சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The pseudo-left covers up for Syriza’s betrayal

போலி-இடது சிரிசாவின் காட்டிக்கொடுப்பை மூடிமறைக்கிறது

Alex Lantier
24 July 2015

Use this version to printSend feedback

பேர்லினால் கட்டளையிடப்பட்ட 900க்கும் அதிக பக்கங்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகள் மீதான புதனன்று நடந்த கிரேக்க நாடாளுமன்ற வாக்கெடுப்பை பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் விரைவாக நிறைவேற்றினார். அந்த வாக்கெடுப்பு சிப்ராஸின் சிரிசா கட்சியால் (“தீவிர இடதின் கூட்டணி”) கிரேக்க மக்கள் பேரழிவுகரமாக காட்டிக்கொடுக்கப்பட்டதைப் பரிபூரணமாக்கி உள்ளது.

ஏதோ உலகின் மிகவும் இயற்கையான கொள்கை என்பதைப் போல தோற்றப்பாட்டளவில் ஒரேயிரவில் சிரிசா சிக்கன திட்டத்தை அரவணைத்துக் கொண்டது, ஐரோப்பிய ஒன்றிய புரிந்துணர்வை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த அதன் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் ஜூலை 5 வெகுஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன திட்டத்திற்கு எதிரான 61 சதவீத "வேண்டாமென்ற" வாக்குகளை அது மிதித்து நசுக்கியது. சமூக வெட்டுக்கள், பிற்போக்குத்தனமான சட்ட "சீர்திருத்தங்கள் மற்றும் மொத்தத்தில் பத்து பில்லியன் கணக்கான யூரோ மதிப்பிலான தனியார்மயமாக்கல்களின் அதன் நிகழ்ச்சிநிரல் கிரீஸையே சீரழிக்க கூடியதாகும். அதன் விளைவுகள், ஏற்கனவே பசி, வேலையின்மை மற்றும் மருத்துவ பராமரிப்பின்மையை முகங்கொடுத்து வரும் மில்லியன் கணக்கான கிரேக்க தொழிலாளர்களுக்கு மிக பயங்கரமாக இருக்கும்.

ஜனவரி தேர்தல்களின் போது ஓர் இடது-சாரி நெருப்புப்பொறியாக சந்தைப்படுத்தப்பட்ட சிப்ராஸ், ஒரு சாமானிய சுதந்திர-சந்தை பிற்போக்குவாதி என்பதை நிரூபித்துள்ளார். பத்திரிகை பகுப்பாய்வுகள் ஏற்கனவே அவரை, 1981 இல் ஒரு தேசிய சீர்திருத்த வேலைத்திட்டத்தை கொண்டு பிரான்சின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிஸ்ட் கட்சி தலைவர் பிரான்சுவா மித்திரோன் உடன் ஒப்பிட்டு வருகின்றன. மித்திரோன் அப்போது இரண்டு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் தொழிலாள வர்க்கத்தை தாக்குவதற்கு ஒரு "சிக்கன திட்ட திருப்பத்தை" நடைமுறைப்படுத்தி, அவரது வேலைத்திட்டத்தை மறுத்தளித்தார். மித்திரோனின் பாத்திரத்தை போலவே அதேயளவிற்கு இழிவார்ந்து, அவரது கொள்கைகளின் மிகத் தெளிவான வெளிப்படைத்தன்மையில், அவருக்கான மற்றொரு துல்லியமான ஒப்பீடாக இருப்பவர், மற்றொரு பிரெஞ்சு அரசியல்வாதி பியர் லவால் (Pierre Laval) ஆவார், இவர் பெயரளவிற்கான ஒரு சோசலிஸ்ட் என்பதிலிருந்து நாஜி ஆக்கிரமிப்பின் போது மார்ஷல் பிலிப் பெத்தனின் வலதுகரமாக சேவை செய்ய சென்றார்.

