சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The return of the “German question”

ஜேர்மன் கேள்வியின்" மீள்வரவு

By Peter Schwarz
22 July 2015

Use this version to printSend feedback

ஜேர்மன் கேள்வி மீண்டும் வந்துள்ளது", நியூ யோர்க் டைம்ஸ் கடந்த வார தொடக்கத்தில் எழுதியது, ஜேர்மனியை எவ்வாறு கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது, ஐரோப்பாவை அது மேலாதிக்கம் கொள்வதிலிருந்து எவ்வாறு தடுப்பது, இரண்டாம் உலக போரில் செய்ததைப் போல எவ்வாறு அதை அழிப்பது என்ற கேள்வியே இதன் அர்த்தமாகும். கடந்தவாரம் முழுவதும், பிரெஞ்சு, இத்தாலிய, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க பத்திரிகைகளில் ஐரோப்பா மீது மேலாதிக்கம் கொள்ள முயலும் மற்றும் அதை பேர்லினின் கட்டுப்பாட்டிற்குள் உட்படுத்த முயலும் ஜேர்மன் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டி எண்ணற்ற கட்டுரைகள் வந்தன.

பழமைவாத பிரெஞ்சு செய்தியிதழ் Le Figaro எழுதுகையில், பிரான்ஸ் மீது ஒரு "கொந்தளிப்பான ஜேர்மன்-விரோத மண்டலம்" மூடி வருவதாக குறிப்பிட்டது. அது தொடர்ந்து குறிப்பிடுகையில், பிரெஞ்சு அரசியல் வர்க்கத்தின் ஒரு பாகம், இடது முன்னணியில் உள்ள இறையாண்மைவாதிகள் முதற்கொண்டு, சோசலிஸ்டுகள் உள்ளடங்கலாக, [கோலிச] குடியரசு கட்சி வரையில்,  ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய அதன் அணுகுமுறைக்காக ஜேர்மனியை தாக்கி வருகின்றனர், என்றது.   

இடதும் வலதும் "ஜேர்மன் கட்டளைகளைக்" கடுமையாக தாக்கி இருந்ததாக அந்த பத்திரிகை எழுதியது. முன்னதாக ஆயுதபலத்தால் அடக்க தேவைப்பட்டிருந்த சிறிய அங்கத்துவ அரசுகள் மீது" ஜேர்மன் அரசாங்கம் நிபந்தனைகளைத் திணித்து வருவதற்காக Le Figaro அதுவே கூட குற்றஞ்சாட்டி இருந்தது. 

இத்தாலிய ஊடகங்களில், அங்கே அரசு-நடத்தும் சித்திரவதை மற்றும் ஜேர்மானிய அதிகாரப்பித்து குறித்த உரையாடல் இருந்தது. 

இலண்டனின் பைனான்சியல் டைம்ஸில், வொல்ஃப்காங் முன்சௌவ் குறிப்பிடுகையில் "நாம் அறிந்திருந்த யூரோ மண்டலத்தை அழித்து வருவதற்காக மற்றும் ஒரு ஜனநாயக அரசியல் ஒன்றியத்தை நோக்கிய ஒரு படியாக ஒரு நிதிய கண்காணிப்பு ஒன்றியத்தின் கருத்தைக் கலைத்து வருவதற்காக" கிரீஸின் கடன்வழங்குனர்களைக் குற்றஞ்சாட்டினார். இவ்வாறு செய்கையில் அவர்கள் 19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த தேசியவாத ஐரோப்பிய அதிகாரத்திற்கான மோதல்களை அவர்கள் திரும்ப கொண்டு வருகின்றனர், என்பதையும் சேர்த்துக் கொண்டார்.    

