சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Münkler-Watch” and the reproach of anonymity: A red herring

முன்ங்லெர்-வாட்ச்" வலைப்பதிவும், பெயர் வெளிப்படுத்தாமை குறித்த குற்றச்சாட்டுகளும்: ஒரு திசைதிருப்பும் ஏமாற்று வேலை

By Peter Schwarz
22 May 2015

Use this version to printSend feedback

முன்ங்லெர்-வாட்ச்" வலைப்பதிவை வேட்டையாடிவரும் ஜேர்மன் இதழாளர்களின் ஒரு கூட்டம், அந்த வலைப்பதிவாளர்கள் அவர்களது பெயர்களை வெளிப்படுத்தாமை பற்றி பெரிதுபடுத்தி வருகிறது. பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியர் ஹெர்பிரட் முன்ங்லெரின் வாராந்தர விரிவுரைகளை விமர்சிக்கும் மாணவர்கள் அவர்களது அடையாளங்களை வெளியிடவில்லை என்ற அடித்தளத்தில், அவர்கள் அவர்களை வக்கிரமாக தாக்கியும், அவமதித்தும் வருகின்றனர்.

முன்ங்லெரே கூட அவர்களை "இழிவார்ந்த கோழைகள்" என்று குறிப்பிட்டு, இது சமச்சீரற்ற போர்முறை" என்று அவர்களைச் சாடுகிறார். இந்த சொற்பதம் ஆளணியிலும் படைகலங்களிலும் சமனற்றதாக இருக்கும் கெரில்லா போர்முறை மற்றும் பயங்கரவாதம் இரண்டையும் உள்ளடக்கும் ஒரு வார்த்தையாகும். பத்திரிகைகளோ இந்த கருத்துரு பற்றி வெவ்வேறுபட்ட வடிவங்களை வழங்கி வருகின்றன.

இதுவொரு பண்டைய திசைதிருப்பும் ஏமாற்று வேலையாகும். பெயர் வெளிப்படுத்தாமை குறித்த பிரச்சினை உண்மையான விடயங்களிலிருந்து இருந்து கவனத்தைத் திசைதிருப்ப பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்திற்கும் மேலாக, “முன்ங்லெர்-வாட்ச்" உண்மையில் அநாமதேய வலைப்பதிவு அல்ல. அது அதன் எழுத்தாளர்களை தொடர்பு கொள்வதற்கு ஒரு கருத்துரை பகுதி மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் பகிரங்கமாக அணுகுவதற்குரிய ஒரு வலைத் தளமாகும். அவர்களில் பலர் ஊடக பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளனர்.

ஆனால் அவர்களது பெயர்களை வெளியிட அவர்கள் கடமைப்பட்டிருக்கவில்லை. அநாமதேய விமர்சனம் என்பது ஓர் அடிப்படை உரிமையாகும், அது இல்லையென்றால் பேச்சு சுதந்திரம் குறித்த அரசியலமைப்பு கோட்பாடே வெற்றுவார்த்தையாகிவிடும். பலவீனமானவர்கள் எங்கெல்லாம் பலமானவர்களை எதிர்கொள்கிறார்களோ அல்லது தனக்கு மேல்நிலையில் உள்ளவருக்கு கீழ் பணிசெய்யவேண்டியுள்ளபோது அவர்களது அடையாளத்தை வெளியிடாமல் அவர்கள் அவர்களது கருத்தைக் கூறக் கூடியதாக இருக்க வேண்டும்.

முன்ங்லெர் மற்றும் வரலாற்றாளர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியும் அப்பல்கலைக்கழகத்தில் கணிசமானளவிற்கு செல்வாக்கு உள்ளனர். அது அவர்களது மாணவர்களின் தொழில்ரீதியான எதிர்கால வாய்ப்புகள் மற்றும் முன்னேற்றங்கள் மீது முடிவெடுக்க அவர்களை அனுமதிக்கிறது. இத்தகைய சூழல்களின் கீழ், விமர்சகர்கள் அவர்களது அடையாளங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டுமானால், நேர்மையான விமர்சனமே சாத்தியமில்லாமல் போகும்.