கிரீஸில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கொந்தளித்துவரும் கோபத்தைத் தணிக்கும் முயற்சியில், சிரிசாவின் ஒரு பிரிவு மன்னிப்பதற்குரிய காரணங்களை ஜோடிக்கவும், அரசியல்ரீதியில் மறுகுழுவாக்கம் செய்யவும் மற்றும் அவர்களது காட்டிக்கொடுப்பிலிருந்து எவ்வித படிப்பினைகளையும் பெறுவதைத் தடுக்கவும், இடது அதிருப்தியாளர்களாக காட்டி வருகின்றது. “உடன்பாட்டு-புரிந்துணர்வின் மீது சிரிசா இளைஞர் அமைப்பின் விமர்சனமும், சிரிசாவின் எதிர்காலமும்" என்பது இத்தகைய அயோக்கியர்களிடமிருந்து வரும் ஓர் அறிக்கையாகும். சிரிசா அம்பலப்படுவதினால், ஸ்பெயினின் பெடெமோஸ் மற்றும் பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற சர்வதேச அளவில் அவர்கள் முன்னிலைப்படுத்தி வரும் அதேபோன்ற அமைப்புகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக, தன்னைத்தானே பெரும்பிரயத்தனங்களில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஒரு போலி-இடது இதழான International Viewpoint இல் அந்த அறிக்கை பிரசுரிக்கப்பட்டது.

சிரிசா இளைஞர் (SY) அமைப்பு, சிப்ராஸின் கொள்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் விளைவு என குற்றஞ்சாட்டி தொடங்குகிறது. அது எழுதுகிறது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான சிரிசாவின் ஜூலை 13 உடன்படிக்கை "ஐயத்திற்கிடமின்றி கிரீஸில் தீவிர இடது சக்திகளுக்கு ஒரு மிகப்பெரிய தோல்வியாகும். கடன்வழங்குனர்களால் கொண்டு வரப்பட்ட முன்னுதாரணமற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதி, அரசாங்கத்தை ஒரு திணறடிக்கும் அரசியல் முட்டுசந்திற்குள் கொண்டு சென்ற நேரடியான தொடர் மிரட்டல் நடவடிக்கைகளில் சமீபத்திய அத்தியாயம் மட்டுமேயாகும்,” என்கிறது.

கிரீஸில் சிரிசாவிற்கு எதிராக அங்கே எந்தவித "ஆட்சிக்கவிழ்ப்பு சதியும்" இருக்கவில்லை. சிப்ராஸ் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்தாலோசித்துக் கொண்டே, திட்டமிடல்கள், பேரம்பேசல்கள் மற்றும் கடுமையான சிக்கன திட்டத்தை நிறைவேற்றுவதை மேற்பார்வையிட்டு கொண்டே முழுவதிலுமாக அதிகாரத்தில் இருந்தார். எந்த திட்டத்தை எதிர்ப்பதற்காக சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டதோ, அனுமானிக்கத்தக்க விதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அதே சிக்கன நடவடிக்கைகளை வலியுறுத்திய போது, முதலில் பெப்ரவரியில் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன புரிந்துணர்வை நீண்டகாலத்திற்கு ஏற்றுக்கொண்டதன் மூலமாகவும், பின்னர் ஜூலையில் புதிய சிக்கன முறைமைகளை திணித்ததன் மூலமாகவும் சிரிசா மீண்டும் மீண்டும் நிபந்தனையின் பேரில் மண்டியிட்டது.