Telegraph இல், இலண்டன் மேயர் போரிஸ் ஜோன்சன் கூறுகையில், அதன் மூர்க்கத்தனம் மற்றும் கடுமையில் மூச்சடைக்க வைப்பதாக உள்ள ஓர் ஆவணத்தை" "ஜேர்மனியர்கள்" கொண்டு வந்திருப்பதாக குற்றஞ்சாட்டி டோரி வலதிற்காக பேசினார். கிரீஸ் ஒரே ஐரோப்பிய செலாவணியில் நிலைத்திருக்க விரும்பிறதென்றால், ஏதென்ஸ் தன்னைத்தானே-தாழ்த்திக்கொண்டு நாயை போல மண்டியிட வேண்டும் இத்தகைய சொய்பிள இன் பரிந்துரைகள் கொடுங்கோல்ரீதியானதாக உள்ளன. அவை கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும், என்பதையும் சேர்த்துக் கொண்டார். 

"ஓர் அருமையான ஜேர்மனி ஓர் அரை நூற்றாண்டில் திரட்டியிருந்த அரசியல் மூலதனம் அனைத்தையும்இதைவிட 'தெளிவாக' நான் கூற விரும்புவது, அதன் தலைசிறந்த அரசியல் உணர்வையும் மற்றும் தேசியத்தைக் கடந்த மனோபாவ தன்மையையும்" ஜேர்மன் அரசாங்கம் "ஒரே இரவில் சூதாட்டத்தில்" இழந்துவிட்டதாக பிரிட்டனின் கார்டியனுக்கு சமூகவியலாளர் Jürgen Habermas தெரிவித்தார்.

கிரேக்க வெளியேற்றம் மீதான அச்சுறுத்தல்

கிரேக்க அரசாங்கத்தை ஜேர்மனி பலவந்தமாக அவமானப்படுத்துவதே இந்த கடுந்தாக்குதலுக்கான காரணமாக உள்ளது. ஏதென்ஸ் பாரீஸ் உடன் இணைந்து வரைந்தளித்திருந்த 13 பில்லியன் யூரோவிற்கு அதிக மதிப்பிலான கடுமையான சிக்கன முறைமைகளின் ஒரு முன்மொழிவை பேர்லின் ஏற்க தயாராக இருக்கவில்லை. மேர்க்கெல் அரசாங்கம் கூடுதலாக கோரியது, அதில் 50 பில்லியன் யூரோ மதிப்பிலான அரசு சொத்துக்களை ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு அறக்கட்டளை நிதியத்திற்கு மாற்றுவது மற்றும் கிரீஸை யூரோவிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றும் அச்சுறுத்தலும் உள்ளடங்கும்.

வாரயிதழ் Der Spiegel  இன் நடப்பு பதிப்பு குறிப்பிடுகையில், கிரீஸ் வெளியேறுவதைத் தவிர்க்கவியலாததாக செய்யும் வகையில், கிரேக்க அரசாங்கத்தால் ஏற்று கொள்ள முடியாதளவிற்கு மிக கடுமையான நிபந்தனைகளை வேண்டுமென்றே ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிள முறைப்படுத்தி இருந்தார். கிரேக்க அரசாங்கத்தின் தலைவரும், பிரதம மந்திரியும் மற்றும் சிரிசா தலைவருமான அலெக்சிஸ் சிப்ராஸ் எவ்விதத்திலேனும் அடிபணிவார் என்ற உண்மையை ஜேர்மன் நிதி மந்திரி கணிப்பிட்டிருக்கவில்லை.      

யூரோ மண்டலத்திலிருந்து கிரீஸின் வெளியேற்றம் பேசக்கூடாத ஒரு விடயமாக இருந்தது, பாரீஸ் மற்றும் ரோம் ஆல் அதை சகித்துக்கொள்ள முடியவில்லை. கிரீஸ் வெளியேற்றம் ஒரு முன்மாதிரியை அமைக்கும் என்பதோடு, அது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ மண்டலத்தின் குணாம்சத்தை முற்றிலுமாக மாற்றிவிடும். ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையிலோ அல்லது பிரதான முடிவுகளின் அடிப்படையிலோ அமைக்கப்பட்டுள்ள, குறைந்தபட்சம் வடிவத்தில், அரசுகளின் ஒரு கூட்டம், ஜேர்மனியால் மேலாதிக்கம் செலுத்தப்படும் ஒரு வலுவிழந்த கூட்டணியாக மாறிப்போகும்.

