சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈரான்

The Iran nuclear pact and US imperialism’s drive for global hegemony

ஈரான் அணுசக்தி உடன்படிக்கையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்க முனைவும்

Keith Jones
21 July 2015

Use this version to printSend feedback

20 மாதகால பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அணுஆயுத பயன்பாட்டிற்கு அல்லாத ஈரானிய அணுசக்தி திட்டங்களை "வழமையான ஒன்றானதாக்கும்" 15 ஆண்டுகால ஒப்பந்தம் மீது ஈரான், சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் ஜேர்மனியுடன் ஒபாமா நிர்வாகம் கடந்த வாரம் உடன்பாட்டை எட்டியது. இந்த உடன்படிக்கை அமெரிக்க ஆளும் உயரடுக்கின் பிரிவுகளது எதிர்ப்பிலிருந்து தப்பி வந்தால், அது சாத்தியமான அளவிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாகத்தில் நீண்டகால தாக்கங்களைக் கொண்ட ஒரு முக்கிய தந்திரோபாய மாற்றமாக இருக்கும்.

ஷாவின் இரத்தந்தோய்ந்த அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரத்தை 1979 ஈரானிய புரட்சி கவிழ்த்தியதற்குப் பின்னரில் இருந்து, அமெரிக்க வெளியுறவு கொள்கையில் ஈரானுக்கு எதிரான சமரசமற்ற எதிர்ப்பு ஒரு நிரந்தர அம்சமாகியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளின் போது, அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டலின் அதன் பிரச்சாரத்தை மலைப்பூட்டும் அளவிற்கு வாஷிங்டன் தீவிரப்படுத்தியது. ஈரானின் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய அண்டைநாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டு, ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இரண்டு முறை ஈரானுக்கு எதிராக போர் தொடுப்பதற்கு நெருக்கத்தில் வந்திருந்தார்.

ஒரு களவாடப்பட்ட தேர்தல் என்ற ஆதாரமற்ற வாதங்களைத் தூண்டிவிட்டு, 2009 இல், ஒபாமா நிர்வாகம் ஒரு "பசுமை புரட்சி" என்பதன் மூலமாக தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முயன்றது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், போரைத்தவிர்ந்த தண்டிக்கும் வகையிலான முன்பொருபோதும் பயன்படுத்தப்பட்டிராத பொருளாதார தடைகளைத் திணிப்பதற்கு அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ள வாஷிங்டன் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளை வசப்படுத்தியது.

இப்போதோ, ஈரானிடமிருந்து கிடைக்கும் பெரும் விட்டுக்கொடுப்புகளுக்கு பிரதியீடாக, வாஷிங்டன் பொருளாதார தடைகளைத் தற்காலிகமாக நீக்க உடன்பட்டுள்ளது, அத்துடன் தெஹ்ரான் அதன் அணுஆயுதமல்லாத அணுசக்தி திட்டங்களை "வழமையான ஒன்றானதாக்க" அதற்கு 15 ஆண்டுகால அவகாசமும் வழங்கியுள்ளது.

தெஹ்ரான் உடனான கடந்த வார உடன்படிக்கை, அதன் அணுஆயுதமல்லாத அணுசக்தி திட்டம் மீதான கட்டுப்பாடுகளோடு மட்டுப்பட்டிருப்பதாக ஒபாமா வரையறுக்கிறார். இருப்பினும் ஒபாமாவும், வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி மற்றும் ஏனைய முன்னணி அமெரிக்க அதிகாரிகளும் அந்த உடன்பாட்டை, நிலைமையை ஆராய்வதற்குரிய ஒன்றாக, ஈரானின் உள்நோக்கங்களைப் பரிசோதிப்பதற்குரிய ஒன்றாக பார்ப்பதாக தெளிவுபடுத்தி உள்ளனர். ஈரானுடன் "ஈடுபடும்" அவர்களது கொள்கை, மேற்கத்திய முதலீட்டை உள்பாய்ச்சுவது உட்பட தொடர்ச்சியான அழுத்தம் மற்றும் ஊக்குவிப்புகள் இரண்டினது கலவையினூடாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் நிகழ்ச்சிநிரலின் வரிசையில் தெஹ்ரானை கொண்டு வர முடியுமென்ற ஒரு மூலோபாய பந்தயமாகும்.     