போலி-இடதின் அறிக்கைகளில் எப்போதும் இருப்பதைப் போலவே, சிரிசா இளைஞர் அமைப்பு அதன் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு மூடிமறைப்பை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட, புரிந்துகொள்ளவியலா பிதற்றல்களுக்கு பின்னால் ஒளிந்துகொள்ள முயல்கிறது. அது அறிவிக்கிறது, “கடன்வழங்குனர்களின் விருப்பத்தேர்வால் மட்டுமே தீர்மானிக்கப்பட்ட பேரம்பேசல்களின் விளைவுக்குப் பொருள்விளக்கம் அளிப்பதென்பது எவ்வாறிருந்தபோதினும் அரைப்பொய்யாகவே இருக்கும். யூரோ மண்டலத்தினுள் உள்ள சக்திகளது தொடர்புகளைப் பற்றிய குறைமதிப்பீட்டைக் குறித்தும், பகுத்தறிவார்ந்த வாதங்களைக் கொண்டு அந்த 'அமைப்புகளை' ஒரு 'பரஸ்பர ஆதாயத்திற்கு' சாதகமாக இணங்குவித்திருக்கும், அதுமட்டுமின்றி கிரேக்கம் வெளியேறும் [Grexit] என்ற அச்சுறுத்தலும் நமது முன்மொழிவு மேலோங்குவதில் ஒரு ஊக்குவிக்கும் பாத்திரம் வகித்திருக்கும் என்ற அசைக்கமுடியாத தீர்மானம் குறித்தும் நாம் எதிர்மறையானரீதியில் மதிப்பீடு செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். வேண்டாம் என்று கூறுவதற்கேற்ற ஒரு மாற்றீட்டு திட்டம் இல்லாமல் இருந்ததில் இத்தகைய புள்ளிகள் அனைத்தும் உறுதியாக பங்களித்தன இது அனைத்தும் நாம் அரசியல்ரீதியில் கைப்பற்றப்படுவதற்கு ஒரு தீர்க்கமான காரணியாக இருந்தது,” என்கிறது.

சிப்ராஸ் அரசாங்கத்தின் கொள்கை, அடித்தளமற்றவை என்று நிரூபிக்கப்பட்ட தவறுக்கிடமான நம்பிக்கையின் மற்றும் பிழையான கருத்துக்களின் விளைபொருளாக இருந்ததாக சிரிசா இளைஞர் அமைப்பு மிக சாதாரணமாக குறிப்பிடுகிறது. ஆனால் உண்மையில் சிரிசாவின் கொள்கைகள் அந்த அமைப்பின் இயல்பிலேயே வேரூன்றியுள்ள திட்டமிட்ட ஏமாற்றுத்தனங்களின் விளைபொருளாகும். அது தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமான முறைமைகளை நடைமுறைப்படுத்துவதற்காகவும், கிரீஸ் மற்றும் ஐரோப்பாவில் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்காகவுமே முழு தயாரிப்போடு அதிகாரத்திற்கு வந்தது. கிரீஸிற்குள் சிரிசா இளைஞர் அமைப்பு மற்றும் இடது அரங்கம் (Left Platform) போன்ற சக்திகள், இத்தகைய திட்டங்களை மூடிமறைப்பதற்காகவும் மற்றும் சிரிசாவின் வர்க்க குணாம்சத்தை விளங்கிக்கொள்ள முடியாதவாறு செய்வதாகவும் பாத்திரம் வகித்தன.

அனேகமாக மிகவும் விளக்கமான அறிக்கை ஒன்றில் சிரிசா இளைஞர் அமைப்பு எழுதுகிறது, “பேச்சுவார்த்தைகளின் நுட்பமான அம்சத்தின் மீதிருந்த" சிரிசாவின் "நீண்டகால விருப்பம், அதாவது நிச்சயமாக கிடைக்கும் என்று கருதப்பட்ட ஒரு 'கௌரவமான சமரசத்திற்கான' காத்திருப்பு, உற்சாகம் கொள்வதற்கும் மற்றும் இயக்கவாதத்திற்கும் எந்த இடமும் கொடுக்கவில்லை, நிபுணத்துவம்பெற்றோர்களது மேலாதிக்கத்திற்கு எதிராக சமூக பங்களிப்பை உருவாக்கி விட்டிருந்தது…" என்றது.

இது எதை அர்த்தப்படுத்துகின்றது? சிப்ராஸூம் சிரிசாவும் அவர்களது விவாதங்களை சரம்சரமாக கட்டமைத்தன, குறிப்பிட்ட காலத்திற்கு அவற்றைக் கொண்டு விளையாடின, மக்கள் எதிர்ப்பை நிலைகுலைய செய்ய அவர்களால் ஆனமட்டும் அனைத்தையும் செய்தனர்.