அதன்பின்னர் யார் யூரோ மண்டலத்தைச் சார்ந்திருக்கலாம், யார் சார்ந்திருக்க முடியாது என்பதை பேர்லின் தான் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும். மேலும் அது அதிகரித்துவரும் சமூக பதட்டங்களுக்கு முன்னால் அரசியல் உபாயங்களுக்கு இடம் வைக்காமல், பிரெஞ்சு, இத்தாலிய மற்றும் ஏனைய அரசாங்கங்கள் மீது ஜேர்மன் விதிமுறைகளுக்கு உட்பட்டு சமர்பிப்பதற்குரிய வரவுசெலவு திட்டக்கணக்கு பிரச்சினைகளோடு அழுத்தத்தை அதிகரிக்கலாம்.   

இந்த காரணத்திற்காக தான், யூரோ உச்சி மாநாட்டுக்குப் பின்னர், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டு கிரேக்க பிரதம மந்திரி விடயத்தில் ஜேர்மனியின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்காக இரவு முழுவதும், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் டோனால்டு டஸ்க் உடன் இணைந்து வேலை செய்திருந்த போதினும் கூட, அவர் கிரீஸ் வெளியேறுவதை தடுத்து ஐரோப்பிய ஐக்கியத்தைக் காப்பாற்றிய ஒரு "சமரசத்தின்" வடிவமைப்பாளராக தன்னைத்தானே காட்டிக்கொண்டார்.

ஜேர்மனி வல்லரசு அரசியலுக்கு திரும்புதல்

ஜேர்மன் ஆளும் வர்க்கம் அதன் ஆக்ரோஷமான மற்றும் இராணுவவாத பாரம்பரியங்களுக்குத் திரும்பி வருவதை உலக சோசலிச வலைத்தளமும், ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சியும் (Partei für Soziale Gleichheit) எச்சரித்து வந்துள்ளன.

செப்டம்பர் 2014இல், ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சியின் தீர்மானம் ஒன்று குறிப்பிட்டது: முன்னர் இருமுறை உலகை படுபாதாளத்தில் தள்ளிய, அந்நாட்டின் ஆளும் உயரடுக்குகள், மீண்டும் ஒருமுறை 'ஜேர்மன் தலைமைக்காக' (Führung) அழைப்பு விடுப்பதுடன், இராணுவ வன்முறை ஊடாக அவர்களது ஏகாதிபத்திய நலன்களை அடைவதற்கு தயார் செய்து வருகின்றன நாஜி குற்றங்களின் கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனியின் தோல்விக்குப் பின்னர், ஜேர்மன் ஆளும் வர்க்கமானது கெய்சர் பேரரசு மற்றும் ஹிட்லரின் ஏகாதிபத்திய வல்லரசு அரசியலை மீண்டுமொருமுறை ஏற்று வருகிறது.

ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சியும் (PSG), அதன் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பும் (IYSSE) அந்த கொள்கைக்கு வக்காலத்துவாங்கிய மற்றும் அதை சித்தாந்தரீதியில் நியாயப்படுத்திய அரசியல்வாதிகள், இதழாளர்கள் மற்றும் பேராசிரியர்களைப் பகிரங்கமாக விமர்சித்ததற்காக அவை கடுமையாக தாக்கப்பட்டன. சமீபத்திய வாரங்களில், ஊடகங்கள் IYSSE க்கும் மற்றும் "முன்ங்லெர் வாட்ச்" வலைப்பதிவுக்கும் எதிராக பட்டவர்த்தனமாக ஒரு பழிவாங்கும் நடவடிக்கையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன, ஏனென்றால் அவர்கள் ஹம்போல்டு பேராசிரியர்கள் ஹெர்பிரட் முன்ங்லெர் மற்றும் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கியை ஜேர்மன் வல்லரசு அரசியலின் பாதுகாவலர்களாக அம்பலப்படுத்தி உள்ளனர். இந்த வசைபாடும் பிரச்சாரம் ஜேர்மன் வல்லரசு அரசியலை மற்றும் அதன் சித்தாந்த முன்னோடிகளை எதிர்க்க துணியும் எவரொருவரையும் பீதியூட்டவும், அதுபோன்ற விமர்சனங்களை எவ்வித நிஜமான அடித்தளங்களும் இல்லாத வதந்திகள் மற்றும் சூழ்ச்சிகள் என்பதாக உதறிவிடவும் நோக்கம் கொண்டுள்ளது.

