்லியன் டாலர்] சிக்கன முறைமைகளின் ஒரு தொகுப்பை முன்வைத்தார்.

யூரோ மண்டல அங்கத்துவ நாடுகளின் பேச்சுவார்த்தைகள் தொடங்கிய போது, சிப்ராஸ் முன்வைத்த வெட்டுக்களின் பொதியை இடது கட்சி ஆதரித்ததுடன், சிக்கன நடவடிக்கைக்கு இருந்த மக்களின் எதிர்ப்பைத் தணிக்கவும் மற்றும் குழப்பத்தை உண்டாக்கவும் நோக்கம் கொண்ட ஒரு பிரச்சார நடவடிக்கையைத் தொடங்கியது.

இடது கட்சி (PG) அரசியல் ஒருங்கிணைப்பாளர் Eric Coquerel சிப்ராஸின் காட்டிக்கொடுப்புக்கு வீரவணக்கம் செய்தார். மேற்கொண்டு வெட்டுக்களைக் கோராமல் ஜேர்மன் அரசாங்கம் சிப்ராஸின் முன்மொழிவை ஒப்புக்கொள்ள மறுத்ததை விமர்சித்து, அவர் சிப்ராஸின் காட்டிக்கொடுப்புக்கு அரசியல் மூடிமறைப்பை வழங்க முயன்றார். Coquerel குறிப்பிடுகையில், “இப்போதைக்கு இதோடு போதும்! கிரீஸின் மற்றும் ஏனைய ஐரோப்பிய மக்களின் எதிர்காலம், ஜேர்மன் நல்லெண்ண உரிமையைச் சார்ந்திருக்க முடியாது,” என்றார்.

சிரிசாவின் ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளை ஆதரித்து, Coquerel எழுதினார், “கிரீஸூடன் எங்களது நல்லிணக்கத்தை நாங்கள் இப்போது முன்பைவிட அதிகமாக உறுதிப்படுத்துகிறோம். சிப்ராஸ் அரசாங்கத்தின் திட்டமும் மற்றும் கிரீஸின் கடன் மறுசீரமைப்பும் அவற்றின் இப்போதைய வடிவத்திலேயே ஒப்புக்கொள்ள வேண்டும்,” என்றார்.

பேர்லினைக் குறித்த இடது கட்சியின் வாயளவிலான கண்டனங்கள், அக்கட்சியின் பிற்போக்குத்தனமான ஜேர்மன்-விரோத தேசியவெறியில் வேரூன்றிய வெற்று வார்த்தைஜாலமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு நிதியியல் காலனியாக கிரீஸை மாற்றும் ஒரு தொடர்ச்சியான முறைமைகளை திணித்து, முன்பினும் அதிக சிக்கன நடவடிக்கைக்கான கடந்த வார ஜேர்மன் அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு சிப்ராஸ் அப்போது அடிபணிந்த போது, மெலென்சோன் அப்போதும், மேலே குறிப்பிட்டதைப் போலவே, அவரை "எதிர்ப்பின்" ஒரு அடையாளமாக பாராட்டி எதிர்வினையாற்றினார்.

ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கையின் ஒரு கருவியாக சிரிசா உருவாகியிருப்பதும், இடது கட்சியால் ஆதரிக்கப்படுவதும், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் அடிப்படை அரசியல் அனுபவமாகும். அது சிரிசா மற்றும் இடது கட்சியின் போலி-இடது நாடாளுமன்றவாதிகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அடிப்படையாக கொண்ட ஒரு மார்க்சிச எதிர்ப்புக்கும் இடையிலான இடைவெளியை எடுத்துக்காட்டுகிறது.

சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பின் (OCI) ஓர் முன்னாள் அங்கத்தவரும், 1970களில் சோசலிஸ்ட் கட்சியில் (Parti socialiste, PS) இணைந்தவருமான மெலென்சோன் 1980கள் மற்றும் 1990களில் சோசலிஸ்ட் கட்சி தலைவர் பிரான்சுவா மித்திரோன் ஆல் தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை ஒழுங்கமைக்க உதவினார். அவர் 1997 மற்றும் 2002க்கு இடையே சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரி லியோனெல் ஜோஸ்பனின் பன்முக இடது (Plural Left) அரசாங்கத்தில் மந்திரியாக இருந்தவராவார். 2009 இல் இடது கட்சி ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், 2012 ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றில், பிரான்சுவா ஹோலாண்டுக்கு, அவரது சிக்கன நடவடிக்கை மற்றும் போர் கொள்கைகளுக்காக இப்போது பரந்தளவில் வெறுக்கப்படும் இவருக்கு வாக்களிக்குமாறும் அவர் அழைப்புவிடுத்தவராவார்.