ஒருவர், தன்னை விமர்சிப்பதற்காக அந்நபரை ஓரங்கட்டக்கூடிய ஒரு நிலைமையில் விமர்சிக்கப்படுபவர் இருக்கிறார் என்றால், விமர்சனம் செய்பவர் பெயர் வெளிப்படுத்தாமல் பாதுகாப்பை தேடிக்கொள்ளத்தான் வேண்டியதிருக்கும். இந்த கோட்பாடு உச்சநீதிமன்ற தீர்ப்புகளிலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதுடன், கல்வித்துறை, தொழில்துறை மற்றும் அரசியல் வாழ்வின் அரங்கிலும் அது உறுதியாக நிறுவப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அநாமதேயமாக மதிப்பிடும் உரிமை பல பள்ளிக்கூடங்கள் மற்றும் நிறுவனங்களில் மரபார்ந்தரீதியாக உள்ளது. பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளே கூட சிலவேளைகளில் திருத்துபவர்களின் பெயர் வெளிப்படுத்தாதவாறு நடத்தப்படுகின்றன. தேர்தல்களில் ஒருவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை இட்டு அவர் பாரபட்சத்திற்குள்ளாகலாம் என்பதால், வாக்களிப்பு கொள்கைரீதியில் இரகசியமானதாக உள்ளது.

வலைப்பதிவாளர்கள் அவர்களது பெயர்களை வெளிப்படுத்தவில்லை என்பதற்காக அவர்களைத் தாக்குபவர்கள், இவை அனைத்தையும் கேள்விக்குட்படுத்துகிறார்கள். யதார்த்தத்தில், அவர்கள் கோபமடைந்துள்ளனர் ஏனென்றால் அவர்களால் இணையத்தை தணிக்கை செய்ய முடியவில்லை அல்லது விமர்சகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அவர்கள் அதை செய்ய திட்டமிடுகிறார்கள் என்பதும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டுள்ளது.

Der Tagesspiegel பத்திரிகையின் ஒரு செய்தியின்படி, "பல்கலைக்கழங்கள் அத்தகைய 'கிறுக்கர்களுக்கு' அதன் வளாகத்தில் தடை விதிக்க வேண்டும், அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய வேண்டும்" மற்றும் அது "அனைத்துவகை தீவிரவாதிகளிடமிருந்தும் அதன் பணியாளர்களைப் பாதுகாக்க வேண்டுமென" பார்பெரோவ்ஸ்கி கோரியுள்ளார்.

முன்ங்லெர்-வாட்ச்" உடனான மோதலில் பல்கலைக்கழக நிர்வாகம் அவரை கைவிடுவதாகவும் மற்றும் "ஒருவரை புரிந்துகொள்ளும் தகமையில்லாததற்காக" முன்ங்லெர் பல்கலைக்கழக நிர்வாகத்தைக் குற்றஞ்சாட்டியுள்ளார். Der Tagesspiegel செய்தியின்படி, அவர் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைக்கு முறையிட்டுள்ளார். பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் ஹன்ஸ்-கிறிஸ்டோப் கெல்லர் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, அது அதனது இயலுமைக்குட்டபட்டவகையில் அவ்விடயத்தை மீளாய்வு செய்ய" வாக்குறுதி அளித்துள்ளது.

பார்பெரோவ்ஸ்கி மற்றும் முன்ங்லெர் மீதான அதன் விமர்சனங்களை, அநாமதேயராக இல்லாமல், பொதுக் கூட்டங்களிலேயே எடுத்துரைத்துள்ள சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE), இவ்வாறான நிகழ்வின் விளைவுகள் எவ்வாறானதாக இருக்கும் என்பதற்கு சாட்சியாகவுள்ளது. IYSSE இன் ஓர் அங்கத்தவர் அவரது முதுநிலை பட்டப்படிப்பு ஆய்வறிக்கையை அவரது பேராசிரியருடன் விவாதிக்க விரும்பியபோது, அவர் பார்பெரோவ்ஸ்கி குறித்த IYSSE இன் விமர்சனங்களுக்காக பழிதீர்க்கப்பட்டார்.

வரலாற்றுத்துறை, பல்கலைக்கழக உத்தியோகபூர்வ வலைத் தளத்தில், IYSSE "எதிர்க்கவும்" மற்றும் "ஹம்போல்ட் பல்கலைக்கழக வளாகத்தில்" பார்பெரோவ்ஸ்கி மீதான அதன் விமர்சனங்களை இனியும் சகித்துக் கொள்ள வேண்டாமென்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. IYSSE மற்றும் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Partei für Soziale Gleichheit) “அவதூறு பரப்புவதாக" மற்றும் "மதிப்பிற்கு அவமரியாதையேற்படுத்துவதாகவும்" குற்றஞ்சாட்டிய அதேபோன்ற அறிக்கை ஒன்றில் பல்கலைக்கழக தலைவர் ஜான்-ஹென்றிக் ஓல்பேர்ட்ஸ் கையெழுத்திட்டிருந்தார்.