பிரமாண்டமானளவில் வேண்டாமென்ற" வாக்குகள் வந்திருப்பதால், தொழிலாள வர்க்கமும் கிரேக்க மக்களின் வறிய அடுக்குகளும் போராடுவதற்கு விருப்பமின்றி இருந்தனர் என்று யாரும் வாதிட முடியாது. அந்த "வேண்டாமென்ற" வாக்குகள் பரந்த ஆதரவையும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் உத்வேகத்தையும் தூண்டிவிட்டது. ஆனால் தொழிலாள வர்க்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சிக்கன திட்டத்திற்கு எதிராக ஒன்றுதிரட்டுவதை சிரிசா உறுதியோடு எதிர்த்தது என்பதே பிரதான தடையாக உருவாகி இருந்தது.

கிரேக்க முதலாளித்துவம் மற்றும் செல்வச்செழிப்பான மத்தியதர வர்க்க பிரிவுகளது நலன்களைப் பிரதிபிலித்துக் கொண்டே, சிரிசா, ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு முறிவைத் தவிர்க்கவும் மற்றும் யூரோ செலாவணியைத் தக்கவைக்கவும் பெரும் பிரயத்தனத்துடன் முயன்றது. நடைமுறையளவில் அது எந்தவித நிபந்தனைகளின் மீதும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஓர் உடன்படிக்கையை ஏற்கவும் மற்றும் அதை தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்கவும் தயாராக இருந்தது.

எவ்வாறிருந்தபோதினும் தொழிலாள வர்க்கத்தின் மீது கடுமையாக தாக்குதல்களைக் கொண்டு சென்ற ஐரோப்பிய ஒன்றிய மற்றும் கிரேக்க நிபுணத்துவம்பெற்றோர்களது சிரிசா ஏன் தொந்தரவு செய்யாமல் இருந்தது என்பதைக் குறித்து சிரிசா இளைஞர் அமைப்பு மௌனமாகி விடுகிறது. அது சிரிசாவின் "செயல்திறனற்ற" நாடாளுமன்ற குழுவை, “அக்கட்சியின் முன்னணி அமைப்புகளது அரசியல் ஊட்டமின்மையை", "அக்கட்சியின் (மற்றும் இளைஞர் அமைப்பின்) இயங்குமுறையினது இலாயக்கற்றத்தன்மையையே" கூட சாடுகிறது. ஆனால் சிரிசாவின் அரசியல் போக்கின் அடித்தளத்தில் எதுவும் மாற்ற வேண்டியதில்லை என்று அது வலியுறுத்துகிறது.

சிரிசா அடித்தளமாக கொண்டுள்ள ஓர் அரசியல் மாதிரி, எண்ணற்ற போலி-இடது மற்றும் குட்டி-முதலாளித்துவ அமைப்புகளுக்கு பொதுவான ஒன்றாகும்: அதாவது ஒரு கவர்ச்சிகரமான ஊடக தனிமனிதவியல்பைக் கொண்டவர்களையும், தவிர்க்கமுடியாதரீதியில் வலதுசாரி அயோக்கியர்களையும் சுற்றி ஒரு கட்சியைக் கட்டுவதாகும். ஸ்பெயினின் பெடெமோஸ் கட்சியில் பப்லோ இக்லெஸியாஸ் (Pablo Iglesias) வகித்த பாத்திரத்தை, பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியின் ஒலிவியே பெசன்ஸெநோ வகித்த பாத்திரத்தை, அல்லது இத்தாலியில் ஐந்து நட்சத்திர (Five-Star) இயக்கத்தின் பெப்பே கிறில்லோ (Beppe Grillo) வகித்த பாத்திரத்தை சிரிசாவிற்குள் ஆபாச அலெக்சி" வகிக்கிறார். இத்தகைய அமைப்புகளின் கொள்கைகள், அவை தேவைப்படும் போது நிதியியல் மூலதனத்தை சுற்றி திருப்பிவிடப்பட்டு மற்றும் மோசடி உபாயங்களுக்குள் உட்படுத்திகொள்ளப்படக்கூடியவை.