ஆனால் இப்போது "ஜேர்மன் கேள்வியின்" மீள்வருகை சர்வதேச ஊடகங்களில் ஒரு மைய பிரச்சினையாக மாறியுள்ளது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் கெய்ச வில்ஹெம் மற்றும் அடோல்ப் ஹிட்லரின் கீழ் செய்ததைப் போலவே உலக சக்தியாக அது பாத்திரம் வகிப்பதற்காக அந்நாட்டின் ஆளும் உயரடுக்குகள் ஐரோப்பா மீது மேலாதிக்கம் கொள்ள முயன்று வருகின்றன என்பது, சமீபத்திய நாட்களின் சம்பவங்களுக்குப் பின்னர், இனியும் மறுக்க முடியாததாக மாறிவிட்டது.

அரசாங்கம் மற்றும் அரசியல் கட்சிகளுக்குள் கணிசமான அளவு பதட்டங்களுக்கு இட்டுச் சென்றுள்ள இந்த நோக்குநிலையின் முன்னணி சார்பாளர்களில் நிதி மந்திரி சொய்பிள மற்றும் அரசியல் விஞ்ஞானி முன்ங்லெர் உள்ளனர்.

கிரேக்க பிணையெடுப்பு பொதியின் மீது ஜேர்மன் நாடாளுமன்ற (Bundestag) வாக்கெடுப்பில் ஏறக்குறைய 65 கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் சான்சிலரைப் பின்தொடர மறுத்தனர், இது முன்னொருபோதும் இல்லாத மிகப்பெரிய எதிர்ப்பாகும். அவர்களது "வேண்டாமென்ற" வாக்கு ஒவ்வொன்றும் கிரீஸ் வெளியேற்றத்திற்கான  ஒரு வாக்காக இருந்தது, இதற்கு தான் சொய்பிள தொடர்ந்து வக்காலத்துவாங்குகிறார், அதுபோன்றவொரு நகர்வை இப்போதைக்கு நிராகரிக்கின்ற மேர்க்கெலை அவர் உத்தியோகப்பூர்வமாக ஆதரிக்கின்ற போதினும் அதை அவர் செய்கிறார்.

ஜேர்மன் தலைநகரில் உள்ள நன்கு-விபரமறிந்த இதழாளர்களின் கருத்துப்படி, கிறிஸ்துவ ஜனநாயக நாடாளுமன்ற குழுவின் பெரும்பான்மை சொய்பிள இன் பின்னால் நிற்கிறது. தற்போதைக்கு மேர்க்கெலின் சான்சிலர் பதவியை அச்சுறுத்த வேண்டாம் என்பதற்காக மட்டுமே பலர் "ஆம்" என்று வாக்களித்திருந்தனர். இப்போது "அவர் அருகில் இருக்கும் இரண்டாவது சான்சிலராக" சொய்பிள ஐ அப்பெண்மணி கொண்டுள்ளார் என்று குறிப்பிட்டு, அந்த வாக்குகளை மேர்க்கெலின் சர்வ வல்லமை முடிந்துவிட்டதாக" Süddeutsche Zeitung பத்திரிகை கருத்தில் எடுத்தது.

சொய்பிள "ஒரு வேறுபட்ட, இன்னும் செயல்திறம் கொண்ட, இன்னும் நெறிப்பட்ட ஐரோப்பாவை" விரும்புகிறார் என்று அதே பத்திரிகையில் Heribert Prantl எழுதுகிறார். கிரீஸை ஒரு முன்னுதாரணமாக ஆக்கி, அதேநேரத்தில் தற்போதைய விதிமுறைகளை வைத்திருக்க விரும்பாத எல்லா நாடுகளுக்கும், சான்றாக இத்தாலி, ஒரு பாடம் கற்பித்து, யூரோ மண்டலத்தை ஸ்திரப்படுத்துவதே" கிரீஸ் வெளியேற்றம் குறித்த அச்சுறுத்தலின் நோக்கமாக இருந்தது.

