சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan plantation company victimises strike activists

இலங்கை பெருந்தோட்ட கம்பனி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுகின்றது

By M. Devarajah 
3 June 2015

Use this version to printSend feedback

இலங்கையின் மத்திய மலையகப் பகுதியில் மஸ்கெலியாவின் கிளனியூஜி தோட்டத்தின் நிர்வாகம், பெப்பிரவரியில் மூன்று நாள் வேலை நிறுத்தத்தில் முன்னணி பாகம் ஆற்றினர் என்ற சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில், சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) ஆதரவாளர் உட்பட மூன்று தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளதுடன், மேலும் நான்கு பேரை இடைநீக்கம் செய்துள்ளது.

தோட்டத்தின் டீசைட் பிரிவு தொழிலாளர்கள் தினசிர கொழுந்து பறிக்கும் அளவை நிர்வாகம் 16 கிலோவில் இருந்து 18 கிலோ வரை அதிகரித்ததற்கு எதிராகவே வேலை நிறுத்தம் செய்தனர். இந்த ஏழு தொழிலாளர்கள் வேட்டையாடப்பட்டமை, முதலாளிகள் இரக்கமின்றி பெருமளவிலான வேலைச் சுமையை திணிப்பர் என்ற செய்தியை அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அனுப்ப வடிவமைக்கப்பட்டதாகும்.

மே 22, கிளனுஜி தோட்ட முகாமையாளர் ஏழு தொழிலாளர்களையும் அவரது அலுவலகத்துக்கு அழைத்து, சோசக ஆதரவாளரான ஜி. வில்பிரட், எம். நெஸ்தூரியன் மற்றும் எஃப். ஃபிராங்க்ளின் ஆகிய மூன்று தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக அறிவித்தார். எஸ். டக்லஸ்நியுமன், எஃப். அன்டன் ஜூலியன், எஸ். பெனடிக்ட் மற்றும் எஸ். ஜனரட்னம் ஆகியோரே இடை நீக்கம் செய்யப்பட்டவர்கள். தங்களால் வாசிக்க முடியாத ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் தொழிலாளர்கள் நிறுவனத்தின் தண்டனை கடிதங்களை ஏற்க மறுத்துவிட்டனர். அவர்கள் கடிதங்கள் தங்கள் சொந்த மொழியான தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அத்தகைய கடிதங்கள் இன்னமும் வழங்கப்படவில்லை.

வேலைநிறுத்தம் காரணமாக, நிர்வாகம் தனது வேலைச் சுமை அதிகரிப்பை கைவிட்ட போதிலும், தொடர்ந்தும் தொழிலாளர்களை தொந்தரவு செய்யத் தொடங்கியது. நிர்வாகம் உற்பத்தியை அதிகரிக்க நெருக்குவதற்காக மேற்பார்வையாளர்களை பயன்படுத்தியதுடன், வேலை நேரங்களை கடுமையாக அமுல்படுத்தியது. இதை கடினமான பெருந்தோட்டப் பிரதேசங்களில் பின்பற்றுவது சாத்தியமற்றதாகும்.

வேலை நிறுத்தத்தின் பின்னர், தொழிலாளர்களை கொட்டுவதற்காக குளவிக் கூடுகளை கலைத்துவிட்டனர் என்று எட்டு தொழிலாளர்கள் மீது போலியாக குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மேற்பார்வையாளரை தாக்கியதாகவும் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு மாறாக, தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடனும் பொலிசுடனும் ஒத்துழைத்தன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இதொகா) உள்ளூர் தலைவர்கள் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்ய ஒரு மேற்பார்வையாளரை தூண்டிவிட்டனர். போலீஸ் எட்டு தொழிலாளர்களை கைது செய்ய முயன்றபோது, தொழிலாளர் தேசிய சங்கத்தின் (NUW) தலைவர்களே தொழிலாளர்களை தாங்களாகவே சரணடையுமாறு கேட்டுக்கொண்டனர். NUW தலைவர் பி. திகாம்பரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ) தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக உள்ளார்.

மார்ச் 11 அன்று மஸ்கெலியா பொலிசாரால் கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள், மார்ச் 12 ஹட்டன் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அடுத்த விசாரணை ஜூன் 24 நடக்கவுள்ளது.

நிர்வாகமும் தொழிலாளர்களுக்கு தண்டனை கொடுக்கும் நோக்குடன் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தனது சொந்த "விசாரணையை" தொடங்கியுள்ளது. மாதம் பூராவும் நீண்ட இந்த விசாரணை, மார்ச் 25 தொடங்கி ஏப்ரல் 25  வரை தொடர்ந்தது. ஒரே ஒரு மேற்பார்வையாளர் மற்றும் ஒரு தொழிலாளியிடம் இருந்து மட்டுமே நிர்வாகத்தால் “சாட்சி” பெற முடிந்தது. அந்த தொழிலாளி, தான் பழிவாங்கப்படலாம் என்ற பீதியில் அவ்வாறு செய்திருக்கலாம். எனினும், மற்றவர்கள் குறிவைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் சார்பில் சாட்சியமளித்து குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் அடிப்படையில்லாதவை என்று நிரூபிக்க முன் வந்தார்கள். அதன் விசாரணை எனப்படுவது முடிந்ததும், ஒரு மாதத்திற்கு பிறகு, நிர்வாகம் தனது தண்டனைகள் அறிவித்தது.