குடியரசு கட்சி தலைமை, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார குழு  (AIPAC) ஆகியவை பகிரங்கமாக இந்த மாற்றத்தை எதிர்த்து வருகின்றன. தெஹ்ரானின் அடிபணிவிலிருந்து ஒபாமா இரும்புபிடி உத்திரவாதங்களைப் பெற வேண்டுமென அவை கோரி வருவதுடன், அமெரிக்காவின் பாரம்பரிய மத்தியகிழக்கு வாடிக்கையாளர் அரசுகளை, அனைத்திற்கும் மேலாக இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவை அது ஓரங்கட்டுவதற்கு எதிராக எச்சரித்து வருகின்றன.

எவ்வாறிருந்த போதினும் குடியரசு கட்சியினரின் வெளிப்படையான வெற்றுரைகள், குடியரசு கட்சியில் உள்ள பிரதான கொள்கைவகுப்பாளர்களினது நிஜமான உள்நோக்கங்களை எடுத்துக்காட்டும் ஒரு நிச்சயமான அறிகுறி என்றாகாது. குடியரசுகட்சினரின் எதிர்ப்பு தெஹ்ரானிடமிருந்து கூடுதல் விட்டுக்கொடுப்புகளைப் பெற ஒருவிதத்தில் ஒபாமாவிற்கு உபயோகப்படக்கூடும். அதை வேறுவிதமாக கூறினால், நீடித்து நிலைத்திருப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதே நிச்சயமற்று உள்ளது.          

அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் ஒப்பீட்டுரீதியிலான பொருளாதார பலம் சரிந்து வருவதை ஈடுகட்டவும் மற்றும் அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு பெருகிவரும் சவால்களை முகங்கொடுக்கவும் ஆக்கிரமிப்பு மற்றும் போர் மூலமாக முயன்று வருகின்ற நிலையில், அணுசக்தி ஒப்பந்தமும் மற்றும் அதன் மீது கருத்து முரண்பட்ட ஆளும் வர்க்க சர்ச்சைகளும், அமெரிக்க ஏகாதிபத்தியம் முகங்கொடுக்கின்ற அதிகரித்துவரும் பிரச்சினைகளின் ஒரு பிரதிபலிப்பாகும்.

கடந்த ஒன்றரை தசாப்தங்களில் பரந்த மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்தியுள்ள மூன்று பிரதான போர்களின் விளைவுகள் மீது அங்கே அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் ஆழ்ந்த அதிருப்தி நிலவுகிறது. ரஷ்யா மீது கொண்டு வரப்பட்ட தடையாணைகள் விரும்பிய விளைவுகளை உருவாக்க தவறி வருவதோடு சேர்ந்து, உக்ரேனில் இதுவரையில் வாஷிங்டன் திருப்புமுனையை அடைய முடியாமல் உள்ளது. ஒபாமா நிர்வாகத்தைத் திடுக்கிட வைக்கும் வகையில், பிரிட்டனின் தலைமையில் அதன் நெருக்கமான கூட்டாளிகளில் பல, அமெரிக்காவை மீறி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனா தலைமையிலான ஆசிய கட்டமைப்பு அபிவிருத்தி வங்கியின் ஸ்தாபக உறுப்புநாடுகளாக கையெழுத்திட்டன.     

இவை அனைத்தும், ஒபாமா நிர்வாகம் மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தை ஒரு நடைமுறைரீதியிலான ஒருங்கிணைந்த தாக்குதல் திட்டத்திற்காக தடுமாற செய்துள்ளன.

ஈரானுடன் அமெரிக்க உறவுகளில் உத்தேசிக்கப்பட்ட மாற்றத்திற்கு அடியிலுள்ள மூலோபாய கணக்கீடுகள், மற்றும் இந்த மாற்றத்தின் தாக்கங்கள், மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாதை குறித்த கவலைக்குரிய சில விடயங்களைக் கூற முடியும்:

* ஒபாமாவும் ஒட்டுமொத்த அமெரிக்க ஆளும் உயரடுக்கும் இராணுவ பலத்தின் மூலமாக உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கத்தைப் பேணுவதற்கு தீர்மானகரமாக உள்ளனர்.