தேசிய வரவுசெலவு திட்டத்தை கடுமையாக கட்டுப்படுத்தும் ஒரு ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தலைவரை" நிறுவ, நிதி மந்திரி சில வேளைகளில் அறிவுறுத்தி உள்ளார் என்பதைக் குறிப்பிட்டு, Prantl அந்த முன்மொழிவை "ஒரு விதமான ஜனநாயக சர்வாதிகாரம்" என்று குறிப்பிடுகிறார். அங்கே "ஐரோப்பாவில் ஜனநாயகம் குறைவாக இருக்கலாம், ஆனால் அது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கூடுதலான நெறிமுறைகளைக் கொண்டு வரும், என்கிறார்.

சொய்பிள மற்றும் அவரது அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் ஊடங்களும் இவ்விதத்தில் ஜேர்மனியால் மேலாதிக்கம் செய்யப்படும் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் ஒரு ஐரோப்பாவிற்காக மற்றும் பேர்லினின் வல்லரசு அரசியலுக்கு ஒரு தளமாக சேவை செய்யும் ஒரு ஐரோப்பாவிற்காக போராடி வருகின்றனர். சொய்பிள ஏற்கனவே 1994 இல் சொய்பிள-லாமர்ஸ் ஆய்வறிக்கை என்றழைக்கப்படுவதில் மைய ஐரோப்பா" (core Europe) என்ற தலைப்பின் கீழ் இந்த கருத்துருவை அபிவிருத்தி செய்திருந்தார். அந்நேரத்தில், அவர் ஜேர்மனியால் உறுதியாக நங்கூரமிடப்பட்ட ஐரோப்பிய ஒன்றியமாக, அதைச்சுற்றி ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவீனமாக குழுவாகும் வகையில் அதை சுருக்குவதற்கு அவர் அறிவுறுத்தினார்.

ஹெர்பிரட் முன்ங்லெரும் இந்த நோக்கத்தை ஊக்குவிக்கிறார். மத்திய அதிகாரம் (Power in the Middle) என்ற அவரது சமீபத்திய நூலில் அவர் முறையிடுகையில், ஜேர்மனி ஐரோப்பாவில் "ஒழுங்குமுறைப்படுத்துவராக" பாத்திரம் ஏற்குமாறு கோருகிறார். இந்த வார்த்தையே சரியா சொய்பிள இன் நோக்குநிலையோடு பொருந்துகிறது என்பதோடு, அது ஊடகங்களிலும் மற்றும் அரசியல் வட்டாரங்களிலும் அதிகரித்தளவில் பிரபலமடைந்துள்ளது.

குறைந்த உரிமைகள், ஆனால் கடமைப்பாடுகளும் குறைவாக கொண்ட" இரண்டாவது மற்றும் மூன்றாவது வளைய குழுக்களை ஒரு "மத்திய ஐரோப்பாவைச்" சுற்றி அமைக்கலாம் என்பதற்காக மிக சமீபத்திய எண்ணற்ற பேட்டிகளில் முன்ங்லெர் வாதிட்டுள்ளார். மையத்தில், அவர் ஜேர்மனியை, பெனிலுக்ஸ் நாடுகளை, பிரான்ஸை சாத்தியமானால் இத்தாலியையும் உள்ளடக்குகிறார்.