பொதுமக்களிடையே திட்டமிட்டு இராணுவவாதத்தை ஊக்குவிக்கும் அல்லது நாஜி குற்றங்களைக் குறைத்துக் காட்ட முனையும் இரண்டு செல்வாக்கு மிகுந்த பேராசிரியர்களை விமர்சிப்பதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதே அதன் நிஜமான நோக்கமாகும்.

இராணுவவாதத்திற்கு முன்ங்லெர் ஆதரவளிப்பது அவபெயரெடுத்திருப்பதோடு, பகிரங்கமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சமூக விஞ்ஞானத்துறையின் மாணவர் பிரதிநிதி, முன்ங்லெரை "அரசியல் விஞ்ஞானியாக மற்றும் தேசிய இராணுவ மூலோபாயவாதியாக இரட்டைப் பாத்திரம் வகிப்பதற்காக" கடந்த ஆண்டு ஓர் அறிக்கையில் சாடியிருந்தார்.

பல வருடங்களாக அரசியல் வட்டாரத்தின் வலதுசாரிப் பகுதிகளிலிருந்து செவியுறும்" கருத்துருக்களை முன்ங்லெர் "கல்வித்துறை நேர்மையின் போர்வையில்" வெளிப்படுத்துவதாகவும், அவர் ஐரோப்பாவிற்கு வரும் அகதிகளைக் கையாள்வது குறித்து இனவாத பிரச்சாரங்களின் எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பதாகவும்", “வெளியுறவு கொள்கை சம்பாஷணைகளை மிருகத்தனமாக்க பங்களிப்பதிலும் மற்றும் ஜேர்மன் போர் நடவடிக்கைகளை அதிகளவில் ஏற்றுக் கொள்வதிலும் அவரது கல்வித்துறை நன்மதிப்புகளை" அவர் பயன்படுத்துவதாகவும், கூறும் அளவிற்கு அந்த அறிக்கை சென்றது.

1986 இல் "வரலாற்றாளர்களின் சர்ச்சை" என்பதைத் தொடங்கி வைத்த தேசிய சோசலிசத்தின் அனுதாபி ஏர்ன்ஸ்ட் நோல்ட இற்கு மறுவாழ்வளிக்க பார்பெரோவ்ஸ்கி பகிரங்கமாக பிரச்சாரம் செய்துள்ளார். அவரது நூல்களில், பார்பெரோவ்ஸ்கி இரண்டாம் உலக போரின் கிழக்கத்திய போர்முனையின் ஜேர்மனியின் யுத்தக்குற்றங்களைக் குறைத்துக் காட்டுகிறார்.

முன்ங்லெர், பார்பெரோவ்ஸ்கி, மற்றும் பத்திரிகைகளின் பெரும் பாகங்களை மிகவும் கொந்தளிக்க செய்வதென்னவென்றால், இத்தகைய பிற்போக்குத்தனமான நிலைப்பாடுகள் குறித்த விமர்சனங்களுக்கு ஒரு பரந்துபட்ட ஆதரவுகிடைப்பதாலாகும். "இராணுவ கட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது" மற்றும் ஜேர்மன் வல்லரசு அரசியலுக்குத் திரும்புகின்றது என அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்டு அவர்களது பிரச்சாரங்களால் ஆதரிக்கப்படுவது அதிகரித்த எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றது.

இத்தகைய எதிர்ப்பை அச்சுறுத்தி, ஒடுக்கி, குற்றகரமாக்குவதற்கு "முன்ங்லெர்-வாட்ச்" விவகாரத்தை ஓர் முன்னுதாரணமாக்குவதே அவர்களது உள்நோக்கமாக உள்ளது.

அரசின் உயர்மட்டங்களில் அரசியல்ரீதியில் தொடர்புகளைக் கொண்டுள்ளதும், இராணுவம் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளுடன் உறவுகளை பேணுகின்ற முன்ங்லெர் மற்றும் பார்பெரோவ்ஸ்கி ஆகியோர் இந்நிகழ்வில் யதார்த்ததைத் தலைகீழாக திருப்புகிறார்கள். ஊடகங்களில் சாதகமான கட்டுரைகளைக் கொண்டு வருவதற்காக மட்டுமே தொலைபேசிகளை எடுக்கும் இவர்கள் விமர்சன வார்த்தைகளைத் தவிர மேலதிகமாக எதையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டிராத மாணவர்களால் துன்புறுத்தப்படுவதாக வாதிட்டு வருகிறார்கள். இது எவ்வாறிருக்கிறதென்றால் அரசு மக்களால் ஒடுக்கப்படுவதாக அது குற்றம்சாட்டுவதை போலுள்ளது.