ஈரானை நோக்கிய அவரது இராஜாங்கரீதியிலான திருப்பம் தோல்வியடைந்தால் போரில் போய் முடியும் என்று ஜனாதிபதியின் தொடர்ச்சியான கடந்த வார அறிவிப்புகளில் சந்தேகத்திற்கிடமின்றி ஏதோவிதமான அச்சுறுத்தும் தொனி உள்ளது. இத்தகைய குறிப்புகள் வாஷிங்டன் வன்முறையைக் கைவிடுவதாக இல்லை என்பதை அடிக்கோடிடுவதுடன், உலகளாவிய உறவுகளின் வெடிப்பார்ந்த குணாம்சத்தை அவை சுட்டிக்காட்டுகின்றன.   

* உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு மக்களின் தாயகமாக விளங்கும் மிகப்பரந்த பெருநிலமான யூரேஷியா மீது மேலாதிக்கம் கொள்வதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மூலோபாயத்தின் மையத்தில் உள்ளது.  

இந்நோக்கத்தைப் பின்தொடர்வதற்காக, வாஷிங்டன் இன்றியமையாத ஒரு முக்கிய பரிசாக ஈரானை நீண்டகாலமாகவே பார்த்து வந்தது. அந்நாடு மூன்று கண்டங்கள் (ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆபிரிக்கா) ஒன்றோடொன்று சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளதுடன், அதன் வழியாக தான் உலகின் எண்ணெய் ஏற்றுமதியில் 40 சதவீதம் செல்கிறது, மேலும் உலகின் மிகவும் எண்ணெய் வளம் மிகுந்த பிராந்தியங்களால் (மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு) பங்கிடப்பட்டுள்ளது, மேலும் அதுவே உலகில் இரண்டாவதாக மிக அதிகளவில் இயற்கை எரிவாயுவையும் மற்றும் உலகில் நான்காவதாக மிக அதிகளவில் எண்ணெய் வளங்களையும் கொண்டுள்ளது.  
*
ஈரானின் அணுஆயுத திட்டம் மீது அதனுடனான வாஷிங்டனின் இட்டுக்கட்டப்பட்ட மோதல் ஒருபோதும் வெறுமனே ஈரானிய-அமெரிக்க உறவுகள் குறித்ததாகவோ அல்லது முற்றிலுமாக மத்திய கிழக்கைக் கட்டுப்பாட்டில் கொள்வது குறித்ததாகவும் இருக்கவில்லை. அது எப்போதும் உலகின் பிரதான சக்திகளுடனான அமெரிக்க உறவுகளின் மீதிருந்த பரந்த பிரச்சினைகளோடு சம்பந்தப்பட்டிருந்தது

மத்தியகிழக்கு எண்ணெய் மீது அமெரிக்கா சார்ந்திருப்பதே கூட குறைந்துள்ளது, சீனா மற்றும் ஜப்பான் உட்பட ஐரோப்பா மற்றும் ஆசியாவிலுள்ள அதன் பிரதான போட்டியாளர்கள் பலருக்கு அவற்றின் எண்ணெய்களில் பெரும்பகுதியை வினியோகிக்கும் ஒரு பகுதியின் மீது அதன் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தி வைப்பதற்காகவே, மத்திய கிழக்கின் மீது கட்டுப்பாட்டைப் பேணும் அதன் முயற்சிகளை அது அதிகரித்துள்ளது.

* வாஷிங்டனின் நோக்கங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதல்லாது மாறாக பலவற்றை உள்ளடக்கிய ஈரான் உடனான ஓர் அணுசக்தி உடன்படிக்கைக்கு வேறொரு ஒரே மாற்றீடு அமெரிக்க ஏகாதிபத்திய போர் மட்டுமேயாகும் என்று ஒபாமா வாதிடுகையில், அவர் மீண்டும் மீண்டும் இதை கூறியுள்ள நிலையில், அவர், இம்முறை பொய்யுரைக்கவில்லை

