சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

වර්ජිත රෝහල් සේවකයන්ට එරෙහිව රාජ්‍ය මර්දනයක්

வேலை நிறுத்தம் செய்த ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு எதிராக அரச ஒடுக்குமுறை

By W.A. Sunil
27 May 2015

Use this version to printSend feedback

3000 ரூபா விசேட கொடுப்பணவு, 2006ம் ஆண்டு சுற்று நிரூபத்தின் கீழான அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வின்படி வழங்கப்பட வேண்டிய எஞ்சிய ஊதியம் மற்றும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ள வைத்தியசாலை சிற்றூழியர்களுக்கு எதிராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் அரசாங்கத்தினால் அரச ஒடுக்குமுறை கட்டவிழித்து விடப்பட்டுள்ளது. அரச வைத்தியசாலைகளில் 40,000 அளவிலான தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.wsws.org/sinhala/images/2015/hwst-23m-img1.gif
போராட்டத்தில் உள்ள தொழிலாளர்கள்

போராட்டத்தை தகர்ப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலை, பொரளை சீமாட்டி ரிஷ்வே சிறுவர் வைத்தியசாலை, களுபோவில தென் கொழும்பு பெரிய ஆஸ்பத்திரி உட்பட பல வைத்தியசாலைகளில் முன்னூறுக்கும் மேலான இராணுவச் சிப்பாய்கள் ஆஸ்பத்திரி வேலைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிரந்தரமற்ற மற்றும் பதில் ஊழியர்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய உரிமை இல்லை என்றும், சேவைக்கு சமூகமளிக்காத சகல ஊழியர்களும் வேலையை விட்டுச் சென்றவர்களாக கணிக்கப்படுவார்கள் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார்.

அத்தோடு வேலை நிறுத்தம் செய்யும் சுகாதார ஊழியர்களுக்கு எதிராக பொது மக்களை தூண்டிவிடும் மற்றும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் பிரச்சாரமொன்றும் அரசாங்க மற்றும் தனியார் வெகுஜன ஊடகங்களால் முன்னெடுக்கப்படுகின்றது.

40,000 அளவிலான சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளமை, வாழ்க்கை நிலைமைகள் மேலும் மேலும் சீரழிந்து வரும் நிலைமையில் சம்பள அதிகரிப்புக்காக போராடுவதற்கு அவர்களுக்கு உள்ள அவசியத்தையும், அதேபோல் அரசாங்கம் தொடர்பாக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பரந்தளவில் வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறது.

உலக சோசலிச வலைத் தளத்திற்கு கருத்து தெரிவித்த பல தொழிலாளர்களும், “இந்த அரசாங்கத்தை நாங்களே ஆட்சிக்கு கொண்டுவந்தோம். சிறிசேன ஐயா இராஜபக்ஷ அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக இருக்கும் போது அந்த அரசாங்கம் அவருக்கு சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இடம் கொடுப்பதில்லை என்று கூறினார். இப்போது அவர் ஜனாதிபதியாக இருப்பதால் அவரால் செய்ய முடியும்தானே. ஆனால் கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் தொழிலாளர்களை ஏமாற்றுகிறதுஎன்றே கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபீ) மற்றும் அதன் தலைமையிலான தொழிற்சங்கம், போலி இடதுகள் உட்பட ஏனைய மத்தியதர வர்க்க அமைப்புகள் சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக எந்தளவு மாயைகளை பரப்பியுள்ளன என்பதே இத்தகைய கருத்துக்களில் வெளிப்படுகின்றன. சம்பளம் மற்றும் சேவை நிலைமைகளை வெற்றிகொள்வதற்கு போராட வேண்டிய அவசியம் தொழிலாளர்கள் மத்தியில் தோன்றிய போது, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் எதிர்ப்புகளுக்குள் அதை கட்டுப்படுத்திய இந்த தொழிற்சங்கங்கள், சிறிசேவை ஆட்சிக்கு கொண்டுவருவதன் மூலம் நிலைமையை மாற்றியமைக்க முடியும் என்று கூறின.

இராஜபக்ஷவின் சிக்கன நடவடிக்கைகளை விட மாற்று வேலைத் திட்டம் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ள சிறிசேனவுக்கும் வலதுசாரி யூஎன்பீ அரசாங்கத்துக்கும் கிடையாது என்பது தொழிற்சங்கத் தலைவர்களுக்கு நன்கு தெரியும். இராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு வழி அமைத்து அந்த அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு தொழிலாளர்களை இறையாக்கிய இந்த தொழிற்சங்கங்கள், கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேனவுக்கும் யூஎன்பீக்கும் வழி அமைத்துக் கொடுத்தன.

2006 சம்பள அதிகரிப்பில் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியம், 2011 வரை 5 ஆண்டுகள் அரசாங்கத்தால் தாமதப்படுத்தப்பட்டதுடன், அதன் பின்னர் 2006ல் இருந்து 2011 வரையான 5 ஆண்டுகளுக்கான எஞ்சிய ஊதியத்தை கொடுக்காமல், அரசாங்கம் நான்கு ஆண்டுகள் கைவிட்டுள்ள நிலைமையில், ஜேவிபீ சார்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்துக்கு நேரடியாக ஒத்துழைக்கும் தொழிற்சங்க கூட்டமைப்புளும், கடந்த பல ஆண்டகள் பூராவும் தொழிலாளர்களை வெற்றுப் பிரச்சாரங்களுக்குள் சிக்க வைத்து அவர்களின் போராட்டத்தை கரைத்து விடுவதையே செய்தன.

