சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan plantation companies reject wage increase

இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் ஊதியத்தை அதிகரிக்க மறுக்கின்றன

By Madhava Jayawardena and Pani Wijesiriwardena
30 May 2015

Use this version to printSend feedback

இலங்கை முதலாளிகள் சம்மேளனமானது புதிய கூட்டு ஒப்பந்தம் சம்பந்தமாக தொழிற் சங்கங்களுடன் கடந்த வாரம் நடந்த கலந்துரையாடலில் எந்தவொரு சம்பள அதிகரிப்பையும் எதிர்த்துள்ளதோடு அதற்கு மாறாக வேலைச் சுமையை அதிகரிக்கக் கோருகின்றது. பெருந்தோட்ட சமாசத்தின் அதிகாரிகள் அன்றாடம் பறிக்கும் கொழுந்தின் அளைவை 5 கிலோவால், 23 கிலோகிராம் வரை உடனடியாக அதிகரிக்கக் கோருகின்றனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இதொகா), இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியுமே பேச்சுவார்த்தையில் பங்குபற்றுகின்றன. உலக சோசலிச வலைத் தள நிருபர் கேள்வியெழுப்பிய போது, தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் மேலும் பேச்சுவார்த்தைகளை எதிர்பார்க்கின்றன என இதொகா தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் மீண்டும் மீண்டும் நடந்தது போலவே, இதொகா மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் முதுகுகளுக்குப் பின்னால் முதலாளிமாருடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதோடு, வேலைச் சுமைகளை அதிகரிப்பதற்கு கம்பனிகளுக்கு சுதந்திரம் கொடுக்கும் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மீண்டும் தயாராகின்றன.

இலங்கையில் 22 பிரமாண்டமான பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளில் 200,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். சிறிய தனியார் தோட்டங்களிலும் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் பெற்றது போல் இன்னமும் நாள் சம்பளத்தையே பெறுகின்றனர். மாதம் ஒன்றுக்கு சராசரி 12,000 ரூபா அல்லது 90 அமெரிக்க டாலர் என்ற வறிய சம்பளத்தையே அவர்கள் பெறுகின்றனர். அநேகமானவர்கள் நெருக்கமான வரிசை-வீடுகளிலேயே வாழ்கின்றனர். அவை காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட பின்னர் குறிப்பிடத்தக்க எந்தவொரு மேம்பாடும் செய்யப்படவில்லை.

இதொகா 1,000 ரூபா அன்றாட சம்பள அதிகரிப்பைக் கோரியுள்ளதாக சிவலிங்கம் கூறிக்கொள்கின்றார். ஆனால் அநேகமான தொழிலாளர்கள் 2013 கூட்டு ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தற்போதைய 650 ரூபா சம்பளத்தைக் கூட பெறுவதில்லை. தாம் பறிக்க வேண்டிய கொழுந்தின் அளைவை அவர்களால் பறிக்க முடியாமை அல்லது நிபந்தனையின் படி அவர்கள் வேலைக்கு வரவேண்டிய வேலை நாட்களை பூர்த்தி செய்ய முடியாமையே இதற்கான காரணமாகும்.

2013ல், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கீழ் அமைச்சரவை அமைச்சராக இருந்த இதொகா தலைவர் ஆறுமுகம் தொண்டமான், உற்பத்தி இலக்குகளை அதிகரிக்க கம்பனிகளை அனுமதிக்கும் பிரிவுகளை உள்ளடக்குவதில் முன்னணி பாத்திரம் வகித்திருந்தார். தேசிய தொழிலாளர் சங்கம் (NUW) மலையக மக்கள் முன்னணி (மமமு) மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட ஏனைய தொழிற்சங்கங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டன.

NUW, மமமு மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியும் இதொகாவின் சம்பள கோரிக்கையை ஆதரிக்கவில்லை. தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தனியார் துறை ஊழியர்களுக்கு மாதம் 2,500 ரூபா சம்பள அதிகரிப்பை ஏற்கனவே அரசாங்கம் அறிவித்துள்ளதாக அவை கூறுகின்றன. தோட்டக் கம்பனிகள் உட்பட முதலாளிமார், அரசாங்கத்தின் பிரேரணையை முழுமையாக நிராகரித்துள்ளன.

NUW மற்றும் மமமு தலைவர்களான பி. திகாம்பரம் மற்றும் வி. ராதாகிருஷ்ணனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ) தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர்களாக உள்ளனர்.