தடையாணைகளால் தாக்கப்பட்ட ஆட்சி தளரத் தொடங்கியதும், உலக தலைமை என காட்டிக்கொள்ளும் அதன் பாசாங்குத்தனத்தை ஒரு மிகப்பெரிய புவிசார் அரசியல் தோல்வியின் தாக்கமில்லாது பாதுகாத்துக்கொள்வது என்ற ஒரு வெளிப்படையான சவாலை எதிர்நோக்கமுடியாது போயிருக்கலாம். அதற்கு விடையிறுப்பாக, அது தடையாணைகளை நீடிக்க வேண்டியதாக இருக்கும் வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களது வெளிநாட்டு சொத்துக்களை முடக்குவதன் மூலமாகவும் மற்றும் அமெரிக்க-ஐரோப்பிய கட்டுப்பாட்டில் உள்ள உலக வங்கியியல் அமைப்புமுறையை ஈரான் அணுகுவதை மறுப்பதன் மூலமாகவும் "தடையாணைகளை உடைப்பவர்களுக்கு" எதிராக செல்ல வேண்டியதிருக்கும். அல்லது அதுபோன்ற நடவடிக்கை துரிதமாக சீனா அல்லது ரஷ்யாவுடன் ஓர் இராணுவ மோதலுக்குள் செல்லக்கூடும் என்பதால், அமெரிக்கா தடையாணைகளைக் கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டு முழுப் போருக்கு செல்வதே அமெரிக்காவிடம் இருந்த ஒரேயொரு சாத்தியப்பாடாக இருந்தது.

பெண்டகன் நீண்டகாலமாகவே அதுபோன்றவொரு போரைத் திட்டமிட்டு அதற்காக காயை நகர்த்தி வருகிறது. அமெரிக்க மக்களுக்கு இத்தகைய திட்டங்கள் குறித்து எதுவும் தெரியாது என்ற போதினும், ஈராக்கை விட அளவில் நான்கு மடங்கும் மக்கள்தொகையில் அண்மித்தளவில் மூன்று மடங்கு கொண்டதும், முக்கிய அரசு மற்றும் வெளிநாட்டு போராளிகள் குழு கூட்டாளிகளைக் கொண்டதுமான ஒரு நாடான ஈரான் உடனான ஒரு போர் துரிதமாக ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் சுற்றி வளைக்கும் என்பதை பல சிந்தனை குழாம்களின் அறிக்கைகள் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளன. அது அமெரிக்கா தூண்டுதல் பெற்ற சுன்னி-ஷியா வகுப்புவாத மோதலை இன்னும் அதிகமாக எரியூட்டும், மிக குறைந்தபட்சம், அமெரிக்க இராணுவத்தின் பெரும்பகுதியை நீண்டகாலத்திற்கு அப்பிரதேசத்துடன் பிணைத்து வைக்கும். இறுதியாக, ஆனால் முற்றிலும் கடைசியாக அல்ல, அதுபோன்றவொரு போர் அமெரிக்காவிற்குள் மக்களின் அதிகரித்துவரும் எதிர்ப்பை கிளறிவிடும், அங்கே தசாப்தகால சமூக பிற்போக்குத்தனத்திற்குப் பின்னர் வர்க்க பதட்டங்கள் ஏற்கனவே நிரம்பி உள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு மலிவான, மிகவும் கவனமான மாற்றீடை கொண்டிருப்பதாக ஒபாமா வாதிட்டு வருகிறார். அனைத்திற்கும் மேலாக, பாதுகாப்பு செயலர் ஆஸ்டன் கார்டர் ஞாயிறன்று பெருமைபீற்றியதைப் போல, அதில் எதிர்கால "இராணுவ சாத்தியக்கூறை தடுப்பதற்கு ஒன்றும் கிடையாது".

* ஈரானுடனான இந்த உடன்பாடு ஈரான் மீது அமெரிக்காவிற்கு அதிகபட்ச ஆதாயங்களைப் பெறும் வகையில் மற்றும் அதிகபட்ச மூலோபாய இலகுதன்மையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. தெஹ்ரான் போதியளவிற்கு வளைந்து கொடுக்கவில்லையானால் அல்லது சூழ்நிலைகள் மாறினால், அமெரிக்கா தன்னியக்கரீதியில் தடைகளை "மீண்டும் கொண்டு வரும்" நிகழ்முறைகளைத் தொடங்க முடியும் மற்றும் ஈரானுடன் மோதலை மீண்டும் முன்னெடுக்க முடியும்.