சிரிசா அதிகாரத்திற்கு வந்ததால் பிரதிநிதித்துவம் பெற்ற "வரலாற்று வெற்றியை", ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய சிக்கன புரிந்துணர்வை சிரிசா திணிக்கையில் ஏற்படும் துணைவிளைவுகளில் இருந்து காப்பாற்றுவதைக் குறித்து விவாதிக்க சிரிசாவிற்குள் அவசர கூட்டங்களை உடனடியாக நடத்துவதற்கு சிரிசா இளைஞர் அமைப்பு (SY) அழைப்புவிடுக்கிறது.

அவர்கள் எழுதுகிறார்கள், அந்த கூட்டங்களை நடத்துகையில், சிரிசா "தனிப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக அதன் எல்லா அங்கத்தவர்களையும் பாதுகாக்க வேண்டும், அது இடதின் கோட்பாடுகள் மற்றும் மதிப்புகளுக்கு அவர்களது அணுகுமுறையியலில் இருந்து அன்னியப்பட்டதாகும். இந்த உள்ளடக்கத்தில், வெகுஜன வாக்கெடுப்பின் முடிவு மீதான பிரதான முக்கியத்துவத்தை ஒதுக்கிவிடுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விடயத்தில், மக்களுக்கு இடமளிக்க விரும்பியதன் மூலமாக, அதீத மிரட்டல்கள், நிதியியல் மூச்சுத்திணறடிப்பு, வங்கி மூடல்கள், ஊடக வெறித்தனம் ஆகியவற்றிற்கு எதிராக அரசாங்கம் மக்களை முன்னிலைக்குக் கொண்டு வருவதில் வெற்றிபெற்றுள்ளது… [அது] ஒரு வெற்றிகரமான இயக்கவியலை அதற்குள்ளேயே கொண்டுள்ளது.”

சிரிசா அதிகாரத்திற்கு வந்தமை ஒரு வரலாற்று வெற்றியல்ல, மாறாக ஒரு வரலாற்று மோசடித்தனமாகும், சிரிசா இளைஞர் அமைப்பு (SY) வெறுமனே அந்த மோசடியைத்தான் மறைத்து வருகிறது. சிரிசாவின் முந்தைய நடவடிக்கைகள் மீது எந்த விமர்சனமும் அங்கே இருக்கக்கூடாது என்று அது வலியுறுத்துகிறவாறே, அது சிப்ராஸின் வெகுஜன வாக்கெடுப்பை மற்றொரு வெற்றியாக முன்னிறுத்துகிறதுஅந்த வாக்கெடுப்பை தொடர்ந்து தான் உடனடியாக அவர் கிரேக்க மக்கள் மீது பாரிய சிக்கன நடவடிக்கைகளை திணித்தார்.

சிரிசா இளைஞர் அமைப்பின் வாதங்கள் போலி-இடதிற்கு ஒரு உதாரணமாகும், இவர்கள் அரசியல்ரீதியிலான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்க எழுச்சியை தடுக்கவும், பெருந்திரளான மக்கள் மீது எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு அவர்களது செல்வாக்கை பேணுவதற்கும், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அதைக் கடந்தும் அதேபோன்ற அரசாங்கங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் பெரும் பிரயத்தனம் செய்கின்றனர். கிரேக்க மக்களை அவர்கள் காட்டிக்கொடுத்தமை சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கையாகும், ஸ்பெயினில் உள்ள பெடெமோஸ், பிரான்சின் இடது முன்னணி அல்லது அதுபோன்ற எத்தனையோ போலி-இடது குழுக்களின் கொள்கைகளைப் பொறுத்த வரையில் அவை அதிகாரத்திற்கு வந்தாலும் அவையும் இதையே தான் செய்யும்.

கிரீஸில் காட்டிக்கொடுப்பின் தாக்கத்திலிருந்து மீள்வது என்பது நிதிய மூலதனத்தின் குட்டி-முதலாளித்துவ, மார்க்சிச-விரோத அமைப்புகளாக உள்ள போலி-இடதின் வர்க்க மற்றும் அரசியல் பாத்திரத்தை கடுமையாக அம்பலப்படுத்துவதன் மூலமாக மட்டுமே சாத்தியமாகும்.