அண்மைய மாதங்களில், பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள், சர்வதேச தேயிலைச் சந்தையில் நெருக்கடியையும் ஏனைய நாடுகளில் குறைவான உழைப்புச் செலவையும் மேற்கோள் காட்டி, அன்றாட உற்பத்தி மட்டத்தை அதிகரிக்க வேண்டியதன்அவசியத்தை வலியுறுத்தி அறிக்கைகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

மார்ச் 19 ஐலண்ட் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டதாவது: “ஒட்டு மொத்த தேயிலை விலை வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. இலங்கை தேயிலையை 70 வீதத்துக்கும் அதிகமாக இறக்குமதி செய்யும் ரஷ்யா, மத்திய கிழக்கு மற்றும் உக்ரேனிலும் உள்ள பிரதான சந்தைகளில் தற்போது நிலவும் அழிவுகரமான நிலைமை பிரதான காரணமாகும். எண்ணெய் விலை வேகமாக குறைந்ததை அடுத்து மத்திய கிழக்கில் ஏற்பட்ட பின்னடைவு, உக்ரேனில் வளர்ந்து வரும் இராணுவ மோதல் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதார கட்டுப்பாடுகள், அதே போல் அண்மையில் அதன் நாணயத்தின் வீழ்ச்சியும் இலங்கை தேயிலைக்கு கிட்டத்தட்ட சாத்தியமற்ற நிலைமையை உருவாக்கிவிட்டுள்ளன. விரைவில் விலை ஏற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாத சரிவில் உள்ள உலக இரப்பர் சந்தையுடன், ஒரு இரட்டை நெருக்கடி நிலை தோன்றியுள்ளது

பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை, “தொழிற்துறையின் எதிர்காலமும் அது நீடித்திருப்பதும் தொழிலாளர்களின் கைகளிலேயே உள்ளது என ஐலண்ட் பத்திரிகைக்கு கூறியுள்ளார். “உலகில் உற்பத்திக்கான உழைப்புச் செலவு மிகக் குறைவாக இருக்கின்றபோது எமது உற்பத்திச் செலவு அதிகமாக இருக்கின்ற நிலைமையில், தொழிலாளர்களால் அன்றாட உற்பத்தியை இலகுவாக அதிகரிக்கவும் செலவுக் குறைப்புக்கு உதவி செய்யவும் முடியும், அப்போது எங்களால் சர்வதேச சந்தைகளில் போட்டியிட முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராஜதுரை கென்யா, இந்தியா போன்ற பிரதான தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளின் உற்பத்தியுடன் ஒப்பிடுகின்றார். இலங்கையில், அன்றாடம் சராசரி 18 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும், ஆனால் அது தென் இந்தியாவில் 38 கிலோவும் கென்யாவில் 48 கிலோவும் ஆகும். “தேயிலையில், இலங்கையில் ஒரு அலகுக்கான உழைப்புச் செலவு (மொத்தத்தில் ஏறத்தாழ 67 வீதத்தில் இருந்து 70 வீதம் வரை), அதன் சில போட்டியாளர்களின் முழு அலகுக்கான செலவை விட மிக உயர்வானதாகும்,” என அவர் கூறிக்கொள்கின்றார்.

இது, இலங்கை கம்பனிகளின் இலாபத்தை பாதுகாப்பதன் பேரில், உலகச் சந்தையில் குரல்வளை நெரிக்கும் போட்டிக்கு தொழிலாளர்களை அர்ப்பணிக்க கோருவதாகும். செய்தி தெளிவானதாகும் –“தொழிற்துறையை பாதுகாப்பதற்காக கென்யா மற்றும் இந்தியா மட்டத்திலான சுரண்டலை தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஐரோப்பிய இல்லாதவர்கள் மீதான யுத்தம் (European War on Want) என்ற அமைப்பு 2010ல் வெளியிட்ட ஒரு கசப்பான கோப்பை என்ற தலைப்பிலான அறிக்கை, வட இந்திய தேயிலை தொழிலாளர்கள், மாதமொன்றுக்கு வாழ்வதற்கு அவசியமான குறைந்தபட்ச தொகையான 3,500 ரூபாவை விட ஆகக் கீழ் மட்டத்தில், வெறும் 15.45 பவுண்டுகளை அல்லது 1,200 ரூபாவையே பெறுகின்றனர் எனக் காட்டுகின்றது. மத்திய கென்யாவில் தேயிலைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் மாதம் வெறும் 39.53 பவுண்டுகளுக்கு (கென்ய நாணயத்தில் 5,000 ஷில்லிங்) ஒரு கிழமைக்கு 72 மணித்தியாலங்கள் உழைக்கின்றனர்இது பாதி சம்பளமாகும். கென்யாவில் தேயிலை கொழுந்து பறிப்பவர்கள், இதைவிட மோசமான நிலையில் உள்ளனர். மாதம் ஒன்றுக்கு சராசரி 24.18 பவுண்டுகளையே (3,060 ஷில்லிங்) அவர்கள் ஊதியமாகப் பெறுகின்றனர்.