ஒரு அரசாங்க பாராளுமன்ற உறுப்பினரும் யூஎன்பீயின் பிரதிநிதியுமான ஆர். யோகராஜன், கடந்த வாரம் நிர்வாகத்துடன் மூடிய கதவுகளுக்குள் பேச்சுக்களை நடத்தி “சமரசத்தை” ஏற்படுத்த முயன்றுள்ளார். பாதிக்கப்பட்ட ஒன்று அல்லது இரண்டு தொழிலாளர்கள் அவரது உதவியை நாடிய பின்னரே அவர் தலையிட்டுள்ளதாக தோன்றுகிறது. அவர் வேலை நீக்கம் செய்யப்பட்ட மற்றும் இடைநிறுத்தப்பட்ட தொழிலாளர்களை நிர்வாகத்துடன் ஒரு "தீர்வை" அடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவர்கள், வேலை நீக்கத்தை ஒரு மாத இடை நீக்கமாகவும், ஒரு மாத இடை நீக்கத்தை ஒரு வார கால இடை நீக்கமாகவும் தண்டனைகளை குறைத்துக்கொள்ள வேண்டுமாயின், குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளத் தள்ளப்படுவர். நிர்வாகம் இந்த சமரசம் எனப்படுவதை ஒப்புக்கொண்டதா என்பது தெளிவாக தெரியவில்லை.

நிர்வாகத்தின் பிரதிபலிப்புக்கு அப்பால், இது தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு பொறியாகும். இது ஒரு "தீர்வு" அல்ல, மாறாக சோடிக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாகும். தொழிலாளர்கள் இந்த தண்டனையை ஏற்றுக்கொண்டால், அவர்கள் நிர்வாகத்தின் தயவிலேயே இருக்க நேரும். எந்தவொரு அற்பமான குற்றச்சாட்டைக் கொண்டும் எந்த நேரத்திலும் அவர்களை வேலை நீக்கம் செய்யக்கூடும். எதிர்காலத்தில் தொழிலாளர்களின் எந்தவொரு போராட்டத்திலும் பங்குபற்றக் கூடாது என அவர்கள் அச்சுறுத்தப்படுவார்கள்.

போலிக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டால், அவர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்கில் அதை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும். இந்த பிரேரிக்கப்பட்டுள்ள “தீர்வை” தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். அது பெருந்தோட்ட நிறுவனங்களின் கைகளை மட்டுமே பலப்படுத்தும்.

அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினரான யோகராஜன், காட்டிக்கொடுப்பில் சாதனை புரிந்தவர். அவர் ஒரு காலத்தில் பிரதான பெருந்தோட்டத் துறை தொழிற்சங்கமான இதொகாவின் தலைவராக இருந்தார். அவர் யூஎன்பீ தலைமையிலான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்து அதேபோன்ற பாத்திரம் ஆற்றினார். தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் அதிகாரத்துவவாதிகளும் தொழிலாளர்களின் நலன்களை பிரதிபலிக்கவில்லை, மாறாக கம்பனிகளின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. பெருந்தோட்டங்களில் ஏனைய தொழிற்சங்கங்கள் போன்று இந்த தொழிற்சங்கங்களும், அரசாங்கம் மற்றும் கம்பனிகளுக்கும் ஒரு தொழிற்துறை பொலிஸ் படையாக செயல்படுகின்றன.

நாம் கிளனியூஜி மற்றும் தோட்டத்தை நிர்வகிக்கும் மஸ்கெலியா பிராந்திய பெருந்தோட்ட கம்பனியின் கீழ் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் இந்த அப்பட்டமான பழிவாங்கலை எதிர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றோம். அவர்கள் தண்டனைகளை நிபந்தனையின்றி அகற்றுமாறும் பணி நீக்கம் செய்யப்பட்ட மற்றும் இடைநிறுத்தப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்க வேண்டும் எனக் கோர வேண்டும்.

கிளனியூஜி தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டை, தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சம்பவம் அல்ல. பெருந்தோட்டங்கள் முழுவதும், தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்டங்களில் மோசமடைந்து வரும் நெருக்கடியின் சுமைகளை கம்பனிகள் தொழிலாளர்கள் மீது சுமத்த முயன்று வருகின்றன. மே 18 அன்று நடைபெற்ற இலங்கை முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான அடுத்த கூட்டு ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையில், சம்மேளனம் தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்தவொரு சம்பள அதிகரிப்பும் கொடுக்க மறுத்துவிட்டது.

முதலாளிமார்கள், தற்பொழுது பறிக்கும் 18 கிலோ கொழுந்துக்கும் மேலாக இன்னும் 5 கிலோ தேயிலை கொழுந்தை தினசரி பறிக்கக் கோருகின்றனர். 2013ல் தொழிற்சங்கங்கள் முதலாளிமார்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்த அதிகரிப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி மற்றும் வேலைச் சுமை அதிகரிக்கப்படும் அதே வேளை, உண்மையான ஊதியத்தின் தேக்கம் அல்லது வீழ்ச்சியே உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பெரும் வர்த்தகர்களின் கோரிக்கையாகும்.

டீசைட் தொழிலாளர்கள் தங்கள் சக ஊழியர்கள் மீதான இந்த தாக்குதலை எதிர்க்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமன்றி ஏனைய தொழிலாளர்களுமாக தொழிலாள வர்க்கமே அவர்களை ஆதரிக்க வேண்டும், அவர்களின் பாதுகாப்பிற்காக அணிதிரள வேண்டும். டீசைட்டில் வேட்டையாடலுக்கு எதிரான போராட்டமானது ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் மற்றும் சோசலிச கொள்கைகளுக்கான ஒரு அரசியல் போராட்டத்தின் அடிப்படையில், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் வேலைசுமைக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாகும்.