ஜேர்மனியால் மேலாதிக்கம் செய்யப்படும் ஒரு ஐரோப்பாவிற்கு வக்காலத்துவாங்குபவர்கள் ஓர் உலக சக்தியாக ஜேர்மனியின் பாத்திரத்திற்கு ஒரு முன்நிபந்தனையாக கிரீஸை மற்றும் ஐரோப்பாவை ஒழுங்குமுறைப்படுத்துவதைப் பரிசீலிக்கிறார்கள். இதை Jochen Bittner மிகத் தெளிவாக வாரயிதழ் Die Zeit இல் வெளிப்படுத்தி உள்ளார். கிரீஸைப் போன்ற "ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பிரச்சினையில் இந்தளவிற்கு அதிக அரசியல் சக்தியை" ஐரோப்பிய ஒன்றியம் "மீண்டும் ஒருபோதும்" செலவிடக்கூடாது என்று அவர் எழுதுகிறார். அது "நிறைய முக்கியமான விடயங்களைச் செய்ய" வேண்டியுள்ளது. அங்கே "பெரும் சவால்களுக்குரிய இடமும் நேரமும்" இருக்கின்றன. மத்தியத்தரைக்கடலைச் சுற்றி சிதைந்து போயிருக்கும் அரசு கட்டமைப்புகள், வரலாற்றுரீதியான அளவில் அகதிகளின் உள்வரவு, ஒரு பழிவாங்கத்துடிக்கும் ரஷ்ய அரசாங்கம் மற்றும் ஆசியா உடனான ஒரு போட்டித்தன்மைமிக்க பந்தயம், என இவற்றையும் அவர் அவற்றோடு சேர்த்துக் கொள்கிறார்.      

Holger Steltzner உம் இதே பாணியில் Frankfurter Allgemeine Zeitung பத்திரிகையில் வாதிடுகிறார். கிரேக்க நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலாயக்கற்றத்தன்மை பிணையெடுப்பின் ஒரு மத்திய விவாதத்திற்கு, அதாவது  உலக ஐரோப்பாவின் அரசியல் அதிகார உரிமைகோரலுடன் முரண்பட்டு நிற்கிறது, என்று அவர் எழுதுகிறார்.   

அமெரிக்காவுடன் மோதல்

இந்த உலக அரசியல் அதிகாரத்தில் உரிமைகோரல்" என்பது ஜேர்மனியை ஏனைய ஐரோப்பிய சக்திகளுடன் மட்டும் மோதலுக்குள் கொண்டு வரவில்லை, மாறாக அமெரிக்கா உடனும் தான். ஜனாதிபதி ஒபாவும் அமெரிக்க நிர்வாகத்தின் பிரதிநிதிகளும் மீண்டும் மீண்டும் ஜேர்மன் சிக்கன திட்டங்களை விமர்சித்திருந்ததுடன், கிரீஸை நோக்கி கூடுதலாக இணக்கமான போக்கை ஏற்குமாறு பேர்லினை வலியுறுத்தினர். அவர்கள் இதை பிரதானமாக புவிசார்-மூலோபாய காரணங்களுக்காக செய்தனர். அவர்கள் கிரீஸின் சமூக அமைதியின்மை நேட்டோவின் கிழக்கத்திய பகுதியை ஸ்திரமின்மைப்படுத்தக்கூடுமென்றும் மற்றும் கிரீஸை ரஷ்யா அல்லது சீனாவின் செல்வாக்கெல்லையின் கீழ் கொண்டு வருமென்றும் அஞ்சுகின்றனர்.

எவ்வாறிருந்த போதினும், ஜேர்மனி மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான பதட்டங்கள் இன்னும் நிறைய அடிப்படை காரணங்களைக் கொண்டுள்ளன. அவை ஒன்றையொன்று உலகளாவிய பொருளாதார எதிராளிகளாக எதிர்கொள்கின்றன. ஈரானுடன் அணுசக்தி உடன்படிக்கை எட்டப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், பாரியளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் கேட்பாணைகளில் இருந்து இலாபங்களைப் பெறுவதற்காக வணிக பிரதிநிதிகள் குழு ஒன்றின் தலைமையில் ஜேர்மன் பொருளாதார மந்திரி சிங்மர் காப்ரியல் தெஹ்ரானுக்கு விரைந்த வேகம், ஜேர்மனி எந்தளவிற்கு ஆக்ரோஷமாக அதன் உலகளாவிய பொருளாதார நலன்களைப் பின்தொடர்கிறது என்பதை விளக்கமாக எடுத்துக்காட்டுகிறது.