அனைத்திற்கும் மேலாக, அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவான ஒபாமாவின் வாதங்கள் அனைத்தும் அதாவது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு போர் மீது உடனடியாக மேற்செல்வதை விட ஈரானின் உள்நோக்கங்களைப் "பரிசோதிப்பதே" சிறந்தது என்ற அவரது வலியுறுத்தல் ஈரானுக்கு எதிராக முன்கூட்டிய போரை நடத்துவதற்கான வாஷிங்டனின் உரிமை என்று கூறப்படுவதை உறுதிப்படுத்துகின்றது.
*
ஈரான் உடனான மேற்கத்திய ஈடுபாட்டை, சீனா மற்றும் ரஷ்யா உடன் நெருக்கமான பங்காண்மைக்குள் இழுக்கப்படுவதிலிருந்து தெஹ்ரானைத் தடுப்பதற்கான ஒரு வழிவகையாக ஒபாமா நிர்வாகம் பார்க்கிறது. சீனா ஏற்கனவே ஈரானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது மற்றும் ரஷ்யா அதன் மிக முக்கிய இராணுவ-மூலோபாய பங்காளியாக உள்ளது
.

வாஷிங்டனின் தலைமையின் கீழ் மத்திய கிழக்கை ஸ்திரப்படுத்துவதில் ஈரானிய ஆதரவைப் அணிதிரட்டிக் கொள்ள முடியுமா என்று பார்ப்பதும் அமெரிக்காவின் கூடுதல் முன்னுரிமையாக உள்ளது. அமெரிக்காவும் ஈரானும் ஏற்கனவே ஆககுறைந்தளவில் மறைமுகமாகவேனும் ஈராக்கிய அரசாங்கத்தை ஆதரிப்பதிலும் மற்றும் ஈராக்கில் உள்ள ISIS எதிர்ப்பதில் ஈராக்கிய குர்திஷ் போராளிகள் குழுக்களுக்கு உதவுவதிலும் அணிசேர்ந்துள்ளன.  

ஒபாமா நிர்வாகம் சிரியாவுடன் ஓர் அரசியல் உடன்பாடு எட்டுவதில் அதற்கு உதவும் வகையில் ஈரானை அழுத்தமளிப்பதற்கும் அது இந்த அணுசக்தி உடன்படிக்கையைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்நடவடிக்கை அமெரிக்க நலன்களுக்கு கூடுதலாக கட்டுப்பட்ட ஒரு ஆட்சியைக் கொண்டு பஷர் அல்-அசாத்தின் பாதிஸ்டு ஆட்சியைப் பிரதியீடு செய்வதைக் காணக்கூடும். முந்தைய அமெரிக்க கொள்கையைத் தலைகீழாக்கி, ஒபாமா கடந்த வாரம் அறிவிக்கையில் சிரியா மோதலைத் தீர்க்கும் "உரையாடலின் பாகமாக" தெஹ்ரான் இருக்க வேண்டுமென அறிவித்தார்.

* நீண்டகால அர்த்தத்தில், ஒபாமாவினது ஈரானிய உத்தியின் ஆதரவாளர்கள் ஈரானை "திருப்பவும்", அதை மத்திய கிழக்கு மற்றும் மொத்த யுரேஷியாவிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு நவீன சாவடியாக மாற்றுவதற்கும் நோக்கம் கொள்கின்றனர். அந்நாட்டை ஷா ஆட்சியின் கீழ் இருந்ததைப் போல ஒருவிதமாக நவ-காலனித்துவ அடிமைப்படுத்தலுக்கு திருப்புவது என்பதே அதன் அர்த்தமாகும்