போராட்டத்தை எதிர்க்கும் மற்றும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் போராட்டத்தை குழப்பிவிடுவதற்காக கடந்த வருடங்களில் போலவே இம்முறையும் வேலையை பங்கிட்டுக்கொண்டுள்ளன. போராட்டத்திற்கு எதிரான ஜனரஜ சுகாதார ஊழியர் சங்கம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த சுதந்திர சுகாதார ஊழியர் சங்கம் உட்பட சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டணி, 25ம் திகதி சுகாதார அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் விசேட கொடுப்பணவை 1,000 ரூபாவாக குறைப்பதற்கு உடன்பட்டுள்ளன. ஏனைய கோரிக்கைகளுக்கு எந்தவொரு தீர்வும் கிடையாது.

போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஜேவிபீ சார்ந்த அனைத்து இலங்கை சுகாதரா சேவை சங்கம், அனைத்து இலங்கை வாட்டு எழுதுவிழைஞர் சங்கம், அனைத்து இலங்கை ஆய்வுக்கூட தொழில்நுட்ப உதவியாளர்கள் சங்கம் உட்பட 5 தொழிற்சங்கங்களின் கூட்டு, அரசாங்கத்திடம்ஏற்றுக்கொள்ளக் கூடியதீர்வை பெற்றுக்கொள்ளல் என்ற பெயரில் போராட்டத்தை கரைத்துவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அரசாங்கத்துக்குஅடிவருடும்சந்தர்ப்பவாத தொழிற்சங்கம் போராட்டத்தை காட்டிக்கொடுத்துவிடும் என ஜேவிபீ சார்ந்த சங்கக் கூட்டணியின் தலைவர்கள் ஏனைய சங்க கூட்டணிகளை குற்றஞ்சாட்டினாலும், இந்த தொழிற்சங்க கூட்டுகள் இரண்டுமே ஜனாதிபதி சிறிசேனவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக வக்காலத்து வாங்கின. சிறிசேனவின்ஜனநாயக நல்லாட்சியைவர்ணித்து அவரது அரசாங்கத்தின் நிர்வாகக் குழுவிலும் ஜேவிபீ இணைந்து கொண்டது.

இப்போது சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் மீது ஆஸ்பத்திரி ஊழியர்கள் உடப்ட ஒட்டு மொத்த உழைக்கும் மக்களது அதிருப்தியும் சீற்றமும் வளர்ச்சியடைந்து வரும் நிலைமையில், அரசாங்கத்தில் இருந்து தூர விலகிக்கொள்ளத் தொடங்கியுள்ள ஜேவிபீ மற்றும் அதன் தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்துக்குள் அபிவிருத்தியடைந்து வரும் அந்த நிலைமையை தமது சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காகப் சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்ற அதே வேளை, போலி எதிர்ப்புகளுக்குள் சிறைப்படுத்தி தொழிலளர்களின் போராட்டத்தை கரைத்து விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.

நீண்ட காலமாகவே கிடப்பில் போடப்பட்டிருந்த கோரிக்கைகளை வெற்றிகொள்வதற்கு தொழிலாளர்கள் மத்தியில் உள்ள கடும் தேவையின் காரணமாக, ஜேவிபீ தொழிற்சங்கத் தலைவர்கள் பீதியடைந்தள்ளனர். அதனால் தொழிலாளர்கள் மீது திணிக்கக் கூடியஏற்றுக்கொள்ள கூடியஒன்றை சுகாதார அமைச்சரிடம் பெற முடியாவிட்டால், பலாத்காரமாகவேனும் பேச்சுவார்த்தை ஒன்றை பெற்றுக்கொள்வதாக ஜேவிபீ தொழிற்சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர். புதன் கிழமை, சுகாதார அமைச்சுக்கு முன்னால் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆஸ்பத்திரி ஊழியர்கள் மத்தியில் பேசிய, அனைத்து இலங்கை சுகாதார ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சமந்த கோரலே ஆராய்ச்சி, “28ம் திகதி காலை 6 மணிக்கு முன்னர் தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டத்தை இடைவிடாமல் முன்னெடுக்க வேண்டும் என்றும், தேவையெனில் பேச்சுவார்த்தை ஒன்றை பெற்றுக்கொள்வதற்குகாக படலைகளை உடைத்துக்கொண்டேனும் அமைச்சுக்குள் செல்வதற்குத் தயாராக வேண்டும்என்றும் கூறினார்.

அதிகாரிகளுடன் பேச்சுவார்தைக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்வதற்கு உள்ள இந்த முரட்டுத்துணிச்சலான அக்கறைக்குப் பின்னால் இருப்பது, சமரசத்துடன் ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அனுப்புவதற்கு உள்ள கடும் தேவையே ஆகும். தசாப்த காலங்களாக நீண்டு வரும் இந்த போராட்டத்தின் தற்கால அனுபவம், சுகாதார சேவை மற்றும் ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் பரந்த அரசியல் போராட்டம் இன்றி தொழிலாளர்களின் உரிமைகளை வெற்றிகொள்ள முடியாது என்பதையே நிரூபிக்கின்றது. ஏனைய சுகாதார ஊழியர்களும், தொழிற்சங்கத் தலைவர்களின் மட்டுப்படுத்தல்கள் மற்றும் குழிபறிப்பு வேலைகளை நிராகரித்து, தற்போது கனிஷ்ட ஊழியர்கள் தொடங்கியுள்ள போராட்டத்துக்கு செயலூக்கத்துடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்தப் போராட்டம் சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.