பசுமை கட்சி, இடது கட்சி, சமூக ஜனநாயக கட்சியின் (SPD) பிரிவுகள் மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU) என ஜேர்மனியில் உள்ள சொய்பிள இன் விமர்சகர்கள் அந்த நிதி மந்திரியுடன் வெறுமனே தந்திரோபாய கருத்துவேறுபாடுகளை மட்டுமே கொண்டுள்ளனர். பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் மற்றும் ஏனைய ஐரோப்பிய சக்திகளுடனான ஒரு கூர்மையான மோதல் ஜேர்மனியை ஐரோப்பாவிற்குள் தனிமைப்படுத்தும் என்றும், அவ்விதத்தில் அதை உலகளாவிய அளவில் பலவீனப்படுத்தும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியமாக செயல்படுவதை உலகளாவிய அளவில் வல்லரசு பாத்திரம் வகிப்பதற்கான ஒரு முன்நிபந்தனையாக அவர்கள் கருதுகிறார்கள். ஆகவே அவர்கள் ஹெல்முட் கோல் இன் ஐரோப்பிய கொள்கைக்குத் திரும்ப வாதிடுகிறார்கள். அவர் எப்போதும் அரசியல் சமரசங்கள் அல்லது நிதியியல் விட்டுக்கொடுப்புகளைக் கொண்டு ஐரோப்பாவில் ஜேர்மன் மேலாதிக்கத்தைப் பாதுகாக்க வழக்காடி இருந்தார்.

ஆனால் அதுபோன்றவொரு கொள்கைக்கு பொருளாதார முன்தேவைகள் இப்போது இருக்கவில்லை. நிஜத்தில் ஜேர்மனியை ஐரோப்பாவுடன் பிணைத்து வைத்திருக்கும் பொதுவான செலாவணி, எதிர்மறை விளைவைக் கொண்டிருந்தது, கொண்டுள்ளது. அது ஜேர்மனியின் பொருளாதார மேலாதிக்கத்தைப் பலப்படுத்தி உள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தியின் 7.5 சதவீத நடப்பு கணக்கு உபரி (அது இன்னும் அதிகரித்து வருகின்ற நிலையில்) அது பேர்லினுக்கு அதிக பலத்தைத் தருகிறது, அது ஐரோப்பிய ஒன்றியத்தை அதன் பழைய வடிவிலிருந்து சிதறடிக்கிறது. இது 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்குப் பின்னரில் இருந்து முன்பினும் அதிகமாக தெளிவாகி உள்ளது. 

ஜேர்மனியின் ஐரோப்பிய எதிர்விரோதிகள் அவர்களது போர்-ஆக்ரோஷங்களைக் கொண்டு விடையிறுக்கின்றனர். ஜேர்மன் அரசாங்கத்தைக் குறித்த அவர்களது விமர்சனம் மிகப்பெரியளவில் பிற்போக்குத்தனமாக உள்ளது. இது போரிஸ் ஜோன்சன் மற்றும் மரீன் லு பென் போன்ற வலது சாரியாளர்கள் போன்றவர்களுக்கு மட்டும் பொருந்துவதில்லை, மாறாக பிரெஞ்சு இடது முன்னணியின் தலைவர் ஜோன்-லூக் மெலென்சோன் போன்ற போலி-இடதுகளுக்கு பொருந்துகிறது.

இத்தகைய போலி இடதுகள் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கு அழைப்பு கொடுப்பதில்லை. அதற்கு மாறாக, அவர்கள் ஜேர்மன்-விரோத தேசியவெறியை தூண்டிவிடுகின்றனர். இவ்விதத்தில், அவர்கள் அவர்களது சொந்த ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதோடு, 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஐரோப்பாவை பீடித்தவைகளை போன்ற கடுமையான மோதல்கள் மற்றும் போர்களுக்குள் அக்கண்டத்தை தவிர்க்கவியலாமல் மூழ்கடித்துவரும் தேசிய பதட்டங்களைத் தூண்டிவிடுகின்றனர். ஒரு புரட்சிகர சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தின் மூலமாக மட்டுமே ஒரு பேரிடரைத் தடுக்க முடியும்.