இதற்காக, ஈரானிய முதலாளித்துவ-மதவாத ஆட்சிக்குள் ஆழமான பிளவுகளைக் கிளறிவிடவும் மற்றும் சுரண்டவும் வாஷிங்டன் திட்டமிடுகிறது. ஈரானிய அரசாங்கத்தின் அதிகாரங்கள் இப்போது, குறைந்தபட்சம் 1989 இல் இருந்து வாஷிங்டன் உடன் ஒரு சமரசத்திற்காக வாதிட்டு வந்துள்ள மற்றும் நீண்டகாலமாக ஐரோப்பிய மூலதனத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள ஒரு கன்னையின் கரங்களில் இருக்கிறது (முன்னாள் ஜனாதிபதி ஹஷெமி ரஃப்சன்ஜனி மற்றும் அவரது பரிவாரங்களால், தற்போதைய ஜனாதிபதி ஹாசன் ரௌஹானியால் தலைமை கொடுக்கப்படுகிறது) என்பதை அது தெளிவாக அறிந்துள்ளது.

* ஈரானிய அணுசக்தி ஒப்பந்தம் எதிர்கால அதிர்வுகளுக்கு அடித்தளத்தை அமைப்பதுடன், அமெரிக்க வெளியுறவு கொள்கையின் முரண்பாடுகளை மட்டுமே தீவிரப்படுத்துகிறது.

ஈரானுடன் ஈடுபட்டு அதை பயன்படுத்திக் கொள்கின்ற அதேவேளையில், வாஷிங்டன் அதன் பாரம்பரிய கூட்டாளிகளுக்கு புதிய ஆயுத அமைப்புமுறைகளையும், இராணுவ மற்றும் உளவுத்துறை கூட்டு-ஒத்துழைப்பின் அதிகரிப்புகளையும் மழையென வழங்குவதன் மூலமாக அவற்றை அமைதிப்படுத்த முனைந்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் தெஹ்ரானை அச்சுறுத்துகிறது, அதையொரு வம்புசண்டைக்காரராக சித்தரிக்க நோக்கங்கொண்ட சளைக்காத அமெரிக்க ஊடக பிரச்சாரம் நிலவுகின்ற நிலையில், ஏற்கனவே அது பாரியளவில் இராணுவ தொழில்நுட்ப இடைவெளியை முகங்கொடுக்கிறது, வெறுமனே இஸ்ரேலுடன் மட்டுமல்ல, மாறாக சவூதி அரேபியா மற்றும் அதன் வளைகுடா கூட்டாளிகளுடன் தான்.

அதுமட்டுமின்றி ஐரோப்பிய சக்திகள் அமெரிக்காவுடன் போட்டியிட்டு ஈரானுடன் பொருளாதார உறவுக்குள் விடாபிடியாக நுழைவதை அமெரிக்காவால் கண்டுங்காணாமல் இருக்க முடியவில்லை. ஞாயிறன்று, ஜேர்மனியின் துணை-சான்சிலரும் SPD தலைவர் சிங்மார் காப்ரியலும் ஒரு ஜேர்மன் வணிக பிரதிநிதிகள் குழுவின் தலைமையில் ஈரானுக்கு வந்திறங்கினர். பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி லோரன்ட் ஃபாபியுஸ் அவரும் விரைவில் அங்கே செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.     

அமெரிக்க ஆளும் உயரடுக்கிடம் இருந்து ஆதரவைப் பெறுவதற்காக, ஒபாமா ஈரான் மீதான அமெரிக்க தடையாணைகளின் சமீபத்திய சுற்றை மட்டுமே நீக்குவதற்கு ஒப்புக்கொண்டிருப்பதாக வலியுறுத்தி வருகிறார். பயங்கரவாதத்தை எதிர்க்கும் பெயரில் கொண்டு வரப்பட்ட ஏனைய தடையாணைகள் நீடித்திருக்கும், அதாவது நடைமுறையில் அமெரிக்க பெருநிறுவனங்கள் ஈரானில் வணிகம் செய்வதிலிருந்து தொடர்ந்து தடுக்கப்பட்டிருக்கும் என்பதே இதன் அர்த்தமாகும்.