இந்திய பெருந்தோட்ட உரிமையாளர்கள் மருத்துவ வசதிகள், மகப்பேற்று விடுமுறை மற்றும் உணவு பங்கீடுகள் போன்ற சலுகைகளை மறுப்பதன் பேரில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களையே பெருமளவில் பயன்படுத்துகின்றனர். இந்த வழிமுறை இலங்கையில் ஏனைய துறைகளில் வேகமாக பரவி வருவதோடு தோட்டக் கம்பனிகள் விரைவில் அதைப் பின்பற்றும்.

வேலை நேரத்தை வெட்டுவதன் மூலமும் சம்பளத்தைக் குறைக்க பெருந்தோட்டக் கம்பனிகள் முயற்சிக்கின்றன. ஒரு மாதத்தில் 25 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்றநிபந்தனை பிரிவையும் மாற்றுவதற்கு தேயிலை மற்றும் இரப்பர் கம்பனிகள் விரும்புவதாக ஐலண்ட் கட்டுரை தெரிவிக்கின்றது. அநேக கம்பனிகள் இந்தநிபந்தனை பிரிவை அலட்சியம் செய்து, கொழுந்து குறைவான காலத்தில் உற்பத்தி நாட்களை குறைத்துக்கொள்கின்றன.

அரசாங்கங்கள் கடந்த காலத்தில் செய்தது போலவேநிவாரணம் வழங்க வேண்டும் என ஜனாதிபதி சிறிசேனவின் அரசாங்கத்திடமும் முதலாளிகள் கோருகின்றனர். உற்பத்தி மட்டங்களை உயர்த்துவதற்காக புதிய கூட்டு ஒப்பந்தங்களை தயாரிக்க கம்பனிகளையும் தொழிற்சங்கங்களையும் ஒன்று கூட்டுவதற்கு அரசாங்கங்கள் தலையிட்டுள்ளன.

உலக தேயிலை மற்றும் இரப்பர் விலைகள் வீழ்ச்சியடைவதை வர்த்தகர்கள் எதிர்கொள்கின்றனர். கொழும்பில், கடந்த ஆண்டு 482 ரூபா மற்றும் 2013ல் 423 ரூபாவுடன் ஒப்பிடும் போது 2015 பெப்பிரவரியில் நடந்த தேயிலை ஏலத்தில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை 418 ரூபாவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின்படி, விலை வீழ்ச்சியின் காரணமாக கடந்த ஆண்டு இரப்பர் கம்பனிகள் கிலோவுக்கு 70 ரூபாவை இழந்துள்ளன.

வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிராக பெருந்தோட்டங்களில் ஏற்கனவே போராட்டங்கள் வெடித்துள்ளன. பெப்பிரவரியில், மஸ்கெலியாவில் கிளனியூஜி தோட்டத்தின் டீசைட் பிரிவு தொழிலாளர்கள், அன்றாடம் கொழுந்து பறிக்கும் அளவை அதிகரித்தமைக்கு எதிராக வேலை நிறுத்தம் செய்தனர். இந்த வாரம், சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில், இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் மூவரை நிர்வாகம் வேலை நீக்கம் செய்துள்ளதோடு நால்வரை இடை நீக்கம் செய்துள்ளது. நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்காக அரசாங்கத்தின் ஆதரவுடன் முதலாளிமார் இத்தகைய ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்பதற்கு இது ஒரு எச்சரிக்கையாகும்.

தொழிலாளர்கள் தமது சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து ஒரு ஐக்கியப்பட்ட எதிர்த்-தாக்குதலைத் தயார் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒழுங்கான மாத சம்பளம், சம்பளத்துடனான விடுமுறை, மருத்துவத் திட்டங்கள், ஓய்வூதிய முறைகள் மற்றும் தக்க வீடுகளும் வழங்க்பட வேண்டும்.

அத்தகைய போராட்டமானது தோட்டக் கம்பனிகளுக்கு எதிராக மட்டுமன்றி, அரசாங்கம் மற்றும் தமது நலன்களை பாதுகாக்க தொழிலாளர்கள் மேற்கொண்ட முந்தைய முயற்சிகளுக்கு குழிபறிப்பதில் பிரதான ஆயுதமாக செயற்பட்ட தொழிற்சங்களுக்கும் எதிரான அரசியல் போராட்டத்தை அவசியமாக்கியுள்ளது.

தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் பெருந்தோட்டக் கம்பனிகளை தேசியமயமக்குவது உட்பட, ஒரு சோசலிச முன்நோக்கை அடிப்படையாகக் கொண்ட தமது சொந்த சுயாதீன நடவடிக்கை குழுக்களை தொழிலாளர்கள் அமைப்பதோடு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்காகப் போராட வேண்டும். இந்த முன்நோக்குக்காகவே சோசலிச சமத்துவக் கட்சி போராடுகின்றது.