ஈரானிய சொத்துக்களைத் தனதாக்கிக்கொள்ளும் ஓட்டத்தில் அமெரிக்கா தோல்வியடையாமல் இருக்க வேண்டுமானால், அது நல்லிணக்கத்துடன் முன்னோக்கி ஓட வேண்டும்.  அதுவும் வாஷிங்டனின் தற்போதைய மத்திய கிழக்கு கூட்டாளிகளின் கடுமையான எதிர்ப்பைக் கடந்து அல்லது மீண்டும் மோதலுக்குத் திரும்பி ஐரோப்பியர்களும் மற்றும் ஏனையவர்களும் அதே போக்கைப் பின்தொடருமாறு கோர வேண்டும்.  
*
நடைமுறைவாத மற்றும் குறுகியகால குணாம்சம் கொண்ட பல ஏனைய மூலோபாய கணக்கீடுகளும், இப்போதைய ஈரானுடனான ஒரு உடன்படிக்கையை எட்டுவதென்ற ஒபாமா நிர்வாகத்தின் முடிவுடன் பிணைந்துள்ளதாக தெரிகிறது. இத்தகைய கணக்கீடுகளைக் குறித்து ஒருவரால் உறுதியான முடிவுகளைக் கூற முடியாது, ஏனென்றால் சம்பவங்கள் வேகமாக நகர்த்தப்பட்டு வருவதுடன், வாஷிங்டனின் கொள்கைகள் முரண்பாடுகளால் நிரம்பி உள்ளன
.

எவ்வாறிருந்த போதினும், நியூ யோர்க் டைம்ஸிற்கு கடந்த வாரம் ஒபாமா அளித்த ஒரு நீண்ட பேட்டியில் அது அதிர்ச்சிகரமாக வந்திருந்தது. ரஷ்யாவின் பலமான ஆதரவில்லாமல் தெஹ்ரானுடனான உடன்படிக்கையை எட்டியிருக்க முடியாது என்று கூறி ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை அமெரிக்க ஜனாதிபதி புகழ்ந்திருந்தார். சிரியா குறித்து பேசுவதற்கு புட்டின் சமீபத்தில் தொலைபேசியில் அழைத்தமை அவரை "ஊக்கப்படுத்தியது" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். “அது அவர்களுடன் ஆழமான உரையாடலை நடத்துவதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது" என்று ஒபாமா அறிவித்தார்.

சிரியாவின் அசாத்தை மாஸ்கோ கைவிடுவதற்கு கைமாறாக உக்ரேன் விவகாரம் மீதான பதட்டங்களைக் குறைப்பதற்கான புட்டினின் கோரிக்கைகளுக்கு சாதகமான முறையில் விடையிறுப்பது குறித்து ஒபாமாவால் பரிசீலிக்க இயலுமா? இது மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கையின் நெருக்கடி உடன் மட்டுமே பிணைந்திருக்கிறதா, அல்லது வாஷிங்டன் மற்றும் பேர்லினுக்கு இடையே அதிகரித்துவரும் பதட்டங்களுடனுமா? இது ஜேர்மனிக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை அனுப்பும் நோக்கம் கொண்டிருக்கிறதா?

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கிரீஸிற்கு இடையிலான சமீபத்திய பேரம்பேசல்களில் ஜேர்மனியின் தன்முனைப்பான பாத்திரத்திற்காக அமெரிக்க ஆளும் உயரடுக்கு திகைப்புடன் பிரதிபலிப்பை காட்டியது. அது கிரேக்க மக்கள் மீது ஏதோ கவலை கொண்டு அவ்வாறு செய்யவில்லை, மாறாக ஐரோப்பாவின் ஒழுங்குமுறைபடுத்துபவராக அதன் புதிய பாத்திரத்தை பேர்லின் துணிவாக வலியுறுத்துவதால் அவ்வாறு செய்தது.

அமெரிக்க ஆளும் உயரடுக்கு இறுதியில் ஈரான் உடன்படிக்கையுடன் முன்னோக்கி நகர தீர்மானித்தால், அதன் மிகவும் கடுமையான எதிர்ப்பாளர்களிடமிருந்து, ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து மட்டுமல்ல, ஜேர்மன், ஜப்பான் மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்தும், அதன் மேலாதிக்கத்திற்கு வரும் சவால்களை, இராணுவ வழிவகைகள் உள்ளடங்கலாக அவற்றைக் கொண்டும், தீர்மானகரமாக எதிர்கொள்வதற்குத் தன்னைத்தானே நிலைப்படுத்திக்கொள்ளும் நிலைப்பாட்டிலிருந்து அவ்வாறு செய்யும்.